காலம் வரும் நமக்கொருநாள்....

|

அன்பு சகோதரி கலகலப்ரியா எழுதி வரும் ஒரு தொடர் இடுகை என்னை பாதிக்க, பின்னூட்டத்துக்கு பதிலாய் தனி இடுகையாய் எழுத எண்ணி இதோ கீழே..  

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே...படித்து, பின் இதை படியுங்களேன்...  

கருவறுக்க இனமதனை
கருத்தாய் கொண்டிட்டு
இரக்கமே இல்லாமல்
ஈழத்தில் நாய்கள்சில

அன்பு தங்கை எழுதலினால்
அறிந்திரும் விஷ(ய)ங்கள்
புண்மேலே ஈட்டியினால்
பலமாய் குத்துதற்போல்

கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....

உறுதிகொண்ட உள்ளத்துடன்
உரைக்கும் என் தங்கையவள்
அறிவொன்று குறை யெனவே
அனைவருமே சொல்லுகின்ற

மனிதனினும் மேம்பட்ட
மாண்போடு மனிதம் கொண்ட
பூனையோடு நாயார் பற்றி
பாசமாய் சொன்னதுதான்

அண்ணனுக்கு ஆறுதல்
அழுகையிலும் சிறு மகிழ்ச்சி
கண்ணே நீ கலங்காதே
காலம் வரும் நமக்கொருநாள்....

அண்ணன்.

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நாகா said...

//கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....//

இல்ல ப்ரபா, இரும்புள்ளமாவது இருக்கறவங்களுக்குத்தான் உங்க கவிதை. ஆனா உள்ளமே இல்லாத மனிதர்கள்தான் நம்ம தமிழ்நாட்டுல நெறய.

அவுங்க அந்த தொடரை முடிக்கற வரைக்கும் அவங்களோட இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறதாயில்லை.

vasu balaji said...

பிரபா! பெருமையாச் சொல்றேன். பதிவுலகத்துக்கு ஒரு வித்தியாசமான வழிகாட்டுதல் இது. ப்ரியாவின் இடுகை தந்த வலிக்கு இது ஆறுதல்.பதிவுலகம் ஒரு அழகான குடும்பம்தான்.

ப்ரியமுடன் வசந்த் said...

அண்ணா ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குண்ணா

பதிவுலகம் எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை தந்திருக்கிறது...

ஜோதிஜி said...

உள்ளமே இல்லாத மனிதர்கள்தான் நம்ம தமிழ்நாட்டுல நெறய

அவங்களோட இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறதாயில்லை.

வைராக்கியம் இப்போது தான் புரிந்தது.

உங்களின் இடுகைக்கு வந்த போது உண்மையிலேயே உங்கள் உள்ளம் குணம், உயர்வு எல்லாமே புரிந்தது.

வாழ்ந்தவர்களுக்கு வலி.
எழுதுபவர்களுக்கு எழுத்து.
உங்களைப்போன்று நம்பிக்கையை விதைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் உருவாகும் வழி.

மிக நிறைவான மகிழ்ச்சி பிரபாகரன்.

வெண்ணிற இரவுகள்....! said...

கவிதை அழகாய் இருந்தாலும் பாராட்ட முடியவில்லை .......
எப்படி ஒரு வேதனையான விஷயத்தை விஷத்தை பாராட்ட முடியும்

வெண்ணிற இரவுகள்....! said...

ஆனாலும் ஆறுதல் தந்தது

தராசு said...

பதிவுலகம் ஒரு அழகான குடும்பம்தான் பிரபா.

வேதனைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நெகிழ வைக்கும் வரிகள்.

கலகலப்ரியா said...

என் கிட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா...! கண்ணீர் மட்டும்...!

ஆரூரன் விசுவநாதன் said...

கண்ணீர் வரவைக்கும் பதிவு பிரபு,,,

ஈரோடு கதிர் said...

நெகிழ வைத்த கவிதை பிரபா

உணர்வுகள் மூலம் உறவுகள் பலப்படட்டும்

ஜெட்லி... said...

என்ன பின்னூட்டம் போடறதுன்னு
தெரியில...... நெகிழ வைத்து விட்டிர்கள்.

க.பாலாசி said...

//கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....//

உண்மைதான்....அழுவதைத்தவிர வேறொன்றும் இல்லையென்றே எண்ணுகிறேன். இரண்டு இடுகைகளுமே மனித உணர்வுகளை அதன் வலியோடு சொல்கின்றன.

நல்ல இடுகை.....அன்பரே....

ஊடகன் said...

ரொம்ப நல்லாருக்கு........

உணர்வு பூர்வமான அனைத்தும் நம்மவர்களை பாதிக்கும்..........

பிரபாகர் said...

//
நாகா said...
//கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....//

இல்ல ப்ரபா, இரும்புள்ளமாவது இருக்கறவங்களுக்குத்தான் உங்க கவிதை. ஆனா உள்ளமே இல்லாத மனிதர்கள்தான் நம்ம தமிழ்நாட்டுல நெறய.

அவுங்க அந்த தொடரை முடிக்கற வரைக்கும் அவங்களோட இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறதாயில்லை.
//
உங்களின் வலி புரிகிறது நாகா....

//
வானம்பாடிகள் said...
பிரபா! பெருமையாச் சொல்றேன். பதிவுலகத்துக்கு ஒரு வித்தியாசமான வழிகாட்டுதல் இது. ப்ரியாவின் இடுகை தந்த வலிக்கு இது ஆறுதல்.பதிவுலகம் ஒரு அழகான குடும்பம்தான்.
//
உங்களின் ஆறுதல் கொஞ்சம் நம்பிக்கையையும், மகிழ்ச்சிக்கான முகத்துவாரத்தையும் காண்பிக்கிறது அய்யா...

//
பிரியமுடன்...வசந்த் said...
அண்ணா ரொம்ப நெகிழ்ச்சியா இருக்குண்ணா

பதிவுலகம் எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாத குடும்ப உறுப்பினர்களை தந்திருக்கிறது...
//
ஆம் வசந்த். உறவுகளால் நிறைவாய் உணர்கிறேன்.

பிரபாகர் said...

//
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
உள்ளமே இல்லாத மனிதர்கள்தான் நம்ம தமிழ்நாட்டுல நெறய

அவங்களோட இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறதாயில்லை.

வைராக்கியம் இப்போது தான் புரிந்தது.

உங்களின் இடுகைக்கு வந்த போது உண்மையிலேயே உங்கள் உள்ளம் குணம், உயர்வு எல்லாமே புரிந்தது.

வாழ்ந்தவர்களுக்கு வலி.
எழுதுபவர்களுக்கு எழுத்து.
உங்களைப்போன்று நம்பிக்கையை விதைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் உருவாகும் வழி.

மிக நிறைவான மகிழ்ச்சி பிரபாகரன்.
//
நன்றிங்கய்யா. உங்களின் அன்புக்கு நன்றி.

//
வெண்ணிற இரவுகள்....! said...
கவிதை அழகாய் இருந்தாலும் பாராட்ட முடியவில்லை .......
எப்படி ஒரு வேதனையான விஷயத்தை விஷத்தை பாராட்ட முடியும்

November 11, 2009 12:54 PM

வெண்ணிற இரவுகள்....! said...
ஆனாலும் ஆறுதல் தந்தது
//

ஆம் கார்த்திக். வேதனைகளை வெளிப்படுத்த கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.

பிரபாகர் said...

//
தராசு said...
பதிவுலகம் ஒரு அழகான குடும்பம்தான் பிரபா.

வேதனைகளையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நெகிழ வைக்கும் வரிகள்.
//
அன்புக்கு நன்றிங்கண்ணே. சோகத்தை பகிர்தலில் கொஞ்சமாவது குறையுமல்லவா?
//
கலகலப்ரியா said...
என் கிட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா...! கண்ணீர் மட்டும்...!
//

நன்றி சகோதரி. சோகத்திலும் ஒரு நல்ல விஷயம் இடுகையை இட்டு வலியுடன் ஒரு இண்டர்வியூ செல்ல, வேலை கிடைத்திருக்கிறது. வழக்கத்தைவிடவும் நன்றாய் செய்து கிடைத்திருக்கிறது.

//
ஆரூரன் விசுவநாதன் said...
கண்ணீர் வரவைக்கும் பதிவு பிரபு,,,
//

நன்றிங்க ஆரூரன். நம்மால் இதைத்தான் செய்ய இயலும்...

பிரபாகர் said...

//
கதிர் - ஈரோடு said...
நெகிழ வைத்த கவிதை பிரபா

உணர்வுகள் மூலம் உறவுகள் பலப்படட்டும்
//

நன்றி கதிர். உங்களின் நட்புக்கு வணக்கம்.

//
ஜெட்லி said...
என்ன பின்னூட்டம் போடறதுன்னு
தெரியில...... நெகிழ வைத்து விட்டிர்கள்.
//
நன்றி ஜெட்லி. படித்ததன் பாதிப்பு.

//
க.பாலாசி said...
//கருணையற்ற கல்நெஞ்சில்
புரிந்திட்ட செயல்களெல்லாம்
இரும்புள்ளம் கொண்டோரும்
இளக்கி அழ செய்திடுமே....//

உண்மைதான்....அழுவதைத்தவிர வேறொன்றும் இல்லையென்றே எண்ணுகிறேன். இரண்டு இடுகைகளுமே மனித உணர்வுகளை அதன் வலியோடு சொல்கின்றன.

நல்ல இடுகை.....அன்பரே....
//
நன்றி பாலாசி...

பிரபாகர் said...

//
ஊடகன் said...
ரொம்ப நல்லாருக்கு........

உணர்வு பூர்வமான அனைத்தும் நம்மவர்களை பாதிக்கும்..........
//
ஆம் நண்பா...

புலவன் புலிகேசி said...

//மனிதனினும் மேம்பட்ட
மாண்போடு மனிதம் கொண்ட
பூனையோடு நாயார் பற்றி
பாசமாய் சொன்னதுதான்//

காலையில்தான் கலகலப்ரியாவின் "இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே" படித்தேன். உங்கள் பதிவை படிக்க காலதாமதம் அலுவலால். நிச்சயம் காலம் வரும் ஒரு நாள்....

ஆ.ஞானசேகரன் said...

//அண்ணனுக்கு ஆறுதல்
அழுகையிலும் சிறு மகிழ்ச்சி
கண்ணே நீ கலங்காதே
காலம் வரும் நமக்கொருநாள்....//

சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களின் அன்புக்கு...

காலம் வரும்வரை காத்திருப்போம்

கலகலப்ரியா said...

//கலகலப்ரியா said...
என் கிட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா...! கண்ணீர் மட்டும்...!
//

நன்றி சகோதரி. சோகத்திலும் ஒரு நல்ல விஷயம் இடுகையை இட்டு வலியுடன் ஒரு இண்டர்வியூ செல்ல, வேலை கிடைத்திருக்கிறது. வழக்கத்தைவிடவும் நன்றாய் செய்து கிடைத்திருக்கிறது.//

Romba romba romba santhoshamna... enakkum inru inimiyaaga.. negizhvaaga vidinthathu..! office la irukken... evening oru seminar... vanthu idugai poduren..! congratulations!

ரோஸ்விக் said...

என் உணர்வுகளும் இந்த வலி(ரி)களோடு....நம் உறவுகளுக்காக நண்பரே.
மிக்க நன்றி.

மிக்க நன்றி நண்பா..

//
ஆ.ஞானசேகரன் said...
//அண்ணனுக்கு ஆறுதல்
அழுகையிலும் சிறு மகிழ்ச்சி
கண்ணே நீ கலங்காதே
காலம் வரும் நமக்கொருநாள்....//

சொல்ல வார்த்தைகள் இல்லை உங்களின் அன்புக்கு...

காலம் வரும்வரை காத்திருப்போம்
//
ஆம் நண்பரே...

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//கலகலப்ரியா said...
என் கிட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா...! கண்ணீர் மட்டும்...!
//

நன்றி சகோதரி. சோகத்திலும் ஒரு நல்ல விஷயம் இடுகையை இட்டு வலியுடன் ஒரு இண்டர்வியூ செல்ல, வேலை கிடைத்திருக்கிறது. வழக்கத்தைவிடவும் நன்றாய் செய்து கிடைத்திருக்கிறது.//

Romba romba romba santhoshamna... enakkum inru inimiyaaga.. negizhvaaga vidinthathu..! office la irukken... evening oru seminar... vanthu idugai poduren..! congratulations!
//
சந்தோசம் சகோதரி.

//

ரோஸ்விக் said...
என் உணர்வுகளும் இந்த வலி(ரி)களோடு....நம் உறவுகளுக்காக நண்பரே.
மிக்க நன்றி.
//
நன்றி நண்பா, உங்களின் அன்பிற்கு...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உருக்கமான படைப்பு பிரபாகர்... ஆனால் கையாலாகாத நிலையில் 7 கோடிப்பேர் :(

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
உருக்கமான படைப்பு பிரபாகர்... ஆனால் கையாலாகாத நிலையில் 7 கோடிப்பேர் :(
//

ஆம் செந்தில் சில கைக்கூலிகளால்.

Prathap Kumar S. said...

//உருக்கமான படைப்பு பிரபாகர்... ஆனால் கையாலாகாத நிலையில் 7 கோடிப்பேர//

சரியா சொன்னீங்க...செந்தில்...
சுயநலம்பிடித்த பி(ப)ணந்திதின்னிகள் கையில் அதிகாரம் இருக்கம்போது என்னபண்ணமுடியும்.

----------------
பிரபா புதுசு எந்த பதிவையும் காணலையே....

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
நண்பரே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக்கொள்ளவும்..http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.html
//
மிக்க நன்றி நண்பா....

//
நாஞ்சில் பிரதாப் said...
//உருக்கமான படைப்பு பிரபாகர்... ஆனால் கையாலாகாத நிலையில் 7 கோடிப்பேர//

சரியா சொன்னீங்க...செந்தில்...
சுயநலம்பிடித்த பி(ப)ணந்திதின்னிகள் கையில் அதிகாரம் இருக்கம்போது என்னபண்ணமுடியும்.

----------------
பிரபா புதுசு எந்த பதிவையும் காணலையே....
//
என்னுடய இன்னொரு வலைப்பதிவில் பாருங்கள் பிரதாப்...

http://umaprabhu.blogspot.com/

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத பல இனிய உறவுகளை இணைய உலகம் மூலம் அடைந்திருப்பது எல்லையில்லா சந்தோசத்தை அளிக்கிறது.

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
நெகிழ்ச்சியாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத பல இனிய உறவுகளை இணைய உலகம் மூலம் அடைந்திருப்பது எல்லையில்லா சந்தோசத்தை அளிக்கிறது.
//
ஆம் ராஜா. இதுதான் இந்த வலையுலகின் அருமை, பெருமை.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB