எனது பார்வையில் இடுகையாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஏதேனும் தவறென்றால் மன்னித்து, சுட்டுங்கள், என்னை மேம்படுத்துங்கள்.
மாதவ்ராஜ் - தீராத பக்கங்கள் மூலம் தனது மனக்குமுறல்களையும், கருத்துக்களையும் சொல்லிவருகிறார். தெரிந்துகொள்ள, கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ள ஒரு அற்புத நபர்.
பீர் - புதிய பல விஷயங்களையும், இஸ்லாத்தைப்பற்றியும் நிறைய இவரிடம் தெரிந்துகொள்ளலாம். தனது கருத்துக்களின் ஆணித்தரமாய் இருப்பவர்.
கலகலப்ரியா - இவர் நமக்கு இடும் பின்னூட்டம் கலகல என இருக்கும், இடுகைகளும் கூட. கவிதைகளில் எல்லா விஷயங்களையும் சுவைபட சொல்லுவார். வித்தியாசமான நடை.
நையாண்டி நைனா - எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த ஒரு பிரச்சினையிலும் சம்மந்தமில்லாமல் கலாய்க்கும் அன்பு சகோதரர். கவிதைகளை மொக்கை போடுதலிலும், தனியான பாணியில் நையாண்டி செய்வதிலும்.... சொல்ல முடியவில்லை... நையாண்டியின் அரசன்.
வாழ்வியலோடு எழுதுபவர்கள்:
சினிமா மற்றும் இதர விஷயங்கள்:
சிறுகதை, தொடர், பயண அனுபவங்கள்:
நாடோடி இலக்கியன் - இவரின் கவிதைகளின் ரசிகன். இவரின் தமிழ் மிக அருமை. இவரின் அறிவுத்தாகம் எனக்கு நிறைய பிடிக்கும்.
பா.ராஜாராம் - இவரின் கவிதைகளில் இருக்கும் எளிமை, நிதர்சனம் மிகவும் அருமையாய் இருக்கும்.
மொத்தத்தில் கீழே உள்ள பத்தியை மூச்சுவிடாமல் படியுங்களேன், எல்லோரைப்பற்றியும் இருவார்த்தைகளில்...
அப்பாடா, ஒருவழியாய் முடித்திருக்கிறேன். இன்னும் நிறைய பேரை சொல்லிக்கொண்டு போகலாம். மறந்ததாய் நினைக்க வேண்டாம் குறிப்பிடாமலிருந்தால். விடுபட்டிருப்பின் மன்னிக்க, என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
சமுதாய சிந்தனைகளோடு எழுதுபவர்கள்:
கதிர் - இவரின் எழுத்துக்களின் வீரியம், நடை, சமுதாய சாடல்கள், கவிதையில் கையாளும் உத்திகள்... என சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றிரண்டு மொக்கை பதிவுகள் தவிர எல்லாம் பொக்கிஷம் என்பேன்.
வானம்பாடிகள் அய்யா - பாமரன் பக்கங்களில் வீறுநடை போட்டு வருபவர். இவரின் கவிதைகளுக்கும் கருத்துச் சாடல்களுக்கும் நான் அடிமை. இவரின் எழுத்துக்களில் தான் எத்தனை இளமை... காதலின் கவிதைகளில் இவரின் வர்ணித்தலை பார்த்தால் இருபது வயதோரும் இவரை போட்டியாய் எண்ணுவார்கள். எழுத்துக்களிலோ அனுபவ முதிர்ச்சி. சொல்லிக்கொண்டே போகலாம்.
பழமைபேசி - சராசரியாய் நாளுக்கொன்றென ஐந்நூறுக்கும் மேல் இடுகையிட்டு அசத்தி வருபவர். இவரின் இடுகைகள் தகவல் களஞ்சியம் எனும் அளவிற்கு இருக்கும். தமிழை இவர் அவருக்கே உரிய பாணியில் கையாளும் விதம்... அருமையிலும் அருமை. அன்றாடம் உபயோகப்படுத்தும் பல சொற்களின் பொருள் இவரின் மூலமாய்த்தான் தெரியும்.
ஜோதிஜி - ஜோதி கணேசன் என்னைவிட கொஞ்சம்தான் மூத்தவர் என்றாலும், அய்யா என அழைப்பதையே பெருமையாய் எண்ணி அழைத்தும் வருகிறேன். காந்தியைப் பற்றி எழுதி கலங்கவைத்தவர், ஈழப்பிரச்சினையை எடுத்தாள ஆரம்பித்திருக்கிறார். இவர் சொல்லும் சில வரலாற்று நிகழ்வுகள் உங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.
மாதவ்ராஜ் - தீராத பக்கங்கள் மூலம் தனது மனக்குமுறல்களையும், கருத்துக்களையும் சொல்லிவருகிறார். தெரிந்துகொள்ள, கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ள ஒரு அற்புத நபர்.
காமராஜ் - மாதவ்ராஜுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமோ எனத் தோன்றும் எழுத்துகள், கருத்துக்கள் யாவற்றிலும். அழகிய தமிழ் நடை இவரின் சிறப்புக்களின் ஒன்று.
பீர் - புதிய பல விஷயங்களையும், இஸ்லாத்தைப்பற்றியும் நிறைய இவரிடம் தெரிந்துகொள்ளலாம். தனது கருத்துக்களின் ஆணித்தரமாய் இருப்பவர்.
இளமை துள்ளலோடு எழுதுபவர்கள்:
கார்க்கி - இனம்புரியா கவர்ச்சி இவரிடம் இருக்கும். மொக்கை, காக்டைல், எழு, புட்டி என பல பரிமாணங்களில் அசத்தும் இளைஞர். சகா என்றால் சட்டென நினைவிற்கு வருபவர்.
ஜெட்லி - பார்த்ததும் படிக்கத்தோன்றும் இடுகைகளுக்கு சொந்தக்காரர். சினிமா விமர்சனம், அன்றாட நிகழ்வுகள் என அலசுபவர்கள்.
கிரி - இளமைக்கு உத்திரவாதமான பதிவுகள் நிச்சயம். எல்லாம் கலந்து எழுதுபவர். படித்தால் திருப்திக்கு நிச்சயம்.
கிருஷ்ணா - பக்கத்து ஊர். எனது தம்பிகளின் வரிசையில் இணைந்திருக்கிறவர். இவரின் ஊரில் விரிவுரையாளனாய் வேலை பார்த்தலினால் என்னை சார் எனத்தான் அழைப்பார். ஆர்வமுள்ள இளைஞர். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும், எல்லோர்க்கும் சொல்லுதலிலும் வல்லவர்.
கலகலப்பாய் எழுதுபவர்கள்:
கலகலப்ரியா - இவர் நமக்கு இடும் பின்னூட்டம் கலகல என இருக்கும், இடுகைகளும் கூட. கவிதைகளில் எல்லா விஷயங்களையும் சுவைபட சொல்லுவார். வித்தியாசமான நடை.
அர்விந்த் - இரும்புத்திரை பதிவுக்கு மட்டும்தான், பழகுதற்கல்ல. இளைமையான எழுத்துக்கள், அதற்கே உரித்தான துணிச்சல்... என் அன்பு தம்பிகளில் ஒருவர்.
ராஜு - டக்ளசு என அறியப்பட்டு வந்த என் மற்றுமோர் தம்பி. ஒரு இடுகையை எந்த கோணத்தில் எழுதியிருக்கிறோம், அதில் உள்ள முத்தாய்ப்பான விஷயம் எது எனக் கேட்டால் நீங்களே எதிர்ப்பாராத பதில் ஆச்சர்யமாய் கிடைக்கும். சாதிக்க துடிக்கும் என் அன்பு தம்பி.
நையாண்டி நைனா - எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த ஒரு பிரச்சினையிலும் சம்மந்தமில்லாமல் கலாய்க்கும் அன்பு சகோதரர். கவிதைகளை மொக்கை போடுதலிலும், தனியான பாணியில் நையாண்டி செய்வதிலும்.... சொல்ல முடியவில்லை... நையாண்டியின் அரசன்.
வாழ்வியலோடு எழுதுபவர்கள்:
செந்தில்வேலன் - இவரின் பதிவுகள் வெளியான மறுநொடியில் விகடனில் வந்திருக்கிறதா என பார்த்துவிட்டுத்தான் படிக்கத்தொடருவேன். அமீரகத்திலிருந்து அசத்துபவர். அருமையான நடை. இடுகைகள் யாவும் நமக்கு தேவையான, வாழ்வை மேம்படுத்தக்கூடிய பயனுள்ள விஷயங்களாயிருக்கும். எழுத்துக்களில் எளிமை, தெளிவு மற்றும் நேர்மை இவரது பதிவின் பிரதான விஷயங்கள்.
நாகா - என்னை பல உள்ளங்களுக்கு அறிமுகப்படுத்திய எனது ஸ்டார். பதிவுகள் குறைவாய் எழுதியிருந்தாலும் அதில் உள்ள விஷயங்கள் பொருள் பொதிந்தவை. நட்புக்கு இலக்கணமாய் திகழ்பவர்.
நரசிம் - ஆரம்பம் முதலே என்னை கவர்ந்து அசத்தி வருபவர். இவரின் எழுத்துக்கள் தனித்தன்மையானவை. நல்ல விஷயங்களை, இடுகைகளை எல்லோருக்கும் கொண்டு செல்லுபவர். உதவும் மனப்பான்மையினால் உரைந்திருப்பவர். சங்கத்தமிழ் பாடல்களை அவருக்கே உரிய பாணியில் எளிமையாய் சொல்லுபவர்.
சினிமா மற்றும் இதர விஷயங்கள்:
வண்ணத்துபூச்சியார் - விஷயமுள்ளவர், எவர் மனதையும் நோகடிக்காத விமர்சனம் இவரது சிறப்பம்சம். இவரால் பரிந்துரைக்கப்படும் எந்த ஒரு படமும் பேரு பெற்றதாய் இருக்கும்.
கேபிள் அண்ணா - என்ன சொல்ல?, வலையுலகின் சூப்பர் ஸ்டார். வசீகரமான எழுத்துகளால் கட்டிப்போடுபவர். விமர்சனம் வெகு நியாயமாய் பாரபட்சம் இல்லாமல் நடுநிலையாய் இருக்கும். சாப்பாட்டு விஷயங்களை சரியாய் சொல்லுவார்.
உண்மைத்தமிழன் - சினிமா மற்றும் நடப்பு நிகழ்வுகளை உண்மையாய் சொல்லுபவர். தனித்தன்மையும், துல்லியமும் இவரின் சிறப்பு.
முரளிக்கண்ணன் - இவரின் மெனக்கடல்களும், தகவல் கோர்வையும், நடையும் மிகவும் ரசனையுடன் இருக்கும். சினிமா பற்றி மிக வித்தியாசமான தகவல்களை தருபவர்.
ஹாலிவுட் பாலா - ஆங்கிலப் படக்களுக்கு அசத்தலாய் விமர்சனம் எழுதுபவர். இவர் சொன்னால் நம்பி பார்க்கலாம். நடையும் விமர்சனமும் வித்தியாசமாய் இருக்கும்.
சிறுகதை, தொடர், பயண அனுபவங்கள்:
துபாய் ராஜா - இடுகைகளில் தொடர், அசத்தலான சிறுகதைகள், அவ்வப்போது கவிதைகள், மிக வித்தியாசமாய் பயண அனுபவங்கள் என அசத்திக் கொண்டிருப்பவர். நமக்கு இடும் பின்னூட்டங்கள் நம்மை மேம்படுத்திக் கொள்ள உறுதுணையாய் இருக்கும்.
கவிதையோடு கதைகள்:
தண்டோரா - இவரது எழுத்துக்களுக்குத்தான் எத்தனை வீரியம்? என் அன்பு அண்ணன்களுள் ஒருவர். இவரின் கவிதைகள் அத்தனை அழகாய் இருக்கும், கதைகளும் கூட. நறுக்கென கவரும்படி சொல்லுபவர்
நாடோடி இலக்கியன் - இவரின் கவிதைகளின் ரசிகன். இவரின் தமிழ் மிக அருமை. இவரின் அறிவுத்தாகம் எனக்கு நிறைய பிடிக்கும்.
பாலா சி - நண்பரின் கவிதை மற்றும் வர்ணனைகள் நேர்த்தியாயும், எளிமையாயும் இருக்கும். வித்தியாசம், புதுமை இவரின் இரு முக்கிய விஷயங்கள்.
பா.ராஜாராம் - இவரின் கவிதைகளில் இருக்கும் எளிமை, நிதர்சனம் மிகவும் அருமையாய் இருக்கும்.
மொத்தத்தில் கீழே உள்ள பத்தியை மூச்சுவிடாமல் படியுங்களேன், எல்லோரைப்பற்றியும் இருவார்த்தைகளில்...
கதிரிடம் கசியும் கவிதையும் வெடிக்கும் மௌனமும், பழமை பேசியிடம் முதிர்ச்சியும் தமிழறிவும், பாமரன் அய்யாவின் அனுபவமும் இளமைத்துள்ளலும், கலகலப்ரியாவிடம் கலகலப்பும் கவித்திறமையும், வசந்தின் வசீகரமும் வார்த்தையாடலும், ஜோதிஜியின் ஜாலங்களும் சிலிர்ப்புகளும், லக்கியின் லாவகவும் துணிச்சலும், நையாண்டியிடம் நையாண்டியும் நக்கலும், ராஜுவின் இளமையும் எதிராடலும், வால்பையனின் வால்தனமும் வாதங்களும், கேபிள் அண்ணாவின் கனிவும் கதைகளும், தண்டோராவின் அதிரும் கவியும் அழகிய கோபமும், உண்மைத்தமிழனின் உண்மையும் உயிரோட்டமும், வண்ணத்துப்பூச்சியாரின் நந்தவனமும் மலரும் பூக்களும், நர்சிம்மின் நயமான நடையும் நேர்மையான கோபமும், கார்க்கியின் கலக்கலும் கதைத்தலும், ஆதியிம் புலம்பலும் புரிதலும், துபாய் ராஜாவின் தேடலும் திரட்டலும், செந்தழல் ரவியின் சீற்றமும் செம்மையும், ஜெட்லியின் சினிமாவும் செய்திகளும், அரவிந்தின் அலம்பல்களும் அனுபவங்களும், காமராஜின் கருத்துக்களும் கட்டுரைகளும், மாதவராஜின் சொல்லும் சீற்றமும், மணியின் பின்னூட்டமும் கிச்சடியும், செந்திலின் செய்திகளும் சீர்நடையும், நாகாவின் நட்பும் நளினமும், பீரின் புதுமைகளும் வாதங்களும், பாலாசியின் வர்ணனையும் வார்த்தைகளும், ரவிபிரகாஷின் ரசனைகளும் டைரியும், முரளிக்கண்ணனின் முத்தாய்ப்பான தகவல்களும் அலசல்களும் என எல்லாம் எனைக் கவர்ந்து கட்டிப்போடுபவை.
அப்பாடா, ஒருவழியாய் முடித்திருக்கிறேன். இன்னும் நிறைய பேரை சொல்லிக்கொண்டு போகலாம். மறந்ததாய் நினைக்க வேண்டாம் குறிப்பிடாமலிருந்தால். விடுபட்டிருப்பின் மன்னிக்க, என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
பின்குறிப்பு:
இன்னும் என்னை கவர்ந்த இடுகையாளர்கள் நிறைய... வரும் ஒவ்வொரு இடுகையிலும் அவர்களை எழுதுகிறேன் ஒவ்வொருவராய்...
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
66 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
பிரபாகர் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைக் குறித்த வெளிப்படையான நேர்மையான பதிவை வெளியிட்டுள்ளீர். உங்கள் தேர்ந்தெடுப்பு எங்களுக்கும் உதவியாய் உள்ளது. நன்றி! உங்கள் பட்டியலில் எங்களைப் போல் இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்களையும் கணக்கிலெடுக்கலாம்தானே!
-முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரி-8
//முனைவர் நா.இளங்கோ said...
பிரபாகர் உங்களுக்குப் பிடித்த பதிவுகளைக் குறித்த வெளிப்படையான நேர்மையான பதிவை வெளியிட்டுள்ளீர். உங்கள் தேர்ந்தெடுப்பு எங்களுக்கும் உதவியாய் உள்ளது. நன்றி! உங்கள் பட்டியலில் எங்களைப் போல் இலக்கிய ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்களையும் கணக்கிலெடுக்கலாம்தானே!
//
கண்டிப்பாங்க. முனைவர் குணசீலன் அவர்களை தொடர்ந்து வருகிறேன், மறந்தவர்களில் அவரும் அவரும் ஒருவர். வருந்துகிறேன். அன்புக்கு நன்றி...
/விடுபட்டிருப்பின் மன்னிக்க, என் இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
//
சிங்கப்பூர் கலைஞர் ஆயிட்டீங்களே....
நல்ல தொகுப்பு. நன்றி
//சிங்கப்பூர் கலைஞர் ஆயிட்டீங்களே....
நல்ல தொகுப்பு. நன்றி
October 22, 2009 11:06 AM//
அண்ணா வணக்கம். எல்லோரையும் எழுத முடியல அதனால்தான். ஹி...ஹி.... நன்றிங்கண்ணா.
நைனாக்கு பிடிக்காத நானுமா லிஸ்ட்ல..
நன்றி பிரபாகர்...
"வசந்தின் வசீகரமும் வாத்தையாடலும்",
இந்த வரி உங்களுக்கானது வசந்த். விரிவாய் எழுத மறந்துவிட்டேன்... மன்னிக்கவும். தொடர்பு தரவும் தான். நன்றி வசந்த்.
உங்களுக்குப் பிடித்தவராய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நிறைய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி பிரபா
//கதிர் - ஈரோடு said...
உங்களுக்குப் பிடித்தவராய் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நிறைய பதிவர்களை அடையாளம் காட்டியதற்கு நன்றி பிரபா
October 22, 2009 11:47 AM//
நன்றி என் அன்பு நண்பரே...
ஐ. நானும் பட்டியலில். நன்றி. நல்ல அறிமுகம்.
/பிரியமுடன்...வசந்த் said...
நைனாக்கு பிடிக்காத நானுமா லிஸ்ட்ல..
:)). நீ திருந்தவே மாட்டியா வசந்து. உன்ன பிடிக்காதன்னு சொல்லி மொத்த பதிவுலகத்தையும் எனக்கு எதிரியாக்கவா? கொலை விழும் குறும்புக்காரப் பயலே.
அப்பாடா நல்லவேளை எங்கே எம்பேரை சொல்லிருவீங்களோன்னு பயந்தேன்...:-)
சரியா சொல்லிருக்கீங்க... உங்களை பின்தொடர ஆரம்பிச்சுட்டேன்
//வானம்பாடிகள் said...
ஐ. நானும் பட்டியலில். நன்றி. நல்ல அறிமுகம்.
/பிரியமுடன்...வசந்த் said...
நைனாக்கு பிடிக்காத நானுமா லிஸ்ட்ல..//
நன்றிங்கய்யா! வசந்த பிடிக்காம இருக்குமா? பெரிய பத்தியில இருக்காரு.
//நாஞ்சில் பிரதாப் said...
அப்பாடா நல்லவேளை எங்கே எம்பேரை சொல்லிருவீங்களோன்னு பயந்தேன்...:-)
சரியா சொல்லிருக்கீங்க... உங்களை பின்தொடர ஆரம்பிச்சுட்டேன்
October 22, 2009 12:09 PM//
நன்றி நாஞ்சில், நானும்தான் உங்களை..
பிரபாகர், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.
நீங்கள் தொடரும் பலரை நானும் தொடர்ந்து வருகிறேன். எனினும் அழகான தொகுப்பு. வாழ்த்துகள்.
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்.
நீங்கள் தொடரும் பலரை நானும் தொடர்ந்து வருகிறேன். எனினும் அழகான தொகுப்பு. வாழ்த்துகள்.//
நன்றி செந்தில். உங்களின் வாசகனாயிருப்பதில் பெருமைப்படுகிறேன்.
தாங்கள் ஊக்கதக்கு நன்றி பிரபா...
வாழ்த்துக்கள்...
// ஜெட்லி said...
தாங்கள் ஊக்கதக்கு நன்றி பிரபா...
வாழ்த்துக்கள்...//
நன்றி ஜெட்லி... நிறையபேரை மறந்துவிட்டேன். ஒவ்வொருவராய் வரும் இடுகைகளில் சொன்னவாறு செய்யலாம் என இருக்கிறேன்.
நல்ல ஊக்கப் பதிவு....
//புலவன் புலிகேசி said...
நல்ல ஊக்கப் பதிவு....
October 22, 2009 2:28 PM//
நன்றி புலிகேசி...
அட.. லிஸ்ட்ல நானும்.. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கோ... அப்புறம் வந்து விபரமா படிச்சுக்கறேன்..
//கலகலப்ரியா said...
அட.. லிஸ்ட்ல நானும்.. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கோ... அப்புறம் வந்து விபரமா படிச்சுக்கறேன்..
//
நன்றி ப்ரியா, படிச்சிட்டு கருத்த சொல்லுங்க...
பிரபா அன்புக்கு நன்றிகள்..நன்றாக எழுதி இருக்கிறாய் தம்பி..வாழ்த்துக்கள்..மென்மேலும் வளர.....
//தண்டோரா ...... said...
பிரபா அன்புக்கு நன்றிகள்..நன்றாக எழுதி இருக்கிறாய் தம்பி..வாழ்த்துக்கள்..மென்மேலும் வளர.....
October 22, 2009 3:03 PM //
நன்றிண்ணே, எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்...
வணக்கம் ப்ரபாகர்.
என்வலைத்தளம் குறித்து எழுதியது சந்தோசமாக இருக்கிறது.
நீங்கள் சந்தேகப்பட்டது 200 சதம் சரி.
நானும் மாதவராஜும் ஒரே வங்கியில், ஒரே தொழிற்சங்கத்தில், ஒரே சித்தாந்தத்தில்,
ஒரே தெருவில், அடுத்ததடுத்த வீட்டில் குடியிருக்கிற 25 ஆண்டுகால நண்பர்கள்.
//காமராஜ் said...

October 22, 2009 3:33 PM//
நன்றி காமராஜ்... உங்கள் நட்புக்கு வந்தனம்...
உங்களிருவரையும் தொடர்ந்து படித்து வருகிறேன். நிறைய சந்தோசம்...
எவ்வளவு நேரம் ஆச்சு சகா?
சூப்பர்..
என்னையும் சேர்த்தற்கு நன்றி :))
//கார்க்கி said...
எவ்வளவு நேரம் ஆச்சு சகா?
சூப்பர்..
என்னையும் சேர்த்தற்கு நன்றி :))
October 22, 2009 4:25 PM//
நிறைய நேரம், ஆனால் எழுதலில் சந்தோஷமாய் உணர்ந்தேன். நன்றி சகா...
இவர்களை படியுங்கள் என்று லிஸ்ட் கொடுக்காமல் முகவுரைகள் கொடுத்தது அருமை!
பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!
உங்களுக்கு நன்றி!
இத்தனை பதிவர்களையும் தாங்கள் அறிமுகப்படுத்தியவிதமே கவிதையாக இருக்கிறதே அன்பரே....
எனக்கும் கவிதை எழுதத்தெரியும் என்று அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்....பார்க்கிறேன்.
நல்ல இடுகை....
//velji said...
இவர்களை படியுங்கள் என்று லிஸ்ட் கொடுக்காமல் முகவுரைகள் கொடுத்தது அருமை!
பதிவர்களுக்கு பாராட்டுக்கள்!
உங்களுக்கு நன்றி!
//
நன்றி வேல்ஜி! அன்பிற்கு நன்றி. உங்களை தொடர ஆரம்பித்திருக்கிறேன்.
//க.பாலாசி said...
இத்தனை பதிவர்களையும் தாங்கள் அறிமுகப்படுத்தியவிதமே கவிதையாக இருக்கிறதே அன்பரே....
எனக்கும் கவிதை எழுதத்தெரியும் என்று அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...
நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்....பார்க்கிறேன்.
நல்ல இடுகை....
October 22, 2009 5:38 PM//
நன்றி பாலாசி... கருத்துக்கும் வாழ்த்துக்கும்.
சிங்க கலைஞர் ஆயிட்டீங்களே...
தம்பி என்று சொல்லி எனக்கு பிடித்த இடுகையாளர்கள் பட்டியலில்
...
இதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்கும் சார் ? நன்றி ..........
//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
சிங்க கலைஞர் ஆயிட்டீங்களே...
October 22, 2009 6:27 PM//
நன்றிங்கய்யா... உங்களின் அன்பான ஆதரவுக்கு...
//ஸ்ரீ.கிருஷ்ணா said...
தம்பி என்று சொல்லி எனக்கு பிடித்த இடுகையாளர்கள் பட்டியலில்
...
இதைவிட சந்தோசம் வேறு என்ன இருக்கும் சார் ? நன்றி ..........//
இன்னும் நிறைய எழுதுங்கள் கிருஷ்ணா, சாதிக்க உங்களுக்கு வானமே எல்லை...
நானெல்லாம் Randomஆக வாசிக்கிற ஆள். கண்ணில் தென்படுவதை வாசிப்பேன். இது போன்ற தொகுப்புகள் குறிப்பிடத்தகுந்த நல்ல பதிவர்களை அடையாளம் காட்டுகின்றன.
அவ்வப்போது தொகுப்பு போடுங்கள்
//நானெல்லாம் Randomஆக வாசிக்கிற ஆள். கண்ணில் தென்படுவதை வாசிப்பேன். இது போன்ற தொகுப்புகள் குறிப்பிடத்தகுந்த நல்ல பதிவர்களை அடையாளம் காட்டுகின்றன.
அவ்வப்போது தொகுப்பு போடுங்கள்
October 22, 2009 6:30 PM //
நன்றிகள் செல்வகுமார். உங்களின் ஆதரவு எனக்குள் உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
அருமை பிரபா. என மனம் கவர்ந்தவர்கள் பலர் லிஸ்டில் உள்ளார்கள்..
மனித நேயத்தின் மறுபிறப்பு கேபிளார் உண்மையில் பதிவுலக ever green சூப்பர் ஸ்டார் தான். என் அருமை தம்பி ஹாலிவுட் பாலா இல்லாத ஆங்கில சினிமாவா..?? No chance..
அனைவருக்கும் பாராட்டுகள்..
நன்றி பிரபா..
அறிமுகத்திற்கு நன்றி பிரபாகர்.
பொழூதுபோக்கிற்கு எழுத ஆரம்பித்ததை பழுதின்றி எழுத
பண்படுத்தும் பதிவு. மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், படைப்புகளையும் தொடர ஊக்கத்தையும்,உற்சாகத்தையும் அளித்துள்ளீர்கள்.
அறிமுகப்படுத்தியுள்ள அனைவருமே அருமையானவர்கள். தாங்கள் சுவைத்த இனிய பதிவர்களை மற்றவர்களும் அறிய கொடுத்துள்ளமை அழகு.
புதிதாக வலையுலகிற்கு வருபவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க அருமையான பதிவுகளை அழகாக தொகுத்துள்ளீர்கள். இன்னும் பலபேர் பதிவுலகம் வர உங்களது இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.
அறிமுகங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
மிக அதிக உழைப்பு தேவைப்பட்ட பதிவு என்று நினைக்கிறேன்.
நன்றாக எழுதி,அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
நன்றி பிரபா.
நீங்கள் கூறிய சிலர் எனக்கும் பிடித்தவர்கள் தான்.....
நல்ல தொகுப்பு!!
//அருமை பிரபா. என மனம் கவர்ந்தவர்கள் பலர் லிஸ்டில் உள்ளார்கள்..
மனித நேயத்தின் மறுபிறப்பு கேபிளார் உண்மையில் பதிவுலக ever green சூப்பர் ஸ்டார் தான். என் அருமை தம்பி ஹாலிவுட் பாலா இல்லாத ஆங்கில சினிமாவா..?? No chance.. //
நன்றி சூர்யா!
இந்த பதிவில் எனது பார்வையில், நான் படிக்கும், தொடரும் இடுகையாளர்களை மட்டும்தான் எடுத்துக்கொண்டேன். இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள். தவறவிட்டதை உணர்கிறேன். விரைவில் அவர்களையும் என்னோடு இணைத்துக்கொள்ளவேண்டும்...
//துபாய் ராஜா said...
அறிமுகத்திற்கு நன்றி பிரபாகர்.
பொழூதுபோக்கிற்கு எழுத ஆரம்பித்ததை பழுதின்றி எழுத
பண்படுத்தும் பதிவு. மேலும் பல வித்தியாசமான பகிர்வுகளையும், படைப்புகளையும் தொடர ஊக்கத்தையும்,உற்சாகத்தையும் அளித்துள்ளீர்கள்.
அறிமுகப்படுத்தியுள்ள அனைவருமே அருமையானவர்கள். தாங்கள் சுவைத்த இனிய பதிவர்களை மற்றவர்களும் அறிய கொடுத்துள்ளமை அழகு.
புதிதாக வலையுலகிற்கு வருபவர்கள் தேர்ந்தெடுத்து படிக்க அருமையான பதிவுகளை அழகாக தொகுத்துள்ளீர்கள். இன்னும் பலபேர் பதிவுலகம் வர உங்களது இந்த தொகுப்பு உதவியாக இருக்கும்.
அறிமுகங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
October 22, 2009 7:13 PM//
நன்றி ராஜா. இடுகை எழுத வந்த கதையோடு என்னை கவர்ந்த பதிவர்களையும் எழுதலாமே என எண்ணியதன் விளைவுதான் இது. எனக்கு மிகவும் பிடித்த மிகப்பிரபல பதிவர்களை எழுதாமல் விட்டிருக்கிறேன், புதிதாய் எழுத வருபவர்களை அதிகம் சொல்லலாமே எனும் எண்ணத்தில்.
//நர்சிம் said...
மிக அதிக உழைப்பு தேவைப்பட்ட பதிவு என்று நினைக்கிறேன்.
நன்றாக எழுதி,அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.
நன்றி பிரபா.//
மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள். அதிக நேரம் ஆயிற்று என்றாலும், அன்பு உள்ளங்களை, கவர்ந்தவர்களைப் பற்றி என்பதால் இனிமையாகவே உணர்ந்தேன்.
//
ஊடகன் said...
நீங்கள் கூறிய சிலர் எனக்கும் பிடித்தவர்கள் தான்.....
//
நன்றி ஊடகன். இன்னும் சொல்லப்பட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
//
Mrs.Menagasathia said...
நல்ல தொகுப்பு!!
October 22, 2009 7:48
//
நன்றிங்க. இந்த வரிசையில் கலகலப்ரியா தவிர பெண்கள் யாருமில்லை. நிறைய படித்து அவர்களைப்பற்றியும் எழுத வேண்டும்.
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி் நண்பா.
நிறைய நேரத்தை விழுங்கியிருக்குமே நண்பரே இந்த இடுகை. ஒவ்வொருத்தரிடமும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை கொடுத்திருப்பது அருமை.
மீண்டும் நன்றி நண்பரே.
நீங்க நிறையப் படிக்கிறீங்கன்னு தெரியுது. நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டுமே நான் படித்துள்ளேன். பலவற்றைப் படித்ததில்லை. அந்த வகையில் பல வலைப்பூக்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! ஆனால், நான் ரசித்துப் படிக்கும் லதானந்த், பரிசல்காரன், பாமரன், தமயந்தியின் நிழல்வலை, ரவிபிரகாஷின் வலைப்பூக்களான என் டயரி மற்றும் உங்கள் ரசிகன், செல்வேந்திரனின் பக்கங்கள் ஆகியவை பற்றியெல்லாம் உங்கள் பதிவில் ஒன்றும் குறிப்பிடாதது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.
அருமையான ஆராய்ச்சி பணி தொடங்கியுள்ளீர்கள். பல பேருக்கு உதவப்போகும் பதிவு. இத்தோடு நிறுத்திவிடாமல் மாதாமாதம் குறைந்தது ஒருமுறையாவது பதிவர்கள் குறித்த அறிமுகப்பதிவு இடுங்கள்.
நல்ல பணி தொடரட்டும் நண்பரே...
பரபாகர், என்ன சொல்வது...
லிங்க் கொடுக்கவே 2 நாள் ஆகியிருக்குமே. இவர்களில் யாரையும் என்னாலும் ஒதுக்க முடியாது, மிகச்சிறந்த தொகுப்பு. இதுவரை வாசித்திராத ஒருசிலரையும் அறிமுகப்படுத்தியற்கு நன்றி!
//நாடோடி இலக்கியன் said...
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி் நண்பா.
நிறைய நேரத்தை விழுங்கியிருக்குமே நண்பரே இந்த இடுகை. ஒவ்வொருத்தரிடமும் உங்களுக்கு பிடித்த விஷயங்களை கொடுத்திருப்பது அருமை.
மீண்டும் நன்றி நண்பரே//
நன்றி நண்பா... நல்ல சில உள்ளங்களை எல்லோருக்கும் சொல்லலாம் என எண்ணியதில் நேரம் போனதே தெரியவில்லை. சந்தோஷமாய் உணர்ந்தேன்.
பிரபாகர்.
//
Kirubanandhini said...
நீங்க நிறையப் படிக்கிறீங்கன்னு தெரியுது. நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டுமே நான் படித்துள்ளேன். பலவற்றைப் படித்ததில்லை. அந்த வகையில் பல வலைப்பூக்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! ஆனால், நான் ரசித்துப் படிக்கும் லதானந்த், பரிசல்காரன், பாமரன், தமயந்தியின் நிழல்வலை, ரவிபிரகாஷின் வலைப்பூக்களான என் டயரி மற்றும் உங்கள் ரசிகன், செல்வேந்திரனின் பக்கங்கள் ஆகியவை பற்றியெல்லாம் உங்கள் பதிவில் ஒன்றும் குறிப்பிடாதது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது.
//
லதானந்த், பாமரன், தமயந்தியின் நிழல்வலை ஆகியவற்றை நான் அதிகம் வாசித்ததில்லை. பரிசல்காரன், செல்வேந்திரன் பற்றி முந்தைய இருக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அதிக சிரத்தை எடுத்துக்கொண்டது என்னைப்போல் அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை.
செல்வேந்திரன் எனக்கு மிக பிடித்தமானவர்களில் ஒருவர். இன்னும் சிலரை அடுத்து குறிப்பிட இடுக்கிறேன். ரவிபிரகாஷ் பற்றி பெரிய பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன்...
ரவிபிரகாஷின் ரசனைகளும் டைரியும், ... என. அன்புக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றிங்க...
//அருமையான ஆராய்ச்சி பணி தொடங்கியுள்ளீர்கள். பல பேருக்கு உதவப்போகும் பதிவு. இத்தோடு நிறுத்திவிடாமல் மாதாமாதம் குறைந்தது ஒருமுறையாவது பதிவர்கள் குறித்த அறிமுகப்பதிவு இடுங்கள்.
நல்ல பணி தொடரட்டும் நண்பரே...//
பாராட்டுக்கு நன்றி ராஜா. உங்களின் பாராட்டுகள் புதிய உத்வேகத்தை தருகிறது. கண்டிப்பாய் செய்கிறேன்...
//
பீர் | Peer said...
பரபாகர், என்ன சொல்வது...
லிங்க் கொடுக்கவே 2 நாள் ஆகியிருக்குமே. இவர்களில் யாரையும் என்னாலும் ஒதுக்க முடியாது, மிகச்சிறந்த தொகுப்பு. இதுவரை வாசித்திராத ஒருசிலரையும் அறிமுகப்படுத்தியற்கு நன்றி!
//
நன்றிங்க பீர். நேரம் எடுத்துகிட்டது உண்மைதான். சுகமான சுமை.
மிகவும் அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை..
நான் நிறைய மிஸ் பண்ணுறேன்னு நினைக்கிறேன்.. சில பேர் அறிமுகமில்லை.. பார்த்துக்கறேன்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ! பிரபாகர் அவர்களை விட்டு விட்டீர்களே ஐயா.. அவரும் அருமையான பதிவர்.. அவரைப் பத்தியும் எழுதுங்க.. சரியா?! பிடித்த பதிவரில் என்னுடைய பெயரையும் சேர்த்துக் கொண்டதுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் ..!
//கலகலப்ரியா said...
மிகவும் அருமையான ஆராய்ச்சிக் கட்டுரை.. //
நன்றி ப்ரியா...
எல்லோரையும் ஆழ்ந்து படித்துவருவதால் எழுதுதல் எளிதாயிற்று.
நம்மளையும் குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணாத்தே.....
(இங்கே சில சிக்கல் காரணமா சில நாட்களாய் பின்னூட்ட முடியவில்லை.)
//நையாண்டி நைனா said...
நம்மளையும் குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணாத்தே.....
(இங்கே சில சிக்கல் காரணமா சில நாட்களாய் பின்னூட்ட முடியவில்லை.)
//
நன்றி நைனா...
தாமதமான வருகை.... தொகுத்து அளித்தமைக்கு நன்றி!
// பழமைபேசி said...
தாமதமான வருகை.... தொகுத்து அளித்தமைக்கு நன்றி!
//
வருகைக்கு நன்றிங்க பழமைபேசி...
ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு! ;-)
என்னோட பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி :-)
மிகுந்த அன்பும் நன்றியும் ப்ரபா.நிறைய நண்பர்கள் எனக்கும் பிடித்தமானவர்கள்.
ஒரே பதிவுல எல்லாருடய பேரும் வந்துருச்சே!
ரொம்ப நன்றி தல!
//கிரி said...
ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு! ;-)
என்னோட பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி :-)
October 23, 2009 9:48 PM //
உங்களின் அன்புக்கு நன்றி கிரி.
//பா.ராஜாராம் said...
மிகுந்த அன்பும் நன்றியும் ப்ரபா.நிறைய நண்பர்கள் எனக்கும் பிடித்தமானவர்கள்.
//
நன்றிங்க. உங்க அன்புக்கும் வருகைக்கும்...
//வால்பையன் said...
ஒரே பதிவுல எல்லாருடய பேரும் வந்துருச்சே!
ரொம்ப நன்றி தல!
//
நன்றி அருண். சுருக்கமாத்தான் சொல்ல முடிஞ்சாச்சு. விரிவா ஒவ்வொருத்தரா சொல்லனும்னு ஆசை.
Post a Comment