எலக்சன் டயத்துல நாம ஊர்ல இல்லன்னாலும், நமது நட்பு, சொந்தத்துகிட்ட விசாரிச்சி கிடைச்ச சில சுவராசியத்துளிகள் இந்த பதிவில்...
புதுசா கள்ளக்குறிச்சி தொகுதி வந்தது, விஜய டி.ஆர் எலக்சன்ல நின்னது, கேப்டன் மச்சான் நின்னது, மாம்பழம் அசைக்கமுடியாத கோட்டைன்னு அசால்டா இருந்தது, புதுசா உருவான பார்க்கவகுல சங்கம், கொங்கு...ன்னு பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்துச்சி.
டி.ஆர். ரொம்ப பரபரப்பா வேலை செஞ்சாராம். கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் எல்லாத்தையும் மிரட்டி சொல்லறத கேட்டுத்தான் ஆகனும்னு கதறினாராம்.
'நான் போட்டிருக்கும் சட்டை வெண்மை, கண்களில் வைப்பது கண்மை, அதோ வெட்கத்தில் நெளியுது ஒரு பெண்மை, எனக்குத்தான் ஓட்டுப்போடப்போகிறீர்கள் என்பது உண்மை...
'என் மகன் பேரு சிம்பு, தண்ணிகுடிக்கிறதுக்கு சொம்பு, என் கிட்ட வெச்சுக்காதீங்க வம்பு, நெஞ்சில இருக்கு தெம்பு'...
'பட்டம் பறக்க வேணும் வாலு, ரெண்டும் ரெண்டும் நாலு, நான் தான் இந்த தொகுதியில சூப்பர் ஆளு'
'நம்மோட சின்னம் பட்டம், மக்கள் முகத்துல தெரியுது வாட்டம், அத போக்கறதுதான் என்னோட திட்டம்'...
என் தம்பி 'அண்ணா இன்னும் உயிருள்ளவரை உஷா ரேஞ்சிலேயே பேசிட்டிருக்காரு' ன்னான்னான்.
அதுவுமில்லாம அவரே தாளம் போட்டு பல இடங்கள்ல பாட்டு பாடினதா சொன்னாங்க.
சினிமாவுல வந்த அவரோட பழைய டயலாக் எல்லாத்தையும் பேசிக்காட்ட, ஒரு குழந்த 'என்னம்மா அந்த அங்கிள் அடிக்கிற மாதிரி எதோதோ புரியாம பேசறாரு'ன்னு மிரண்டுட்டு கேட்டுச்சாம்.
பஸ்ஸெல்லாம் வெளியே வர்ற இடத்துல சிக்னல்ல வண்டியை நிறுத்தி, 'அடங்கொப்பன் மவனே'ன்னு பாட ஆரம்பிச்சுட்டாராம்.
ட்ராபிக் 'கொஞ்சம் தள்ளி போயி பேசுங்க' ன்னு சொல்லவும்,
'போகச்சொல்றீங்க என்னை தள்ளி, பெண்களின் தலையில மல்லி, ஓட்டுக்களை குவிக்கப்போகிறேன் அள்ளி' ன்னு சொல்லவும் எல்லாரும் சிரிச்சிட்டாங்களாம்.
சில இடங்கள்ல கண்ணீர் விட்டு அழுதாருன்னும் கேள்விப்பட்டேன்.
அடுத்தா கேப்டன். வாழப்பாடியில பிரச்சாரம் செஞ்சிட்டிருக்கும்போது, என் தம்பி பையன் கனிஷ்க்கை வெச்சிகிட்டு பாட்டி வேடிக்கை பாத்துகிட்டு இருந்துச்சாம்.
குழந்தையை கொடுங்கன்னு கேட்டு வாங்கி, 'வல்லரசு'ன்னு பேரு வெச்சாரம் (நல்ல வேளை பேரரசுன்னு வெச்சு பாவத்த சேத்துக்கல).
அப்புறம் அடுத்த நாள் லீவுன்றதால எல்லோரும் கிராமத்துக்கு வந்துருக்காங்க. கேப்டன் பிரச்சாரத்துக்கு தெருவில வந்துகிட்டிருக்கும்போது, என் அம்மா கனிஷ்க்க வெச்சுட்டு இருந்தாங்களாம்.
வழக்கம்போல் கேட்டு வாங்கி, 'பிரபாகரன்'னு பேரு வெச்சாராம், பெரியப்பா பேரும் அதாங்கறது தெரியாம.
உலகத்துலயே ரெண்டு நாள்ல ரெண்டு தடவ ஒரே தலைவரால பேரு வைக்கப்பட்டவன் கனிஷ்க்காத்தான் இருப்பான்னு நினைக்கிறேன்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 day ago
7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
ஊதுங்க நல்லா பிகுலு,
மாசிலாமணி ஹிரோ நகுலு,
பிராபாகர் உட்றான் டகுலு.
நன்றி அண்ணா...
எல்லாம் விசாரிச்சி கிடைத்த தகவல்...
ஏதோ நம்மால முடிஞ்சது...
பிரபாகர்....
T. R - ஐ, நம்புறேன், ஆனா விஜயகாந்த் ரெண்டு முறை பேரு வச்சதைத்தான் நம்ப முடியலை.
சிரித்தேன்
//சிரித்தேன்//
வரவிற்கு நன்றி...
பிரபாகர்
nalla nakkalu.... sankar vijayakanth m our kamadi arasiyal man tan
//nalla nakkalu.... sankar vijayakanth m our kamadi arasiyal man tan//
வருகைக்கு நன்றி...
ஒத்துக்கறேன். ஏதோ சோகத்திலயும் (அரசியல்ல சொல்றேன்) அப்பப்போ சிரிப்பு மூட்டறாங்களேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்...
பிரபாகர்...
Post a Comment