எந்திரன் பார்க்கனும்... - தொடர் பதிவு...

|

ஆருயிர் நண்பர் சேட்டை அன்போடு இந்த தொடர்பதிவுக்கு அழைத்ததற்காக அன்பு கலந்த வணக்கத்தோடு நன்றி சொல்லி, ராமருக்கு அனில் போல் (இதையும் ஆராய்ச்சி செய்து ராமர் வாழ்ந்ததாக சொல்லப்படும் காலத்தில் அனில் இல்லை என்று கூட யாராவது இடுகையிடலாம், அதற்கெல்லாம் நாம் பொறுப்பு இல்லைங்கோ!) எந்திரன் படத்துக்கு நாமும் ஒரு இடுகை இடலாமென எண்ணி இதோ களத்தில். (இந்த உதாரணம் சரியில்லையே என நினைத்தால்... சாரிங்க, ஒரு ஃப்ளோவில் எழுதிட்டேன்...)

அவர் ரொம்பவும் வித்தியாசமான ஆள், எதற்கெடுத்தாலும் சந்தேகப் படுவார். உதாரணமாய் வீட்டை பூட்டிவிட்டு போகும்போது நன்றாய் கை வலிக்க இழுத்து தொங்கி பார்த்துவிட்டுத்தான் போவார். தெரு முனைக்கு போனவுடன் பூட்டினோமா என சந்தேகம் வர, திரும்பவும் வந்து பார்த்துவிட்டு போவார்.பஸ்ஸில் ஏறியவுடன் சரியான பஸ்ஸில் தான் ஏறியிருக்கிறோமா என சந்தேகம் டிக்கெட் வாங்கும்வரை. அதன்பின் மறக்காமல் டிக்கெட் வாங்கிவிட்டு ஸ்டேஜ் வரும் வரை பாக்கெட்ல பத்திரமா இருக்கிறதா எனத் தொட்டு பார்த்துக்கொண்டே வருவார்.

அடுத்ததாய் ஒரு சின்ன விசயத்தை ரொம்ப பூதாகாரமாய் கற்பனை செய்வார். ஒரு வாழைப்பழத்தோல் கிடந்தால் அதில் ஒருவர் வழுக்கி விழுந்து அவரை மானசீகமாய் போட்டோவில் மாட்டும்வரை யோசித்து, கடைசியாய் அதை எடுத்து போடாமால் போவார்.

மொத்தத்தில் யாரையும் நம்ப மாட்டார், விதிவிலக்காய் குடும்ப டாக்டரை மட்டும். ஒரு முறை அவருக்கு காலையிலேயே தலைவலியாய் இருக்க, வாழ்க்கையில் அவர் நம்பும் ஒரே நபரான டாக்டரைப் பார்க்க போயிருந்தார். நன்றாக பரிசோதித்து ஒன்றுமில்லை ஓய்வு தான் தேவையென வலியுறுத்த, அவர் நம்புவதாய் இல்லை. கண்டிப்பாய் ஏதாவது மருந்து கொடுத்தே ஆகவேண்டும் என வற்புறுத்த, இல்லாத நோய்க்கு மருந்தா என டாக்டர் ஒரு மருந்து சீசாவில் தண்ணீரைப் பிடித்துக் கொடுத்து 'இது சக்தி வாய்ந்த மருந்து இதைக் குடிக்கும்போது குரங்கினை மட்டும் நினைக்கக் கூடாது' எனச் சொல்லிக் கொடுத்தார்.

சரி, இந்த கதைக்கும், இடுகை தலைப்புக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கிறதா? சத்தியமாய் இல்லை. அது மாதிரிதான் எந்திரன் படத்தைப்பற்றியும் சம்மந்த சம்மந்தமில்லாமல் பலரும் பலவாறு பார்க்காதே... அது இது என பயமுறுத்த நமக்குள் பார்த்தே ஆகவேண்டும் எனும் எண்ணம் எழுகிறது. அதனால் கண்டிப்பாய் எந்திரனை நான் பார்ப்பேன்.

அதுபோல், படம் எடுக்கிறார்கள், விளம்பரம் செய்கிறார்கள், நன்றாக இருந்தால் ஓடப்போகிறது, இல்லையென்றால் ஓ....டப்போகிறது. அதை விடுத்து அதற்கு இத்தனை வியாக்கியானங்களா? இது போன்ற குதர்க்கங்களுக்காகவும் கண்டிப்பாய் நான் எந்திரனை நான் பார்ப்பேன்!

கடைசியாய் ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் நான் எந்திரனைக் கண்டிப்பாய் பார்ப்பேன்.

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

எல் கே said...

athu sari

Prathap Kumar S. said...

எந்திரனா? ரஜீனிநடிச்சதா? ஷுட்டிங் ஆரம்பிசுடிச்சா??? :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

இப்படி தலைப்புக்கு சம்மந்தமே இல்லாம கூட தொடர்பதிவு எழுதலாமா....OK போலாம் ரைட்..

settaikkaran said...

Last but not the least....
//கடைசியாய் ரஜினியை ரொம்ப பிடிக்கும் என்பதாலும் நான் எந்திரனைக் கண்டிப்பாய் பார்ப்பேன்.//

இது தான் best and biggest காரணம்! அழைப்பை ஏற்று அதகளம் பண்ணியிருக்கிறீர்கள். சபாஷ்! நான் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணத்தொடங்கியாச்சே! :-))))

தூள் கிளப்பிட்டீங்க, ரஜினி மாதிரியே....!

vasu balaji said...

கடைசியாத்தான் ரஜனிய ரொம்ப பிடிக்குமா? அப்ப டிக்கட் கிடையாது. முதல்லயே ரஜனிய ரொம்ப பிடிக்கணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைசியாத்தான் ரஜனிய ரொம்ப பிடிக்குமா? அப்ப டிக்கட் கிடையாது. முதல்லயே ரஜனிய ரொம்ப பிடிக்கணும்//

தூள்

சிநேகிதன் அக்பர் said...

படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க :)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB