வைரம்...காமினி...பரந்தாமன் (சவால் சிறுகதை)

|

ஆஸ்பத்திரி.

'ஐ ஏம் சாரி, ஆப்ரேஷன் நேத்துதான் முடிஞ்சது, கண்டிப்பா உங்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியாது'

'இதுக்காகத் தான் இத்தனை கஷ்டப்பட்டேன் டாக்டர்,கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி, நான் இங்க இருக்கிறதே அவங்க யாருக்கும் தெரியாது, கண்டிப்பா நான் ஷூட்டிங் போயாகனும்...'

'நோ காமினி, யூ நீட் ரெஸ்ட் ஃபார் அட்லீஸ்ட் டூ டேஸ்' டாக்டர் ரவி கட்டாயமாய் சொல்லிவிட்டு மாஸ்க்கை அவளின் முகத்தில் பொறுத்திவிட்டு அகன்றார்.

காமினி தமிழ்த் திரையின் வளர்ந்து வரும் கதாநாயகி. திடீரென வயிற்றுவலி வர யாருக்கும் தெரியாமல் அட்மிட் ஆகி ஒரு மைனர் ஆப்ரேஷன், ஒரே நாள் என சொல்லவும் ஒத்துக்கொள்ள, முடிந்தபின் கண்டிப்பாய் இன்னும் இரு நாட்கள் இருந்தாகவேண்டும் என சொல்லவும்தான் மேற்கண்ட உரையாடல்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********
விமான நிலையம்.

துபாயிலிருந்து வரும் அந்த விமானத்திற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவே காத்திருந்தது. வரும் ஒரு பயணி வைரம் கடத்துவதாய் வந்த ஓர் வலுவான தகவலின் பேரில்.

"என்னய்யா பக்கத்துல ஒரே கும்பலா இருக்கு" என இன்ஸ் கேட்க,

'காமினி நடிக்கிற படத்தின் கிளைமாக்ஸ் சார், பர்மிசன் வாங்கி எடுத்திட்டு இருக்காங்க" என கான்ஸ் சொன்னார்.

விமானம் தரை இறங்கியதும் விமானத்திலிருந்து சிறிய கைப்பையுடன் மாடல் காமினி ஒய்யாரமாய் இறங்கி இமிக்ரேசனை நோக்கி எல்லோருடனும் இயல்பாய் நடந்தாள்.

*********
ஏர்போர்ட் ஷூட்டிங் ஸ்பாட்.

அனுமதி பெற்று ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. கிளைமாக்ஸ் காட்சியினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். காமினி தோளில் மாட்டிய பையோடு இருக்க, துப்பாக்கியோடு வில்லன் சிவா. காப்பாற்றத் தயாராய் கதாநாயகன் சுஜீத். ரெடி டேக் என சொன்னவுடன்,

"என்னை சுட்டாலும் கவலை இல்லை நான் போய்த்தான் ஆகனும்?" என காமினி கிளம்ப,

"ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

காட்சியின் படி துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்தும்போது ஹீரோ பாய்ந்து தட்டிவிடவேண்டும், துப்பாக்கி வெடித்து மேலே இருக்கும் சரவிளக்கில் பட்டு அறுந்து அப்படியே கீழே விழ வேண்டும், அதன் பின் ஃபைட்.

சிவா ட்ரிக்கரை அழுத்த துப்பாக்கியில் டம்மி புல்லட்டுக்கு பதில் யாரோ ஒரிஜினல் புல்லட் மாற்றி வைத்துவிட அது உண்மையில் வெடித்து அங்கிருந்த ஒரு டெக்னீஷியனின் தோளில் மேல் பாய்ந்தது. அவர் அலறலுடன் பொத்தென்று சாய அந்த இடமே களேபரமானது.

*********
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி திரு திருவென விழித்து "டார்லிங், எனக்கு, ஒன்னுமே எனக்கு புரியல. என்ன சொல்றீங்க?" எனக் கேட்டாள்.

பரந்தாமன் உள்ளே புதிதாய் வந்த ஒரு நபரைப் பார்த்து, "வாய்யா தனா, உனக்குத்தான் நன்றி சொல்லனும். ஷூட்டிங்ல துப்பாக்கியில ஒரிஜினல குண்டப் போட்டு கலக்கிட்டய்யா. அந்த களேபரத்தாலத் தான் காமினிய சரி வர செக் பண்ணாம விட்டுட்டாங்க, இந்தா உன் பங்கு" என ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை அவனது பாக்கெட்டில் திணித்துவிட்டு,

"சாரி காமினி, உங்கிட்ட சொல்லாமயே உன்னை டைமண்ட் கடத்த காரியரா உபயோகப்படுத்திக்கிட்டோம் . உன் பேக்கேஜ்ல இருந்த வைரம் இப்போ சேஃபா என் கைல..." என ஹா ஹா என அட்டகாசமாய் சிரிக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் கழித்தி "டார்லிங், லெட் மி கோ டு ரெஸ்ட் ரூம்" என சொல்லிய காமினி மெதுவாய் அங்கிருந்து விலகி, ஏற்கனவே ஒரு பார்ட்டியில் அறிமுகமான கமிஷ்னரின் எண்ணுக்கு அழைத்தாள்.

12 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

மீ த ஃபர்ஸ்டா? ஹையா! அமர்க்களம், அதகளம்!

Paleo God said...

சூப்பர் பிரபா. :))

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் பங்காளி....

vasu balaji said...

ம்ம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்ம்..ம்ம்..ம்ம்

Unknown said...

செம மொக்கை ...

rooto said...

இதுக்கு சிறுகதை எண்டு டாக் போட்டதுக்கு முதல்ல தூக்கில போடனும், அதை ஒரு மரமண்டை அமர்களம் எண்டு புகழ்ந்ததுக்கு அவனை போட்டுட்டு தூக்கணும்!!

Unknown said...

rooto - மூஞ்சிக்கு முகமூடி போட்டுக்கிட்டு மத்தவன மரமண்டைனு சொல்றதுக்கு மருந்தக் குடிச்சிட்டு மண்டையப் போடலாம்.

Unknown said...

கலக்கல் பிரபா..

அப்பாதுரை said...

வித்தியாசமாக இருக்குங்க. மத்த கதைகள் பெரும்பாலும் காமினி நடத்தைக்கு சாக்கு சொல்லியிருக்குன்னாலும் உங்க கதை மட்டும் தான் 'காமினியை கெட்டவளா சித்திரிக்கக்கூடாது' ரூலை அப்படியே பாலோ பண்ணியிருக்கு.

aru(su)vai-raj said...

கதை நல்லா இருக்கு . வாழ்த்துகள்

Abhi said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB