பிரச்சினைய பேசுவோமா? - சிறுகதை.

|

கடற்கரை. படகின் பின்புறம் சுலக்சாவும் சுதிரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருக்க, மௌன ஆர்ப்பாட்டத்தில் அலைகள். யார் பேசுவது என அவர்களுக்கும் தயக்கம். தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்.... குரல் கேட்டு இருவரும் அச் சிறுவனை பார்க்க சுதிர் அப்புறமாய் வரும்படி சைகை செய்தான்.

அவள் மணலை நிரண்டிக்கொண்டிருக்க, அவன் கீ செயினை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

'இப்படியே இருந்தால் எப்படி? அதுக்குத்தான் வர சொன்னியா?'

'கொஞ்சம், இல்லையில்ல நிறைய குழப்பமா இருக்கு. அதான்...'

'பேசினாத்தானே சரியாகும்... சரி முதல்ல உங்க சைட்ல இருக்கிறத பத்தி பேசுவோமா?'

'ம்.... சரி. ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்துட்டு ஆரம்பிப்போமா?'

இன்னுமொரு சுண்டல் குறுக்கீடு, தலையாட்டி வேண்டாமென சொல்லி,

'ஆரம்பிக்கலாமா? உங்க அம்மா பிரச்சினை இல்ல கல்யாணம் வரைக்கும், அப்பாதான் என்ன பண்றதுன்னே தெரியலன்னு சொன்ன'.

'ஆமாம். என் அத்த பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தீவிரமா இருக்கார். அத்த பொண்ணு பிரதீப்ப லவ் பண்றா, அவ ஓடிப்போனா லைன் கிளியர். அது எப்பன்னு தெரியல.'

'அதே மாதிரி உன்னோட முன்னாள் காதலி தொந்தரவா இருப்பான்னு...'

'எஸ், இப்ப அவ லவ் பண்ணிட்டு இருக்கிறவன் சரியில்லாத ஆளு. பிரச்சினைன்னா திரும்ப என்கிட்டத்தான் வருவா'

முறுக்கு முறுக்கு என இன்னொரு குறுக்கீடு. சைகையால் வேண்டாமென சொல்ல, மறு பேச்சில்லாமல் அச் சிறுவன் செல்ல, தொடர்ந்தார்கள்.

'உங்க அக்கா ஏதாச்சும் பிரச்சினை பண்ணுவாங்கன்னு சொன்னியே?'

'உன்னை கல்யாணம் பண்ணினா, சொத்துல பங்கு வேணும்னு நிப்பாங்க. அக்காவோட முதல் கணவர் வேற குடிகாரர். அவரும் பிரச்சினை பண்ணுவார்'.

'அப்படியா? நல்லவேளை, உன் தங்கச்சி ஒண்ணும் பிரச்சினை இல்ல!'

'நீ வேற, இன்னும் சொல்லல. அது இன்னும் சீரியஸ். அவ வேற மதத்துல லவ் பண்றா... அதுல வேற என்னென்ன ஆகப்போகுதோ?'

'நினைச்சாலே பயங்கரமா இருக்கு. அப்பா உங்க பாட்டியாலா மட்டும்தான் பிரச்சினை இல்லன்னு சொல்லு.'

'அங்கதான் தப்பு பண்றே, அவங்க கிட்ட இருக்கிற நகைக்கு என் சித்தப்பாவும் அப்பாவும் போட்டி போட்டுகிட்டிருக்காங்க, அத்தையும் களத்துல இறங்க தயாரா இருக்காங்க'

'நீங்க சொல்றமாதிரி பயங்கரமான குழப்பம்தான்... சரி என் பிரச்சினையைப் பத்தி பேசுவோமா?'

'தலை வலிக்கிற மாதிரி இருக்கு, இன்னொரு நாளைக்கு பேசுவோம், கிளம்பலாமா?'

'சரி' என அவள் சொல்ல இருவரும் எழுந்து பொறுமையாய் மணலை தட்டிவிட்டு, தலையினை சரிசெய்து ஒன்றாய் வர,

'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.

32 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Anonymous said...

:), சீரியல் எல்லாம் இப்படித்தான் ஓடிட்டு இருக்கு போல‌

Raju said...

ஹா..ஹா..படிக்கும்போதே நெனைச்சேன்..இது என்னாடா சீரியல் மாதிரி போகுதேன்னு..!
என்னண்ணே, வீட்ல ஒரே கோலங்கள், திருபதி செல்வம் தானா..?
:-)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

)....

ஸ்ரீ.கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெட்லி... said...

என்ன அண்ணே..வீட்ல சீரியல் பார்க்கறிங்க போல...

கலகலப்ரியா said...

ரொம்ப சீரியல் பார்க்கறீங்கண்ணா சொல்லிப்புட்டேன்...! அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல...! நச்ன்னு சொல்லிப்புட்டீங்க... இத பார்த்தாவது சீரியல் எடுக்கிறவங்க கொஞ்சம் சீரியஸா சிந்திக்கட்டும்..!

க.பாலாசி said...

மொத்தம் எத்தன லவ்.....இடையிலவேற பண்டாணி சுண்டல்......கடைசியா எல்லமே சீரியலுக்குத்தானா.....

கதை நல்லாருக்கு....

புலவன் புலிகேசி said...

தில் படத்தில் விவேக் சொல்லும் "படிகட்டு பாமா" நினைவுக்கு வருகிறது. உண்மையில் தொலைக்காட்சித் தொடர்களில் நடப்பதை சொல்லியிருக்கிறீர்கள்.

தராசு said...

படிக்கறப்பவே பயமா இருக்கு,

இன்னும் அந்த போலீஸ்கார தாத்தா, பேங்க்ல வேலை செய்யற சித்தி, அரசியல்ல இருக்குற மாமா ..... இப்படி நெறய பேர விட்டுட்டீங்களே!!!!

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
:), சீரியல் எல்லாம் இப்படித்தான் ஓடிட்டு இருக்கு போல‌
//
நன்றிங்க. தாங்க முடியாம எழுதினதுதான் சகோதரி.

//
♠ ராஜு ♠ said...
ஹா..ஹா..படிக்கும்போதே நெனைச்சேன்..இது என்னாடா சீரியல் மாதிரி போகுதேன்னு..!
என்னண்ணே, வீட்ல ஒரே கோலங்கள், திருபதி செல்வம் தானா..?
//
இல்லப்பா. பார்த்தாலும் நான் blog பக்கம் வந்துடுவேன்.

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
)....

//
நன்றி தம்பி...

//
ஜெட்லி said...
என்ன அண்ணே..வீட்ல சீரியல் பார்க்கறிங்க போல...
//

நாம பாக்கறதில்ல, மத்தவங்க பாக்கும்போதும் இருக்கிறதில...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
ரொம்ப சீரியல் பார்க்கறீங்கண்ணா சொல்லிப்புட்டேன்...! அதான் நான் அந்தப் பக்கமும் போறதில்ல...! நச்ன்னு சொல்லிப்புட்டீங்க... இத பார்த்தாவது சீரியல் எடுக்கிறவங்க கொஞ்சம் சீரியஸா சிந்திக்கட்டும்..!
//
ஐயோ தங்கச்சி, நான் பாக்கிறதில்ல. சீரியல் பாத்தா கலகல எல்லாம் போயிடும்னு எனக்கு தெரியும்...

//
க.பாலாசி said...
மொத்தம் எத்தன லவ்.....இடையிலவேற பண்டாணி சுண்டல்......கடைசியா எல்லமே சீரியலுக்குத்தானா.....

கதை நல்லாருக்கு....
//
நன்றி பாலாசி.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
தில் படத்தில் விவேக் சொல்லும் "படிகட்டு பாமா" நினைவுக்கு வருகிறது. உண்மையில் தொலைக்காட்சித் தொடர்களில் நடப்பதை சொல்லியிருக்கிறீர்கள்.
//
எழுதி முடித்தபின் எனக்கும் அந்த எண்ணம் வராமலில்லை நண்பா.

//
தராசு said...
படிக்கறப்பவே பயமா இருக்கு,
u
இன்னும் அந்த போலீஸ்கார தாத்தா, பேங்க்ல வேலை செய்யற சித்தி, அரசியல்ல இருக்குற மாமா ..... இப்படி நெறய பேர விட்டுட்டீங்களே!!!!
//
அண்ணே இதுவே ரொம்ப ஓவரா இருக்கு. சீரியல் மோகம் ரொம்ப படுத்துது. அதான் கொஞ்சமா நிப்பாட்டிட்டேன்.

vasu balaji said...

சீரியல் மாதிரியே இருக்கே! ஏன் இந்தக் கொல வெறி. நல்லாருக்கு=))

ஈரோடு கதிர் said...

நல்லா சீரியல் பார்க்கறீங்கனு தெரியுது பிரபா

நல்ல முயற்சி.... ....

ம்ம்ம்ம் எதுக்கா!!!??

சீரியல் டைரக்டர் ஆகத்தான்

கலையரசன் said...

எது எப்படியோ.. சுத்தி சுத்தி சீரியல் எங்க போனாலும் என்னைய அடிக்குது!

Anonymous said...

கொஞ்சம் தல சுத்துது ...

நர்சிம் said...

என்னைப்பற்றில 36 ஆனா 27ன்னு ஒரே எண் கணிதமா இருக்கே தல?

பிரபாகர் said...

// வானம்பாடிகள் said...
சீரியல் மாதிரியே இருக்கே! ஏன் இந்தக் கொல வெறி. நல்லாருக்கு=))

//

சீரியல் மாதிரி எழுதினதுக்கே இப்படி. சீரியல்னா? அவ்வளவுதான் போலிருக்கு...
//

ஈரோடு கதிர் said...

நல்லா சீரியல் பார்க்கறீங்கனு தெரியுது பிரபா

நல்ல முயற்சி.... ....

ம்ம்ம்ம் எதுக்கா!!!??

சீரியல் டைரக்டர் ஆகத்தான்
//

நல்லா கிண்டிவிடுறீங்க...

பிரபாகர் said...

//
கலையரசன் said...
எது எப்படியோ.. சுத்தி சுத்தி சீரியல் எங்க போனாலும் என்னைய அடிக்குது!

//

வேறெங்க மாட்டுனீங்க கலை?

//
sarveshhere said...
கொஞ்சம் தல சுத்துது ...

//

நிறைய பேர் சுத்தல்ல இருக்காங்க, அதான்....

//

நர்சிம் said...

என்னைப்பற்றில 36 ஆனா 27ன்னு ஒரே எண் கணிதமா இருக்கே தல?

//

ம்... அத வேற மாத்தணும்... 24 டிசம்பர் அன்னிக்கு 37 ன்னு. நன்றி நரசிம்...

சங்கர் said...

//'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.//

ஒரு வருஷம்னு சொல்லியிருந்தா, உங்களுக்கு சீரியல் டைரடக்கர் ஆகும் தகுதி வந்திடுச்சின்னு சொல்லியிருப்பேன், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க

Menaga Sathia said...

ம்ம் சீரியல் ரொம்ப பாக்கறீங்க போல.நீங்க மட்டும் என்னவாம்ன்னு என்னை திருப்பி கேட்கக்கூடாது..ஹி.ஹி..

நல்லாயிருக்கு அண்ணா.

இந்த கோலங்கள் எப்ப முடியும்னு உங்கள் யருக்காவது தெரிந்த சொல்லுங்களேன்.மண்டை காயுது எனக்கு..

வெண்ணிற இரவுகள்....! said...

"திருட்டு பயலே" படத்தில் வரும் விவேக் நகைச்சுவை நியாபகம் வருகிறது ...........நகைச்சுவையாய் இருந்தாலும் ..........நம் மக்கள் குழைந்தைகள் மனதில் தப்பான ரசனை வளர்த்துக்கொண்டிருக்கிறது தொலைகாட்சி....இது ஒரு கலாச்சாரக் கற்பழிப்பு ...இந்த கள்ளக் காதலும் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது ......மனிதனிடம் அன்பு குறைந்து கொண்டே இருக்கிறது இந்த எந்திர வாழ்வில் .......கணவனுக்கு மனைவியிடம் அன்பு செலுத்த நேரம் இல்லை ....கள்ளக் காதல் வரத் தான் செய்யும் ......அன்புகளை எதிர்பார்கிறது மனது ....என்ன செய்ய அண்ணா

Unknown said...

சீரியல் பார்த்த அனுபவம் பேசுகிறது. நல்ல சீரியல்.. sorry கதை

பிரபாகர் said...

//
சங்கர் said...
//'கட் கட்'... என குரல். 'எக்ஸலேன்ட். ஒரு மாதத்துக்கான எபிசோட் ரெடியாயிடுச்சி. பேக் அப்' என டைரக்டர் சொன்னார்.//

ஒரு வருஷம்னு சொல்லியிருந்தா, உங்களுக்கு சீரியல் டைரடக்கர் ஆகும் தகுதி வந்திடுச்சின்னு சொல்லியிருப்பேன், இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க

//

வாங்க சங்கர், நமக்கு அனுபவம் ஆராய்ச்சியெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.

//

Mrs.Menagasathia said...

ம்ம் சீரியல் ரொம்ப பாக்கறீங்க போல.நீங்க மட்டும் என்னவாம்ன்னு என்னை திருப்பி கேட்கக்கூடாது..ஹி.ஹி..

நல்லாயிருக்கு அண்ணா.

இந்த கோலங்கள் எப்ப முடியும்னு உங்கள் யருக்காவது தெரிந்த சொல்லுங்களேன்.மண்டை காயுது எனக்கு..

//

வாங்க சகோதரி... அதோட டைரக்டருக்கே தெரியாத கேள்விய என்ன கேட்டு பயமுறுத்துறீங்களே?

பிரபாகர் said...

//

வெண்ணிற இரவுகள்....! said...

"திருட்டு பயலே" படத்தில் வரும் விவேக் நகைச்சுவை நியாபகம் வருகிறது ...........நகைச்சுவையாய் இருந்தாலும் ..........நம் மக்கள் குழைந்தைகள் மனதில் தப்பான ரசனை வளர்த்துக்கொண்டிருக்கிறது தொலைகாட்சி....இது ஒரு கலாச்சாரக் கற்பழிப்பு ...இந்த கள்ளக் காதலும் கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது ......மனிதனிடம் அன்பு குறைந்து கொண்டே இருக்கிறது இந்த எந்திர வாழ்வில் .......கணவனுக்கு மனைவியிடம் அன்பு செலுத்த நேரம் இல்லை ....கள்ளக் காதல் வரத் தான் செய்யும் ......அன்புகளை எதிர்பார்கிறது மனது ....என்ன செய்ய அண்ணா

//

ஆமாம், எழுதிய பின் நானும் உணர்ந்தேன்.

//

Bharathy said...
சீரியல் பார்த்த அனுபவம் பேசுகிறது. நல்ல சீரியல்.. sorry கதை

//
இல்லங்க பாரதி.... சீரியல் பாக்கறவங்கள பாத்ததுல வந்தது...

அன்புடன் மலிக்கா said...

எல்லாரும் சீரியல் சீரியல்ன்னு சொல்றாங்களே
அப்படின்னா என்னாண்ணா?????

பிரபாகர் said...

//அன்புடன் மலிக்கா said...
எல்லாரும் சீரியல் சீரியல்ன்னு சொல்றாங்களே
அப்படின்னா என்னாண்ணா?????
//
ஆகா அண்ணனுக்கேத்த தங்கை... தெரியாமத்தான் இத்தனை நாள் இருக்கீங்களா?

Prathap Kumar S. said...

என்னது ஒரு மாசத்து இதைவச்சே ஒட்டீருவாய்ங்களா??? என்னக்கொடுமைங்க பிரபா இது...

மெகா சீரியலால ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரியது.

பிரபாகர் said...

//நாஞ்சில் பிரதாப் said...
என்னது ஒரு மாசத்து இதைவச்சே ஒட்டீருவாய்ங்களா??? என்னக்கொடுமைங்க பிரபா இது...

மெகா சீரியலால ரொம்ப பாதிக்கப்பட்டவர் போல தெரியது.

//

இதுக்கே எனக்கு அனுபவம் பத்தலைன்னு ஜெட்லி சொல்றாரு... நன்றி பிரதாப்.

துபாய் ராஜா said...

படிக்கும்போது விவேக் காமெடிதான் நியாபகம் வந்தது.... அந்தப்பட காமெடியில் பார்க்,பீச் என காதலர் கூடும் பல லொகேஷன்களில் கலக்கியிருப்பார்.... :))

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
படிக்கும்போது விவேக் காமெடிதான் நியாபகம் வந்தது.... அந்தப்பட காமெடியில் பார்க்,பீச் என காதலர் கூடும் பல லொகேஷன்களில் கலக்கியிருப்பார்.... :))
//
எழுதியபின் எனக்கும்தான்... நன்றி ராஜா...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB