நாயோட பேரு பரி...

|

தலைப்ப பாத்துட்டு, எனக்கு நல்லா தமிழ் தெரியும், நாய் பேரு குதிரன்னு தப்பா நினைச்சிடாதீங்க, உண்மையிலேயே எங்க வீட்டில இருந்த நாய் பேரு பரிதான். அப்படி வெச்ச புண்ணியவான் நான் தான். எப்படின்னா கொஞ்சம் கொசுவர்த்திய சுத்தனும், அதாங்க ஃப்ளாஷ்பேக்...

தம்பி படிச்சு முடிச்சுட்டு வீட்டில கோழி வளத்துகிட்டு இருந்தான். அப்பா அவனுக்கு ஃபுல் சப்போர்ட். எனக்கு சுத்தமா புடிக்கல, திண்ணையில தனியா இருந்தாலும் கண்ட இடத்துல அசிங்கம் பண்ணி வெச்சிருக்கும். பக்கத்துல நெல்லுல மேயுதுன்னு வேற திட்டிட்டு இருந்தாங்க.

வளக்காதடான்னு சொன்னா கேக்கறதே இல்ல. அப்போதான் ஆண்டவன் புண்ணியத்துல ஒரு நல்ல காரியம் நடந்தது. தினமும் ஒன்னு ரெண்டுன்னு கோழி, குஞ்சுன்னு காணாம போயிட்டு இருந்துச்சி.

ஒரு கட்டத்துல என்னையே சந்தேகப்பட்டான்னா பாத்துக்கோங்களேன். ரொம்ப சி.பி.ஐ. வேலை பாத்ததுக்கு அப்புறம் தெரிஞ்சது, திருடறது ஒரு நாயின்னு. ஆனாலும் அத கையும் களவுமா பிடிக்க முடியல.

ஒருநாள் வசமா மாட்டியும் எஸ்கேப் ஆயிடுச்சி. தம்பி அரசருங்க அந்த காலத்துல பொற்காசு தர்ற மாதிரி 'அந்த நாய உயிரோடவோ அல்லது அடிச்சு கொண்டு வந்தாலோ ஒரு குவார்ட்டர்' னு அறிவிச்சான்.

அதுக்கு நல்ல எஃபக்ட் இருந்துச்சி. ரெண்டே நாள்ல வேலு அத துரத்திட்டு போய் சும்மா ஒரு கல்ல உடவும் மண்டையில பட்டு பொசுக்குனு போயிடுச்சி.

உடனே தகவல் சொல்லி குவாட்டருக்கு மேட்டர் போட்டுட்டு அவன் அப்பீட் ஆனதும் ஒரு திருப்பமே நடந்துச்சி.

தம்பி அந்த பக்கமா வைக்கோல் போரு இருக்கிற வழியா போயிருக்கான், அப்போ கல்லு சந்துல நாலு நாய் குட்டிங்க கத்திட்டு இருக்கவும், பக்கத்துல கேக்க,

'யாரோ படுபாவி அந்த நாய அடிச்சி கொன்னு புட்டானான், பால் இல்லாம குட்டிங்கல்லாம் தவிக்குது' ன்னு சொல்லவும் தம்பி அப்படியே மெல்ட் ஆயிட்டான்.

உடனே அந்த நாலு குட்டியையும் எடுத்து வந்து மூனு ஆம்பள குட்டியயும் கேக்கறவங்களுக்கு கொடுத்துட்டு கடைசியா இருந்த பெண் குட்டியை மட்டும் வெச்சுகிட்டான்.

காலேஜ் விட்டு வந்து கதைய கேட்டுட்டு பேரு இன்னும் வெக்கலன்னு தெரிஞ்சிகிட்டு அந்த நாய்குட்டிக்கு 'பரி' ன்னு பேரு வெச்சேன்.

'என்னது பரின்னு பேரு?' ன்னு எல்லாரும் எளக்காரமா சிரிச்சாங்க. 'அவன் செஞ்ச தப்புக்கு பரிகாரமா இந்த நாய வளக்கறதால இதுக்கு பேரு பரிகாரத்துலருந்து சுருக்கமா பரி' ன்னு சொன்னேன். எல்லாரும் ஒத்துகிட்டாங்க. பரின்னே எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சோம்.

அம்மா 'பிரபுக்கு நாயின்னா புடிக்கவே புடிக்காது, ஆனா பரி மேல ரொம்ப பாசமா இருக்கான்' னு அடிக்கடி சொல்லிட்டிருப்பாங்க...

ஆனா இத படிக்கற வரைக்கும் யாருக்கும் தெரியாது அதுக்கு இன்னொரு காரணமும் இருக்குன்னு. அது எனக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு பேரு பரிமளா, அத சுருக்கி வெச்சி செல்லமா வெச்சேன்னு.

பின்குறிப்பு:-

சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

அட்ர்ர்ர்ரா.... சக்கை..

அருமையான எழுத்து நடை பிரபா

அதுதானே பார்த்தேன் நம்ம ஊரு பக்கம் நாயிக்கு அதிகமா மணினுதானே பேரு வைப்பாங்க... 'பரி'னு ஒரு பேரானு...


சரி...சரி... நாய்க்கு 'பரி'னு பேரு வச்சீங்களே...சோறு வச்சீங்களா.

நல்லவேல ஃபிரியா கிடைச்சதாலே 'பிரி' வைக்காம போனீங்களே... பக்கத்து தெருவிலேயாவது பிரியானு ஒரு பொண்ணு இல்லாமையா போயிருக்கும்

vasu balaji said...

/CBI வேல பார்த்தா?

அதான் நரிய உட்டுபோட்டு நாய புடிச்சதோ?/

அந்தம்முனி பதிலுக்கு சொறின்னு பூனை வளர்க்கலையோ:))

அங்கங்க கவிதைல கலக்கினதில இங்க மீள் பதிவு. ஆனாலும் படிக்க வாய்ப்பு. ஜமாய்ங்க பிரபாகர்.

vasu balaji said...

வரிசையில் முந்தியமைக்கு கதிரை செல்லமாகக் கண்டிக்கிறேன்

பிரபாகர் said...

//நல்லவேல ஃபிரியா கிடைச்சதாலே 'பிரி' வைக்காம போனீங்களே... பக்கத்து தெருவிலேயாவது பிரியானு ஒரு பொண்ணு இல்லாமையா போயிருக்கும்

October 13, 2009 11:53 AM//

புது புதுசா யோசிச்சி ஆள கவுத்துறீங்க்களே!... நன்றி கதிர்.

பிரபாகர் said...

//அந்தம்முனி பதிலுக்கு சொறின்னு பூனை வளர்க்கலையோ:))
//

அய்யா, காலை வணக்கம். அவங்கல்லாம் படிக்க மாட்டாங்கங்க்கற தைரியத்துல எழுதறது. சொல்லி டரியலாக்காதீங்க.. இந்த விஷயம் அம்மணிக்கு தெரிஞ்சாலும் பிரா ன்னு பூனை வளக்கலாம்... ஆனா நல்லாருக்கும்ங்கறீங்க?....

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
வரிசையில் முந்தியமைக்கு கதிரை செல்லமாகக் கண்டிக்கிறேன்//

ஆமாங்கையா, எங்க பாத்தாலும் நமக்கு முன்னால பின்னூட்டம் போட்டுட்டாரு...

ஷங்கி said...

வாராய் நீ வாராய் அப்பிடீன்னு மெள்ள கூட்டிட்டுப் போய் கடைசில வைச்சாரய்யா பஞ்ச்!
நல்லாருக்குங்கோ!

பிரபாகர் said...

//வாராய் நீ வாராய் அப்பிடீன்னு மெள்ள கூட்டிட்டுப் போய் கடைசில வைச்சாரய்யா பஞ்ச்!
நல்லாருக்குங்கோ!

October 13, 2009 12//

நன்றி ஷங்கி.. உங்களின் தொடந்த தொடர்தலுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கிறுக்கல்கள்/Scribbles said...

சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது பதிவுகள். சொல்லாற்றல் வளர்ந்து பெரிய சிந்தனையாளனாக வளர வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//கிறுக்கல்கள் said...
சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது பதிவுகள். சொல்லாற்றல் வளர்ந்து பெரிய சிந்தனையாளனாக வளர வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துக்கிறுக்கல்களுக்கு அன்பு நன்றி... அதற்கெல்லாம் தகுதி இருக்கிறதா என்பது ஓர் பெரிய கேள்வி. என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை...

தராசு said...

கடைசியில கவுத்துட்டீங்களே தல,

அருமை.

பிரபாகர் said...

//
தராசு said...
கடைசியில கவுத்துட்டீங்களே தல,

அருமை.//

தராசு... உங்களின் வருகை மற்றும் முருகலிக்க வைத்த பின்னூட்டத்துக்கு நன்றி.

துபாய் ராஜா said...

//'என்னது பரின்னு பேரு?' ன்னு எல்லாரும் எளக்காரமா சிரிச்சாங்க. 'அவன் செஞ்ச தப்புக்கு பரிகாரமா இந்த நாய வளக்கறதால இதுக்கு பேரு பரிகாரத்துலருந்து சுருக்கமா பரி' ன்னு சொன்னேன். எல்லாரும் ஒத்துகிட்டாங்க. பரின்னே எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சோம்.//

//ஆனா இத படிக்கற வரைக்கும் யாருக்கும் தெரியாது அதுக்கு இன்னொரு காரணமும் இருக்குன்னு. அது எனக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு பேரு பரிமளா, அத சுருக்கி வெச்சி செல்லமா வெச்சேன்னு.//

'அட'ன்னு யோசிக்க வச்சு
'ஆஹா'ன்னு சொல்ல
வச்சுட்டிங்க தல.... :))

பிரபாகர் said...

//'அட'ன்னு யோசிக்க வச்சு
'ஆஹா'ன்னு சொல்ல
வச்சுட்டிங்க தல.... :))//

நன்றி ராஜா. உங்களின் அன்பான விமர்சனத்திற்கு...

-L-L-D-a-s-u said...

Nice . ;) ;) ;) ;)

பிரபாகர் said...

//L-L-D-a-s-u said...
Nice . ;) ;) ;) ;)//

வாங்க தாஸு... முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

நாடோடி இலக்கியன் said...

//நல்லவேல ஃபிரியா கிடைச்சதாலே 'பிரி' வைக்காம போனீங்களே... பக்கத்து தெருவிலேயாவது பிரியானு ஒரு பொண்ணு இல்லாமையா போயிருக்கும்
//
ஹா ஹா நானும் இதையே ரிப்பீட்டிக்கிறேன்.

பிரபாகர் said...

////நல்லவேல ஃபிரியா கிடைச்சதாலே 'பிரி' வைக்காம போனீங்களே... பக்கத்து தெருவிலேயாவது பிரியானு ஒரு பொண்ணு இல்லாமையா போயிருக்கும்
//
ஹா ஹா நானும் இதையே ரிப்பீட்டிக்கிறேன்//

நன்றி நண்பா.... உங்களின் முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு... பிழை இருப்பின் உங்களின் கருத்துக்களை என்னை செம்மைப்படுத்த சொல்லுங்கள்....

நாகராஜன் said...

ஹா ஹா ஹா ஹா... மொதல்லயே ரசிச்சு படிச்ச இன்னுமொரு இடுகைங்க பிரபாகர்...
நரியை பரியாக்கின மாதிரி... நீங்க நாயை பரியாக்கிட்டீங்க... கலக்குங்க நீங்க..

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
ஹா ஹா ஹா ஹா... மொதல்லயே ரசிச்சு படிச்ச இன்னுமொரு இடுகைங்க பிரபாகர்...
நரியை பரியாக்கின மாதிரி... நீங்க நாயை பரியாக்கிட்டீங்க... கலக்குங்க நீங்க..

October 13, 2009 10:09 PM//

நன்றி ராசுக்குட்டி... உங்களின் பின்னூட்டம் இடுகையைவிட அழகாய் இருக்கிறது...

பழமைபேசி said...

//அதுதானே பார்த்தேன் நம்ம ஊரு பக்கம் நாயிக்கு அதிகமா மணினுதானே பேரு வைப்பாங்க...//

//படிச்சிட்டு சொல்றாங்க...//

படிச்சிட்டு அழுவுறான் ஒருத்தன்! :-0)

பிரபாகர் said...

//பழமைபேசி said...
//அதுதானே பார்த்தேன் நம்ம ஊரு பக்கம் நாயிக்கு அதிகமா மணினுதானே பேரு வைப்பாங்க...//

//படிச்சிட்டு சொல்றாங்க...//

படிச்சிட்டு அழுவுறான் ஒருத்தன்! :-0)
October 14, 2009 4:40 AM //

அதானே, எப்படி பொத்தாம் போக்கில் அப்படி சொல்லலாம்.. அந்த பேரு உள்ளவங்க சார்பா கண்டிக்கிறேன்...

ஷங்கி said...

தீபாவளி வாழ்த்துகள் பிரபாகர்!

ungalrasigan.blogspot.com said...

‘பரி’தாபமா இருக்கு நாய்க்குட்டிங்களோட நிலைமை;
‘பரி’காசமா இருக்குது மத்தவங்களுக்கு - நாய்க்குட்டிக்கு நீங்க வெச்ச பேரு;
‘பரி’காரமா அந்தப் பேரை வெச்சதாத்தான் நீங்க சொல்றீங்க;
‘பரி’வாரமா பின்னூட்டங்கள் வந்து விழுந்ததுக்குக் காரணம், கடைசியில நீங்க சொன்ன உண்மையான காரணம்!
‘பரி’ச்சு... ஸாரி, பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க!

பிரபாகர் said...

//‘பரி’தாபமா இருக்கு நாய்க்குட்டிங்களோட நிலைமை;
‘பரி’காசமா இருக்குது மத்தவங்களுக்கு - நாய்க்குட்டிக்கு நீங்க வெச்ச பேரு;
‘பரி’காரமா அந்தப் பேரை வெச்சதாத்தான் நீங்க சொல்றீங்க;
‘பரி’வாரமா பின்னூட்டங்கள் வந்து விழுந்ததுக்குக் காரணம், கடைசியில நீங்க சொன்ன உண்மையான காரணம்!
‘பரி’ச்சு... ஸாரி, பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க!

October 19, 2009 10:36 PM//

ஆஹா, பின்னூட்டத்துல நீங்களும்தான்...

ஜோதிஜி said...

காதல் வருவதற்கான உண்மை காரணமும் தெரிவதில்லை. எந்த வயதும் என்று இன்று வரை புரிவதில்லை. மரத்தின் மேல் இரு பெயர்களை ஆணியால் கிழித்து வைத்துக்கொண்டு வெறித்தப் பார்த்த கதை போல் இந்தக்கதை பரி. நல்லா சிரி?

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB