வேலை நம்மள டரியலாக்க இடுகைக்கு ஒரு பதினைஞ்சி நாலு லீவ் விட்டுட்டு, தம்பி
புலிகேசி டரியல்ல நம்மள பத்தி எழுதியிருக்கிறத கூட படிக்காம பொறுப்பா வேலை பாத்துகிட்டருந்த சிங்கத்த கதிர் சொரண்டி எழுப்பிட்டதால இதோ களத்துல குதிச்சிட்டோம்ல!
கொடுத்துவிட்ட கேமராவ வாங்கினதுக்கோ இவ்வளோ பில்டப்புன்ன, கஷ்டப்பட்டு வாங்கி அனுப்பிச்ச நாம நடந்தத சொல்லாம இருப்பமா?
கதிர் கேமரான்னு சொன்னதுமே நண்பருக்கு நல்லதா வாங்கனும்னு முடிவு பண்ணிட்டு அவரோட பட்ஜெட்டுக்குள்ள எது சூட்டாகும்னு ஒரு பெரிய ஆராய்ச்சியில இறங்கி ஒவ்வொரு நாளும் பேப்பர்ல எதாச்சும் ஆபர் வருமான்னு பாத்துகிட்டிருந்தேன்.
திடீர்னு நம்ம ஃபிரண்டு கேசவன் ஊருக்கு போறதா சொல்ல, எப்பா ஒரு கேமரா வாங்கித்தரேன், சென்னையில என்
ஆசான்கிட்ட கொடுத்துடிறியான்னு கேட்டேன். சரிப்பா, நாலு நாள் லீவ்ல டைட் செட்யூல்ல போறேன், முயற்சி பண்றேன்னு சொன்னான்.
சொன்னதோட இல்லாம அவன் நாலு நாள் ப்ரோக்ராம் என்னான்னு ஒரு பத்து நிமிஷம் சொல்லி சோடா ஊத்தி எழுப்புற அளவுக்கு நம்மள மயக்கமாக வெச்சி (இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ், ஒரு வீடு வாங்கறது, பேங்க்குல ஒரு நாலஞ்சி வேலை, ஆபிஸ் விஷயமா ரெண்டு பேர பாக்கறது, இடையில பெங்களுர்ல இருக்கிற அவனோட வைஃப் குழந்தைங்கள பாக்கறது... இது அவன் சொன்னதுல கால்வாசி மேட்டர்தான்) கடைசியா ’உனக்காக செய்ய மாட்டேனா? கொடுத்துடறேன்’ னு சொன்னான்.
சரி புதன் கிழம எனக்கு ஃபிளைட், செவ்வாய் சாயங்காலம் முஸ்தபா வந்துடு, நானும் பர்சேஸ் பண்ணனும்னு சொன்னான். திங்கள் நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்து கண்ணசந்தா ஆபிஸ்ல இருந்து ஃபோன்.
அப்போதான் புதுசா மாறிப்போன ஆபிஸ்ல பவர் ஷட் டவுனாம், ராத்திரிக்கு கரண்ட் இருக்காதாம்னு நம்ம சீன நண்பர் சொல்லிட்டு 'பிரபா லேப்டாப்ப எடுத்துகிட்டு போன்னு சொன்ன கேக்காம இங்க வெச்சி லாக் பண்ணிட்டு போயிடற, இப்ப பாரு வந்து எடுத்துகிட்டு போயி வீட்டுல இருந்து வேலை பாக்கனும்’ னு வயித்துல புளிய கரைச்சாரு. கெஞ்சி கூத்தாடி அவரோட வீட்டுக்கு எடுத்துகிட்டு வர சொல்லி அட்ரஸ கேட்டு வாங்கிகிட்டேன்.
சாப்புட்டுட்டு ரெண்டுல இருந்து ஏழரை வரைக்கும் தூங்கற நாம, நாலு மணிக்கே எழுந்திரிச்சிட்டேன். குளிச்சி கிளம்பி பஸ்ஸ புடிச்சி அவரு பிளாக் 445 பாத்துகிட்டே போக, 441 அ பாத்ததும் டிரைவர கேக்க, இங்கதான் இருக்கணும், இதுக்கு அப்பால வேற நம்பர் வரும்னு சொல்லிட்டாப்ல.
இறங்கி நண்பருக்கு போன் பண்ணி, எப்படி வரனும்னு கேக்க அவரு என்ன பயங்கரமா குழப்ப எதுத்தாப்ல வந்த ஒருத்தர கேட்டேன். காதில இருந்தத கழட்டிட்டு திரும்பவும் கேக்க விவரத்த சொன்னேன். வெச்சிருந்த ஐ போன்ல ரூட்ட பாத்துட்டு மாறி இறங்கிட்டீங்க, இதோ இங்க இருக்கு பாருங்கன்னு காமிச்சாப்ல.
ஒரு வழியா அவர புடிச்சிட்டேன்! வீட்டுக்கு வந்துடுவேன்னு பயந்துட்டோ என்னமோ தெரியல லேப்டாப்ப கையிலேயே வெச்சிகிட்டு பிளாக் வெளியவே காத்திருந்தாப்ல.
வாங்கிட்டு நன்றிய சொல்லிட்டு பதினொரு மணிக்குள்ள ஷிஃப்ட டேக் ஓவர் பண்றதா வாக்கு கொடுத்துட்டு முஸ்தபா போனேன்.
கேசவன சந்திச்சி அவன் பர்சேஸ ஆரம்பிக்க சொலிட்டு நாம நம்ம வேலைய பாக்க கேமிரா செக்ஷனுக்கு போய் இருக்கிற எல்லா மாடலையும் பாக்க ஆரம்பிச்சேன். என்னோட நிக்கான் SLR வாங்கும்போது கூட இந்த மாதிரி கேள்வி கேட்டதில்ல!
பேட்டரி லைப் எப்படி? இந்த மாடல்ல என்ன விசேஷம்? வாரண்டி எப்படி? ஊர்ல எங்க சர்வீஸ் சென்டர் இருக்கு, ரிப்பேர்னு கொடுத்த சரிசெய்ய எவ்வளவு நாள் ஆகும்? பேட்டரி எவ்வளோ நேரம் வரும்? 8 GB கார்ட் தர்றீங்களே கூட ஒரு 4 GB தர முடியுமா? அப்படின்னு கேட்டதோட இல்லாம கடைசியா வாங்கனும்னு முடிவு பண்ணின கேரமராவில பேட்டரிய போட்டுத்தர சொல்ல அவரு எதோ சொல்ல வந்தாரு. ’இல்ல நானே பாத்துக்கறேன்’ னு சொல்லி ஆராய்ச்சிய ஆரம்பிக்க, ’இல்லங்க உங்களுக்கு எப்படின்னு தெரியாது நான் சொல்றேன்’ னு தெரியாம ஒரு வார்த்தைய சொல்லிட்டாரு.
’இதுல பனாரமிக் இருக்கா, ஷட்டர் ஸ்பீட் மாத்த முடியுமா? ஆப்டிகல் ஜூம் எவ்வளவு? வீடியோ ஷுட் பண்ணும்போது ஜூம் பண்ண முடியுமா?’ ன்னு சரளமா கேக்க, ’சாரி நீங்களே பாத்துக்குங்க’ ன்னு சொல்லிட்டாரு.
கடைசியா வாங்கிட்டு மெமரி கார்ட் ரெண்டையும் பில்ல காமிச்சி பக்கத்து பில்டிங்ல வாங்கிட்டு கேசவன ஃபோன்ல கூப்பிட்டா பாதியத்தான் முடிச்சதா சொன்னான். அவன் கூடவே இருந்து எல்லாத்தயும் வாங்க, 10 மணியாயிடுச்சி. பத்தரைக்கு ஷிஃப்ட் ஆரம்பிக்குது, 11 மணிக்கு நண்பர ரிலீவ் பண்ணனும்.
கேசவன அனுப்பிட்டு போலாம்னு பாத்தா டாக்ஸியே கிடைக்கல. அவங்கிட்ட சாரி கேட்டுட்டு பஸ்டாப்புக்கு போனா பஸ் வந்துச்சி, சரியான கூட்டம். முன்னாடி கதவ தொறக்கவே இல்ல. வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு போயி ஒருவழியா லேப்டாப்ப ஆன் பண்ணினும்போது ஒரு கால் வந்துச்சி. நம்மள பத்தி எல்லா விவரமும் கேட்டுட்டு என்னோட கிரெடிட் கார்ட ட்ரெயின்ல விட்டுட்டேனாம், யாரோ எடுத்து போன் பண்ணி சொல்லவும் என்கிட்ட அந்த தகவல சொல்லி வேற அனுப்பறதா சொன்னாங்க!
ஒரு வழியா ஆபீஸ் வேலையெல்லாம் பாத்துட்டு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பி ஏர்போட்டுக்கு போய் கேசவன வழியனுப்பிச்சிட்டு (மறக்காம அய்யாகிட்ட தரனும்ல) பக்கத்துல இருந்த ஆபீஸ் போயிட்டேன்.
அடுத்த நாள் போன் பண்ணி பத்திரமா போய் சேந்தியான்னு கேட்டுட்டு, அப்படியே ’கேமிரா’ன்னு இழுக்க, சரிப்பா கொடுத்துடறேன்னு சொல்லிட்டு அய்யா நம்பர SMS அனுப்ப சொன்னான்.
டூட்டி முடிச்சிட்டு வந்து காலையில அய்யா நம்பர SMS அனுப்பிட்டு, அசந்து தூங்கி எழுந்தரிச்சி பாத்தா கேமிரா வந்து சேந்துட்டதா அய்யாகிட்ட இருந்து மெயில். அவருகிட்ட பேசிட்டு, கேசவனுக்கு பலமா தேங்க்ஸ் சொல்லி கதிருக்கு அக்கவுண்ட் நம்பர அனுப்பி... மிச்சத்த கதிரோட
ஒரு கேமராவும், ஓவர் பில்டப்பும் ல பாருங்களேன்...
டிஸ்கி :
இதெல்லாமே நுறு சதம் உண்மைதான். இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்? அவ்வளவு பிசியான வேலைகள் இருந்தாலும் சிரமம் பார்க்காமல் அய்யாவிடம் சேர்ப்பித்த கேசவன்! பொறுப்பாய் வாங்கி எனக்கு, கதிருக்கு தகவல் சொல்லி பத்திரமாய் வெண்ணை வெட்டுவது போல் மிக எளிதாய் சேர்க்கும் காரியத்தை செய்த என் அன்பு ஆசான், கிடைத்தவுடன் ஒரு அருமையான இடுகை போட்டு பதினைந்து நாட்களாக எழுதாமல் இருந்த என்னை எழுத வைத்த என் அன்பு கதிர், இதை படிக்கும் அன்பான நீங்கள்.... அந்த கேமிராவுக்கு என் நன்றி.
40 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...
வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...
//வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...
வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...//
repeateyy
இவ்வளவு இடையூறுகளிலும் நட்புக்காக அலைந்த உங்களுக்கு என் சல்யூட்...
நட்பின் பிரபாகர்
நட்பிற்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் நட்புள்ளம் வாழ்க
சரி சரி - பில்டப்பு போதும் - உண்மையா கதிரத் திட்டி எழுதுன இடுகை எங்கே ?
வந்தாச்சா பிரபா.சுகம்தானே.
பயங்கர பிசியா இருக்கும்போது சொல்லுங்க எனக்கு கூட காமெரா வேணும்..:)))
கேமரா வாங்கிக்கொடுத்த பிரபாக்கு நன்றி...
நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டத என் பொண்ணுகிட்டச் சொன்னா, அப்பா இன்னுமா பில்டப் பண்றீங்கன்னு கேட்குமே பிரபா...
நான் என்னதான் செய்யறது....
ஆனாலும் ஆயிரமாயிரம் நன்றிகள்
என்ன பிரபாகர் அண்ணே ஆளையேக்காணோமேன்னு பார்த்தேன்...
அப்ப இனிமே கதிரண்ணே பதிவுல போட்டோ ம(ப)யமாத்தான் இருக்கும்...
கதிரேண்ணே போட்டோவைப்போட்டுட்டு போட்டோ எடுத்தது நானு... கேமரா வாங்கிக்கொடுத்தது பிரபாகர்னு நம்ம ராகவன் சார்மாதிரி டிஸ்கி போடாம இருந்தா சரி.
//வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு போயி ஒருவழியா லேப்டாப்ப ஆன் பண்ணினும்போது ஒரு கால் வந்துச்சி. நம்மள பத்தி எல்லா விவரமும் கேட்டுட்டு என்னோட கிரெடிட் கார்ட ட்ரெயின்ல விட்டுட்டேனாம், யாரோ எடுத்து போன் பண்ணி சொல்லவும் என்கிட்ட அந்த தகவல சொல்லி வேற அனுப்பறதா சொன்னாங்க!//
சிங்கப்பூர்ல எல்லாரும் ரொம்ப நல்லவங்க போல இருக்கே... :))
ம்ம்ம்.. வெல்கம் பேக் பிரபாகர்.. :)
Praba - Hope you had a very nice time.... Aaama rendu perum camera cost-a patthi sollave illa...
ம்ம்ம்.... ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க... ஆனாலும் பாருங்க அங்க கதிர் சார்...என்னமா பில்டப் கொடுத்திருக்காரு....
தொடர்ந்து எழுதுங்க தலைவரே...
வாங்க வாங்க....
எனக்கும் ஒரு நல்ல கமெரா வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை அண்ணே ரெடியா..????
அண்ணே, எனக்கும் ஒரு காமெரா பார்சல்
நாங்களும் கேமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.
அருமையான அனுபவம். அன்னிக்கு ஒரு நாள் பயங்கர சுறுசுறுப்பா இருந்திருப்பீங்களே.
//
Sangkavi said...
வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...
வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...
//
நன்றிங்க! அப்பப்போ பாத்துகிட்டுதான் இருக்கேன், உங்கள் இடுகைங்கள! பின்னூட்டம் இட, இடுகையிட நேரமில்லாமல் இருந்தது...
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
//வாங்க பிரபாகர்....
எங்கடா ஆளக்காணம்ன இருந்தேன்...
வேலை பளு அதிகம் இருந்தாலும் எங்களை எல்லாம் அப்ப அப்ப பாக்கனுமல்ல...//
repeateyy
//
நன்றிங்கய்யா! இனிமேல் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி படித்து எழுத இருக்கிறேன்.
கிரெடிட் கார்டு நிறைய இருந்தா எனக்கும் ரெண்டு குடுங்களேன்
//
புலவன் புலிகேசி said...
இவ்வளவு இடையூறுகளிலும் நட்புக்காக அலைந்த உங்களுக்கு என் சல்யூட்...
//
நன்றி தம்பி, வேலை நடுவில வாங்கி வந்தேன் அவ்வளவுதான்!
//
cheena (சீனா) said...
நட்பின் பிரபாகர்
நட்பிற்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கும் நட்புள்ளம் வாழ்க
சரி சரி - பில்டப்பு போதும் - உண்மையா கதிரத் திட்டி எழுதுன இடுகை எங்கே ?
//
நட்பில் கடிதல் ஏதய்யா! எல்லாம் உரிமையில் செய்வது!.... உங்களின் அன்பிற்கும் நட்பிற்கும் நன்றி!
//
ஹேமா said...
வந்தாச்சா பிரபா.சுகம்தானே.
//
வந்தாச்சு! சுகம் சகோதரி!
//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பயங்கர பிசியா இருக்கும்போது சொல்லுங்க எனக்கு கூட காமெரா வேணும்..:)))
//
இப்போ ஃப்ரீ... பயங்கர பிசியா இருக்கும்போது சொல்றேன் சேம் ப்ளட்.
//
ஈரோடு கதிர் said...
கேமரா வாங்கிக்கொடுத்த பிரபாக்கு நன்றி...
நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டத என் பொண்ணுகிட்டச் சொன்னா, அப்பா இன்னுமா பில்டப் பண்றீங்கன்னு கேட்குமே பிரபா...
நான் என்னதான் செய்யறது....
ஆனாலும் ஆயிரமாயிரம் நன்றிகள்
//
உங்க இடுகை படிச்ச உடனே எழுத வெச்சிட்டீங்களே, அதான் கதிர்!... நட்புக்கு நன்றி!
//
நாஞ்சில் பிரதாப் said...
என்ன பிரபாகர் அண்ணே ஆளையேக்காணோமேன்னு பார்த்தேன்...
அப்ப இனிமே கதிரண்ணே பதிவுல போட்டோ ம(ப)யமாத்தான் இருக்கும்...
கதிரேண்ணே போட்டோவைப்போட்டுட்டு போட்டோ எடுத்தது நானு... கேமரா வாங்கிக்கொடுத்தது பிரபாகர்னு நம்ம ராகவன் சார்மாதிரி டிஸ்கி போடாம இருந்தா சரி.
//
வாங்க தம்பி! உங்களையெல்லாம் இரு வாரங்கள் இழந்திருந்தேன். இதோ புது தெம்போடு...
//
முகிலன் said...
//வேக வேகமா ஓடி ட்ரெயின புடிச்சி வீட்டுக்கு போயி ஒருவழியா லேப்டாப்ப ஆன் பண்ணினும்போது ஒரு கால் வந்துச்சி. நம்மள பத்தி எல்லா விவரமும் கேட்டுட்டு என்னோட கிரெடிட் கார்ட ட்ரெயின்ல விட்டுட்டேனாம், யாரோ எடுத்து போன் பண்ணி சொல்லவும் என்கிட்ட அந்த தகவல சொல்லி வேற அனுப்பறதா சொன்னாங்க!//
சிங்கப்பூர்ல எல்லாரும் ரொம்ப நல்லவங்க போல இருக்கே... :))
//
நம்ம நேரம் நல்லாருந்திருக்கு! நன்றி முகிலன்.
//
ச.செந்தில்வேலன் said...
ம்ம்ம்.. வெல்கம் பேக் பிரபாகர்.. :)
//
நன்றி செந்தில்.
//
Venkatesan said...
Praba - Hope you had a very nice time.... Aaama rendu perum camera cost-a patthi sollave illa...
//
கம்பனி சீக்ரட் வெங்கடேசன்... நன்றிங்க, உங்க வருகைக்கு, பின்னூட்டத்துக்கு.
//
க.பாலாசி said...
ம்ம்ம்.... ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்க... ஆனாலும் பாருங்க அங்க கதிர் சார்...என்னமா பில்டப் கொடுத்திருக்காரு....
தொடர்ந்து எழுதுங்க தலைவரே...
//
கண்டிப்பா இளவல்! அன்புக்கு நன்றி...
//
ஜெட்லி said...
வாங்க வாங்க....
//
நன்றி ஜெட்லி! கலக்கிடுவோம்.
//
Balavasakan said...
எனக்கும் ஒரு நல்ல கமெரா வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை அண்ணே ரெடியா..????
//
கண்டிப்பா, தம்பி, சுகமா இருக்கீங்களா?
//
சங்கர் said...
அண்ணே, எனக்கும் ஒரு காமெரா பார்சல்
//
பார்சல் என்ன, தம்பிக்கு நேரில் வந்தே தர்ரேன்...
//
அக்பர் said...
நாங்களும் கேமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.
அருமையான அனுபவம். அன்னிக்கு ஒரு நாள் பயங்கர சுறுசுறுப்பா இருந்திருப்பீங்களே.
//
நன்றி என் அன்பு சினேகிதா!
//
சங்கர் said...
கிரெடிட் கார்டு நிறைய இருந்தா எனக்கும் ரெண்டு குடுங்களேன்
//
கார்டெல்லாம் நிறையா இருக்கு, அதுல... வேணாம், கம்பனி சீக்ரட்!
வாங்கண்ணா... எங்க காணாம போயிட்டீங்க...
வாங்க பிரபா, நலம்தானே. நிச்சயம் அந்த கேமராவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். இரண்டு அருமையான பதிவுகள் கிடைத்திருக்கிறதே.
//
கலகலப்ரியா said...
வாங்கண்ணா... எங்க காணாம போயிட்டீங்க...
//
வந்துட்டேன் சகோதரி! நீங்கள் நலமா? பணிப்பளு. இப்போது சரியாகி இருக்கிறது.
//
செ.சரவணக்குமார் said...
வாங்க பிரபா, நலம்தானே. நிச்சயம் அந்த கேமராவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். இரண்டு அருமையான பதிவுகள் கிடைத்திருக்கிறதே.
//
உங்களைப் போன்ற நண்பர்களைப் படிக்கவைத்து என்னை பழைய படி மாற்றியும் இருக்கிறது. நலமுடன் நலமா?
:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆஆஆஆஆஆ பட்டீஈஈஈங்க. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
வாங்க..., அண்ணே
வாங்க.. வாங்க..(கேமரா)வாங்க :))
நல்ல விறுவிறுப்பான பதிவு வலைரசிகர்களுக்கு! உங்களுக்கு?
ம்ம்ம்...இதுக்குப் பின்னாடி இத்தனை நடந்திருக்கிறதா????சரிதான்
பிரபாகர், நல்லா இருக்கறீங்களா? எங்கடா கொஞ்ச நாளா ஒரு பதிவும் எழுதலையேன்னு பார்த்துட்டு இருந்தேன்... ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பனும்னு நேத்து தான் நினைச்சேன்...
எனக்கு கொஞ்சம் (நிறையவேங்க) வேலை அதிகமா இருந்ததுனால பின்னூட்டம் இட இயலவில்லை... உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்தாச்சு... இனியாவது சரியா பின்னூட்டமிட வந்தர்றேன்... :)
நம்ம கதிருக்கு வேண்டி இன்னும் கொஞ்சம் கூட கஷ்டப்பட்டிருக்கலாம்... :) கிரெடிட் கார்ட் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!
எப்படி இருக்கீங்க சார் .....
//
வானம்பாடிகள் said...
:)). அம்பூஊஊஊஊட்டு கஷ்டமாஆஆஆஆஆஆ பட்டீஈஈஈங்க. நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
//
கதிருக்கு பதில்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோதாங்கய்யா...
//
பேநா மூடி said...
வாங்க..., அண்ணே
//
வணக்கம் தம்பி!
//
துபாய் ராஜா said...
வாங்க.. வாங்க..(கேமரா)வாங்க :))
//
வணக்கம் ராஜா! நலம்தானே?
//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
நல்ல விறுவிறுப்பான பதிவு வலைரசிகர்களுக்கு! உங்களுக்கு?
//
ரொம்ப நன்றிங்க. எனக்கும்தான்.
//
ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்...இதுக்குப் பின்னாடி இத்தனை நடந்திருக்கிறதா????சரிதான்
//
நன்றி ஆரூரன், நலம்தானே?
//
ராசுக்குட்டி said...
பிரபாகர், நல்லா இருக்கறீங்களா? எங்கடா கொஞ்ச நாளா ஒரு பதிவும் எழுதலையேன்னு பார்த்துட்டு இருந்தேன்... ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பனும்னு நேத்து தான் நினைச்சேன்...
எனக்கு கொஞ்சம் (நிறையவேங்க) வேலை அதிகமா இருந்ததுனால பின்னூட்டம் இட இயலவில்லை... உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்தாச்சு... இனியாவது சரியா பின்னூட்டமிட வந்தர்றேன்... :)
நம்ம கதிருக்கு வேண்டி இன்னும் கொஞ்சம் கூட கஷ்டப்பட்டிருக்கலாம்... :) கிரெடிட் கார்ட் என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!
//
ரொம்ப நன்றிங்க. நீங்க இல்லாதது ரொம்பவும் வருத்தமா இருந்துச்சி! இப்போ ரொம்ப சந்தோஷங்க!
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
எப்படி இருக்கீங்க சார் .....
//
நல்லாருக்கேன் ஜெய்! உங்க லின்க்ல தான் அப்பப்போ கிரிக்கெட் பாக்கறது!
இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்?
........... பாத்துட்டோம்......... நட்புகளை, நல்லா "படம்" பிடிச்சி காட்டிட்டீங்க. :-)
//
Chitra said...
இதில் பாருங்கள், எத்தனை நட்புகளின் உறவாடல் இந்த கேமிராவால்?
........... பாத்துட்டோம்......... நட்புகளை, நல்லா "படம்" பிடிச்சி காட்டிட்டீங்க. :-)
//
நன்றி சித்ரா...
Post a Comment