சேற்றில் கல்...

|

அது ஒரு அழகிய ஆற்றங்கரை. ஆற்றினில் கரை புரண்டு வெள்ளம் கருமை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றுக்கு செல்லும் அந்த ஒரு பாதையின் இரு மருங்கிலும் பசுமையாய் கமுகு, மா, வாழை, பலா என பல்வகையான மரங்கள் கனிகளை சொரிந்த வண்ணம் செழுமையாய் இருந்தன. சந்தோஷமாய் துள்ளிக் குதித்தோடும் மான்கள், அங்கிங்கும் ஓடியாடும் வெண்ணிற முயல்கள், மரங்களிடளையே பழங்களை உதிர்த்து ஆடி ஓடி தாவி விளையாடும் வானரங்கள், மலர்ந்திருக்கும் பூக்கள், அவைகளில் தேனுண்ண ரீங்காரமிடும் வண்டுகள்...

கரு மேகங்கள் போன்று திரண்டிருந்த அந்த யானைக் கூட்டம் ஆற்றங்கரையில் அடந்திருந்த சோலையில் கனி வகைகளையெல்லாம் பசியாறிய பின் ஆற்று வெள்ளத்தில் நீராடி, இதோ இப்போதுதான் ஆற்றினை விடுத்து வரிசையாய் தமது இடத்துக்கு கிளம்பத்தொடங்கின.

செல்லும் வழியில் இருந்த ஒரு சகதி நிரம்பிய குட்டையில் புரண்டு விளையாடிய கூர்மங்கள் திடீரென குதூகலித்து யானைகள் வரும் வழியில் ஓடிவர ஆரம்பித்தன. யானைகள் சட்டென விலகி அவைகள்  செல்லும் வரை பொறுமையாய் காத்திருக்க, அவைகளுக்கெல்லாம் அதீத மகிழ்ச்சி அவ்வளவு பெரிய யானைகளுக்கே தங்களைக் கண்டால் பயம் என.

ஆனால் அவைகளைத்தவிர அங்கிருந்த யாவற்றுக்கும் தெரியும் ஏன் ஒதுங்கி நின்றன என.

15 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

Me the First....

sathishsangkavi.blogspot.com said...

வாங்க பங்காளி...

ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணம்...

பிரபாகர் said...

//சங்கவி said...
Me the First....

September 23, 2010 2:57 PM


சங்கவி said...
வாங்க பங்காளி...

ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணம்...
//

வணக்கம் பங்காளி. கொஞ்சம் வேலையில பிஸி... மத்தபடி உங்களுடைய இடுகைகள் எல்லாத்தையும் படிச்சிகிட்டுதான் இருக்கேன்.

Paleo God said...

H1n1 க்கெல்லாம் தடுப்பூசிதான் பிரபா பெஸ்ட். :)

ஈரோடு கதிர் said...

பிரபா...

ஆமை சேத்துல விளையாடுமா?

ஆமை போகும் போது யானை ஒதுங்குமா?

ஹோம்வொர்க் பத்தலையோ!!!

பிரபாகர் said...

//ஈரோடு கதிர் said...
பிரபா...

ஆமை சேத்துல விளையாடுமா?

ஆமை போகும் போது யானை ஒதுங்குமா?

ஹோம்வொர்க் பத்தலையோ!!!
//

கூர்மங்கள் வராகங்களா மாறிடுச்சி... நன்றிங்க கதிர்...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

nalla karuththu...

கவி அழகன் said...

அருமை பின்னி பெடல் எடுதிடிங்க

தேவன் மாயம் said...

எழுத்து நன்றாக வந்துள்ளது ! வாழ்த்துக்கள்!

settaikkaran said...

சேத்துலே புரளுறது எதுவாயிருந்தாலும் புரளட்டுமே! யானை யானை தான்! :-)

கண்ணகி said...

துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்று யானைகளுக்கும் தெரிந்துவிட்டது....

ஹேமா said...

பிரபா...கதை கதை சொல்லுது.
அதுசரி..ஏன் ஒதுங்கி நின்னிச்சு யானை !

Punnakku Moottai said...

யாரையும் நக்கல் பண்ணலேயே! எனக்கு என்னமோ உள்குத்து இருக்குமோன்னு தோணுது.


அப்புறம்,
எல்லாரும் சௌக்கியமா!! சிங்கபுரு எப்பிடி இருக்கு?

என்ன ஒன்னும் செல்வி (miss ) பண்ணலேயே?

Punnakku Moottai said...

//ஹேமா said...
பிரபா...கதை கதை சொல்லுது.
அதுசரி..ஏன் ஒதுங்கி நின்னிச்சு யானை !//



வேற எதுக்கு, சும்மா பன்றிய சைட்டடிக்க தான்!!





கோவிசிக்காதிங்க, தமாசுக்கு!!!

Anonymous said...

கண்ணகி said...
துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்று யானைகளுக்கும் தெரிந்துவிட்டது....


repeaattey !!!!

:)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB