எங்க மாமா பொண்ண ராஜேந்திரன் ரூட் விடறான்னு தெரிஞ்சது. பக்கத்து ஊரு, மருந்து கம்பனியில ரெப்பா என் ஃபிரண்டு மணி கூட வேலை பாத்துகிட்டிருந்தான். எப்போ பார்த்தாலும் பவ்வியமா பேசுவான். வணக்கம் பிரதர்னு சொல்லுவான் (சரியாத்தான்யா சொல்றாங்க).
கொஞ்சம் தயக்கமா இருந்தாலும் ஒருநாள் அவன்கிட்ட கேட்டேன், தெரிஞ்சுக்கோனும் என்கிற ஆர்வத்துல, 'ஆமா எப்படி உங்களுக்குள்ள லவ் உண்டாச்சி' ன்னு
'ரொம்ப சிம்பிள் பிரதர் உங்களுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். உங்க ஹெல்ப்பால தான் என்னோட லவ்-வ கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்' னான்.
அதிர்ச்சியா இருந்துச்சி. 'அடப்பாவி, என்னாலயா, எப்படி? 'ன்னேன்.
'நான் தினமும், அது ஸ்கூல் போற பஸ்ஸுல போயிட்டிருப்பேன். அப்பப்போ லுக் விடுவேன். அதுவும் பாக்கும். பஸ்ஸில போற எல்லா ஸ்கூல் பசங்க, பொண்ணுங்க பர்த் டேவும் எனக்கு தெரியும் (வலுக்கட்டாயமா கேட்டு தெரிஞ்சிக்குவேன்ங்கறத டீசன்டா சொல்றான்).
'யாருக்காவது பொறந்தா நாளுன்னா அன்னிக்கி எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்து ஹீரோ ஆயிடுவேன். ரெண்டு நாள் பஸ்ஸில போகாம இருந்துட்டு, பசங்களுக்குள்ள ஏன் இன்னிக்கு அண்ணன் வரலன்னு அது காது பட சொல்ல சொன்னேன்'.
'மூனாவது நாள் என்ன பாத்தா ரொம்ப மலர்ச்சியாகறதை பாத்து கன்ஃபார்ம் பண்ணிட்டேன். அடுத்த நாள் ஸ்கூல் போகும் போது ஒன்னாவது படிக்கிற ஒரு பாப்பாவுக்கு பர்த் டே. வழக்கம் போல் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தேன்'.
குட்டி பாப்பாகிட்ட 'அதுக்கு' கேட்கிற மாதிரி, 'பாப்பா என்ன உனக்கு பிடிச்சிருந்தா நாளைக்கு பச்ச கலர் பொட்டு வச்சிகிட்டு வா, இல்லன்னா சிவப்பு கலர் பொட்டு'ன்னேன். புரியாமா அது தலையை ஆட்டுச்சி'.
எனக்கு ஒரே குழப்பம், இதுல நான் எங்கடா வர்றேன்னு.
புரிஞ்சிகிட்டவன், 'வந்துட்டேன் பிரதர், ரெண்டு மாசத்துக்கு முன்னால எங்க ஊருக்கு உங்க ஃபிரண்ட் சிவா கல்யாணத்துக்கு வந்திருந்தீங்க இல்லையா?'
கொசுவர்த்திய சுத்தி 'ஆமா'ன்னேன்.
அப்போ அவசரமா, 'பிரதர் ஒரு ரெண்டு நிமிஷம் வண்டியை கொடுங்க'ன்னு உங்க பைக்க வாங்கிட்டு போனேன் ஞாபகம் இருக்கா?'
மறக்க முடியுமா அன்னிக்கு நான் பட்ட பாட்ட? தலையாட்ட,
'அதுதான் நான் சொன்னதுக்கு அடுத்த நாள். அப்போ மணி ஒம்போது பத்து. பஸ்ஸுக்கு ரெண்டு நிமிஷம்தான் இருந்துச்சி. வாங்கிட்டு வேகமா போனேன். பஸ் போயிடுச்சி.
ஹண்ட்ரட் கிலோ மீட்டருக்கு மேல விரட்டிட்டு போனேன். (அதுக்கப்புறம் வண்டி பிரச்சனை பண்ணி ஆயிரம் ரூபாய் செலவானதும், திரும்ப திரும்ப வண்டிய வேகமா ஓட்டினீங்களான்னு மெக்கானிக் கேட்டதும் ஞாபகத்துக்கு வந்தது)
பஸ் ஸ்டாப்புல நின்னவுடன் பஸ்ஸுக்கு உள்ள போயி பாத்தேன், நெத்தியில பச்ச கலர்ல பொட்டு வெச்சிருந்தது, வெக்கமா சிரிச்சது. அவ்வளோதான் லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சி' ன்னான்.
நம்ம ஆயிரம் ரூவாவ பொலி போட்டு லவ் கன்பார்ம் பண்ணி நல்லாத்தான் ஆரம்பிச்சிருக்கான்னு நினைச்சேன்.
அவங்க ரெண்டு பேரோட லவ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளர்ந்துகிட்டிருந்தது.
மாமா பொண்ண லவ் பண்ற 'தம்பி' வேலை பாக்குற மருந்து கம்பனி பசங்க எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைச்சி சாப்பிட்டப்போ என்னையும் கூப்பிட்டானுங்க. மத்தவிஷயத்துக் கெல்லாம் வரல, ஆனா சாப்பிட மட்டும் கடைசியா வர்றேன்னு ஒத்துட்டேன்.
அக்கரையில தோட்டம். மஹிந்திரா வேனை ஆத்துக்கு இந்த பக்கம் நிப்பாட்டிட்டு போயிருந்தானுங்க. பைக்க நிப்பாட்டிட்டு போய் கலந்துகிட்டேன், சிக்கன்,மட்டன்னு எல்லாம் இருந்துச்சி.
எல்லாம் முடிச்சிட்டு வேன்ல உட்கர்ந்து பேசிட்டு இருந்தோம். அப்போ தூரத்துல என் மாமன் பொண்ணு காட்டுல இருந்து வந்துட்டிருந்தது.
'பிரதர், கண்ணாடியை மூடிட்டு உள்ளே இருங்க, இங்க வந்தவுடன் பேசப்போறேன், நீங்க இருக்கறிங்கன்னா பயப்படும்'னான். 'ம் விதின்னு நினைச்சுட்டு காண்ணாடியையும் சேர்த்து மூடிட்டு உட்காந்துட்டோம்.
வெளியே சுவராசியமா வண்டி பக்கத்துலயே நின்னு பேசிட்டிருந்தாங்க, ரொம்ப நேரமா.
அப்போதான் பின்னாடி ஜன்னல் வழியா கவனிச்சேன், அத்தை (பொண்ணோட அம்மா) வந்துகிட்டு இருந்துச்சி, ரொம்ப பக்கமா வந்துடுச்சி.
அய்யோ பிரச்சனை ஆயிடுமேன்னு டக்குனு கண்ணாடியை தள்ளி தலையை நீட்டி பேரை சொல்லி, 'அத்தை பக்கத்துல வந்துட்டாங்க, கிளம்புன்னேன்'.
என்னை பாத்து ஒரு துளி கூட அதிராம, 'அம்மாவுக்கு மொதல்லயே தெரியும், நீங்க ஏன் பயப்படறீங்க?'ன்னுச்சு. உள்ள நான் இருக்கறத முன்னமே சொல்லியிருப்பான் போல இருக்கு.
அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.
எனக்கு இன்னமும் கொஞ்சம் மருட்சியோட, சந்தோஷமா பச்ச பொட்டோட எதாச்சும் பொண்ண பாத்தா, பரிதாபத்தோட ஃப்ளாஸ் பேக் போயிடுவேன்.
பிரதர் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம, ஸ்கூல் பொண்ணுங்களை பாத்துக்கிட்டிருக்காரு வயசு முப்பத்தைஞ்சி ஆனாலும்...
இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
மிச்சர்கடை
4 weeks ago
34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//ஹண்ட்ரட் கிலோ மீட்டருக்கு மேல விரட்டிட்டு போனேன்.//
ரொம்பா ஃபாஸ்டா தான் லவ் பண்ணியிருக்கார்...
கடைசி வரி படிச்சிட்டு நல்ல சிரிச்சேன். )
அவிய்ங்க போதைக்கு உங்கள ஊறுகாயாக்கி, கடைசியில மட்டையாயிட்டாய்ங்க போலயே..!
//இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.//
இதெல்லாம் இப்ப சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிடுச்சு.
என்ன பண்றது, கலி முத்திடுத்து.
நல்ல கதை .......கதை முழவதும் எள்ளல் ...அந்த கொசு வர்த்தி சுருள் கற்பனை அருமை
தல அத்தப் பொண்ண நீங்க ஏன் ரூட் உடல...என்னாமா லவ் (லஸ்ட் தான்) பன்ன யோசிக்கிரானுங்க. சூப்பர் தல....
:-))
//அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.//
ஆகா...1000 ரூபா செலவு பண்ணதுல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சா. இந்த காதல்னாலே இப்டித்தான். இதுல பொண்ணுங்க ரொம்ப உஷாருங்கண்ணா.
உங்களின் இயல்பான எழுத்தில் இடுகையினை ரசித்தேன்.
இப்படித்தான் நிறையபேரு டைம்பாசுக்கு லவ் பண்ணி சுத்தி இருக்கிறவங்களை சுத்த விட்டுறுவாங்க..
நல்லவேளை.நாடோடிகள் ரேஞ்சுக்கு போகாம இந்த மட்டுக்கு முடிஞ்சுதே...
// க.பாலாசி said...
ஆகா...1000 ரூபா செலவு பண்ணதுல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சா. இந்த காதல்னாலே இப்டித்தான். இதுல பொண்ணுங்க ரொம்ப உஷாருங்கண்ணா//
ஏன்.. வேஸ்ட், உஷாரு எல்லாம் வடமொழி எழுத்து வரலையா? உங்க பேருல மட்டும் தானா? நல்லா காட்டுறாங்கய்யா பிலிம்மு!
ஊக்கதாஸ் ஆக்கினதக்கூட உற்சாகமா சொல்றீங்க பாஸ்.:))
உங்கள் பதிவை எங்கள் ரூமில் உள்ள அனைவரும் வயிறு குலுங்க சிரித்து ரசித்தோம் சார் ... எல்லோரும் உங்களுக்கு ஒரு Hai சொல்ல சொன்னாங்க ....
நல்ல அனுபவம் ஜி...
புது தீம் சூப்பர்
//
கதிர் - ஈரோடு said...
//ஹண்ட்ரட் கிலோ மீட்டருக்கு மேல விரட்டிட்டு போனேன்.//
ரொம்பா ஃபாஸ்டா தான் லவ் பண்ணியிருக்கார்...
//
ஆமா கதிர். பிச்சுக்கறதுலையும்
//
சின்ன அம்மிணி said...
கடைசி வரி படிச்சிட்டு நல்ல சிரிச்சேன். )
//
நன்றிங்க. உங்க தொடர் ஆதரவுக்கு.
//
♠ ராஜு ♠ said...
அவிய்ங்க போதைக்கு உங்கள ஊறுகாயாக்கி, கடைசியில மட்டையாயிட்டாய்ங்க போலயே..!
//
ஆமாம் தம்பி, கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்,
//
தராசு said...
//இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.//
இதெல்லாம் இப்ப சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிடுச்சு.
என்ன பண்றது, கலி முத்திடுத்து.
//
ஆமாண்ணே, ரொம்ப ஸ்போர்டிவா எடுத்துக்கறாங்க.... ரெண்டு சைட்லயும்.
//
வெண்ணிற இரவுகள்....! said...
நல்ல கதை .......கதை முழவதும் எள்ளல் ...அந்த கொசு வர்த்தி சுருள் கற்பனை அருமை
//
தம்பி, கதைன்னு கவுத்து விடுறீங்களே? சொந்த அனுபவம்.... அக்மார்க் உண்மை.
//
புலவன் புலிகேசி said...
தல அத்தப் பொண்ண நீங்க ஏன் ரூட் உடல...என்னாமா லவ் (லஸ்ட் தான்) பன்ன யோசிக்கிரானுங்க. சூப்பர் தல....
//
அத விடலாமான்னு யோசிச்சு விசாரிக்கிரப்போ தான் விவரம் தெரிஞ்சு எஸ்கேப்பு...
//
Anbu said...
:-))
//
நன்றி அன்பு.
//
க.பாலாசி said...
//அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.//
ஆகா...1000 ரூபா செலவு பண்ணதுல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சா. இந்த காதல்னாலே இப்டித்தான். இதுல பொண்ணுங்க ரொம்ப உஷாருங்கண்ணா.
உங்களின் இயல்பான எழுத்தில் இடுகையினை ரசித்தேன்.
//
நன்றிங்க நண்பா, வழக்கமான உங்கள் கலக்கல் பின்னூட்டத்துக்கு.
//
துபாய் ராஜா said...
இப்படித்தான் நிறையபேரு டைம்பாசுக்கு லவ் பண்ணி சுத்தி இருக்கிறவங்களை சுத்த விட்டுறுவாங்க..
நல்லவேளை.நாடோடிகள் ரேஞ்சுக்கு போகாம இந்த மட்டுக்கு முடிஞ்சுதே...
//
அந்த அளவுக்கு ஆகிற அளவுக்கு எதிர்ப்பில்லா ராஜா.... நன்றி உங்க அன்பிற்கு.
//
Anonymous said...
// க.பாலாசி said...
ஆகா...1000 ரூபா செலவு பண்ணதுல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சா. இந்த காதல்னாலே இப்டித்தான். இதுல பொண்ணுங்க ரொம்ப உஷாருங்கண்ணா//
ஏன்.. வேஸ்ட், உஷாரு எல்லாம் வடமொழி எழுத்து வரலையா? உங்க பேருல மட்டும் தானா? நல்லா காட்டுறாங்கய்யா பிலிம்மு!
//
நண்பா, பெரையை மாற்றிக் கொண்டதால் தமிழில் மட்டும் எழுத வேண்டுமென்பதில்லையே? நன்றி அனானி.
//
வானம்பாடிகள் said...
ஊக்கதாஸ் ஆக்கினதக்கூட உற்சாகமா சொல்றீங்க பாஸ்.:))
//
ஆமாங்கய்யா, தாத்த இறந்து போகிறப்போ கடைசியா அந்த பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்க சொன்னதா எல்லாரும் சொன்னதால விசாரிச்சி, தப்பிச்சிட்டேன்.
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
உங்கள் பதிவை எங்கள் ரூமில் உள்ள அனைவரும் வயிறு குலுங்க சிரித்து ரசித்தோம் சார் ... எல்லோரும் உங்களுக்கு ஒரு Hai சொல்ல சொன்னாங்க ....
//
நன்றி ஜெய். எல்லோருக்கும் எனது வணக்கத்தை சொல்லிவிடுங்கள்.
//
ஜெட்லி said...
நல்ல அனுபவம் ஜி...
புது தீம் சூப்பர்
//
நன்றி நண்பா... வாழ்த்துக்கு இன்னுமொரு நன்றி.
நடந்த கதைய சுவாரஸ்யமா சொல்றீங்க... விகடன்ல சிறுகதை படிச்ச மாதிரி இருக்கு... தொடரட்டும்..
;;)))
//கலகலப்ரியா said...
நடந்த கதைய சுவாரஸ்யமா சொல்றீங்க... விகடன்ல சிறுகதை படிச்ச மாதிரி இருக்கு... தொடரட்டும்..
//
நன்றி ப்ரியா.... டானிக் வார்த்தைகளுக்கு நன்றி...
//
ஜீவன் said...
;;)))
//
நன்றி ஜீவன்.
ஆனாலும் இவ்வளவு பச்சப் புள்ளயா இருக்கீங்களே பிரபு......
சரி.......என்ன செய்யமுடியும்.....
:o தாய்மை கவிதை அருமை... வேலைப்பளு... மிஸ் பண்ணிட்டேன்... சாரி...
//
ஆரூரன் விசுவநாதன் said...
ஆனாலும் இவ்வளவு பச்சப் புள்ளயா இருக்கீங்களே பிரபு......
சரி.......என்ன செய்யமுடியும்.....
//
சில நேரங்கள்ல இருந்தாகணும், விதி... ரொம்ப நன்றிங்க ஆருரன்.
//
கலகலப்ரியா said...
:o தாய்மை கவிதை அருமை... வேலைப்பளு... மிஸ் பண்ணிட்டேன்... சாரி...
//
நன்றி ப்ரியா... உங்களின் வாழ்த்துக்கு.....
இஃகிஃகி!
உங்க அனுபவத்தையெல்லாம் ரொம்ப சுவராஸ்யமா சொல்றீங்க.தொடருங்கள் சகோதரரே..
அட்றா...சக்கை..அட்றா...சக்கை... லவ் மேட்டருன்னாலே களைகட்ட ஆரம்பிச்சுடுது. எப்படித்தான் அவிங்களுக்கு இதுக்கெல்லாம் டைம் கிடைக்கதோ... டைம் கிடைக்காத ஒரே காரணத்துக்காவே இந்த காதல் கருமாந்திரம் பக்கம் போகவே இல்லை...
// 'அம்மாவுக்கு மொதல்லயே தெரியும், நீங்க ஏன் பயப்படறீங்க?'ன்னுச்சு. உள்ள நான் இருக்கறத முன்னமே சொல்லியிருப்பான் போல இருக்கு.//
he he he..
ரசனையான பதிவுண்ணே...
இதை மொதல்லியே எழுதியிருக்கீங்களோ? ஆனாலும் ரொம்ப வேகமான காதல் தான்... வாலிபத்தின் முறுக்குங்க இது...
//பழமைபேசி said...
இஃகிஃகி!
//
நன்றிங்க...
//
Mrs.Menagasathia said...
உங்க அனுபவத்தையெல்லாம் ரொம்ப சுவராஸ்யமா சொல்றீங்க.தொடருங்கள் சகோதரரே..
//
நன்றி சகோதரி. உங்கள் தொடர் ஆதரவு எனக்கு உற்சாகத்தையும், இன்னும் எழுத உத்வேகத்தையும் தருது.
// நாஞ்சில் பிரதாப் said...
அட்றா...சக்கை..அட்றா...சக்கை... லவ் மேட்டருன்னாலே களைகட்ட ஆரம்பிச்சுடுது. எப்படித்தான் அவிங்களுக்கு இதுக்கெல்லாம் டைம் கிடைக்கதோ... டைம் கிடைக்காத ஒரே காரணத்துக்காவே இந்த காதல் கருமாந்திரம் பக்கம் போகவே இல்லை...
//
விவரமான ஆளாத்தான் இருக்கீங்க. மாட்டாமையா போகப் போறீங்க?
//
பிரியமுடன்...வசந்த் said...
// 'அம்மாவுக்கு மொதல்லயே தெரியும், நீங்க ஏன் பயப்படறீங்க?'ன்னுச்சு. உள்ள நான் இருக்கறத முன்னமே சொல்லியிருப்பான் போல இருக்கு.//
he he he..
ரசனையான பதிவுண்ணே...
//
நன்றி வசந்த். நான் ரொம்பவும் வழிஞ்ச தருணங்கள்ல அதுவும் ஒன்னு.
//
ராசுக்குட்டி said...
இதை மொதல்லியே எழுதியிருக்கீங்களோ? ஆனாலும் ரொம்ப வேகமான காதல் தான்... வாலிபத்தின் முறுக்குங்க இது...
//
ஆமாங்க ராசுக்குட்டி. கொஞ்சம் மாத்தி போட்டிருக்கேன். யாரும் அப்போ படிக்கல, உங்களைத்தவிர. அதான்.
அனுபவம் அழகாக இருக்கு நண்பரே...
//ஆ.ஞானசேகரன் said...
அனுபவம் அழகாக இருக்கு நண்பரே...
//
நன்றிங்க ஞானசேகரன்...
பிரதர் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம, ஸ்கூல் பொண்ணுங்களை பாத்துக்கிட்டிருக்காரு வயசு முப்பத்தைஞ்சி ஆனாலும்
//
ஹா..ஹா..ஹா..
எம்.எம்.அப்துல்லா
//பிரதர் இன்னமும் கல்யாணம் பண்ணிக்காம, ஸ்கூல் பொண்ணுங்களை பாத்துக்கிட்டிருக்காரு வயசு முப்பத்தைஞ்சி ஆனாலும்
//
ஹா..ஹா..ஹா..
எம்.எம்.அப்துல்லா//
நன்றிங்க அப்துல்லா...
இன்றைய காலை பொழுது தங்கள் பதிவால் வெடிச் சிரிப்போடு தொடங்குகிறது. நன்றி
//Rajasurian said...
இன்றைய காலை பொழுது தங்கள் பதிவால் வெடிச் சிரிப்போடு தொடங்குகிறது. நன்றி
//
இந்த நாள் இதே போல் தொடரட்டும் நண்பா!
\\அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.\\
பொழைக்கிற வழி இதுதான் :))
இதுவும் ஒரு வகையில் நல்லதாகவே படுகிறது ..
//
நிகழ்காலத்தில்... said...
\\அப்புறம் சினிமா, அது இதுன்னு கசமுசா நடந்ததுக்கப்புறம், அவன் வேற ஸ்கூல் பொண்ண பிக்கப் பண்ண, இது நீட்டா நல்ல பொண்ணா அப்பா அம்மா சொன்ன பையனை கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆயிடுச்சி.\\
பொழைக்கிற வழி இதுதான் :))
இதுவும் ஒரு வகையில் நல்லதாகவே படுகிறது ..
//
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.
Post a Comment