வாய்ச்சொல்லில் வீரரடி...

|

பொய் சொல்லி புரளி பேசி
புனைவுகளை வினவச் செய்து
மெய் வந்து பொய் போக
பொய்யேதான் மெய்யெனவே
பிசுபிசித்து பேசிடுவோம்...

செய்வதை விட்டுவிட்டு
சினையாடு சிரைத்தலாய்
பொய்யது புடம்போட்டு
போவோரை வருவோரை
புறம்பேசி மகிழ்ந்து

குற்றம் குறையதனை
குட்டிடவே மற்றவரை
குறைகூறி குற்றமதை
குழிதோண்டி புதைத்திட்டு
கூப்பாடும் போட்டிடுவோம்...

வெற்றியது எங்களுக்கு
வெறும்பேச்சு பேசிட்டு
பெருமையாய் கண்ணாடி
பிரதிக்கும் பிம்பம் பார்த்து
மறை கழன்ற மதியுடனே
மன்னித்தோம் சொல்லிடுவோம்...

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. புனைவு தானே இது?..

நல்லாத்தான் புனஞ்சிருக்கீங்க?..
யாரு அந்த பீஸு?...

settaikkaran said...

களவும் கத்து மற என்று பழமொழியைத் திரித்துச் சொல்வார்கள். உண்மையில் அது "களவும் கத்து(ம்) மற" என்பதாகும். அதாவது, திருட்டையும் பொய்யையும் மற என்பதுதான் பொருளாம்.

அப்படி அந்தப் பழமொழியைச் சரியாகப் புரிந்து கடைபிடிப்பவர்களுக்கு இறைவன் எப்போதும் உறுதுணையாய் இருப்பான் நண்பரே!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB