மிச்சர்கடை
4 weeks ago
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்.
ஒரு சிறிய சம்பவம் நினைவிற்கு வர என் தம்பியை அது பற்றி விசாரித்தேன். அவன் சொன்ன தகவல்களை வைத்து இதோ வரிசையாய் கீழே.
நேற்று.
ஊருக்கு போன சமயம். அண்ணா 'சில்லி சிக்கன் சாப்புடுறியா' ன்னு தம்பி திவா கேட்டான். அசைவ அயிட்டங்கள சூப்பரா செய்வான். ஆனா அவன் அதுக்காக மெனக்கடறது புடிக்காது, நிறைய மசாலாவை யூஸ் பண்ணுவான். அதுவுமில்லாம அம்மா ரொம்ப நல்லா மசாலா கம்மியா வெச்சி செய்வாங்க.
'நீ செய்யற மாதிரி இருந்தா வேணாம்' னு சொல்லவும், 'இல்ல ஜெயபால் அண்ணன் கடைக்கு போகலாம்' னு கூட்டிகிட்டு போனான். ஜெயபால் பத்தி ஒரே விஷயம் தான் தெரியும், செங்கல் சூளை வெச்சிருந்தாப்ல.
ராஜ மரியாதை. 'வாங்க பிரபாகர் அண்ணா, திவா அண்ணன் தான் எப்படி சில்லி சிக்கன் போடறதுன்னு சொல்லிக் கொடுத்தாரு. ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஓடுது, நல்ல எண்ணைய யூஸ் பண்றேன். கடை வெக்க அண்ணன், நீலமேகம் எல்லாம் காசு கொடுத்து உதவி செஞ்சாங்க. எனக்கு கடவுள் மாதிரி' ன்னு சொல்லிட்டு நான் சாப்பிட்டதுக்கு காசே வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. ரொம்ப வற்புறுத்தி கொடுக்க முயற்சி செஞ்சும் முடியல.
நல்ல ஓட்டம், டாஸ்மார்க், கள்ளச்சாராயம் னு தாராளமா புழங்குனதுல கடைக்கு செம வசூல். பதினைஞ்சு கிலோ வரைக்கும் விக்க ஆரம்பிச்சது. அப்படியே ஒரு பெட்டிக்கடையும் வெச்சி, போலீசுக்கு மாமூல் கொடுத்துட்டு சரக்கும் வெக்க, அவரோட வளர்ச்சி பிரம்மாண்டமா இருந்துச்சி. அடகு வெச்சிருந்த நாலு ஏக்கர் நிலத்த மீட்டாப்ல. மக்காச்சோளம் போடவும் நல்ல மகசூல். இன்சூரன்ஸ் பணமும் வந்து விட ஆளு எங்கயோ போயிட்டாரு. விட்டு போன எல்லாம் வந்துடுச்சி, பொண்டாட்டியையும் சேத்து.
முந்தைய நாள்
என்பீல்டு மினி புல்லட் வண்டியில ரெண்டு பேர உக்கார வெச்சிகிட்டு ஸ்பீடா ஜெயபால் ஓட்டிகிட்டு போயிருக்காரு. அப்போ ஒரு வளைவுல நாய் குறுக்கே வர வண்டியில இருந்து தடுமாறி, பஸ்ஸில மோதி கீழ விழுந்து மூணு பேருக்கும் நல்ல காயம். அவருக்கு காலு உடைஞ்சி கன்னத்துல கிழிஞ்சி.... ரணகளமாயிருச்சி.
சேலத்துக்கு தூக்கிகிட்டு போயி, மூணுபேருக்கும் அவருதான் செலவு பண்ணி கவனிச்சாரு. இருந்த எல்லா பணமும் காலியாக, அவரு பொண்டாட்டி வாழமாட்டேன்னு போயிடுச்சி. அப்போதான் அவரு என் தம்பி, லைப்ரேரியன் அண்ணன் நீலமேகம் கிட்ட கதறி அழ, முதல் போட்டு அந்த கடைய வெச்சு கொடுத்திருக்காங்க.
இன்று.
அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கையில நிறைய பணம் வெச்சிருக்காரு. நிலம் இன்னும் கொஞ்சம் வாங்கி போட்டிருக்காரு. உதவி செஞ்சவங்கள எல்லாம் மறந்துட்டாரு. பழைய ஆளுங்க யாருகிட்டயும் பேசறதுல்ல. பைக்குல ரொம்ப ஜாலியா சுத்திகிட்டிருக்காரு. பின்னால அதே ரெண்டு பேரோட.
©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB
33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
nice sir....
//அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கையில நிறைய பணம் வெச்சிருக்காரு. நிலம் இன்னும் கொஞ்சம் வாங்கி போட்டிருக்காரு. பழைய ஆளுங்க யாருகிட்டயும் பேசறதுல்ல. பைக்குல ரொம்ப ஜாலியா சுத்திகிட்டிருக்காரு. பின்னால அதே ரெண்டு பேரோட.//
இன்னும் இது போல தான் நிறைய பேரு சுத்திட்டு திறியுராங்க.........
அது யாரு அந்த ரெண்டு பேர். ஒரு விதத்தில நாய் குறுக்க பூந்து அவர் வாழ்க்கையில பெரிய திருப்பத்த ஏற்படுத்திடுச்சி.நல்லா இருக்கு ப்ரபாகர்.
எங்க டேமேஜர் தமிழ்மணம் பேன் பண்ணிட்டான். வீட்ல போய் கட்டவிரல் மேல பார்த்தது அமுக்குறேன்.
ஒரு சின்ன நாய் வாழ்க்கையையே புரட்டி போடுது .......................அவர் உண்மையிலேயே சந்தோஷமாய் இருக்கிறாரா
ரைட்டு
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
nice sir....
//
நன்றி ஜெய்...
//
ஊடகன் said...
//அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கையில நிறைய பணம் வெச்சிருக்காரு. நிலம் இன்னும் கொஞ்சம் வாங்கி போட்டிருக்காரு. பழைய ஆளுங்க யாருகிட்டயும் பேசறதுல்ல. பைக்குல ரொம்ப ஜாலியா சுத்திகிட்டிருக்காரு. பின்னால அதே ரெண்டு பேரோட.//
இன்னும் இது போல தான் நிறைய பேரு சுத்திட்டு திறியுராங்க.........
//
ஆமாம் பழச மறந்துட்டு.... நன்றிங்க, உங்க கருத்துக்கு.
//
வானம்பாடிகள் said...
அது யாரு அந்த ரெண்டு பேர். ஒரு விதத்தில நாய் குறுக்க பூந்து அவர் வாழ்க்கையில பெரிய திருப்பத்த ஏற்படுத்திடுச்சி.நல்லா இருக்கு ப்ரபாகர்.
வானம்பாடிகள் said...
எங்க டேமேஜர் தமிழ்மணம் பேன் பண்ணிட்டான். வீட்ல போய் கட்டவிரல் மேல பார்த்தது அமுக்குறேன்.
//
நன்றிங்கய்யா. ஆனா அவரு பழச மறந்துட்டாரு, அதான் கஷ்டமா இருக்கு.
//
வெண்ணிற இரவுகள்....! said...
ஒரு சின்ன நாய் வாழ்க்கையையே புரட்டி போடுது .......................அவர் உண்மையிலேயே சந்தோஷமாய் இருக்கிறாரா
//
இருக்காரு. கொஞ்சம் திமிரும் சேர்ந்து.
//
தராசு said...
ரைட்டு
//
ரைட்டுண்ணே. வணக்கம்.
//அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. கையில நிறைய பணம் வெச்சிருக்காரு. நிலம் இன்னும் கொஞ்சம் வாங்கி போட்டிருக்காரு. உதவி செஞ்சவங்கள எல்லாம் மறந்துட்டாரு. பழைய ஆளுங்க யாருகிட்டயும் பேசறதுல்ல. பைக்குல ரொம்ப ஜாலியா சுத்திகிட்டிருக்காரு. பின்னால அதே ரெண்டு பேரோட.//
:-((
பணம் வந்தா குணம் மாறும் என்பதற்கு நல்ல உதா'ரணம்'.
ஆனா அந்த ரெண்டு பேரை மறுபடியும் சேர்த்துகிட்டு அலையறது காமெடிதான்.... :))
பா.ராஜாராம் said...

சுடும் உண்மை...
துபாய் ராஜா said...
பணம் வந்தா குணம் மாறும் என்பதற்கு நல்ல உதா'ரணம்'.
ஆனா அந்த ரெண்டு பேரை மறுபடியும் சேர்த்துகிட்டு அலையறது காமெடிதான்.... :))
//
இது தான் வாழ்க்கை ராஜா...
//
இது தான் வாழ்க்கை ராஜா...//
repeattu..!
சிலர் இப்படிதான்.ஏணிமேல மேலே ஏறிபோனதும் உதவிய அந்த ஏணியையே கீழே தள்ளிடுவாங்க.
ஒரு சிலர் தான் நடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பாங்க..
பிரபா,நாய் தின்னாக் காசு என்றார்கள்.ஆனா அது படும்பாடு அப்பாடி....!
நாளைக்கு திருப்பத்துல போறப்போ பார்த்து போகச் சொல்லுங்க
சில்லரைக்காக...
சிலர்..
thamilmanam 7/7
நாட்டுல இது போல் பல பேர் திரியிருங்க பிரபா அண்ணே...
ஒன்னும் பண்ண முடியாது..
thamilmanam 8/8
//நாளைக்கு திருப்பத்துல போறப்போ பார்த்து போகச் சொல்லுங்க //
ஆமா, நாய் திரும்ப வரலாம். ஆனா, அதுமாதிரி உதவி செய்ய ஆள் வருவாங்களானு தெரியாது...
வித்தியாசமான கதையமைப்பு பிரபாகர்.. நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
திருப்பங்கள் அமைந்த இடுகை
//உதவி செஞ்சவங்கள எல்லாம் மறந்துட்டாரு.//
இப்படியும் சிலர்
//
கலகலப்ரியா said...
//
இது தான் வாழ்க்கை ராஜா...//
repeattu..!
//
நன்றி சகோதரி...
//
Mrs.Menagasathia said...
சிலர் இப்படிதான்.ஏணிமேல மேலே ஏறிபோனதும் உதவிய அந்த ஏணியையே கீழே தள்ளிடுவாங்க.
ஒரு சிலர் தான் நடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பாங்க..
//
ஆமாங்க, சரியா சொன்னிங்க. நன்றிங்க சகோதரி.
//
ஹேமா said...
பிரபா,நாய் தின்னாக் காசு என்றார்கள்.ஆனா அது படும்பாடு அப்பாடி....!
//
ம்... நன்றி ஹேமா.
//
ஈரோடு கதிர் said...
நாளைக்கு திருப்பத்துல போறப்போ பார்த்து போகச் சொல்லுங்க
//
நாளை யாருக்கு தெரியும் கதிர்! அவர் நல்லா இருக்கட்டும்.
//
பிரியமுடன்...வசந்த் said...சில்லரைக்காக...
சிலர்..
//
ஆமாம் தம்பி... நன்றி.
//
வானம்பாடிகள் said...
thamilmanam 7/7
//
ஆஹா, ஓட்டும் போட்டுட்டீங்கள? நன்றிங்கய்யா.
//
ஜெட்லி said...நாட்டுல இது போல் பல பேர் திரியிருங்க பிரபா அண்ணே...
ஒன்னும் பண்ண முடியாது..
//
நன்றி ஜெட்லி.
//
நசரேயன் said...
thamilmanam 8/8
//
வாங்க நசரேயன், ஓட்டுக்கு நன்றி.
//
ரோஸ்விக் said...
//நாளைக்கு திருப்பத்துல போறப்போ பார்த்து போகச் சொல்லுங்க //
ஆமா, நாய் திரும்ப வரலாம். ஆனா, அதுமாதிரி உதவி செய்ய ஆள் வருவாங்களானு தெரியாது...
//
வாங்க ரோஸ்விக். இது நிறைய பேருக்கு புதிய மாட்டேங்குது.
//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
வித்தியாசமான கதையமைப்பு பிரபாகர்.. நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.
//
வாழ்த்துக்கு நன்றி செந்தில்.
//
ஆ.ஞானசேகரன் said...
திருப்பங்கள் அமைந்த இடுகை
//
நன்றிங்க ஞானசேகரன்.
//
சின்ன அம்மிணி said...
//உதவி செஞ்சவங்கள எல்லாம் மறந்துட்டாரு.//
இப்படியும் சிலர்
//
நன்றிங்க.
நல்லா சொன்னீங்க போங்க....
வாங்க அன்பு, முதல் வருகைக்கு நன்றி...
இந்த மனுசுங்களே இப்படித்தான் பிரபா என்ன பண்றது...
Post a Comment