டீலா நோ டீலா...

|

ஸ்காண்டல் டிவி யின் மக்கள் என் பக்கம் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் நேயர்களே, இன்றைய சிறப்பு மக்கள் என் பக்கம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுவதற்காக சுவாமி நித்தியானந்தா, கேதன் தேசாய், மோடி ஆகியோர் வந்திருக்கிறார்கள். நேயர்களே ஒரு சிறிய இடைவேளைக்கு பின்பு உங்கள் மக்கள் என் பக்கம்....

(கோக்கு மாக்கு ஜ்வெல்லர்ஸின் அதிரடி விற்பனை. உங்கள் கேனைத்தனத்துக்கேற்ப அனைத்து டிசைன்களிலும் கம்மல் கடுக்கன் தள்ளுபடி விற்பனையில். முன் பதிவு செய்வோருக்கு ஓசியில் காது குத்தப்படும். குலுக்கல் முறையில் வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமும் பத்து சூப்பர் கேனைகளுக்கு இலவச மொட்டையடிக்கப்படும்)

வணக்கம் நேயர்களே! உங்களுக்காக இன்றைய மக்கள் என் பக்கம் நிகழ்ச்சியை உங்களுக்கு அளிப்பதில் ஸ்காண்டல் டிவி என்றுமே முதலில் இருப்பது நீங்கள் அறிந்ததே. இன்றைய நிகழ்ச்சியில் ஆன்மீகத்தை உச்சகட்டத்துக்கு அழைத்துச் சென்ற நித்தி என பதிவர்களால் கேவலமாக அழைக்கப்படும் நித்தியானந்தா, கேவல தேசாயாக மாறிப்போன கேதன் தேசாய், கேடிப்பய மோடி ஆகியோரை சந்திக்க இருக்கிறோம்.. முதலில் நித்தி

நித்தி: ஆச்சாரியன் அய்யோ பாவம்
அயோக்கியன் நானும் பாவம்
அப்பாவிங்க நீங்கள் பாவம்
அதைவிட சாரு பாவம்.. நமஸ்காரம். அயோக்கியன்னு ஒத்துக்கிட்டதா புரளி எழுத வேண்டாம். அபாரம், அசாத்தியம்னு உயர்வா சொல்லுறது மாதிரிதான் நான் யோக்கியனை விட சிறந்தவன் என்ற அர்த்தத்தில் சொன்னது. இது எங்கயும் இதுவரையில் வெளிவராத கலிவேதத்தில இருக்கிற சுலோகம்.

ஃபிராட் பீதாம்பரம்: (அல்லோ! இது துட்டும்மா துட்டு. ஓசில அடுத்த ஆசிரமத்துக்கு விளம்பரம் குடுக்குறியோ) இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம் நித்தி அவர்களே. உங்களுக்கு சாமியாரா போகவேண்டுமென்று எப்படி ஐடியா வந்தது? ஏன் முடிவெடுத்தீர்கள்?

நித்தி: இது நானா எடுத்த முடிவில்லை. எல்லாரைப் போலவும் நான் பிறக்கவில்லை. நான் அவதாரம்னு எல்லாம் போட்டி டுபாக்கூர் சாமியார் மாதிரி சொல்லமாட்டேன். இட் ஜஸ்ட் ஹேப்பண்ட். திரேதாயுகத்தில் அபிமன்யுவாய் பிறந்தேன். கலியுகத்தில் நித்தி.

பி.பீ:(யப்பா சாமி! அடங்கமாட்டியா) ஆச்சர்யமா இருக்கே, எப்படி அந்த இரண்டுக்கும் தொடர்பு?

நித்தி: ஆம் குழந்தாய். அபிமன்யு கருவிலிருக்கும்போதே சக்கரவியூகத்துக்கு உள்ளே போகும் வித்தை அறிந்தது போல்தான் ஆகிவிட்டது என் பிழைப்பு. நான் கருவிலிருக்கும்போது என் அம்மா டூரிங் டாக்கீஸில் குரு சிஷ்யன் படம் பார்க்கப் போனதாக ஞானதிருஷ்டி மூலம் அறிந்தேன். படம் முடிய கொஞ்ச நேரம் வரை ரஜனி, பிரபுவின் டுபாக்கூர் சீன்களில் பலவற்றையும் அறிந்தேன். என் போறாத காலம் க்ளைமாக்சுக்கு முன்னாடியே வலி எடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதால், டுபாக்கூரிலிருந்து வெளியே வரத் தெரியாமல் மாட்டிக் கொண்டேன். அபிமன்யுவும் அப்படித்தான் என்பது உங்களுக்கு தெரியும். இதை நான் ஆராய்ந்து என் 2ம் வயதிலேயே கண்டு கொண்டேன்.

பி.பீ: (யோவ். விட்டா ரஜினியும் கர்நாடகா, ஆஸ்ரமமும் அங்கதான்னு ஒரு வில்லங்கத்த இழுத்து விடுவ. நீ கெட.) சரி சரி, அடுத்த ஃப்ராடை அறிமுகம் பண்ணுவோம், நமஸ்தே தேசாய் ஜி! நீங்க சொல்லுங்க உங்களைப் பற்றி.

தேசாய்: ரண்ட் ரூபா குடுக்கறியா? இல்லைன்னா உனக்கு நோ இண்டர்வியூ

பி.பீ: (ங்கொய்யால! லைவா ஓடுது பன்னாட. இப்பகூட புத்தி விடுதாய்யா) மன்னிக்கவும், நேரடி நிகழ்ச்சி என்பதை உங்களுக்கு நினைவுறுத்துகிறோம்..

தேசாய்: ஓ. சாடி சாடி. ஹம் ஏக் டாக்டர் ஹூன். மெடீக்கல் காவுன்ஸில் மே தலைவர் ஹூம். நாம லோகல் பார்ட்டி மட்டுமில்ல சேட்ஜி. அக்ல ஒல்க டாக்டர் கவுன்ஸில்கு சீஃப். நம்ம கெட்ட நேரம் இப்போ சீப்.

பி.பீ: (இது வேறயா?) சரி! இவ்ளோ பணத்தினை எப்படி அடித்தீர்கள்? அதையும் ரொக்கமா வீட்லேயே வைத்திருந்து எல்லோரையும் வியப்பிலல்லவா ஆழ்த்தியிருக்கிறீர்கள்?

தேசாய்: அங்கதான் நாமள் நிக்கிறான். உங்கள்கி தெர்யூம். சேட் உன் கைலே இருந்து சேட்கைலே துட்டு வர் வரைக்கும் வட்டீ போடுவான்! நான் இவ்ளோ துட்டு எதுக்கு கை மேலே வச்சிருப்பேன்? ஒன்னும் செய்வானாம். ஆயா நாம் மே, வேல்காரி நாம் மே பாங்க் மேலே போட்டிருந்தா எவ்ளோ வ்வட்டி வந்திர்க்கும்? சேட் முட்டாள் ஹை? பேவ்கூஃப் ஹை? நை! சிலர் ஸ்டாம்ப் சேர்ப்பாங்கோ, சிலர் காயின் சேர்ப்பாங்கோ. நான் கரன்ஸி சேர்த்து வச்சேன். இட் ஈஸ் ஜஸ்ட் அ ஹாபி அண்ட் ஏ தோ சோசியல் சர்வீஸ் பி ஹை.

பி.பீ: (டேங்கப்பா நிறுத்து சேட்டு). சரி சரி, அப்புறம் அந்த நகை, வைரம்லாம் என்ன கதை இது?

தேசாய்: சுனோ! எங்கனா சேட் தங்கம்கி ஆசை பட்ருக்கான்? நீ பய்ந்து பய்ந்து எட்துகினு வந்து சேட்கிட்டே துட்டுக்கு வர்து. சேட் நம்பல் என்ன பண்றான்? கைமேலே தூக்கி தூக்கி போட்டு விளாட்றான். அப்புறம் உன்னே மாதிரி மருவாதி குடுக்குறான். இல்லே. கல்லு மேலே வெச்சி சொறண்டுறான்.

பி.பீ: (யோவ். அப்டின்னா...) அப்படியென்றால்?

தேசாய்: வேட் வேட். நீ என்னா கேக்க போது? எத்கு லாக்கர் மே வச்சேதானே? அரே சைத்தான்! திரும்ப நீ கேட்டா குட்கணுமில்லே. சேட்ஜிக்கு பேர் ரொம்ப முக்கியம். அதுக்காகதான்.

பி.பீ: (ஒரே ஸ்ட்ரோக்ல மூணுக்கு ஒன்னு ஊழல மறைக்க பார்க்கறியே. உன்ன.. இரு அடுத்த டுபாக்கூர என்னான்னு கேட்டுட்டு வரேன்) அப்போ எல்லாம் அடமானம் வாங்கின நகை என்கிறீர்களா? சரி இது பற்றி பிறகு பேசுவோம். அடுத்த டுபாக்கூரை பார்த்துவிட்டு வருகிறேன். நமஸ்தே மோடிஜி.

மோடி: ஏய் என்னா சொன்னே? கேடிஜியா?

பி.பீ: (என்னதான் டுபாக்கூருன்னாலும் மனசாட்சி இருக்கும்ல) அய்யோ இல்லையில்லை, மோடிஜி என சொன்னேன். நீங்கள் சொல்லுங்கள்

மோடி: யோவ் எனக்கு வேல இல்ல. இங்க இருக்கற நேரம் 2 மேட்ச் ஃபிக்ஸிங்

பி.பீ: என்னது?

மோடி: யோவ் நீ நினைக்கிற ஃபிக்ஸிங் இல்லைய்யா. மேட்ச் ஏற்பாடுன்னு சொல்லவந்தேன். எவ்ளோ கோடி வந்திருக்கும் தெரியுமா?

பி.பீ: (அதாம்பா பிர்ல? இப்பிடி ஒரு வழி இருக்குன்னு தெரியாம கிரிக்கட் கண்டு பிடிச்ச வெள்ளக்காரனே அசந்து போய் நிக்கிறானாமே. ராணியம்மா கத்துதாம். இண்டியா விட்டு வந்தது பெரும்தப்புன்னு. அப்பா ஃபோட்டோ முன்னாடி நின்னு கவுண்டர் மாதிரி பொலம்புதாம்ல.) சரி நித்தி ஏதோ சொல்லத் துடிக்கிறார். (நித்தி நெளியறான். அவன் மேல ஒரு கண்ணு வச்சிட்டே இருக்கணும்) அவரைக் கேட்போம்.

பி.பீ: சொல்லுங்க நித்தி. எதற்காக இந்த மாதிரி வேலையெல்லாம். என்னவோ ஆராய்ச்சி என சொல்கிறீர்களாம். இப்படி ஆராய்ந்து ஆராய்ந்து தானே மக்கள் தொகை பிய்த்துக்க்கொண்டு போகிறது.... சைனாக்காரர்கள் இதிலேயும் முன்னோடியாயிற்றே?. அங்க போய் கற்றுக்கொள்ளலாமல்லவா?

நித்தி: இதெல்லாம் உனக்க்கு புரியாது குழந்தாய். உலகத்துல இதுக்கு அக்ரீமெண்ட் போட்டவன் எவனாவது இருக்கிறானா சொல்? அத வச்சி சூப் காச்சவா? இல்ல அக்ரீமெண்ட் போட்டு விவேக் காமெடில வராமாதிரி அட்வான்ஸ் கட்டி ரேப் பண்ண முடியுமா?

பி.பீ: (சூப்பர் சாமியார்யா நீ. ஆதித்யா சேனல் ஃபேவரிட்டா?) ஆமாம். இப்போது நீங்கள் என்னவோ நான் ஆம்பிளையில்லைன்னு என சொல்கிறீர்களே என்ன விஷயம்? அப்படியென்றால் நித்தியானந்தின்னு என்றல்லவா வைத்திருக்கவேண்டும்?

நித்தி: யோவ்! யான்னா ஆம்பிளைன்னு அர்த்தமா? சாப்டியா, போனியா, வந்தியான்னு கேக்கறதில்ல? அப்புடி நித்தியானந்தான்னு ஒரு கேள்வி! எப்புடீ

பி.பீ: (அய்யோ! கொல்றானே) சேட்டுஜி நீங்க சொல்லுங்க! அப்புறம் அவ்வளவு வைரம் வச்சிருந்தீர்களாமே! அது என்ன கதை?

கேதன்: ஸீ! கரண்ட் போனா நிம்பல் என்னா பண்றான். துட்டு இல்லாதவன் காடா வெள்கு கொள்துறான். சில பேரு எமர்ஜென்ஸி லைட். சில பேரு இன்வெர்டர். நம்பள் சேட்கி பெரீ வீடில்லே. நெர்யா வெள்ச்சம் வேணுமில்லே. அதுக்காக வைரம் சேர்த்து வச்சான். ஒரு கை வைரம் டேபிள் மே வெச்சி ஒரு டார்ச் வச்சா எவ்ளோ லைட் வரும் தெர்மா?

நித்தி: சேட்டு! ங்கொய்யால சிக்காம வெளிய வந்தேன், நான் உனக்கு சிஷ்யண்டா சாமீ. என்னா போடு போடுறாண்டா யப்பா?

பி.பீ: (யோவ்! கேடி சை மோடி. இங்க ப்ரோக்ராம் நடக்குதில்ல. அங்க என்னா எஸ்.எம்.எஸ்.?) சொல்லுங்கஜி! இவ்ளோ சீக்கிரம் இவ்ளோ கோடி அடிக்கிற ஐடியா எப்படி கிடைத்தது?

மோடி: ம்கும். இதுக்கு கோர்ஸ் படிச்சிட்டா வரணும்? மூட்டையடிக்க எவ்வளவோ வழியிருக்கு. சும்மா படிச்சிட்டு பரீட்சை எழுதிட்டு, வேலை கிடைக்கல, வெங்காயம் கிடைக்கலன்னு இருக்கானுவ. இப்போ பாரு எவ்ளோ அன்னிய செலாவணி நம்மளால வருமானம், என்னா தெரியாத்தனமா அந்த கேட்டிலுக்கு ஆப்பு புடுங்க போய் என் வாலும் சிக்கிரிச்சி. எல்லாம் என் நேரம்!

பி.பீ: நீங்க சொல்லுங்க நித்தி. ஆம்பிளையில்லை சரி, அப்போ பொம்பளையா?

நித்தி: மொதல்ல மனுஷனே இல்ல கடவுள்னு சொல்லித்தான் எல்லாரையும் கவுத்தேன். என்னை எல்லாரும் கவுக்கப்பாக்குறப்போ ஆம்பிளையே இல்லைன்னு சொல்றேன். நாளை என்னவாக மாறப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. இதிலிருந்தே தெரியவில்லை நான் ஒரு அவதாரம் என்று

பி.பீ: (ங்கொய்யால, இப்படியெல்லாம் பேசித்தானே எல்லாரையும் கவுத்தே!) ம்... அப்புறம்?

நித்தி: காமத்தைப் பற்றி பெரும் ஆராய்ச்சியில் இருந்தோம், ஆணாய் மாறி பெண்களுடனும், பெண்ணாய் மாறி ஆண்களுடனும், இரண்டும்...

பி.பீ: (போதும் போதும் கப்பு தாங்கல...) சரி...சரி... மத்த இருவரையும் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

நித்தி: தேசாயின் பெயரிலேயே தேசம் இருக்கிறது. ஆம், இவர் தனிமனிதராய் இவ்வளவு சம்பாதிக்கும்போது, அரசாங்கம் இதை முறைப்படுத்தினால் எவ்வளவு வருமானம் வரும்? ஒரு வருங்கால இந்திய பில்கேட்ஸை முடக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் பல துறைகளிலும் இவரை தலைவராக்கி, வருமானத்தைப் பெருக்கி இந்தியாவை கடனில்லாத நாடாக மாற்றலாம். மோடி மஸ்தான் வித்தையினை கேள்விப்பட்ட பலரை, பார்க்கவைத்த இந்த புண்ணியவான் விளையாட்டை விளையாட்டாய் எண்ணாமல் அதை எப்படியெல்லாம் பணம் கொழிக்கும் வியாபாரமாக்கியிருக்கிறார்? இன்னும் பத்து அணிகளை உருவாக்கி அதில் வரும் வருமானத்தை பொதுவுடைமையாக்கி அத்தோடு என்னையும் ஆராய்ச்சி செய்ய ஒரு ஆய்வுச்சாலை அமைத்து கொடுத்தால் இந்த நாடு சுபிட்சம்....

பி.பீ: போதும் போதும். தேசாய் மற்ற இருவரைப்பற்றி உங்க கருத்து என்ன?

கேதன்: சீ, ப்ரைப சாமி சொன்னாப்ல நம்பள் கவர்மெண்ட் ரெகுலரஸ் பண்ணனனும்.

பி.பீ: மத்த ரெண்டு பேரையும் பற்றி கேட்டேன்.

கேதன்: மத்தவங்களப் பத்தி டிங்க் பண்ணியிருந்தா இவ்ளோ அடிச்சிருக்க முடியாது. அடிச்சதெல்லாம் எப்படி மாட்டிக்காம சேஃப் பண்ண நிம்பள் ஊர்ல இருக்கிற பொலிட்டிசியன்கிட்ட டியூசன் எடுத்திருந்திருக்கனும்.

பி.பீ: சரி கிணற்றுத்தவளையா இருந்தேன்னு ஒத்துக்கறீங்க... மோடி சார், உங்க கருத்து மத்த ரெண்டு பேத்த பத்தியும்?

மோடி: நாமளும் சாமி பண்ணின வேலையெல்லாம் சைலண்ட்டா பண்ணினோம், ஆனா மாட்டிக்கல. பத்தாயிரம் கோடி பண்ணினாலும் பதிவிசா பதுக்கத்தெரியனும். கேதன் ரொம்ப அப்பாவியா விவரமே தெரியாம இருந்திருக்காரு. சாமி லைவ் டெலிகாஸ்ட் செஞ்சி இன்னும் பாப்புலர் ஆக்கியிருக்கனும்.

நித்தி: (ங்கொன்னியா... கொளுத்தி பால் தெளிக்காம விட மாட்டாங்க போலிருக்கு)

பி.பீ: இப்போ நிகழ்ச்சியோட இறுதிப்பகுதிக்கு வந்திருக்கோம். அதுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு குட்டி (நித்தி: எங்க? எங்க? கேதன்: அதெல்லாம் இல்ல புல் செட்டில்மெண்ட் தான்... மோடி: இங்கயும் வந்திருக்கான்னே?) பிரேக்.

(கடன் தொல்லையா? வியாபாரத்தில் நட்டமா? மகள் படிக்கவில்லையா? மகன் ஊர் சுற்றுகிறானா? மனைவி சொல்பேச்சு கேட்கவில்லையா? உடனே நீங்கள் நாடவேண்டிய இடம் சுவாமி பைத்தியானந்தா ஆஸ்ரமம், கீழ்ப்பாக்கம் சென்னை 10. இருபத்திநாலு மணிநேர சேவை உண்டு.அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கமிஷன் உண்டு)

பி.பீ: கடைசியா ஒரு கேள்வி உங்க மூனு பேர்கிட்டயும். இந்த மாதிரி மாட்டிக்காம இருந்திருந்தா எதிர்காலத்துல என்ன செஞ்சிருப்பீங்க. முதல்ல நித்தி.

நித்தி: கிருஷ்ணபகவானே மோகினி வேடம் பூண்டு சிவனை மயக்கியதுபோல் எல்லாவற்றையும் கற்று தெளிந்து எல்லோருக்கும் கற்றுக்கொடுத்த்து இந்த பூவுலகையே பல அவதாரங்களால் அசத்தியிருப்பேன். வாழ்வின் அர்த்தத்தை எல்லோரும் விளங்கும்படி செய்திருப்பேன்.

கேதன்: ரிசர்வ் பேங்கே நம்பள்கிட்ட வட்டிக்கு வாங்கறாப்ல செஞ்சிருப்பேன். கிராமத்துக்கு ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சி இண்டிய பாபுலேசன்ல பாதிய டாக்டரா ஆக்கியிருப்பேன்.

மோடி: இப்பவே எஸ்.எம்.எஸ் ல கோடிக்கணக்கா சம்பாதிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க, சந்திர மண்டலத்துல கிரிக்கெட் நடத்தியிருப்பேன். அங்க சிக்ஸர் அடிக்கிற பந்தெல்லாம் இந்தியா முழுசும் விழற மாதிரி செஞ்சிருப்பேன்.

பி.பீ: கேக்கிறவன் கேனையின்னா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம், இன்னிக்கு நேர்லயே பார்த்தோம். உங்க மூனு பேருக்கும் எங்க ஸ்காண்டல் டிவி சார்பாவும் ஊழல் செஞ்சி முன்னேறத் துடிக்கிற எங்க டிவி நேயர்கள் சார்பாவும் நன்றியை தெரிவித்துக்கொண்டு மீண்டும் இன்னுமொரு சுவராஸ்யமான நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என சொல்லி வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் ஃபிராட் பீதாம்பரம்...

