வெளிசம் - பாகம் மூன்று...

|

வெளிசம் - பாகம் ஒன்று - பலா பட்டறை ஷங்கர்
வெளிசம் - பாகம்  இரண்டு - முகிலன்

இப்படித்தானே நேற்று இரவு பல்லவியின் கை பிடித்து புதுப்பிக்கப்பட்ட மெரினாவில் நடந்தேன்? ஆமாம், இப்போது எதற்கு பல்லவியின் நினைவு வருகிறது எனக்கு? வரத்தானே செய்யும்.

ஏனென்றால் இப்போதைக்கு அவள் என்னுடைய ஒரே காதலி.

ரிசப்ஷனை கடக்கும்போது மறக்க நினைத்தும் பல்லவி நினைவுகளை மொய்க்க ஆரம்பித்திருந்தாள்.

'காஃபீ ஷாப்?' ஸ்வாவின் கேள்வியில் ஹோட்டலுக்கு வந்தது நினைவுகள். ஓ காட் என்ன ஆயிற்று எனக்கு?

'வேண்டாம் ஸ்வா எதாவது சாப்பிடலாம்' எனக்கு ஏனோ பசித்தது, சாப்பாடென்றால் நிறைய நேரத்தை கழிக்கலாமென்றும் தோன்றியது.

நாங்கள் நுழைந்த ரெஸ்டாரென்ட்டின் ’போ’கட்டிய பவ்ய வரவேற்புகளுடன், மரியாதையாய் எங்களுக்கான இரண்டு தனிமையான மெத் இருக்கைகளில் அமிழ்ந்தோம்.

‘ஷான், ஜஸ்ட் எ செக், ரெஸ்ட் ரூம் ’ அழகான ஆங்கிலத்தில் சொல்லி ஸ்வா செல்ல, கிடைத்த அந்த சொற்ப நிமிடங்களில் முழுமையாய் திரும்பவும் பல்லவி நினைவு சரணம் பாட ஆரம்பித்தது.

இப்போது இருக்கும் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது. முதல் மாதம் எல்லாரிடமும் பழக ஆரம்பித்திருந்த நேரம், என் டெஸ்கின் போன் அடித்தது.

’யெஸ்’

'ஷான் யு ஹவ் அ விசிட்டர், ப்ளீஸ் கம் டு ரிசப்ஷன்'

வழக்கமான ரிஷப்ஷன் கிளி குரல் இது இல்லையே? யாரிந்த குயில்?. விசிட்டராய் வந்த நண்பனுக்கு ஹாய் சொல்லி பேசியவாரே பார்த்தேன், புதியாய் ஒருத்தி எப்போது சேர்ந்தாள்? காலையில் கவனிக்கவில்லையே? அவளை மெதுவாய் நோட்டமிட்டேன்.

முகம் சிரிக்க, மிக பரபரப்பாய் வரும் அனைத்து அழைப்புக்களையும் லாவகமாய் எண்ணழுத்தி இணைப்புக்கொடுத்து, வருபவர்களை முக மலர்ச்சியோடு வரவேற்று சம்மந்தப் பட்டவர்களுக்கு தகவல்தெரிவித்து, என அவ்வளவு சுறுசுறுப்பாய் இருந்தது அவளும் அவள் விரல்களும். என் ஐம்புலன்களும் இப்போது அவளோடு ஒன்றி இருந்தது.

மாநிறம், வட்டமான முகம், அதில் அழகிய பெரிய துறுதுறுக்கும் அலைபாயும் விழிகள். திருத்திய புருவங்கள், சின்னதாய் ஒரு பொட்டு, சாயமிட்டதாய் தெரியாத சிவந்த உதடுகள், சிரிக்கும் போது கன்னத்தில் குழி, லோசாக பின்னாமல் விட்டிருந்தால் புரளும் கேசம், போட்டிருந்த சுடிதாருக்கு ஏற்ற காதணி, தொலைபேசியை கைகளால் கையாளும்போது எழுந்த மெல்லிய சப்தத்தில் கவனித்த போதுதான் அதேகலரில் வளையல்கள், முன்வந்த வளையல்களை மறு கையால் விலக்கும் போது படர்ந்த பிஞ்சு விரல்கள்,மெலிதான சாயப்பூச்சோடு அழகிய நகங்கள், அவ்வபோது மின்னலாய் தெரிந்து மறையும் பற்கள், அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்ளுவதால் கொடுத்து வைத்த நாக்கு...

அவளை அதிகமாய் கவனிக்கிறேனோ என எனக்கே வெட்கம் வந்தது. அவனுடன் சிறிது நேரம்பேசிவிட்டு வழி அனுப்பி அவள் கவனிக்காத சமயத்தில் அவளை கவனித்து மனதுள் பதித்து மனதை அங்கேயே விட்டுவிட்டு ஒரு வழியாய் எனது சீட்டிற்கு வந்தேன். காதலிக்கலாமா? உள்ளம் கேட்டது, உளராதே மனசு சொல்லியது.

கண்டவுடன் காதலா என்றெல்லாம் நிறைய பேரிடம் வாதிட்டிருந்த நான் அன்று உண்மை என்பதை உணர்ந்து, அவளை என்னுள் அப்படியே உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அப்புறம் அவள் நினைவாயே இருந்து, அவளோடு யார் பேசினாலும் எரிச்சலாய் பொறாமை அடைந்து, அடிக்கடி அவளை சென்று பார்த்து, நிறைய தூண்டில் போட்டு (உங்க கண்கள் மீன் மாதிரியே இருக்குங்க) அவளும் என்னிடம் நன்றாக பேச ஆரம்பித்து, முதலில் நல்ல நண்பர்களாய் இருந்து ஒரு வழியாய் அவளை தயங்கி தயங்கி ப்ரொபோஸ் செய்தேன்.

ஆரம்பத்தில் மறுத்த அவள், ரொம்ப நாட்கள் எடுத்துக் கொண்டாள், எனது காதலை அங்கீகரிக்க! அதன் பின் அவள் என்னிடம் காதலை சொன்ன விதம், சொன்ன நாள் என்னால் இன்னும் மறக்க இயலாது எத்தனை பெண்களைப் பார்த்தாலும், பழகினாலும். அது முதன் முதலில் நான் கொக்கான நாள் எனக்கான மீன் ஒற்றைக்காலில் கிடைத்த நாள்.

அன்று காதலர் தினம். ஆபிஸ் கலகலப்பாய் இருந்தது வழக்கம்போல். ரிஷப்ஷனில் இருந்த பல்லவி என்னைப்பார்த்து மெலிதாய் சிரித்தாள், கொஞ்சம் வித்தியாசமாய் இருப்பதாய் பட்டது! என்ன ஆயிற்று வேறு எவனாவது சிவப்பு ரோஸ் கொடுத்துவிட்டானா?

இன்று ஒரு முடிவினை தெரிந்துகொள்ள வேண்டும் என ஒரு எண்ணத்தோடு இருக்கும்போது, எல்லோருக்கும் எம்.டி ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார், ஒரு பெரிய ப்ராஜக்ட்டை சைன் ஆஃப் செய்ததற்காக.

பார்ட்டி கலகலப்பாய் இருந்தபோது, எம்.டி ‘இன்னிக்கு வேலண்டைன்ஸ் டே, யாராவது ப்ரொபோஸ் பண்ணியிருந்து காதலிக்க ஆரம்பிச்சிருந்து சொல்லாம இருந்தா இந்த மேடையை பயன்படுத்திக்கலாம்’ என சொல்லியபின் கொஞ்சம் அமைதி.

மெதுவாய் பல்லவி எழுந்தாள், விடுவிடென நடந்து மேடையை அடைந்தாள். எல்லோருக்கும் ஆச்சர்யம். மைக்கை பிடித்தவள், ‘ஐ லவ் யூ ஷான்’ என சொன்னபோது ஓவென்று எல்லோரும் என்னை பார்த்து கத்த நான் மீனை முழுவதும் முழுங்கினேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது.

அதன் பின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் (அப்படின்னா என்னாங்க அர்த்தம்?) லவ் டெவெலப் ஆனது. முத்தங்கள் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் என ப்ரிண்ட் போட்டது. அமெரிக்கா ஆன் சைட்டுக்கு ஷ்ருதி என்னை தள்ளிக்கொண்டு போய் கொக்கிலிருந்து வல்லூராக்கி, மற்றொரு வாழ்க்கை முறையை காண்பித்தாலும், தினமும் பல்லவி் நான் முதலில் விழுங்கிய மீன் உள்ளே நீந்திக்கொண்டே இருந்தாள். ஆயிரம்தான் செய்தாலும் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் பல்லவி, பல்லவி நிரடலாய்.

‘வாட்பா, ரொம்ப யோசிக்கிற போலிருக்கு’

ஸ்வா அருகில் வந்து அவளது இருக்கையில் புதைத்துக்கொண்டு தேன் குரலால் என்னை கேட்க, நினைவுகளில் பல்லவிக்கு தடா செய்து பொய்யாய்,

‘உன்னைத் தான் நினைச்சிகிட்டிருக்கேன், எவ்ளோ அழகா இருக்கே, சொல்ல வார்த்தையே இல்ல’ இவள் சுறாவா? திமிங்கலமா?

‘ஹேய், கவுத்தாத, பாத்த ஃபர்ஸ்ட் டேலேயே ஆரம்பிச்சிட்டியா? என்ன சாப்பிடலாம்?’ என கேட்க நான் அவள் சாய்சுக்கே விட்டுவிட அழகாய் ஒன்றன் பின் ஒன்றாய் எவ்வளவு நேர இடைவெளியில் தேவை என குறிப்பிட்டு ஆர்டர் செய்தாள். வெயிட்டரிடம் பேசும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆர்டரை சொல்லி அவர் நகர்ந்தபின் அவளை நான் விழுங்குவதைப்போல் பார்ப்பதை கவனித்து மெலிதாய் புன்னகைத்து கேட்டாள்,

‘ஷான், யாரையாவது லவ் பண்றியா?’

இதனை அடுத்து எழுதி முடிப்பது அல்லது தொடரச் சொல்லப்போவது தொடரை ஆரம்பித்த பலா பட்டறை ஷங்கர்...

15 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Paleo God said...

நல்லா இருக்குங்க பிரபாகர்..:))

சாதா கதைய ஸ்பெசல் சாதா ஆக்கிட்டீங்க..:)) நான் திரும்பவும் சாதா வா ஆக்கிடறேன்...:))

Chitra said...

ஸ்பெஷல் தோசை (கதை) நல்லா இருக்கு. அடுத்து, ஸ்பெஷல் ஊத்தாப்பம் வருது.

மணிஜி said...

இந்த எழுத்தாளர்கள் ....லை தாங்கலையப்பா!

vasu balaji said...

நல்லாருக்கு பிரபா:)

Paleo God said...

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_22.html

ஹேமா said...

நல்லாயிருக்கு பிரபா.
ம்ம்ம்...தொடருங்க.

துபாய் ராஜா said...

//சாப்பாடென்றால் நிறைய நேரத்தை கழிக்கலாமென்றும் தோன்றியது.//

//நிறைய தூண்டில் போட்டு (உங்க கண்கள் மீன் மாதிரியே இருக்குங்க)//

//லவ் டெவெலப் ஆனது. முத்தங்கள் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் என ப்ரிண்ட் போட்டது.//

அசத்தல் பிரபா...

க ரா said...

அசத்தல். ரொம்ப நல்லாயிருக்கு.

க ரா said...

அசத்தல். ரொம்ப நல்லாயிருக்கு.

க.பாலாசி said...

நல்லாருக்குங்கண்ணா...

பலாபட்டறை எப்டி சாதாவாக்குறார்னு பாக்கணும்...

திவ்யாஹரி said...

//மைக்கை பிடித்தவள், ‘ஐ லவ் யூ ஷான்’ என சொன்னபோது ஓவென்று எல்லோரும் என்னை பார்த்து கத்த நான் மீனை முழுவதும் முழுங்கினேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது.//

படிக்கும் போது அந்த உணர்வு எங்களுக்குள்ளும் வருதுங்க பிரபா.. நல்லா கொண்டு போறீங்க.. மறுபடியும் முதல்லேர்ந்தா? (சங்கர் அண்ணாவா)? ஓகே.. ஓகே..

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

நல்லா இருக்குங்க.ஆமா! பல்லவிய திரைப்போட்டு வச்சிருக்கீங்க? அறிமுகப்படுத்தப்போறது யாரு?

Unknown said...

பல எடங்கள்ல வார்த்தைகள் விளையாடுது தல..

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்லா இருக்குங்க பிரபாகர்..:))

சாதா கதைய ஸ்பெசல் சாதா ஆக்கிட்டீங்க..:)) நான் திரும்பவும் சாதா வா ஆக்கிடறேன்...:))
//

ஸ்பெசல் சாதாவா ஆக்குங்க ஷங்கர்..:)

புலவன் புலிகேசி said...

//இதனை அடுத்து எழுதி முடிப்பது அல்லது தொடரச் சொல்லப்போவது தொடரை ஆரம்பித்த பலா பட்டறை ஷங்கர்... //

மறுபடியும் முதல்லேர்ந்தா...? ஆனா தல பயங்கர சுவாரஸ்யம்..

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்லா இருக்குங்க பிரபாகர்..:))
சாதா கதைய ஸ்பெசல் சாதா ஆக்கிட்டீங்க..:)) நான் திரும்பவும் சாதா வா ஆக்கிடறேன்...:))
//
நன்றி ஷங்கர்.
//
Chitra said...
ஸ்பெஷல் தோசை (கதை) நல்லா இருக்கு. அடுத்து, ஸ்பெஷல் ஊத்தாப்பம் வருது.
//
நன்றிங்க சித்ரா....

//
தண்டோரா ...... said...
இந்த எழுத்தாளர்கள் ....லை தாங்கலையப்பா!
//
நன்றிங்கண்ணா....

//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு பிரபா:)
//
நன்றிங்கய்யா...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்..
http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_22.ஹ்த்ம்ல்
//
நன்றி ஷங்கர்.

//
ஹேமா said...
நல்லாயிருக்கு பிரபா.
ம்ம்ம்...தொடருங்க.
//
நன்றின்ங்க சகோதரி...
//
துபாய் ராஜா said...
//சாப்பாடென்றால் நிறைய நேரத்தை கழிக்கலாமென்றும் தோன்றியது.//
//நிறைய தூண்டில் போட்டு (உங்க கண்கள் மீன் மாதிரியே இருக்குங்க)//

//லவ் டெவெலப் ஆனது. முத்தங்கள் கொஞ்சல்கள், கெஞ்சல்கள் என ப்ரிண்ட் போட்டது.//

அசத்தல் பிரபா...
//
நன்றி ராஜா!

//
க.இராமசாமி said...
அசத்தல். ரொம்ப நல்லாயிருக்கு.
//
நன்றிங்க...

//
க.பாலாசி said...
நல்லாருக்குங்கண்ணா...
பலாபட்டறை எப்டி சாதாவாக்குறார்னு பாக்கணும்...
//
நன்றி இளவல்....

//
திவ்யாஹரி said...
//மைக்கை பிடித்தவள், ‘ஐ லவ் யூ ஷான்’ என சொன்னபோது ஓவென்று எல்லோரும் என்னை பார்த்து கத்த நான் மீனை முழுவதும் முழுங்கினேன். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது.//
படிக்கும் போது அந்த உணர்வு எங்களுக்குள்ளும் வருதுங்க பிரபா.. நல்லா கொண்டு போறீங்க.. மறுபடியும் முதல்லேர்ந்தா? (சங்கர் அண்ணாவா)? ஓகே.. ஓகே..

//
நன்றிங்க...

//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
நல்லா இருக்குங்க.ஆமா! பல்லவிய திரைப்போட்டு வச்சிருக்கீங்க? அறிமுகப்படுத்தப்போறது யாரு?
//
வேற யாரு ஷங்கர்தான்...

//
முகிலன் said...
பல எடங்கள்ல வார்த்தைகள் விளையாடுது தல..
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்லா இருக்குங்க பிரபாகர்..:))

சாதா கதைய ஸ்பெசல் சாதா ஆக்கிட்டீங்க..:)) நான் திரும்பவும் சாதா வா ஆக்கிடறேன்...:))
//

ஸ்பெசல் சாதாவா ஆக்குங்க ஷங்கர்..:)
//
நன்றி முகிலன்...

//
புலவன் புலிகேசி said...
//இதனை அடுத்து எழுதி முடிப்பது அல்லது தொடரச் சொல்லப்போவது தொடரை ஆரம்பித்த பலா பட்டறை ஷங்கர்... //
மறுபடியும் முதல்லேர்ந்தா...? ஆனா தல பயங்கர சுவாரஸ்யம்..
//
நன்றி புலிகேசி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB