அருமை நண்பர் கிருஷ்ணாவும்
அழகு பெண்ணை பெற்றிட்டு
பொறுப்பான அப்பாவாய்
புது உலகில் நுழைந்துவிட
உரிமையாய் பழகுகின்ற
உயிருறைந்த நண்பரெலாம்
பூரிப்பில் மகிழ்ந்து
புது வரவை வரவேற்று
நிலையில்லா செல்வமது
நிறைய சேர்ந்திடினும்
விலைமதிப்பு இல்லாத
வரும் குழந்தை செல்வத்தினால்
குழலினிது குறளதனை
கண்ணுற்று கேட்டாலும்
மழலை மூலம் உணர்தலில்தான்
உண்மை சொர்க்கம் உணர்ந்திவோம்
பழகுதற்கு இனிய எங்கள்
பாசமுள்ள லக்கி நீரும்
உலகிலுள்ள பேறு யாவும்
ஒவ்வொன்றாய் பெற்றிட்டு
வலையுலகில் கருத்துகளை
வழக்கம்போல் தெளித்திட்டு
நிலை மாறா நிலையுடனே
உயர்ந்து வாழ வாழ்த்துகிறோம்.
பிரபாகர்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
1 day ago
1 Comentário:
நன்றி தோழர் :-)
உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டியில் இணைக்கவும்.
Post a Comment