ஒரு சம்பவம் பல கோணங்கள்...

|

வானம்பாடிகள் அய்யா எழுதிய பரம்பரை.. படிக்கும்போதே, நமக்கு ஒரு சிறு பொறி தட்டுப்பட, இதோ களத்துல இறங்கிட்டோம்ல...

(சிவப்புக்கலரில் இருப்பது அப்படியே அய்யாவிடமிருந்து சுட்டது) 

ஏய் ரமா! இங்க வா என மிரட்டியதில் நடுங்கிப் போய் தந்தையிடம் வந்தாள் ரமா.

கொஞ்ச நாளா உன் போக்கு சரியில்லை. நீ மெதுவா வேலியோரம் போய் நிக்குறதும், பக்கத்து வீட்டு ராஜா திருட்டுத் தனமா வேலியோரம் வந்து நிக்குறதும் முனகி முனகி பேசிக்கறதும் பார்த்துகிட்டுதான் இருக்கேன். என்ன நடக்குது அங்க என்றார்.

மெதுவாக, எனக்கு அவனப் பிடிச்சிருக்கு என்றாள் ரமா.

என்னது? என்று அடித்தொண்டையிலிருந்து கத்தி, அடியே இங்க பாரு உம்பொண்ணு பேசுறத என்றதில் அவள் தாய் ஓடி வந்து, என்னடி என்றாள். தயங்காமல் மீண்டும் சொன்னதையே சொன்னாள் ரமா. பிடித்தது சனி, தாயும் தந்தையும் மாறி மாறி தொண்டை தெறிக்க கத்தினாலும் சலனமின்றி இருந்த ரமா எனக்கு அவந்தான் வேண்டும் என்றாள்.

நம்ம ஜாதி என்ன, அவன் ஜாதி என்ன, ஜாதி விட்டு கண்டிப்பா முடியாது. நம்ம ஜாதியில எந்த நாயயாவாது கொண்டுவா, உடனே கல்யாணம் பண்ணிவெக்கிறேன் என்றார்.

அடுத்த வாரமே அவளது ஒரிஜினல் காதலனை, சினிமாவில் வேலை செய்யும் ரவியை கூட்டிவர, ஒரே ஜாதி என்ற காரணத்திற்காகவும், வாக்கு கொடுத்து மாட்டிக் கொண்டதாலும் ஒத்துக்கொள்ள திருமணம் இனிதே நடந்தேறியது.

இதன் பின் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே படியுங்கள்.

பக்கத்து வீட்டு ராஜா.
தேங்க்ஸ் ரமா, எதிர் வீட்டு பிகர் ரொம்பத்தான் பிகு பண்ணிட்டு இருந்துச்சி. உன் கூட உன் திட்டத்துக்காக அடிக்கடி பேசறத பாத்துட்டு உன் கல்யாணத்துக்கு அப்புறம் ஓகே சொல்ல இப்ப லைன் கிளியர்... சக்சஸ்.

ரமா.
அப்பாவுக்கு சினிமாவே புடிக்காது, அதில வேல செய்யற ஆளுன்னா சுத்தமா புடிக்காது. அதுக்காக ரவி கொடுத்த பிளான கரெக்டா செய்ய... சக்சஸ்.

அப்பா.
ராஜா எதிர் வீட்டு பொண்ண லுக் விட்டான், இப்ப என் பொண்ண. கட்டி கொடுத்துட்டு அந்த கருமம் புடிச்சவன் கூட எப்படி காலம் தள்றது, பக்கத்துல வேறல்ல காலம் பூரா இருப்பான். அப்புறம்... ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.

அம்மா.
மாப்ளே சினிமா எடுக்கலைன்னாலும் ஒரு சீரியலாவது எடுக்காமலா போயிடுவாரு? ஒரு சீன்லயாவது நடிச்சிடனும். சின்ன வயசில இருந்தே எனக்கு வெளிய சொல்ல முடியாத ஆசை.... இப்போ சக்சஸ்.

ரவி.
எனக்கு ஒண்ணுமே தெரியலன்னு டைரக்டர் திட்டினால்ல, இப்போ எவ்வளவு பெரிய பிளான சாதாரணமா செஞ்சிருக்கேன்... மாமனார்கிட்ட ஆட்டைய போட்டு எப்படியாவது ஒரு படத்த எடுத்திட வேண்டியதுதான்... சக்சஸ்.

படிச்சிட்டு நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியல. பின்னூட்டமிட்டா... சக்சஸ்.

36 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Anonymous said...

நான்: நல்லாத்தேன் ரூம் போட்டு யோசிக்கறாங்க :)

பிரபாகர் said...

//சின்ன அம்மிணி said...
நான்: நல்லாத்தேன் ரூம் போட்டு யோசிக்கறாங்க :)
//

நன்றிங்க, எதிர்பார்த்த கமென்ட் உங்களிடமிருத்து முதலாய்... ரொம்ப சந்தோசம்...

ஜெட்லி... said...

வித்தியாசமான முயற்சி அண்ணே...
பின்னால் வரும் விளக்கங்கள் நல்ல சிரிப்பு

புலவன் புலிகேசி said...

எப்படில்லாம் யோசிக்கிறீங்க...முடியல.......நல்ல முயற்சி தல.நல்லாத்தான் இருக்கு.

வெண்ணிற இரவுகள்....! said...

//அப்பா.
ராஜா எதிர் வீட்டு பொண்ண லுக் விட்டான், இப்ப என் பொண்ண. கட்டி கொடுத்துட்டு அந்த கருமம் புடிச்சவன் கூட எப்படி காலம் தள்றது, பக்கத்துல வேறல்ல காலம் பூரா இருப்பான். அப்புறம்... ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.
// ஆமாம் உறவே மாறிடும்ள

சங்கர் said...

//மாப்ளே சினிமா எடுக்கலைன்னாலும் ஒரு சீரியலாவது எடுக்காமலா போயிடுவாரு? ஒரு சீன்லயாவது நடிச்சிடனும். சின்ன வயசில இருந்தே எனக்கு வெளிய சொல்ல முடியாத ஆசை//

உங்க சொந்த ஆசை மாதிரி இருக்கே

vasu balaji said...

:)). இது புது மாதிரி தொடர் இடுகையா இருக்கே. சூப்பர்.

ப்ரியமுடன் வசந்த் said...

நைனா அண்ணனையும் கெடுத்து வச்சுருக்க நீ...

ரெண்டு பேரும் சேர்ந்து கூத்து அடிக்கிறீங்க...

சூப்பர்..

பின் விளக்கமும் நல்ல நகைச்சுவைண்ணா...

Cable சங்கர் said...

நல்லா இருக்கு பிரபா..

ஊடகன் said...

யாரோ விட்டு போனதை தான் எல்லாரும் முடிச்சு வைப்பாங்க, அனால் முடிசுவச்சதையே முழுதா ஆரம்பிசிடீங்கலே..........

எதுமாத்ரயும் இல்லாத புது மாதிர்யான முயற்சி........

எனக்கு தெரிந்து நீங்கள் தான் இந்த முயற்சிக்கு ஆரம்பம் என எண்ணுகிறேன்....அப்படியா..?

வாழ்த்துக்கள்........

ஈரோடு கதிர் said...

உங்க இடுகையும் இப்போ சக்சஸ்

கலகலப்ரியா said...

ஆ..! நீங்களுமா...! போச்சுடா...! வேற யாராவது இத திரும்ப தொடர போறீங்களா...? அண்ணே உங்க சக்சஸ் ஃபார்முலா சக்சஸ்... அவ்வ்வ்வ்...

Unknown said...

சர்வேசனோட நச் சிறுகதைப் போட்டிக்கு வந்திருக்கிற கதைகளைப் படிச்சி படிச்சி, இந்தக் கதையப் படிக்கும்போது இது நாய் குடும்பமோன்னு நினைச்சிட்டேன்...

நாகா said...

என்னங்க எல்லோரும் மாத்தி மாத்தி டரியலாக்கறீங்களே...!

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
வித்தியாசமான முயற்சி அண்ணே...
பின்னால் வரும் விளக்கங்கள் நல்ல சிரிப்பு
//
நன்றி ஜெட்லி.
//
SUREஷ் (பழனியிலிருந்து) said...
????
//
வாங்க. வணக்கம்.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
எப்படில்லாம் யோசிக்கிறீங்க...முடியல.......நல்ல முயற்சி தல.நல்லாத்தான் இருக்கு.
//
நன்றி நண்பா...

//
வெண்ணிற இரவுகள்....! said...
//அப்பா.
ராஜா எதிர் வீட்டு பொண்ண லுக் விட்டான், இப்ப என் பொண்ண. கட்டி கொடுத்துட்டு அந்த கருமம் புடிச்சவன் கூட எப்படி காலம் தள்றது, பக்கத்துல வேறல்ல காலம் பூரா இருப்பான். அப்புறம்... ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.
//
ஆமாம் உறவே மாறிடும்ள
//
சரியா புரிஞ்சிட்டீங்க.

பிரபாகர் said...

//
சங்கர் said...
//மாப்ளே சினிமா எடுக்கலைன்னாலும் ஒரு சீரியலாவது எடுக்காமலா போயிடுவாரு? ஒரு சீன்லயாவது நடிச்சிடனும். சின்ன வயசில இருந்தே எனக்கு வெளிய சொல்ல முடியாத ஆசை//

உங்க சொந்த ஆசை மாதிரி இருக்கே
//
ம்... நடிக்கல்லாம் இல்ல சங்கர். நம்ம லட்சியமெல்லாம் பெருசு.

//
வானம்பாடிகள் said...
:)). இது புது மாதிரி தொடர் இடுகையா இருக்கே. சூப்பர்.
//
நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
நைனா அண்ணனையும் கெடுத்து வச்சுருக்க நீ...

ரெண்டு பேரும் சேர்ந்து கூத்து அடிக்கிறீங்க...

சூப்பர்..

பின் விளக்கமும் நல்ல நகைச்சுவைண்ணா...
//
நன்றி தம்பி.

//
Cable Sankar said...
நல்லா இருக்கு பிரபா..
//
ரொம்ப சந்தோசம் அண்ணா....

பிரபாகர் said...

//
ஊடகன் said...
யாரோ விட்டு போனதை தான் எல்லாரும் முடிச்சு வைப்பாங்க, அனால் முடிசுவச்சதையே முழுதா ஆரம்பிசிடீங்கலே..........

எதுமாத்ரயும் இல்லாத புது மாதிர்யான முயற்சி........

எனக்கு தெரிந்து நீங்கள் தான் இந்த முயற்சிக்கு ஆரம்பம் என எண்ணுகிறேன்....அப்படியா..?

வாழ்த்துக்கள்........
//
தெரியல. வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.

//
கதிர் - ஈரோடு said...
உங்க இடுகையும் இப்போ சக்சஸ்
//
நன்றி கதிர்.

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
ஆ..! நீங்களுமா...! போச்சுடா...! வேற யாராவது இத திரும்ப தொடர போறீங்களா...? அண்ணே உங்க சக்சஸ் ஃபார்முலா சக்சஸ்... அவ்வ்வ்வ்...
//
நன்றி சகோதரி. ஏதோ நம்மால முடிஞ்சது.

//
முகிலன் said...
சர்வேசனோட நச் சிறுகதைப் போட்டிக்கு வந்திருக்கிற கதைகளைப் படிச்சி படிச்சி, இந்தக் கதையப் படிக்கும்போது இது நாய் குடும்பமோன்னு நினைச்சிட்டேன்...
//
ம்...லொல்?

//
நாகா said...
என்னங்க எல்லோரும் மாத்தி மாத்தி டரியலாக்கறீங்களே...!
//
வாங்க நாகா, வணக்கம்.

க.பாலாசி said...

//ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.//

அடப்பாவி மக்கா....ரூட் இப்டி போகுதா?

அப்பா, அம்மாவும் செம காமடி.....

நைஸ் போஸ்ட்....

Prathap Kumar S. said...

ரவிக்கும் ரமாவுக்கும் இந்த சிச்சுவேஷன்ல ஒரு பாட்டு வைக்கலாமே...!!

போட்டு வைச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி.
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்,
ரமா வேலை சக்ஸஸ்

எப்படி இந்தமாதிரில்லாம் யோசிக்கிறீங்க பிரபா? வானம்பாடிகள் ஐயா கோவிசிசுக்கபோறாரு.

velji said...

எது மாதிரியும் இல்லாம புது மாதிரியா...சக்ஸஸ்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிரபாகர், எப்படிங்க?? கலக்கறீங்க.. ஒவ்வொரு கோணமும் கலக்கல். எனக்குப் பிடிச்சது அம்மாவின் கோணம் தான்..

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//ஹி, ஹி... அவங்கம்மா என்ன ஒரு மாதிரியா பாத்துகிட்டிருக்கு... சக்சஸ்.//

அடப்பாவி மக்கா....ரூட் இப்டி போகுதா?

அப்பா, அம்மாவும் செம காமடி.....

நைஸ் போஸ்ட்....
//
நன்றி பாலாசி.

//
நாஞ்சில் பிரதாப் said...
ரவிக்கும் ரமாவுக்கும் இந்த சிச்சுவேஷன்ல ஒரு பாட்டு வைக்கலாமே...!!

போட்டு வைச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி.
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்,
ரமா வேலை சக்ஸஸ்

எப்படி இந்தமாதிரில்லாம் யோசிக்கிறீங்க பிரபா? வானம்பாடிகள் ஐயா கோவிசிசுக்கபோறாரு.
//
அய்யா கோவிச்சுக்க மாட்டாருன்னு நம்பிக்கையில்தான் எழுதினேன்.

பிரபாகர் said...

//
velji said...
எது மாதிரியும் இல்லாம புது மாதிரியா...சக்ஸஸ்.
//
நன்றிங்க. மொத்தத்தில் சக்சஸ்.

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், எப்படிங்க?? கலக்கறீங்க.. ஒவ்வொரு கோணமும் கலக்கல். எனக்குப் பிடிச்சது அம்மாவின் கோணம் தான்..
//
நன்றிங்க செந்தில். ரொம்ப சந்தோஷமாவும் நிறைய எழுதனும்னு தோனுது உங்க பாராட்டால.

Menaga Sathia said...

எப்படிலாம் யோசிக்கிறீங்க...சக்ஸஸ்!!

பின்னாடிவரும் விளக்கங்கள் சூப்பர்ர்ர்...

Unknown said...

"பின்னுங்க பின்னுங்க" அப்படின்னு என் பின்னூட்டத்தையும் சேர்த்துகிடுங்க.

துபாய் ராஜா said...

கதையிலிருந்து கதை அருமை. கடைசியில் எல்லோருடைய எண்ண ஓட்டங்களையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பது அழகு.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

terror family story sir..

பிரபாகர் said...

Mrs.Menagasathia said...
எப்படிலாம் யோசிக்கிறீங்க...சக்ஸஸ்!!

பின்னாடிவரும் விளக்கங்கள் சூப்பர்ர்ர்...
//
நன்றி சகோதரி. ரொம்ப சந்தோசம்.

Siva said...
"பின்னுங்க பின்னுங்க" அப்படின்னு என் பின்னூட்டத்தையும் சேர்த்துகிடுங்க.
//
நன்றிங்க சிவா.

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
கதையிலிருந்து கதை அருமை. கடைசியில் எல்லோருடைய எண்ண ஓட்டங்களையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பது அழகு.
//
விமர்சனத்துக்கு நன்றி ராஜா.
//

ஸ்ரீ.கிருஷ்ணா said...
terror family story sir..
//
நன்றி கிருஷ்ணா...

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

பிரபாகர் said...

//TamilNenjam said...
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
//
அன்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாதான் யோசிக்கின்றீர்கள்

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லாதான் யோசிக்கின்றீர்கள்
//

ரொம்ப நன்றிங்க...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB