சேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்...

|

வானம்பாடிகள் அய்யா கோழி சமாச்சாரத்த நேத்து சொல்ல நமக்கு சேவல் சமாச்சாரம் ஒன்னு ஞாபகத்துக்கு வர, இதோ கீழ படிங்களேன்...

காலேஜ் முடிச்ச சமயம். ராத்திரி பத்து மணிக்கு ஆத்தூர்ல இருந்து மெட்ராசுக்கு திருவள்ளுவர்ல டிக்கெட் புக பண்ணி வெச்சிருந்தேன்.

ஞாயித்துக்கிழம புக் பண்ணாம போனா அவ்வளவுதான். டாண்னு பத்து மணிக்கு வண்டிய எடுத்துடுவாங்க. பதினாறு கிலோமீட்டர் நம்ம ஊர்ல இருந்து. அரை மணி நேரத்துல போயிடலாம்.

வீட்ல சாப்புட்டுட்டு கிளம்பி, ஒம்போது மணிக்கு பஸ்டாப்புல கொஞ்சம் லேட்டா வந்த இந்திரா பஸ்சுல ஏறி கையில இருந்த இங்கிலீஷ் நாவலை (பழைய புத்தக கடையில வாங்கினது) விரிச்சி ஸ்டைலா படிக்க ஆரம்பிச்சேன்.

பஸ் கடைசி ட்ரிப், ராத்திரிங்கறதால கூட்டமும் இல்ல. கொஞ்ச நேரத்துல வண்டி நின்னுடுச்சி, ஒரே சத்தம், தகராறு. புத்தகத்த மூடி பேக்குல வெச்சிட்டு என்னன்னு பாக்கலாம்னு போன, மப்புல ஒரு பத்துபேர் ஆவேசமா டிரைவர் கிட்டயும் கண்டக்டர் கிட்டயும் தகராறு பண்ணிட்டிருந்தாங்க.

விஷயம் இதுதான், டிரைவர் நாலு மணி ட்ரிப்ல ஒரு சேவல் மேல வண்டிய விட்டுட்டாராம். சாமிக்கு நேந்து விட்டதாம். ரிட்டர்ன் வேற ரூட்ல போயிட்டு இப்போ திரும்ப வரும்போது மறிச்சிட்டாங்க. நிறுத்தாம போனது தப்பு, சாமி சேவல், தெய்வ குத்தம், அது இதுன்னு ஒரே களேபரமா இடுந்துச்சி.

'சரி சரி, தகராறு வேணாம், தங்கராசு நம்மாளு, தெரியாம பண்ணிபுட்டான். அஞ்சோ பத்தோ வாங்கிகிட்டு பஸ்ஸ விடுங்கப்பா, எல்லாம் வெளியூரு போறவங்கல்லாம் இருக்காங்கல்ல' ன்னு ஒரு பெருசு நியாமா சொல்ல,

'ம்.... அஞ்சோ பத்தா... நாலுகிலோ கோழி, நாட்டுக்கோழி. எரநூறு ரூவா. சாமி குத்தம், சாங்கியம் பண்ணனும். முன்னூறுக்கு கம்மியா வாங்க மாட்டோம்'னு ஒரு குடிமகன் சொல்ல அந்த கூட்டம் ஆமாம்னு தலையாட்டுச்சி.

நேரம் ஒம்பதரையை தாண்ட, பஸ் போயிடுமேன்னு பயம் வந்துடுச்சி. கண்டக்டர் நூறு தர்றேன்னு ஆரம்பிச்சு நூத்தம்பது வரைக்கும் வந்தாப்ல. அவங்க ஒத்துக்கற மாதிரி இல்ல.

அப்போதான் துணிச்சலா ஒன்னு செஞ்சேன். கூட்டத்துல பூந்து, பெரிய மனுஷன் மாதிரி 'கொஞ்சம் இருங்க, காசுதானே வேணும்... கண்டக்டர் அண்ணே சாமி சேவல், டிரைவர் ஏத்துனது தப்பு. நிறுத்தாம போனது அதவிட தப்பு. முன்னூறு இல்ல ஐந்நூறு தரணும்' னு சொல்ல, டிரைவரும் கண்டக்டரும் என்ன கொலை பாதகாண்னு பாக்க, கூட்டம் 'இது நியாயம், படிச்ச பையன்னா இதான்' னு சொல்ல...

கொஞ்ச கேப்புக்கு அப்புறம் 'நீங்க போயி அடிச்சு போட்ட சேவல எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க' ன்னு சொன்னேன்.

'ஆமா சேவ எங்க' ன்னு அந்த பெரியவர் கேக்க, 'அதான் கூவிடுச்சில்ல' ன்னு ஒரு இளசு சொல்லிச்சு. டிரைவர் உடனே, 'ஆமாங்க சேவல கொண்டாங்க, இப்பவே ஐந்நூறு தரேன்' னு சொல்ல கூட்டத்தால ஒன்னும் பேச முடியல.

கடைசியில 'நூறாவது கொடுங்க' ன்னு கேக்க, கறாரா சேவல கொடுத்துட்டு காச வாங்கிட்டு போங்கன்னு சொல்ல உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ன்னு முனகிகிட்டே கூட்டம் கலைஞ்சிடுச்சி.

டிரைவர் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சின்னு சந்தோஷமா வண்டிய கிளப்பினாரு. வண்டியில இருந்த எல்லாரும் நம்மள ஹீரோ கணக்கா பாக்க, கொஞ்சம் பெருமிதமா இருந்துச்சி. பின்னாடி இருந்த என்ன டிரைவர் கூப்பிடறாரு கிளி சொல்ல, பைய எடுத்துகிட்டு முன்னால அவருகிட்ட போனேன்.

'ரொம்ப தேங்க்ஸ்... எப்படி அந்த மாதிரி உங்களால சொல்ல முடிஞ்சது' ன்னு கேக்க, 'இல்லண்ணே, நார்மலா அடிபட்ட கோழிய உடனே சமைச்சிடுவாங்க. நாலுமணிக்கு ஆனத இவ்வளோ நேரம் வெச்சிருப்பாங்களா? அதான்'.

'சரி இருந்திருந்தா' ன்னு கேக்க, 'மொதல்லையே சீன்ல கோழி இல்லன்னு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் சொன்னேன். அப்படி இருந்திருந்தா அதிகப்படியான காச நான் கொடுத்திருப்பேன்' னு சொல்லிட்டு 'அண்ணே ஒரு உதவி, பத்து மணி மெட்ராஸ் பஸ்ஸ புடிக்கனும்' னு சொல்ல,

'அவ்வளவுதானே' ன்னு வண்டிய சரி ஸ்பீடா அழுத்தி, லைட்டெல்லாம் அணைச்சி அணைச்சி போட்டு 422 நம்பர வெச்சி வழியில வந்துகிட்டிருந்த பஸ்ஸ நடு ரோட்டுல நிப்பாட்டி ஏத்திவிட்டாரு.

பின்குறிப்பு.

'ஆமாம் உங்க பேரு தங்கராசுவா? அந்த பெரியவரு சொன்னாரு' ன்னு டிரைவர கேக்க, இல்லையில்ல முருகன். அவரு சும்மா பேச்சுவாக்குல சொல்லியிருப்பாரு' ன்னாரு

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

60 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

பீர் | Peer said...

கிராமங்களுக்கு கார்ல போனா வேணும்னே குறுக்க கோழிய விடுவாய்ங பிரபாகர். அனுபவிச்சிருக்கேன்.. ஊர்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா தப்பிச்சோம். இல்லைனா ஆயிரம் ஐநூறு பிடுங்கிடுவாய்ங.

ஜெட்லி... said...

இப்படி எல்லாம் கூட நடக்குதா??,..
ரைட்...

பழமைபேசி said...

//நோள்ளக் கண்ணா//

நொள்ளை மடையான்ங்ற கொக்குக்குக் கண் பார்வை இல்லையாம். அந்த நொள்ளை மடையான் கண்கள் போன்று உடையவன் நொள்ளைக் கண்ணன்!

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
கிராமங்களுக்கு கார்ல போனா வேணும்னே குறுக்க கோழிய விடுவாய்ங பிரபாகர். அனுபவிச்சிருக்கேன்.. ஊர்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா தப்பிச்சோம். இல்லைனா ஆயிரம் ஐநூறு பிடுங்கிடுவாய்ங.
//
நானும் மாட்டியிருக்கேன். நன்றிங்க பீர்...

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
இப்படி எல்லாம் கூட நடக்குதா??,..
ரைட்...
//
வணக்கம் ஜெட்லி. ம்... நடந்துட்டுதான் இருக்கு.

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
//நோள்ளக் கண்ணா//

நொள்ளை மடையான்ங்ற கொக்குக்குக் கண் பார்வை இல்லையாம். அந்த நொள்ளை மடையான் கண்கள் போன்று உடையவன் நொள்ளைக் கண்ணன்!
//
புதிய தகவல்... நன்றிங்க பழமைபேசி...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அனுபவ குறிப்பு.....

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல அனுபவ குறிப்பு.....
//

நன்றிங்க ஞானசேகரன்...

ஈரோடு கதிர் said...

நாட்டாம தீர்ப்ப மாத்து...

அந்த கோழியை (கோழியா!!?? சேவலா!??) கொலை செய்த தங்கராசு என்கிற முருகனுக்கு தண்டனை வழங்காத சமூகத்தை / குற்றவாளியை தப்பிக்க வைத்து இன்று சிங்கப்பூரில் மறைந்திருக்கும் பிரபாகரை மெ(வ)ன்மையாக கண்டிக்கிறோம்...

இப்டிக்கு
கொழிக்கறி கிடைக்காதோர் சங்கம்

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்க Timing scense ரொம்ப sharp ..

Prathap Kumar S. said...

செம காமெடி... நீங்க ஒரு தெனாலிராமன்தான் போங்க... சரியான பாயிண்டை புடிச்சீங்க...

அதெல்லாம் சரி கட்ட பஞ்சாயத்து பண்றது தப்புங்க... இனிமே பண்ணாதீங்க...

Cable சங்கர் said...

நல்ல சமயோஜிதம்.. பிரபா.. நைஸ்

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...

/கொழிக்கறி கிடைக்காதோர் சங்கம்/

ஏன் மாப்பு. சாக்கு கிடைச்சா சங்கம் வெச்சிற்றதா. அங்க வெண்ணை, இங்க கோழி. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.

ஹூம் பிரபாகர். இது எப்போ நடந்துச்சு? இப்ப எல்லாம் விவரமாய்ட்டாங்க. இரு கொண்டாரேன்னு ஒரு சேவல் கதைய முடிச்சி கொண்டு வந்து போட்டிருந்தா கத டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
:))

மாதேவி said...

'மொதல்லையே சீன்ல கோழி இல்லன்னு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் சொன்னேன்.

"இரு கொண்டாரேன்னு..... டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."இப்படியும் இருக்கா!

பிரபாகர் said...

//
கதிர் - ஈரோடு said...
நாட்டாம தீர்ப்ப மாத்து...

அந்த கோழியை (கோழியா!!?? சேவலா!??) கொலை செய்த தங்கராசு என்கிற முருகனுக்கு தண்டனை வழங்காத சமூகத்தை / குற்றவாளியை தப்பிக்க வைத்து இன்று சிங்கப்பூரில் மறைந்திருக்கும் பிரபாகரை மெ(வ)ன்மையாக கண்டிக்கிறோம்...

இப்டிக்கு
கொழிக்கறி கிடைக்காதோர் சங்கம்
//
தப்புதான்... சங்கத்துல நம்மளையும் தண்டன கொடுத்துட்டு சேத்துக்குங்க...

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
உங்க Timing scense ரொம்ப sharp ..
//
அந்த இடத்துல படிச்ச ஒரு விஷயம் ஞாபத்துக்கு வர.... அதான்...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
செம காமெடி... நீங்க ஒரு தெனாலிராமன்தான் போங்க... சரியான பாயிண்டை புடிச்சீங்க...

அதெல்லாம் சரி கட்ட பஞ்சாயத்து பண்றது தப்புங்க... இனிமே பண்ணாதீங்க...
//
நன்றி பிரதாப்...இன்னொரு பஞ்சாயத்து மேட்டரும் இருக்கு, அப்புறமா...

பிரபாகர் said...

//
Cable Sankar said...
நல்ல சமயோஜிதம்.. பிரபா.. நைஸ்
//
ரொம்ப நன்றிங்கண்ணா, ரொம்ப சந்தோசம்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...

/கொழிக்கறி கிடைக்காதோர் சங்கம்/

ஏன் மாப்பு. சாக்கு கிடைச்சா சங்கம் வெச்சிற்றதா. அங்க வெண்ணை, இங்க கோழி. ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.

ஹூம் பிரபாகர். இது எப்போ நடந்துச்சு? இப்ப எல்லாம் விவரமாய்ட்டாங்க. இரு கொண்டாரேன்னு ஒரு சேவல் கதைய முடிச்சி கொண்டு வந்து போட்டிருந்தா கத டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
:))
//
நல்லவேளை, நீங்க அங்க இல்ல. இருந்திருந்தா... நினைக்கவே பயமாயிருக்கு.

பிரபாகர் said...

//
மாதேவி said...
'மொதல்லையே சீன்ல கோழி இல்லன்னு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் சொன்னேன்.

"இரு கொண்டாரேன்னு..... டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."இப்படியும் இருக்கா!
//
வடிவேலுகிட்ட பழக்கம் வந்ததில இருந்து அய்யா டெரரா யோசிக்கிறாரு பாத்தீங்களா?

வெண்ணிற இரவுகள்....! said...

டிரைவர் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சின்னு சந்தோஷமா வண்டிய கிளப்பினாரு. வண்டியில இருந்த எல்லாரும் நம்மள ஹீரோ கணக்கா பாக்க, கொஞ்சம் பெருமிதமா இருந்துச்சி//
நீங்களும் ஹீரோ தான்

ஹேமா said...

அச்த்திட்டீங்க பிரபா.நாட்டமையாவும் அடிக்கடி மாறுவீங்களோ !

கலையரசன் said...

கோழிக்கே முன்னூறுன்னா... அப்ப ஆடு அடிச்சா ஆறாயிரம் கேப்பானுங்க போலையே பிரபா-?

புலவன் புலிகேசி said...

//நீங்க போயி அடிச்சு போட்ட சேவல எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க' ன்னு சொன்னேன்.//

உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே!!!!

க.பாலாசி said...

//கொஞ்ச கேப்புக்கு அப்புறம் 'நீங்க போயி அடிச்சு போட்ட சேவல எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க' ன்னு சொன்னேன்.//

நச்சுன்னு ஆப்பு அடிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க....இதுமாதிரி கிராமத்துல தெருவுக்கொரு கோழிச்சண்ட நடக்கும்...ஒவ்வொன்னுலையும் ஒவ்வொருமாதிரி சுவாரசியம் இருக்கும். சிலநேரங்கள்ல குடும்பத்தகராறா மாறி அடிதடியில கூட முடிஞ்சிடும். கோழிங்க இருந்தாலும் சண்ட, செத்தாலும் சண்ட.

நல்ல இடுகை இனிய அனுபவமாக....

நாடோடி இலக்கியன் said...

கோழின்னு இல்லைங்க தெரு நாய் குறுக்கே வந்தாலும் உரிமை கொண்டாடிட்டு கும்பல் கூடிவிடும்.

ஊடகன் said...

எங்க ஊருக்கும் தீர்ப்பு சொல்ல உங்கள மாதிரி ஒரு நாட்டாமை தேவை( அதுவும் படிச்சவக)...........

ஜோதிஜி said...

தலைப்பாகையோட போயிடுச்சின்னு சந்தோஷமா வண்டிய கிளப்பினாரு.

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை நண்பா....

மணிஜி said...

எனக்கு சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு

Menaga Sathia said...

உங்க சமயோஜிதத்தை பாராட்டுகிறேன்...

தேனீ said...

அவரு என்னான்னா கோழீங்கிறாரு, இவ‌ரு என்னான்னா சேவ‌லுங்கிறாரு ஙொய்யால‌ ஒரே கொழ‌ப்ப‌மால்ல‌ இருக்கு.....

சிங்க‌ப்பூனர‌ண்ணா சூப்ப‌ர்ண்ணா...

கிறுக்கல்கள்/Scribbles said...

Well it is a good anecdote. Good presence of mind. Keep writing.

பிரபாகர் said...

//
வெண்ணிற இரவுகள்....! said...
டிரைவர் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிடுச்சின்னு சந்தோஷமா வண்டிய கிளப்பினாரு. வண்டியில இருந்த எல்லாரும் நம்மள ஹீரோ கணக்கா பாக்க, கொஞ்சம் பெருமிதமா இருந்துச்சி//
நீங்களும் ஹீரோ தான்
//

ஹி...ஹி... நன்றிங்க...

பிரபாகர் said...

//
ஹேமா said...
அச்த்திட்டீங்க பிரபா.நாட்டமையாவும் அடிக்கடி மாறுவீங்களோ !
//
ஏதோ, அந்த சமயத்துல வொர்க் அவுட் ஆச்சு... நன்றிங்க ஹேமா...

பிரபாகர் said...

//
கலையரசன் said...
கோழிக்கே முன்னூறுன்னா... அப்ப ஆடு அடிச்சா ஆறாயிரம் கேப்பானுங்க போலையே பிரபா-?
//
ஆமாங்க. ஆட்ட அடிச்சதுக்கு ரெண்டாயிரம் கறந்த கதையை என் தம்பி இப்போதான் சொன்னான். அத அப்புறமா எழுதலாம்.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
//நீங்க போயி அடிச்சு போட்ட சேவல எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க' ன்னு சொன்னேன்.//

உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே!!!!
//

நன்றி புலிகேசி, அப்பப்போ.... கவுந்த மேட்டர்லாம் இருக்கு..... பின்னால சொல்றேன்.

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//கொஞ்ச கேப்புக்கு அப்புறம் 'நீங்க போயி அடிச்சு போட்ட சேவல எடுத்துட்டு வாங்க. கொடுத்துட்டு காசு வாங்கிட்டு போங்க' ன்னு சொன்னேன்.//

நச்சுன்னு ஆப்பு அடிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க....இதுமாதிரி கிராமத்துல தெருவுக்கொரு கோழிச்சண்ட நடக்கும்...ஒவ்வொன்னுலையும் ஒவ்வொருமாதிரி சுவாரசியம் இருக்கும். சிலநேரங்கள்ல குடும்பத்தகராறா மாறி அடிதடியில கூட முடிஞ்சிடும். கோழிங்க இருந்தாலும் சண்ட, செத்தாலும் சண்ட.

நல்ல இடுகை இனிய அனுபவமாக....
//

நன்றி பாலாசி... உங்களின் அழகிய பின்னூட்டத்துக்கும் உங்களின் அன்புக்கும்...

பிரபாகர் said...

//
நாடோடி இலக்கியன் said...
கோழின்னு இல்லைங்க தெரு நாய் குறுக்கே வந்தாலும் உரிமை கொண்டாடிட்டு கும்பல் கூடிவிடும்.
//
நன்றி நண்பா... உங்களின் வரவு என் பாக்கியம்...

பிரபாகர் said...

//
ஊடகன் said...
எங்க ஊருக்கும் தீர்ப்பு சொல்ல உங்கள மாதிரி ஒரு நாட்டாமை தேவை( அதுவும் படிச்சவக)...........
//
எங்க ஊருல விடமாட்டாங்களே.... நன்றி ஊடகன்... உங்களின் மேலான அன்பிற்கு....

பிரபாகர் said...

//
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
தலைப்பாகையோட போயிடுச்சின்னு சந்தோஷமா வண்டிய கிளப்பினாரு.
//
நன்றிங்கய்யா, உங்களின் மேலான வருகை மற்றும் அன்பிற்கு...

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமை நண்பா....
//
நன்றி ஆரூரன்... ரொம்ப சந்தோசம்....

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
எனக்கு சிக்கன் சாப்பிடணும் போல இருக்கு
//
நேர்ல பாக்கும் பொது கண்டிப்பாண்ணே... உடம்ப பாத்துக்கோங்க...

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
உங்க சமயோஜிதத்தை பாராட்டுகிறேன்...
//

நன்றிங்க மேடம். பாராட்டுக்கு நன்றி....

பிரபாகர் said...

//
தேனீ said...
அவரு என்னான்னா கோழீங்கிறாரு, இவ‌ரு என்னான்னா சேவ‌லுங்கிறாரு ஙொய்யால‌ ஒரே கொழ‌ப்ப‌மால்ல‌ இருக்கு.....

சிங்க‌ப்பூனர‌ண்ணா சூப்ப‌ர்ண்ணா...
//

நன்றிங்க தேனீ... முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு.

பிரபாகர் said...

//
கிறுக்கல்கள் said...
Well it is a good anecdote. Good presence of mind. Keep writing.
//

எல்லாம் உங்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதம்...

ப்ரியமுடன் வசந்த் said...

அசத்தல் பிரபாண்ணா...

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
அசத்தல் பிரபாண்ணா...
//

நன்றி வசந்த்.

Anonymous said...

அசத்தல் கதை. வேற ஒரு கோழியை கொண்டுவந்து ஐநூறா கறக்காம விட்டாங்களே!!

பிரபாகர் said...

//சின்ன அம்மிணி said...
அசத்தல் கதை. வேற ஒரு கோழியை கொண்டுவந்து ஐநூறா கறக்காம விட்டாங்களே!!
//

நினைச்சாலே பயமா இருக்குங்க. பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கேன்.... நன்றிங்க.

sambasivamoorthy said...

// 'சரி இருந்திருந்தா' ன்னு கேக்க, 'மொதல்லையே சீன்ல கோழி இல்லன்னு கன்பார்ம் பண்ணிட்டுத்தான் சொன்னேன். அப்படி இருந்திருந்தா அதிகப்படியான காச நான் கொடுத்திருப்பேன்' னு சொல்லிட்டு 'அண்ணே ஒரு உதவி, பத்து மணி மெட்ராஸ் பஸ்ஸ புடிக்கனும்' //

எதையும் பிளான் பண்ணி செயுரிகளே எப்புடி இப்புடி

பிரபாகர் said...

//sambasivamoorthy said...

November 4, 2009 1:20 PM //

நமக்கு காரியம் ஆகணும்ல....?

நன்றி மூர்த்தி.. வருகைக்கு.

துபாய் ராஜா said...

நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்புங்கோ.... :))

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
நாட்டாமை தீர்ப்பு நல்ல தீர்ப்புங்கோ.... :))
//
எதோ விதி நம்ம பக்கம் இருந்ததால தப்பிச்சோம், இல்லன்ன டரியல் தான்...நன்றி ராஜா.

mathsanbu said...

கிராமத்தின் அறியாமையும், குசம்புகளும் படிக்க, படிக்க சுவையானவை.. என்றுமே இனிமையானவை..
அதைத்தான் உங்களுடைய எழுத்துக்கள் உணர்த்திது.. நன்று... நன்றி..

பிரபாகர் said...

//Anbu said...
கிராமத்தின் அறியாமையும், குசம்புகளும் படிக்க, படிக்க சுவையானவை.. என்றுமே இனிமையானவை..
அதைத்தான் உங்களுடைய எழுத்துக்கள் உணர்த்திது.. நன்று... நன்றி..
//
நன்றி அன்பு, முதல் வருகை மற்றும் கருத்துக்கு...

பிரபாகர்.

lenin said...

அண்ணா சூப்பர், நம்ப ஊர்ல இதுவெல்லாம் சாதரணம்....

பிரபாகர் said...

//lenin said...
அண்ணா சூப்பர், நம்ப ஊர்ல இதுவெல்லாம் சாதரணம்....
//
வணக்கம் தம்பி! புது இடத்துல எப்படி இருக்கு?

நாகராஜன் said...

சூப்பர்... சூப்பர் ஹீரோ தான் நீங்க... நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். என்னோட சின்ன வயசுலயும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது... கொசு வர்த்தி சுத்த வைச்சுட்டீங்க பிரபாகர்.

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
சூப்பர்... சூப்பர் ஹீரோ தான் நீங்க... நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர். என்னோட சின்ன வயசுலயும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது... கொசு வர்த்தி சுத்த வைச்சுட்டீங்க பிரபாகர்.
//

நன்றிங்க.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB