அம்மாவின் கைபேசி - விமர்சனம்...

|

எல்லோரும் துப்பாக்கியில் முனைப்பாயிருக்க, ஒரு மாறுதலுக்காய் கைபேசினேன்... அதீத பொறுமையும், மன உறுதியும் ஆண்டவன் நமக்கும் கொடுத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள ஏதுவாய் இருந்தது..

நாம் இன்னமும் அறுபது காலக் கட்டங்களில் இருப்பதாய் இயக்குனர் நினைத்திருப்பார் போலிருக்கிறது, சொல்ல வந்த விஷயத்தை நீ...ட்டி முழக்குகிறார்...

அடிக்கடி கோழியை, மாட்டினைக் காட்டுவது என தனக்கே உரித்தான தனித்தன்மை என நினைத்துக் கொள்ளுவார் போலிருக்கிறது. நிறைய இடங்களில் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது...

’அம்மாவின் கைப்பேசி’ எனும் பெயரை வைத்து நீங்கள் என்னவெல்லாமோ கற்பனை செய்து வாருங்கள், அதையெல்லாம் இல்லாமல் எடுத்துக்காட்டுகிறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருப்பார் போலிருக்கிறது, கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை.

அவரது கேரக்டருக்கு மெனக்கெட்டு செய்திருக்கும் எல்லா காட்சிகளிலும் எண்பது சதம் சொதப்பலாய்த்தான் இருக்கிறது. படத்தினைப் பார்த்து நாம் அந்த காட்சியில் இயல்பாய் இணைய வேண்டும். இங்கோ ரொம்பவும் படுத்துகிறார்.

இயல்பாய் காட்டுகிறேன் எனச் சொல்லி நிறைய காட்சிகளால் நம்மை இம்சித்திருக்கிறார். ஆரம்பக்காட்சிகளாய் வரும் ஆட்டம் போடும் காட்சிகள், காதல் காட்சிகள், ஜவ்விழுவையாய் பணத்தை எடுத்துக்கொண்டு அலையும் காட்சிகள் என நிறைய சொல்லலாம்.

சார், ஐயா பற்றிய விளக்கங்கள், அழகம்பெருமாள் நடிப்பு, இனியாவின் இயல்பான நடிப்பு, வில்லன் கதாபாத்திரத்தில் வரும் டிரைவர், கோவில் சம்மந்தமான காட்சிகள் என நிறைவாகவும் விஷயங்கள் இருக்கின்றன, இருந்தாலும் இழுவையான கதையோட்டத்தில் இவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய்...

சாந்தனுவிற்கு நடிப்பு சுத்தமாய் வரவில்லை பாக்கியராஜுக்கு நடனம் போல. பாவம், நிறைய முயற்சி செய்திருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

நிறைய எழுதலாம், வேண்டாம்... அவர் நம்மைப் படுத்தியதைப் போல உங்களை ஏன் நான்?...

அளவிற்கு மிஞ்சினால் என்பதற்கு அம்மாவின் கைபேசி ஒரு நல்ல உதாரணம்...

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க வேண்டாம் என்று சொல்லிட்டீங்க... நல்லது... விரைவில் தொலைக்காட்சியில் வந்து விடும்... நன்றி...

settaikkaran said...

எச்சரிக்கைக்கு நன்றி! அரசல்புரசலாகக் கேள்விப்பட்டது உங்கள் விமர்சனத்தால் ஊர்ஜிதமாகி விட்டது. மீ தி எஸ்கேப்..!

settaikkaran said...

//திண்டுக்கல் தனபாலன்

விரைவில் தொலைக்காட்சியில் வந்து விடும்... நன்றி...//

தனபாலன் சார்! நீங்க எவ்வளவு நல்லவர், இப்படியெல்லாம் பயமுறுத்தலாமா? :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)

Dino LA said...

அருமை

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB