தனியா வீடு எடுத்து எம்.சி.ஏ ரெண்டாவது வருஷம் படிச்சிட்டு இருந்தோம். பி.எஸ்.சி கம்ப்யூட்டரும் அங்கதான் படிச்சோம்ங்கறதால வாத்தியாருங்க யாரையும் கண்டுக்க மாட்டோம்.
சரவணன், தென்னழகன் ரெண்டு பேரும் பி.எஸ்.சி கிளாஸ் மேட், எம்.சி.ஏ வும் எங்க கூடத்தான். பரிட்சைக்கு சரியா ஒரு வாரம் முன்னாலதான் வருவானுங்க.
தென்னழகனோட தாத்தா எம்.எல்.ஏ ங்கறதால அட்டன்டன்ஸ் ஒரு பெரிய மேட்டரே இல்ல, காசு கொடுத்து எப்படியும் சரி பண்ணிடுவான். வந்த உடனே ரெக்கார்ட் எல்லாம் ரெடிபண்ணி,ஹெச்.ஒ.டி, ப்ரின்சிபால்னு பாத்து ஃபைன் கட்டி ஹால் டிக்கெட் வாங்கிடுவானுங்க.
அதுக்கப்புறம் தினமும் த்ரூ நைட்தான். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது, ஆன முயற்சி பண்ணுவேன். சீட்டாடறதுன்னா மூனு நைட் கூட தூங்காம ஆடுவோம். அந்த கதையை தனியா பின்னால எழுதறேன்.
அந்த செமஸ்டருக்கும் அதே மாதிரி வந்தானுங்க. பரீட்சை எழுதிகிட்டிருந்தோம்.
எனக்கு ரெண்டு அரியர் இருந்துச்சி, அதனால ஒன்டே மேட்ச் ஆடியாக வேண்டிய சூழ்நிலை. அன்னிக்கி ரெண்டு எக்ஸாம், காலையில ஒன்னு மதியம் ஒன்னு. முடிச்சிட்டு டயர்டா வீட்டுக்கு வந்தேன்.
மத்த எல்லாருக்கும் அரியர் இல்லாத்தால காலையில மட்டும்தான் எக்ஸாம். அடுத்த நாள் ஆர்கனைசேசனல் பிகேவியர், மேனேஜ்மென்ட், கடி பேப்பர்.
ரவி ரெண்டு, சரவணன் மூனு, தென்னழகன் ஒரு யூனிட் முடிச்சிட்டேன்னு சொன்னானுங்க. நான் படிக்கல. 'பாபு (சரவணனை நான் அப்படித்தான் கூப்பிடுவேன்) என்னை பத்து மணிக்கு எழுப்புன்னுட்டு படுத்துட்டேன்.
சரியா எழுப்பினான்.தூக்கம் தூக்கமா வந்துச்சி. 'மாப்ளே என்ன பதினோரு மணிக்கு எழுப்பு'ன்னு படுத்துட்டேன். எழுப்ப பன்னண்டுக்கு எழுப்ப சொன்னேன்.
பன்னண்டு மணிக்கு எழுப்பின உடனே, நான் எதோ சொல்லப் போக, 'பிரபு என்ன பன்னண்டேகாலுக்கு எழுப்புன்னு படுத்துட்டான். அதிர்ச்சியாயிட்டேன், பதினைஞ்சி நிமிஷம் போதுமான்னு.
உட்காந்துகிட்டே ஒன்பது நிமிஷம் தூங்கிட்டேன். திரும்ப கண்ண மூட பயந்துட்டு, மாடிமேல போய் அஞ்சு நிமிஷம் ரவுண்ட் அடிச்சேன், தூங்காம இருக்க.
பன்னண்டே காலுக்கு பாபுன்னு கூப்பிட்டதுதான், சட்டுன்னு எழுந்து கண்ண கசக்கிட்டு படிக்க ஆரம்பிச்சிட்டான். என்ன மூனு மணிக்கு எழுப்ப சொல்லிட்டு படுத்துட்டேன்.
ரெண்டு மணிக்கு கண்ண முழிச்சு பாத்தா எல்லாரும் படிச்சிட்டிருந்தாங்க. மூனு மணிக்கு எழுப்பும்போது இனிமே எழுப்ப வேணாம்னு சொல்லிட்டு இழுத்து போத்திட்டு தூங்க ஆரம்பிச்சுட்டேன். அப்பப்போ முழிச்சு பாக்கும்போதெல்லாம் படிச்சுகிட்டே இருந்தானுங்க..
ஏழு மணிக்கு மோகன் ரூமுக்கு வந்தான். பி.எஸ்.சி ஒண்ணா படிச்சோம், அப்போ அவன் எம்.எஸ்.சி ஃபைனல் இயர், வேற ரூம்ல தங்கியிருந்தான்.
'என்னடா எக்ஸாமுக்கு படிச்சுட்டீங்களா? யாருடா தூங்கிகிட்டிருக்கறது?' ன்னான்.
'பிரபுதாண்டா, நைட் பூரா படிக்கவே இல்லை' பாபு அவன் பங்குக்கு போட்டு கொடுத்தான்.
நேரா வந்தவன்,பட்டக்ஸ்ல ஓங்கி ஒரு உதை விட்டு 'டேய் எழுந்திரிடா, பரிட்சைக்கு போகலையாமே' ன்னான்.
'ஆமா மோகன், படிக்கவே இல்ல' ன்னு இழுத்தேன்.
போர்வையை இழுத்து உறுவி கிடாசிட்டு, பக்கத்துல இருந்த புக்கை எடுத்து ஒவ்வொரு யூனிட்லயும் ரெண்டு கேள்வி கேட்டான்.
'லீடர்ஷிப் பத்தி தெரியுமா'? தலையாட்டினேன்.
உடனே பாபு, 'அதெல்லாம் கேக்க மாட்டாங்க, நாலு வருஷ கொஸ்டின் பேப்பர்ல இல்ல' ன்னான்.
'கொஸ்டின் பேப்பர்ல இல்லன்னா கேக்க மாட்டாங்களான்' னுட்டு, 'டேய், நம்ம பசங்கள்லயே உனக்கு நல்லா இங்கிலிஸ் நாலேட்ஜ் இருக்கு (தப்ப நினைச்சுக்காதிங்க, கான்ஃபிடன்டுக்கு சொன்னான்) நல்லா கத விடுவே'
'அதெல்லாம் இல்லடா, ஒன்னுமே படிக்கல...'
'எனக்கு தெரியாது, நீ எக்ஸமுக்கு போயிட்டு கொஸ்டின் பேப்பரையாவது வாங்கிட்டு வா, ஆனா கண்டிப்பா போகனும்' னு சொல்லிட்டு போயிட்டான்.
வேண்டா வெறுப்பா குளிச்சிட்டு மனசுக்கு பட்ட நாலு யூனிட்டுக்கு ஒன்னுன்னு நால பாத்துட்டு கிளாம்பினேன்.
என்ன நினைச்சாங்களோ தெரியல, பாபு, ரவி, தென்னழகன் மூனு பேரும் காலேஜ் போற வரைக்கும் பரிசோதனை எலி மாதிரி என்னை பாத்துட்டு வந்தானுங்க.
கண்ணை மூடி கும்பிட்டுட்டு கொஸ்டின் பேப்பரை திறந்து பாத்துட்டு நல்லா சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.
ஏன்னா நான் கடைசியா படிச்சுட்டு போனதுல பார்ட் சி-ல மூனு கேட்டிருந்தாங்க. அதில்லாம ஏற்கனவே ஒன்னு தெரியும்.
திரும்பி அவனுங்கள பாத்தேன், எவன் முகத்துலயும் ஈயாடல. என்ன எப்படின்னு கேட்டானுங்க.
கையை தூக்கி காட்டி 'சூப்பர்' னு சொல்லிட்டு கிடு கிடுன்னு எழுத ஆரம்பிச்சிட்டேன். தென்னழகன் அரை மணி நேரத்துலேயே போயிட்டான்.
என் வாழ்க்கையிலேயே அதிகமான பக்கங்களை அன்னிக்குத்தான் எழுதினேன்.
ரிசல்ட் வந்துச்சி, நான் மட்டும் எழுபத்தெட்டு மார்க் எடுத்து பாஸ், மூனு பேருமே ஃபெயில்.
தென்னழகன் இப்போ சொந்தமா ஒரு காலேஜ் வெச்சிருக்கான், அவன் தான் கரெஸ்பான்டன்ட்.
'என்னடா மாப்ளே, காலேஜ்லாம் எப்படி போகுது' ன்னேன்.
'நல்லா போகுது, பயங்கர ஸ்ட்ரிக்ட். வாத்தியார், ஸ்டூடன்ட் யாராயிருந்தாலும் ஒரு நாள் லீவ் போட்டாலும், என்ன பாக்காம கிளாஸுக்கு போக முடியாது' ன்னான்.
இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
மிச்சர்கடை
4 weeks ago
19 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com
படிக்காமல் பாஸ் செய்வது ஒரு கலை நண்பரே
=)). காலையில நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க பிரபா. உங்கள நினைச்சே உங்க ஃப்ரெண்ட் கரஸ்பாண்டண்ட் எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்காரு பாருங்க.சூப்பர்.
சூப்பர் தல....நல்லா படிச்சிருப்பீங்க போல....
கடைசி வரி காமெடி ரசித்தேன்
தென்னழகன் பேரு ரொம்ப நல்லாருக்கு.
=))... எப்டி இப்டி எல்லாம்... கலக்கிட்டீங்க.. (நாமளும் படிக்காம எழுதுற கேஸ்தாண்ணா)
சும்மா கலக்கீட்டீங்கண்ணா.........
அதெப்படி அப்பவே...
அலாரம் ஸ்னூஸ் வச்சமாதிரி ஒரு மணி நேரத்து ஒரு வாட்டி முழிச்சி முழிச்சி தூங்கறது...
படிக்காத மே(போ)தை.... நீங்க
u r friendwhich college correspondent sir?
உங்களால ஒரு நல்ல கரஸ் உருவாயிட்டாரு... வாழ்த்துக்கள் பிரபா!
//RR said...
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com
//
கண்டிப்பாய் தேவையென்றால்....
//
ஜெட்லி said...
படிக்காமல் பாஸ் செய்வது ஒரு கலை நண்பரே
//
அதெல்லாம் செஞ்சாதான் படிச்சதில ஒரு திருப்தி ஜெட்லி..
//
வானம்பாடிகள் said...
=)). காலையில நல்லா சிரிக்க வெச்சிட்டீங்க பிரபா. உங்கள நினைச்சே உங்க ஃப்ரெண்ட் கரஸ்பாண்டண்ட் எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்காரு பாருங்க.சூப்பர்.
//
நன்றிங்கய்யா, தண்ணியடிச்சவன் மத்தவங்கள அடிக்க வேணாம்னு சொல்ற மாதிரி.
//
புலவன் புலிகேசி said...
சூப்பர் தல....நல்லா படிச்சிருப்பீங்க போல....
//
ம்... ரொம்ப நல்லா...
//
வெண்ணிற இரவுகள்....! said...
கடைசி வரி காமெடி ரசித்தேன்
//
நன்றி கார்த்திக். கதையின் ட்விஸ்ட் டே அதான்.
//
♠ ராஜு ♠ said...
தென்னழகன் பேரு ரொம்ப நல்லாருக்கு.
//
மேட்டர் சுமாருன்னு சொல்றீங்களா தம்பி...
//
கலகலப்ரியா said...
=))... எப்டி இப்டி எல்லாம்... கலக்கிட்டீங்க.. (நாமளும் படிக்காம எழுதுற கேஸ்தாண்ணா)
//
அண்ணனா மாதிரியே...
//
Balavasakan said...
சும்மா கலக்கீட்டீங்கண்ணா.........
//
நன்றிங்க தம்பி.
//
கதிர் - ஈரோடு said...
அதெப்படி அப்பவே...
அலாரம் ஸ்னூஸ் வச்சமாதிரி ஒரு மணி நேரத்து ஒரு வாட்டி முழிச்சி முழிச்சி தூங்கறது...
படிக்காத மே(போ)தை.... நீங்க
//
மத்தவங்கல்லாம் படிக்கிறப்போ எரிச்சல்ல தூங்காம இருக்கிறது கதிர்...
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
u r friendwhich college correspondent sir?//
//
கிருஷ்ணகிரி பக்கத்துல ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச கல்லூரி ஜெய். பெயர் வேண்டாமே?
//
கலையரசன் said...
உங்களால ஒரு நல்ல கரஸ் உருவாயிட்டாரு... வாழ்த்துக்கள் பிரபா!
//
ஸ்ட்ரிக்டானங்கற வார்த்தைய விட்டுட்டீங்க. நன்றி கலை....
அப்படிப்போடுங்க பிரபா... கலக்கீட்டீங்க... படிக்கிறவன் அறிவாளியும் இல்லை.. படிக்காதவன் முட்டாளும் இல்லை...
அப்படிப்போடுங்க பிரபா... கலக்கீட்டீங்க... படிக்கிறவன் அறிவாளியும் இல்லை.. படிக்காதவன் முட்டாளும் இல்லை...
//'நல்லா போகுது, பயங்கர ஸ்ட்ரிக்ட். வாத்தியார், ஸ்டூடன்ட் யாராயிருந்தாலும் ஒரு நாள் லீவ் போட்டாலும், என்ன பாக்காம கிளாஸுக்கு போக முடியாது' ன்னான்.//
திருடன் தான் போலீஸ் வேலைக்கு சரியான ஆள்
//நாஞ்சில் பிரதாப் said...
அப்படிப்போடுங்க பிரபா... கலக்கீட்டீங்க... படிக்கிறவன் அறிவாளியும் இல்லை.. படிக்காதவன் முட்டாளும் இல்லை...
//
நன்றி பிரதாப். அதே மாதிரி காதலிச்சதில்லன்னு சொல்றவன் பிரதாப்பும் இல்ல.
//
சின்ன அம்மிணி said...
//'நல்லா போகுது, பயங்கர ஸ்ட்ரிக்ட். வாத்தியார், ஸ்டூடன்ட் யாராயிருந்தாலும் ஒரு நாள் லீவ் போட்டாலும், என்ன பாக்காம கிளாஸுக்கு போக முடியாது' ன்னான்.//
திருடன் தான் போலீஸ் வேலைக்கு சரியான ஆள்
//
நன்றிங்க. ரொம்ப கரெக்ட்.
சின்ன வயதிலிருந்தே நான் படிப்பேன்.ஆனா படிக்க மாட்டேன்...மற்ற நண்பர்கள் முட்டி முட்டி படிக்கும் போது நான் புத்தகத்தை புரட்டி மட்டும் பார்த்து பரிடசைல அவங்களை விட நல்ல மார்க் வாங்கிடுவேன்... :))
எல்லாம் இறைவன் அருள்...
உங்க அனுபவமும் நல்லாருக்கு...
நானும் தான் ராஜா. கதை புத்தகங்களை அதிகம் படிப்பேன். நடத்தும்போது நன்கு கவனிப்பேன். நன்றி ராஜா....
Post a Comment