24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சங்கர் said...

கடைசி வரைக்கும் காசு குடுக்காமலே வுட்டுடீங்களே :))

settaikkaran said...

மெய்யாலுமே இப்படியொரு பேட்டி வந்தாலும் வரும் பாருங்க! ஆனாலும், கற்பனைக்குதிரையை பலமாவே தட்டியிருக்கீங்க போங்க! :-))

Paleo God said...

கேணப்பய அம்புட்டு துட்டையும் கேஷாவே வெச்சிருந்தான். இவனே இவ்வளவுன்னா...ஸ்ஸ்ஸ் கிர்ர்ர்ருங்குது பிரபா..!

sathishsangkavi.blogspot.com said...

சூப்பர் கற்பனை....

பங்காளி திருவிழாவிற்கு புறப்பட்டாச்சு............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஃபிராட் பீதாம்பரம்..neenga nallavara kettavaraa?

vasu balaji said...

ஆஹா! கடைசி வரைக்கும் டீலா நோ டீலா சொல்லவேயில்லையே..அவ்வ்வ்..ஸ்காண்டல் டிவி காம்பியர் ஃப்ராட் பீதாம்பரம் பொருத்தம் அபாரம்.

சிநேகிதன் அக்பர் said...

சரவெடி கொளுத்தியிருக்கீங்க.

Chitra said...

தேசாயின் பெயரிலேயே தேசம் இருக்கிறது. ஆம், இவர் தனிமனிதராய் இவ்வளவு சம்பாதிக்கும்போது, அரசாங்கம் இதை முறைப்படுத்தினால் எவ்வளவு வருமானம் வரும்? ஒரு வருங்கால இந்திய பில்கேட்ஸை முடக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் பல துறைகளிலும் இவரை தலைவராக்கி, வருமானத்தைப் பெருக்கி இந்தியாவை கடனில்லாத நாடாக மாற்றலாம்.


....... Good deal!!!! ha,ha,ha,ha....

செ.சரவணக்குமார் said...

என்னா அடி............

கலக்கல் பிரபா.

தெய்வசுகந்தி said...

சூப்பர்ங்க!!!!!!!!!!!!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்துறீங்க சார் .........

Unknown said...

கலக்கல் பிரபா..

ஆமா இங்க டீல் எங்க?

புலவன் புலிகேசி said...

:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிரபாகரா நீங்க.. கலக்குறீங்க..

பனித்துளி சங்கர் said...

ஆஹா ! மிகவும் கலக்கலாக யோசித்து இருக்கிறீர்கள் . ஒரே சிரிப்புத்தான் இதை வாசிக்கத் தொடங்கியத்தில் இருந்து . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பிரபாகர்.. இந்த ரூட் நல்லா இருக்கு ;))

சேட்டையோட Inspirationa??

ரோஸ்விக் said...

பேட்டியும், விளம்பரமும் நல்ல நகைச்சுவையா இருக்கு...

ஆனா, டீலா நோ டீலா தலைப்புதான் செட் ஆகாத மாதிரி இருக்குது...

நான் இவங்க மூணு பேருல யாரோட டீல் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... :-)))

சத்ரியன் said...

// இப்பவே எஸ்.எம்.எஸ் ல கோடிக்கணக்கா சம்பாதிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க, சந்திர மண்டலத்துல கிரிக்கெட் நடத்தியிருப்பேன். அங்க சிக்ஸர் அடிக்கிற பந்தெல்லாம் இந்தியா முழுசும் விழற மாதிரி செஞ்சிருப்பேன்.//

அதானே! அந்த சிக்ஸர காணமுடியாம பண்ணிட்டாங்களே பாவிங்க.

பிரபாகர் said...

//
சங்கர் said...
கடைசி வரைக்கும் காசு குடுக்காமலே வுட்டுடீங்களே :))
//
தலைப்பு வேற மேட்டர் வேற!

//
சேட்டைக்காரன் said...
மெய்யாலுமே இப்படியொரு பேட்டி வந்தாலும் வரும் பாருங்க! ஆனாலும், கற்பனைக்குதிரையை பலமாவே தட்டியிருக்கீங்க போங்க! :-))
//
நன்றி சேட்டை நண்பா!

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கேணப்பய அம்புட்டு துட்டையும் கேஷாவே வெச்சிருந்தான். இவனே இவ்வளவுன்னா...ஸ்ஸ்ஸ் கிர்ர்ர்ருங்குது பிரபா..!
//
நன்றி சேம் பிளட்!

பிரபாகர் said...

//
Sangkavi said...
சூப்பர் கற்பனை....

பங்காளி திருவிழாவிற்கு புறப்பட்டாச்சு............
//
நன்றி பங்காளி, கலக்குங்க!

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஃபிராட் பீதாம்பரம்..neenga nallavara kettavaraa?
//
தெரியலப்பா!

//
வானம்பாடிகள் said...
ஆஹா! கடைசி வரைக்கும் டீலா நோ டீலா சொல்லவேயில்லையே..அவ்வ்வ்..ஸ்காண்டல் டிவி காம்பியர் ஃப்ராட் பீதாம்பரம் பொருத்தம் அபாரம்.
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
அக்பர் said...
சரவெடி கொளுத்தியிருக்கீங்க.
//
நன்றி சினேகிதா!

//
Chitra said...
தேசாயின் பெயரிலேயே தேசம் இருக்கிறது. ஆம், இவர் தனிமனிதராய் இவ்வளவு சம்பாதிக்கும்போது, அரசாங்கம் இதை முறைப்படுத்தினால் எவ்வளவு வருமானம் வரும்? ஒரு வருங்கால இந்திய பில்கேட்ஸை முடக்கி வைத்திருக்கிறார்கள். இன்னும் பல துறைகளிலும் இவரை தலைவராக்கி, வருமானத்தைப் பெருக்கி இந்தியாவை கடனில்லாத நாடாக மாற்றலாம்.


....... Good deal!!!! ha,ha,ha,ha....
//
நன்றி சித்ரா!

//
செ.சரவணக்குமார் said...
என்னா அடி............

கலக்கல் பிரபா.
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
Deivasuganthi said...
சூப்பர்ங்க!!!!!!!!!!!!!
//
நன்றிங்க!

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
அசத்துறீங்க சார் .........
//
நன்றி ஜெய்!

//
முகிலன் said...
கலக்கல் பிரபா..

ஆமா இங்க டீல் எங்க?
//
தலைப்புக்கு ஏற்றார்போல் முடிக்கலைங்க!

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
:)
//
நன்றி புலிகேசி!

//
பட்டாபட்டி.. said...
பிரபாகரா நீங்க.. கலக்குறீங்க..
//
ஆமாம் பட்டா! நன்றி!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஆஹா ! மிகவும் கலக்கலாக யோசித்து இருக்கிறீர்கள் . ஒரே சிரிப்புத்தான் இதை வாசிக்கத் தொடங்கியத்தில் இருந்து . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
//
நன்றிங்க நண்பா!

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன் said...
கலக்கல் பிரபாகர்.. இந்த ரூட் நல்லா இருக்கு ;))

சேட்டையோட Inspirationa??
//
அய்யா, மற்றும் சேட்டை!

//
ரோஸ்விக் said...
பேட்டியும், விளம்பரமும் நல்ல நகைச்சுவையா இருக்கு...

ஆனா, டீலா நோ டீலா தலைப்புதான் செட் ஆகாத மாதிரி இருக்குது...

நான் இவங்க மூணு பேருல யாரோட டீல் போடலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... :-)))
//
சாமியோட மட்டும் வேணாம்!

//
’மனவிழி’சத்ரியன் said...
// இப்பவே எஸ்.எம்.எஸ் ல கோடிக்கணக்கா சம்பாதிச்சிகிட்டுத்தான் இருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க, சந்திர மண்டலத்துல கிரிக்கெட் நடத்தியிருப்பேன். அங்க சிக்ஸர் அடிக்கிற பந்தெல்லாம் இந்தியா முழுசும் விழற மாதிரி செஞ்சிருப்பேன்.//

அதானே! அந்த சிக்ஸர காணமுடியாம பண்ணிட்டாங்களே பாவிங்க.
//
அதானே!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB