தொண்ணூறாவது வருஷம், பி.எஸ்.சி ரெண்டாவது வருஷம் ஸ்டடி லீவ். ரூம்ல படிக்க முடியாதுன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.
ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை, இருந்தாலும் கடுமையான மின்வெட்டு. கடுப்பில வீட்டுல உக்காந்திருந்தேன்.
தம்பி, தங்கச்சி ஸ்கூலுக்கு அம்மா அப்பா வேலைக்கு போயாச்சி. போகும்போது அம்மா, 'பிரபு வீட்டில இருக்காத, போர் அடிக்கும், புக்க எடுத்துகிட்டு காட்டு பக்கம் போயிட்டு ரிலாக்ஸா படிச்சிட்டு வா' ன்னு சொல்லிட்டு போனாங்க.
ஏன் சொன்னாங்கன்னு கொஞ்ச நேரத்துல புரிய ஆரம்பிச்சிடுச்சி. அப்போ அதிகமா, ஏன் தெருவிலேயே எங்க வீட்டுல தான் போன் இருந்துச்சி. தகவல் சொல்றதுக்கும், ஆள கூப்பிட்டு வர்றதுக்கும் ரெண்டுபேர் எப்பவும் தேவைப்படும்னு அம்மா சொல்லிடிருப்பாங்க.
மணியடிக்க, ஓடிப்போய் எடுத்தேன். ஹலோ சொன்னவுடன், 'கொஞ்சம் ராஜாவா கூப்பிடறீங்களா?' ன்னு கேக்கவும், 'அப்படி யாரும் இல்லைங்களே?' ன்னு பதில் சொன்னேன். 'அப்படியே கட் பண்ணாம வெச்சிட்டு வெளிய போயி பாருங்களேன், ப்ளீஸ்...' னு பணிவா கேக்கவும்,
வெச்சிட்டு வெளிய தலைய நீட்டி பாக்கவும், தெரு முனையில டிராக்டற கழட்டிப்போட்டு ரிப்பேர் பாத்துகிட்டிருந்தாங்க.
என் தலைய பாத்தவுடனே ஒரு பொடியன், 'அண்ணா எனக்கு போனா? இதோ வர்றேன்னு வேகமா ஒடி வந்தான். 'உன் பேர் ராஜாவா' ன்னு கேக்க, தலையாட்டிட்டு செருப்ப கழட்டிட்டு நேரா உள்ள போனான்.
ஹால்ல இருந்தே போனை எடுத்து, 'சொல்லுங்க ஓனர், ம்... ஆயிட்டிருக்கு. மதியத்துக்குள்ள ஆயிடும். ஒரு டீ கூட வாங்கி தரல... கஞ்சனா இருப்பான் போலிருக்கு. ம்... சேரி. டேபிள் மேலேயே வெச்சிருக்கேன். ஆத்துருக்கு ரவிய அனுப்பிடுங்க. ம்...ம்.... கதிரேசு போன் பண்ணினாரு. ரெண்டு நாலாவும்னு சொல்லிட்டேன். அப்புறம் என் மேட்டர மறந்துடாதீங்க.... '
பத்து நிமிஷம் பேசிட்டு 'சரிங்க ஓனர் சொல்லிடறேன்' னு சொல்லிட்டு, 'அண்ணா ரொம்ப டேங்க்ஸ்... ஓனரும் சொல்ல சொன்னார்' னு சொல்லிட்டு கிளம்ப,
'தம்பி நீ யாரு, என் வீட்டு போன் நம்பர் எப்படி தெரியும், வெளிய பாத்தவுடன் உனக்குத்தான் போன் னு எப்படி கண்டுபிடிச்ச?'
'தினேஷ் வீட்டு டிராக்டர் ரிப்பேர் பாக்க வந்திருக்கேன், அவருகிட்ட கேட்டப்போ உங்க வீட்டு நம்பர கொடுத்தாரு. கடையில கிளிகிட்ட (இந்த பொடியனோட அசிஸ்டன்ட்) நம்பர கொடுத்து ஓனர் வந்த பேச சொல்லிட்டு வந்தேன். வர்ற நேரம், உங்க வீட்டு வாசலையே பாத்துகிட்டிடுந்தேன், வெளிய வந்தீங்க... அதான்'
'தினேஷ் வீட்டிலேயே போன் இருக்கே, நீ வேலை பாக்கற இடத்துக்கு அவன் வீடுதானே பக்கம், எங்க நம்பர ஏன் கொடுத்தான்?' னு கேக்க,
'அப்படியா, அவங்க வீட்டுல போனே இல்லன்னு சொல்லித்தானே உங்க நம்பர கொடுத்தாப்ல?, ம்ஹூம்... அப்படியா மேட்டரு, தாளிச்சிட வேண்டியதுதான்' னு சொல்லிட்டு, திரும்பவும் தேங்க்ஸ் சொல்லிட்டு பையன் போயிட்டான்.
தலையில சுர்ருன்னு ஏறுச்சி. அப்போ தினேஷ் பைக்ல வர நிப்பாட்டி, 'எப்பன்னா வந்தீங்க, நல்லாருக்கீங்களா' ன்னு கேக்க பதில் சொல்லிட்டு, பையன் வந்து போன் பண்ணிட்டு போன மேட்டர சொல்லி,
'உங்க வீட்டுல போன் ரிப்பேரா? இல்லன்னு சொன்னியாமே?' ன்னு கேக்க,
'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான்.
இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
மிச்சர்கடை
1 week ago
52 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
:) பிழைக்கத்தெரிஞ்சுருக்கு தினேஷுக்கு
//சின்ன அம்மிணி said...
:) பிழைக்கத்தெரிஞ்சுருக்கு தினேஷுக்கு
October 30, 2009 7:59 AM//
நன்றிங்க சின்ன அம்மணி.
அன்று நான் அடைந்த கோபம்... சாயங்காலம் அம்மா வரும்வரை கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.
உங்கள் எழுத்து என் பால்ய காலத்தை நினைவு படுத்தியது...
நண்பா! எங்கள் ஊரில் மொத்தம் சுமார் 200 வீடுகள் இருக்கு. எங்க ஊர்ல மொத்தம் மூன்று போன்கள். ஆனால் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் தான் பண்ணுவார்கள். நாங்களும் எல்லா வீட்டுக்கும் அழைப்பு வந்தா தெரியப் படுத்தனும்னு எங்க அப்பாவோட அன்பு கட்டளை. :-) இதை ஒரு சேவையாவே பண்ண சொன்னார். அது போல் நீங்களும் செய்திருப்பீர்கள் போலத் தெரிகிறது....
ஆனா, அந்த பன்னாடை பண்ணியது ரொம்ப அதிகம்....ஊரான் வீடு நெய்யே...என் பொண்டாட்டி கையேன்னானாம். ம்ம்ம்ம்ம்
//நண்பா! எங்கள் ஊரில் மொத்தம் சுமார் 200 வீடுகள் இருக்கு. எங்க ஊர்ல மொத்தம் மூன்று போன்கள். ஆனால் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் தான் பண்ணுவார்கள். நாங்களும் எல்லா வீட்டுக்கும் அழைப்பு வந்தா தெரியப் படுத்தனும்னு எங்க அப்பாவோட அன்பு கட்டளை//
நண்பா, நன்றி.
எங்கள் வீட்டிலும் இதே வேலையாய் ஒரு காலத்தில் முகம் சுழிக்காமல் செய்தார்கள். எந்நேரம் என்றாலும் சொல்லி... இல்லையென்றால் பரவாயில்லை. இருக்கும்போது...?
வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//படிச்சிட்டு சொல்றாங்க...//
ஆமாங்க...
//பழமைபேசி said...
//படிச்சிட்டு சொல்றாங்க...//
ஆமாங்க...
//
நன்றிங்க பழமைபேசி....
ஆமா.... அது என்ன 19 வருசத்துக்கு முன்னால கரண்டு போனதுக்கு இந்ந்ந்ந்ந்ந்ந்ந்த உள்குத்து...
ஏனப்பு... சிங்கப்பூர்ல இருக்கும் ஆட்டோ வராதுன்னு தெகிரியமோ...
பார்த்து சூதானமா இருங்கப்பு...
நல்லாருக்கு கதை
தாய் சொல்லத் தட்டாம காட்டுப்பக்கம் போயிருந்தா, ஏதோ கோயிந்தன் ஆவியப் பார்த்திருக்கலாம், அது பத்தி இன்னொரு இடுகை கூட போட்டிருக்கலாம்
அத விட்டுப்போட்டு தாய் சொல்லைத் தட்டியதுக்கான தண்டனை மகனே இது...
அட நல்லாத்தான் ஆப்பு வச்சிருக்காரு தினேசு..
//வானம்பாடிகள் said...
நல்லாருக்கு கதை//
ஏண்ணே.... நாங்க மட்டும் நல்லா இல்லைனா சொன்னோம்!!!???
இஃகிஃகி
யதார்த்தமான உண்மை கதை......... அனைவருக்கும் நடந்திரிக்கும்.........
வாழ்த்துக்கள்..........
//
கதிர் - ஈரோடு said...
ஆமா.... அது என்ன 19 வருசத்துக்கு முன்னால கரண்டு போனதுக்கு இந்ந்ந்ந்ந்ந்ந்ந்த உள்குத்து...
ஏனப்பு... சிங்கப்பூர்ல இருக்கும் ஆட்டோ வராதுன்னு தெகிரியமோ...
பார்த்து சூதானமா இருங்கப்பு...
//
நன்றி கதிர். கரண்ட் கட்டுன்னா சாவற வரைக்கும் நினைவில இருக்கிற மாதிரி செஞ்சதால வந்த வினை..
//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு கதை
//
இது நூறு சதம் நடந்தது... நன்றிங்கய்யா..
//
கதிர் - ஈரோடு said...
தாய் சொல்லத் தட்டாம காட்டுப்பக்கம் போயிருந்தா, ஏதோ கோயிந்தன் ஆவியப் பார்த்திருக்கலாம், அது பத்தி இன்னொரு இடுகை கூட போட்டிருக்கலாம்
அத விட்டுப்போட்டு தாய் சொல்லைத் தட்டியதுக்கான தண்டனை மகனே இது...
அட நல்லாத்தான் ஆப்பு வச்சிருக்காரு தினேசு..
//
ம்... அதுமாதிரி நடந்து இதுமாதிரி ஒரு இடுகை போடனும்னு விதி கதிர்....
உங்களுக்காக ஆவியப்பத்தி இன்னொரு இடுகை, வெகு விரைவில்.
//கதிர் - ஈரோடு said...
//வானம்பாடிகள் said...
நல்லாருக்கு கதை//
ஏண்ணே.... நாங்க மட்டும் நல்லா இல்லைனா சொன்னோம்!!!???
இஃகிஃகி
//
அய்யா 'கதை' ன்னு சொல்லியிருக்காரு கதிர்... அதான் அவரு சொன்னதுல ஸ்பெஷல்.
//ஊடகன் said...
யதார்த்தமான உண்மை கதை......... அனைவருக்கும் நடந்திரிக்கும்.........
வாழ்த்துக்கள்..........
//
நன்றிங்க ஊடகன்... உங்களின் தொடர்ந்த ஆதரவு மற்றும் அன்பிற்கு...
ஒண்ணே ஒண்ணு கேக்குறேன் அண்ணா
ஸ்டடி லீவுன்னா ஸ்டடிக்கு லீவா இல்ல ஸ்டடிக்கு லீவா? (லொள்)
ஹ ஹ ஹா
//பிரியமுடன்...வசந்த் said...
ஒண்ணே ஒண்ணு கேக்குறேன் அண்ணா
ஸ்டடி லீவுன்னா ஸ்டடிக்கு லீவா இல்ல ஸ்டடிக்கு லீவா? (லொள்)
ஹ ஹ ஹா//
சரிதான் வசந்த்... நல்ல ப்ளோ ல தான் இருக்கீங்க போலிருக்கு...
பிரபாகர், உண்மையிலேயே இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனா.. இந்தப் பக்கத்து வீட்டுல போன் பேசறதுல இருக்கற தொல்லை இருக்கே :)
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், உண்மையிலேயே இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனா.. இந்தப் பக்கத்து வீட்டுல போன் பேசறதுல இருக்கற தொல்லை இருக்கே :)
//
நன்றிங்க செந்தில். நீங்கள் சொல்வது சரி. பஸ்ஸில பேசறதும் கொடுமைங்க. அத வெச்சும் ஒரு இடுகை எழுதலாம்னு இருக்கேன்.
விந்தையான மனிதர்கள்!
அவர்களுடன் தான் வாழ வேண்டி உள்ளது.
ம்ம்ம் நல்லாயிருக்கு,, பகிர்வும் அருமை
//கோமதி அரசு said...
விந்தையான மனிதர்கள்!
அவர்களுடன் தான் வாழ வேண்டி உள்ளது.
//
நன்றிங்க. அன்பான வரவிற்கும், கருத்துக்கும்.
//
ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நல்லாயிருக்கு,, பகிர்வும் அருமை
//
வரவிற்கும், பகிர்வுக்கும் நன்றிங்க...
ஹஹஹஹஹஹ...சூப்பர்... சார் இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. உங்களுக்கு போன் நமக்கு டிவிடி பிளேயர்... அப்படியே இதே மாதிரி இருக்கு... இதே மாதிரி ஊருக்கு ஊரு இருப்பாய்ங்க போல...
//ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை,//
நீங்க குடுத்துவச்ச ஆளுதான். தப்பிச்சிட்டீங்க.
//'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான். //
அடங்கொக்க மக்கா....என்னா வில்லத்தனம்.
இயல்பான எழுத்துடன் உங்களின் இடுகை நல்ல அனுபவம்.
//நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹஹஹஹ...சூப்பர்... சார் இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் உண்டு. உங்களுக்கு போன் நமக்கு டிவிடி பிளேயர்... அப்படியே இதே மாதிரி இருக்கு... இதே மாதிரி ஊருக்கு ஊரு இருப்பாய்ங்க போல...
//
நன்றி பிரதாப். ஆமா, டி.வி.டி மேட்டர் வேற இருக்கில்ல?
//
க.பாலாசி said...
//ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை,//
நீங்க குடுத்துவச்ச ஆளுதான். தப்பிச்சிட்டீங்க.
//'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான். //
அடங்கொக்க மக்கா....என்னா வில்லத்தனம்.
இயல்பான எழுத்துடன் உங்களின் இடுகை நல்ல அனுபவம்.
//
நன்றி பாலாசி. உங்களின் அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்...
இதத்தான் ஊரான் சொத்துல ஊரை ஏமாத்துரதுனு சொல்லுவாங்க தல.....
//
புலவன் புலிகேசி said...
இதத்தான் ஊரான் சொத்துல ஊரை ஏமாத்துரதுனு சொல்லுவாங்க தல.....
//
நன்றி புலிகேசி... தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.
Ithaambaaa logam..
//கலகலப்ரியா said...
Ithaambaaa logam..//
சரியாச் சொன்னீங்க ப்ரியா... வருகைக்கு நன்றி.
நல்லவனாக இருக்க யாரிடமும் ஏமாறலாம்.
நல்ல நடை பிரபாகர்.
நிறைய எழுதுங்க.
//
காமராஜ் said...
நல்லவனாக இருக்க யாரிடமும் ஏமாறலாம்.
//
நன்றி காமராஜ். நல்லவனாயிருக்க சில இடங்களில்லாவது ஏமாறலாம்.... உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//
தராசு said...
நல்ல நடை பிரபாகர்.
நிறைய எழுதுங்க.
//
நன்றிங்கண்ணே... உங்க அன்பும் ஆதரவும் இருக்கிற வரைக்கும் கண்டிப்பா!
நல்லயிருக்கு.... இப்படியும் நடக்குமா?
ஐய்யோ பாவம்.வேறேன்ன சொல்ல :-)
//
சி. கருணாகரசு said...
நல்லயிருக்கு.... இப்படியும் நடக்குமா?
//
நடந்துங்க... உங்களை இப்போதுதான் தொடர ஆரம்பித்திருக்கிறேன்.... நன்றி நண்பா... நான் படித்ததெல்லாம் பெரம்பலூரில்தான்.
//
பின்னோக்கி said...
ஐய்யோ பாவம்.வேறேன்ன சொல்ல :-)
//
இப்படித்தாங்க பல பேர் இருக்காங்க... ரொம்ப நன்றிங்க, உங்க வருகைக்கு.
அனுபவம் யதார்த்தமா இருக்கு பிரபாகர்.நல்லா எழுதியிருக்கீங்க.
(உங்க பெயரை எழுதும்போது மனசு வலிச்சு ரத்தம் வருது.)
//ஹேமா said...
அனுபவம் யதார்த்தமா இருக்கு பிரபாகர்.நல்லா எழுதியிருக்கீங்க.
(உங்க பெயரை எழுதும்போது மனசு வலிச்சு ரத்தம் வருது.)
//
எனக்குந்தாங்க. என்னை எந்த நாட்டவரோடு அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதும், அவரின் பெயரா என கேட்காமல் இருந்ததில்லை... நன்றிங்க ஹேமா, உங்களின் அன்புக்கு. தமிழுக்கோர் அடையாளம் நம்மை தவிக்கவிட்டு...
//வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான்.// ஹா ஹா பிழைக்க தெரிஞ்சப் புள்ள...
//Mrs.Menagasathia said...
//வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' ன்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பிட்டு போயிட்டான்.// ஹா ஹா பிழைக்க தெரிஞ்சப் புள்ள...//
உங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க...
//'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' //
ஹி ஹி ஹி உஷார் தான்..
நீங்க ரொம்ப நல்லவருன்னு உங்க ஊர்ல எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு தல.... :))
//
கிரி said...
//'வேலை செஞ்சிட்டுத்தான் இருக்கு. யாருக்கும் நம்பர் தர்றதில்ல, எதுக்கு தொந்தரவுன்னு' //
ஹி ஹி ஹி உஷார் தான்..
//
இந்த மாதிரி இன்னும் தொடருதுங்க வெவ்வேற ரூபத்துல...
//
துபாய் ராஜா said...
நீங்க ரொம்ப நல்லவருன்னு உங்க ஊர்ல எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு தல.... :))//
நன்றி ராஜா, கிராமங்களில் வெள்ளந்தியானவர்களும், மிக விவரமானவர்களும் மிக அதிகம்.
//ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை, இருந்தாலும் கடுமையான மின்வெட்டு. கடுப்பில வீட்டுல உக்காந்திருந்தேன்.//
:-))
//பா.ராஜாராம் said...
//ஆற்காடு வீராசாமி அப்போ மின் அமைச்சரால்லாம் இல்லை, இருந்தாலும் கடுமையான மின்வெட்டு. கடுப்பில வீட்டுல உக்காந்திருந்தேன்.//
:-))//
வருகைக்கு நன்றிங்க...
உங்கள் வாழ்க்கை குறிப்புகளை சேர்த்துவைத்து புத்தகமாக போடலாம் போலருக்கே... சுவாரஸ்யங்கள்.
//பீர் | Peer said...
உங்கள் வாழ்க்கை குறிப்புகளை சேர்த்துவைத்து புத்தகமாக போடலாம் போலருக்கே... சுவாரஸ்யங்கள்.
//
நன்றிங்க பீர்... உங்களின் அன்பிற்கும், கருத்துக்கும்.
Post a Comment