அலுவலகம் வந்ததிலிருந்து மனதிற்கு உறுத்தலாயிருக்கிறது பல்லிடுக்கில் பாக்கென.
சரியாய் பத்துநாள் இருக்கும். வெஸ்ட் மாம்பலம் லேக் வியூ அருகில் ஒரு பெரியவர் விபூதியுடன் சிரித்தமுகமாய் எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார்.
'தம்பி என்னை டி நகர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிடமுடியுமா எனக்கேட்க', சரி எனச் சொல்லி முதுகோடிருந்த பையினை முன்புறம் மாற்றி வழக்கத்தினும் மெதுவாய் ஓட்டிச் சென்றேன்.
சப்வேயைக் கடந்து நெரிசலில் செல்லும் வழக்கம் இல்லாததால் வலதுபுறம் ஜெயின் காலேஜ் வழியாய் செல்ல திரும்பி நிறுத்தினேன். அதற்குள் விடுவிடுவென இறங்கி அந்த பெரியவர் நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்.
ஒரு சிநேகமான புன்னகையோ, ஒரு நன்றியையோ சொல்லாமல் சட்டென சென்றது மனதுக்குள் ஏதோ செய்தது. அதே சமயம், இதையெல்லாமா எதிர்பார்ப்பது என உள் மனது வாதிட்டாலும், இல்லையில்லை அழைத்துச் செல்லக் கேட்கும் போது இருந்ததில் இறங்கு ம்போது ஒரு சதவீதமாவது இருக்கலாமே என வாதிடத்தான் செய்தது.
கிளம்பும் நேரத்தைப் பொறுத்து செல்லும் வழி மாறும் என்பதால், இன்றுதான் மீண்டும் அதே வழியில். அதே பெரியவர், மலர்ந்த சிரிப்புடன் கை காட்டி லிப்ட் கேட்க விருட்டென் வந்து விட்டேன். அதனால்தான் இந்த இடுகையின் முதல் வரி...
1 Comentário:
அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment