மிஸ்டர் 'எக்ஸ் கொய்யான்'...

|

ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பியோட தறியில புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்திருந்தான். பாக்க ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். பேரு என்னான்னு கேட்டதுக்கு, 'கொய்யான்'னு சொன்னங்க.

துருவி துருவி கேட்டப்போ தான், உண்மையான பேரை அவன இவன கேட்டு சொன்னாங்க. நம்மை பாத்தானா வேற எங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும்.

பேருக்கேத்த மாதிரியே, வருவான், வேலை செய்வான். எதைக் கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுவான். கிறுக்குத்தனமா எதாச்சும் பண்ணிட்டிருப்பான். அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க.

'டேய் பாவம்டா, அவனை ஏன்டா வதைக்கிறீங்க' ன்னதுக்கு, 'அண்ணா இப்போ பாரு அவன்கிட்ட கேள்வி கேக்கறேன் என்ன பதில் சொல்றான்னு மட்டும் பாரு' ன்னு சொல்லிட்டு சதீஷ் அவன்கிட்ட,

'டேய் கொய்யான், கல்யாணம் முடிஞ்ச உடன் என்னா பண்ணுவாங்க'

'ம், பாலும் பழமும் சாப்பிடுவாங்க'

'அதை கேக்கலை, ராத்திரி'

'மாப்ள கட்டில்ல உட்காந்திருப்பாரு, பொண்ணு பட்டு பொடவ கட்டி, தலை நிறைய பூ வெச்சி, வளையல்லாம் போட்டுகிட்டு சொம்புல பால எடுத்துகிட்டு வரும். கால்ல விழுந்து கும்பிடும்'

'அப்புறம்' சதீஷ் உற்சாகமாய் சிரிப்புடன். 'கிட்ட போவாங்க, லைட் ஆஃப் ஆயிடும், சினிமாவுல அவ்வளவுதான் பாத்திருக்கேன்' னான். எனக்கு அவன் மேல பரிதாபமா இருந்துச்சி. ஒரு படத்துல செந்தில் சொல்றத பாத்திருப்பான் போலிருக்கு.

ஒரு வருஷம் கழிச்சி ஊருக்கு போயிருந்தேன். கொய்யான் வீட்டுக்கு வந்தான். ஆளு நிறையா மாறியிருந்தான், ரொம்ப சந்தோஷமா இருந்தான். கல்யாணமாம், பத்திரிக்கை வெக்க வந்திருந்தான். சந்தோஷமா இருந்துச்சி. 'அண்ணா நீங்கதான் ஃபோட்டோ புடிக்கனும், கேமராவோட வந்துடுங்க' ன்னான்.

பொண்ணு குள்ளமா இருந்தாலும் குறை சொல்ல முடியாது. அவனுக்கு பதினேழு, அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு. கிராமத்துல இதெல்லாம் இன்னமும் ரொம்ப சாதாரணம்.

திரும்ப நான் சிங்கப்பூர் வந்துட்டு ஊருக்கு போனேன். கொய்யான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் முட்டாய் கொடுத்தான், அவனுக்கு பையன் பொறந்திருக்கிறானாம். எனக்கு குழப்பமாயிடுச்சி, போனதடவ வந்தப்போதான் கல்யாணம், கான்ட்ராக்ட் முடிஞ்சி சரியா ஏழுமாசம் கழிச்சித்தான் வந்திருக்கோம்...

தனியா கூப்பிட்டேன், 'தம்பி, கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது, குறை பிரசவமா' ன்னேன். 'இல்லன்னா, நிறை பிரசவம்தான், கல்யாணம் நிச்சயம் பண்ணியதிலிருந்தே தொடர்பு இருந்தது, கணக்கு சரிதான்' னான்.

நாங்கல்லாம் 'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம். அதுக்கு பின்னால யாரும் அவனை 'கொய்யான்' னு கூப்பிடறதில்லை.

பதிவெழுத வந்த புதுசில எழுதினது. கொஞ்சம் மாற்றங்களோட திரும்பவும் இப்போ...

13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Raju said...

அண்ணே, முன்னாடியே படிச்சுருந்தாலும் இப்பவும் நல்லாத்தானிருக்கு.

புலவன் புலிகேசி said...

கொய்யா..கொய்யாலே..ரொம்ப விவ(கா)ரமானவந்தான் போல

கலகலப்ரியா said...

இதாண்ணே யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாதுங்கிறது.. =))...

vasu balaji said...

~x(

Prathap Kumar S. said...

ஹஹஹ கொய்யான் செம விவரமான ஆளதான் போங்க...

ஆரூரன் விசுவநாதன் said...

சரிதான்.....மனிதர்களை எடைபோடுவதில் நமக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

துபாய் ராஜா said...

உங்க ஊர்ல 'விவ(கா)ரமான' ஆளுங்களை கொய்யான் தான் கூப்பிடுவாங்களா.... :))

பிரபாகர் said...

//
ராஜு ♠ said...
அண்ணே, முன்னாடியே படிச்சுருந்தாலும் இப்பவும் நல்லாத்தானிருக்கு.
//
நன்றி தம்பி!, அன்பிற்கு, மறுபடியும் படித்ததற்கு.

//
புலவன் புலிகேசி said...
கொய்யா..கொய்யாலே..ரொம்ப விவ(கா)ரமானவந்தான் போல
//
நன்றி புலிகேசி!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
=))

கலகலப்ரியா said...
இதாண்ணே யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாதுங்கிறது.. =))...
//
ஆமாங்க சகோதரி! நன்றி.

//
வானம்பாடிகள் said...
~x(
//
அய்யா, புரிகிறது, இனிமேல் இவ்வாறு நிகழாது.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ கொய்யான் செம விவரமான ஆளதான் போங்க...
//
நன்றி பிரதாப்.

//
ஆரூரன் விசுவநாதன் said...
சரிதான்.....மனிதர்களை எடைபோடுவதில் நமக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
//
நன்றி ஆரூரன்...

//
துபாய் ராஜா said...
உங்க ஊர்ல 'விவ(கா)ரமான' ஆளுங்களை கொய்யான் தான் கூப்பிடுவாங்களா.... :))
//
அப்படியும்.... நன்றி ராஜா...

ஹேமா said...

பிரபா....கொய்யால !

இராகவன் நைஜிரியா said...

அட்...ஙொய்யால... ரொம்ப விவரமானவர் தான் போலிருக்கு..

அப்படி போடு அருவாள..

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவலில் கூட இது மாதிரி ஒரு காரக்டெர் வருங்க..

பிரபாகர் said...

//
ஹேமா said...
பிரபா....கொய்யால !
//
வருகைக்கு நன்றி சகோதரி...

//
இராகவன் நைஜிரியா said...
அட்...ஙொய்யால... ரொம்ப விவரமானவர் தான் போலிருக்கு..

அப்படி போடு அருவாள..

பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் நாவலில் கூட இது மாதிரி ஒரு காரக்டெர் வருங்க..
//
நன்றிங்கண்ணா! ரொம்ப சந்தோஷம்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB