பாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்......

|

இப்போல்லாம் குழந்தைங்க எங்க விளையாடறாங்க, டிவி முன்னாலயே உக்காந்திருக்காங்க. ஹோம் வொர்க், ஸ்பெஷல் கிளாஸ்னு ரொம்ப பிஸியா இருக்காங்க. ஆனா நாங்க அப்படி இல்ல, கொஞ்சம் படிச்சோம், நிறைய விளையாடினோம்.

அப்போ ரெண்டு கோஷ்டி விளையாடறதுல. சின்னவன் என்கிற வெங்கடேசன் (என் சித்தப்பா, அப்பாவோட சித்தப்பா பையன், என்னை விட 3 வயசுக்கு மூத்தது) தலைமையில, அப்புறம் பாலு(அத்தை மகன்) தலைமையில.

நான் எப்போதும் பாலு கோஷ்டியிலதான் இருப்பேன், கோட்டி, பம்பரம் விளையாடும்போது. காரணம், ஓரளவுக்கு நல்லா விளையாடுவேன், ரெண்டாவது பாலு பக்கம் யாரும் போக தயாரா இருக்க மாட்டாங்க. மத்தபடி சித்தப்பாதான் டீம் லீடர். கரெக்ட்னா கரெக்டா பேசும். பாலு அப்படி இல்ல பயங்கரமா பொய் சொல்லும்.

அதுக்கும் மேல ஒருத்தன் இருந்தான், வைத்தி. வாத்தின்னு கூப்புடுவோம். எங்க தொட்டாலும் அய்யோ அம்மா வலிக்குதே, கொல்றாங்களேன்னு கத்துவான்.

அன்னிக்கு நாங்க தியேட்டர்ல பாத்த எங்க பாட்டன் சொத்து படம் பத்தி பேசிட்டு இருந்தோம். சண்டை படம்னா ரொம்ப புடிக்கும்.

அப்போ வாத்தி, 'சின்னே, நம்பினா நம்பு, நம்பாட்டி போ, என் கைசோட்டு கெண்டை மீனை ஆத்துல பாத்தேன்' னான். எப்போவும் அந்த வார்த்தையை போட்டு தான் பேசுவான். அதிகமா நம்ப முடியாத விஷயமா இருக்கும்.

சித்தப்பா நம்பல, 'டேய் கத உடாத, ஆத்துலே தண்ணி இப்போதான் ஒரு வாரமா போகுது. அதுக்குள்ள எப்படி மீன் வரும்'னு கேட்டுட்டு 'ஆமா எங்க பாத்தே?' ன்னுச்சி.

'எங்காம்மான (அம்மா மேல சத்தியமா) மணி வீட்டு காட்டு ஓரமா ஒரு குட்டைல பாத்தேன், இப்பவே என் கூட வாங்க, காட்டலைன்னா என்ன எப்பவுமே நம்பாதிங்க' ன்னான்.

'வாத்தி, நாங்க எல்லாரும் இப்பவே வர்றோம், காட்டலைன்னா மவனே தொலைச்சுடுவேன்' னு சொல்ல எனக்கு அப்போதான் ராத்திரி பாலு அவங்க காட்டுல பனை மரத்துல நடுவில குலை போட்டிருக்குதுன்னு சொன்னது ஞாபகம் வந்தது. சித்தப்பாகிட்ட ஞாபகப்படுத்தினேன், ரெண்டையும் நேர்ல பாத்துடலாமான்னு.

'பிரபு சொல்றது சரி. மணி, பாலு எங்க இருந்தாலும் கூட்டிட்டு வா' ன்னு சொல்லிச்சு. மணி கூட்டிட்டு வந்தான். 'ஏய் பாலு ராத்திரி நீ சொன்னது உண்மைதானே?' ன்னுச்சு.

'சின்னே, நான் ஒன்னும் ரத்திரி ஒரு பேச்சு காலைல ஒரு பேச்சுன்னு பேசற ஆளு இல்ல. பாதி மரத்துல நொங்கு தொங்கிகிட்டு இருக்கு, இப்பவே வா போலாம்' னான்.

எல்லோரும் கிளம்பினோம். ஏறக்குறைய ஒரு மைல் போகனும். ஆத்துக்கு பக்கமா போகும்போதே வாத்தி, 'அதோ அங்க தான் இருக்குன்னு காட்ட ஆரம்பிச்சுட்டான்.

வேக வேகமா குட்டைகிட்ட போனோம். ஆத்தோரத்தில கொஞ்சம் தண்ணி தேங்கியிருந்துச்சி. மீன் இருக்க வாய்ப்பே இல்லை. குட்டி குட்டியா தலைப்பிறட்டை தான் இருந்துச்சி.

சித்தப்பா 'வைத்தி எங்க காட்டு பாக்கலாம்' னு சொல்ல, 'சின்ன எங்கம்மான நான் பாத்தேன். நான் பொய் சொல்லல' ன்னு ஒரு சின்ன குச்சியை எடுத்து பொந்துல குத்த ஆரம்பிச்சான்.

'தம்பி என்ன குத்தினாலும் வராது, யாருகிட்ட கதைய விடறேன்' னு பொளிச்சுன்னு வெச்சது. 'காக்கா தூக்கிகிட்டு போயிருக்கும் சின்னே' ன்னு அப்பவும் சாதிச்சான்.

'டாய் என்னை கொலைகாரன் ஆக்காத' ன்னு மறுபடியும் ஒன்னு விட்டுச்சி.

'அய்யோ அம்மா கொல்றாங்களே' ன்னு ஓடி போயிட்டான். பாலு சிரிச்சிகிட்டே இருந்தான். சித்தப்பா கேட்டுச்சி,

'பாலு அடுத்ததா உன் வண்டவாளத்தை பாக்க போறோம், ஒரு சான்ஸ் தர்றேன் உண்மையை சொல்லிடு' ன்னுச்சி.

'நான் எதுக்கு பயப்படனும், கூத்தாண்டவர் சத்தியமா உண்மை. நான் ஏன் பயப்படனும்?' திருப்பி கேட்க,

ஒரு வழியா கிட்ட போனோம். பாத்துட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டோம். பனை மரத்தில் சிரை எடுத்ததால் ஒரு குலை மட்டும் அரை அடி மட்டைங்களுக்கு கீழ தொங்கிகிட்டு இருந்தது.

'பாத்தியா சின்னே, பொய் சொன்னேன்னு சொன்னீங்களே, நொங்கு பாதி மரத்துல தொங்குது' ன்னுச்சி.

'இது உனக்கு பாதியா' ன்னு கேட்க, ஆமாம்னு சாதிக்க, கடுப்பான சித்தப்பா, விரலை காட்டி இதுல எது பாதின்னு கேட்க,

பாலு நுனி விரலை புடிச்சிச்சு.

பின்குறிப்பு : மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

16 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆ.ஞானசேகரன் said...

//பின்குறிப்பு : மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...//

நினைவுகளை சொல்லிவிட்டு சென்றது

ஜெட்லி... said...

மீள் பதிவா?? இப்பதான் முதல் வாட்டி படிக்கிறேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருந்துச்சுண்ணே உங்கள் நினைவுகள்...சுவாரஸ்யமாவும் நினைவு திரும்பலை சொல்லமுடியும்ன்னு சொல்லிட்டீங்க,,,

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
//பின்குறிப்பு : மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...//

நினைவுகளை சொல்லிவிட்டு சென்றது
//

நன்றின் நண்பா... உங்களின் அன்பான அன்பிற்கு.
//

//
ஜெட்லி said...
மீள் பதிவா?? இப்பதான் முதல் வாட்டி படிக்கிறேன்...
//
எழுதியதை கொஞ்சம் திருத்தியது ஜெட்லி. வரவிற்கு நன்றி...

//
பிரியமுடன்...வசந்த் said...
நல்லாயிருந்துச்சுண்ணே உங்கள் நினைவுகள்...சுவாரஸ்யமாவும் நினைவு திரும்பலை சொல்லமுடியும்ன்னு சொல்லிட்டீங்க,,,
//
நன்றி தம்பி. நினைவுகள் என்றும் சுகமானது, நம்மை எவ்விதத்திலாவது பாதிப்பதால்...!

vasu balaji said...

/இது உனக்கு பாதியா' ன்னு கேட்க, ஆமாம்னு சாதிக்க, கடுப்பான சித்தப்பா, விரலை காட்டி இதுல எது பாதின்னு கேட்க,

பாலு நுனி விரலை புடிச்சிச்சு./

அய்யோ சாமி முடியல. பிரமாதம் பிரபாகர்.

கலகலப்ரியா said...

//என் சித்தப்பா, அப்பாவோட சித்தப்பா பையன், என்னை விட 3 வயசுக்கு மூத்தது//

அப்பாவோட தம்பி பையன்...?!

=))... நல்லா இருக்குங்க கத... lol..

ஈரோடு கதிர் said...

//பாலு அப்படி இல்ல பயங்கரமா பொய் சொல்லும்.//

ஏம்....பிரபு, பாலு மட்டும்தானா...

//பாலு நுனி விரலை புடிச்சிச்சு.//

நல்லாயிருங்கப்பு... நாங்களும் நொங்கு கெடைக்கும்னு படிச்சா... நம்ம நொங்க எடுக்கறீங்களே... சிரிக்க வச்சு.....

பிரபாகர் said...

// வானம்பாடிகள் said...
/இது உனக்கு பாதியா' ன்னு கேட்க, ஆமாம்னு சாதிக்க, கடுப்பான சித்தப்பா, விரலை காட்டி இதுல எது பாதின்னு கேட்க,

பாலு நுனி விரலை புடிச்சிச்சு./

அய்யோ சாமி முடியல. பிரமாதம் பிரபாகர்.
//
நன்றிங்கய்யா, உங்களின் அன்புக்கு.

// கலகலப்ரியா said...
//என் சித்தப்பா, அப்பாவோட சித்தப்பா பையன், என்னை விட 3 வயசுக்கு மூத்தது//

அப்பாவோட தம்பி பையன்...?!

=))... நல்லா இருக்குங்க கத... lol..
//

அப்பாவுக்கு தம்பி எனக்கு சித்தப்பா! கொஞ்சம் சுத்தி வளைச்சி சொல்லியிருக்கேன். நன்றி ப்ரியா!

//
கதிர் - ஈரோடு said...
//பாலு அப்படி இல்ல பயங்கரமா பொய் சொல்லும்.//

ஏம்....பிரபு, பாலு மட்டும்தானா...

---- எப்பவாச்சும் சொன்னாலும் இந்த இடுகை நூறு சதம் உண்மை.

//பாலு நுனி விரலை புடிச்சிச்சு.//

நல்லாயிருங்கப்பு... நாங்களும் நொங்கு கெடைக்கும்னு படிச்சா... நம்ம நொங்க எடுக்கறீங்களே... சிரிக்க வச்சு.....
---- நன்றி கதிர், சிரிச்சதுக்கு!

துபாய் ராஜா said...

//பாதி மரத்துல நொங்கும், கைசோட்டு மீனும்...... //

தலைப்பே அருமை தல...

படிக்கும்போதே நினைவுகள் பால்ய காலத்திற்கு இழுத்து சென்றன.

நாமெல்லாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது பள்ளி விட்டு வந்து வீட்டிலே இருக்க மாட்டோம்.வெளி விளையாட்டுகளில் மகிழ்ந்திருந்தோம்.

இந்த காலத்து குழந்தைகளை வீடியோ கேம்ஸ், ஜெட்டிக்ஸ் சேனல் என வீட்டை விட்டு வெளிவராமல் செய்த காலமாற்றங்களை என்ன சொல்லி வருந்த.... :((

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...

நன்றி ராஜா. நீங்கள் சொல்வது போல் நிறைய நாம் இழக்கிறோம்.

ரோஸ்விக் said...

//நம்பினா நம்பு, நம்பாட்டி போ//

இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க பொய் நிறைய சொல்றவய்ங்க....
அருமையான நினைவுகள்.

Prathap Kumar S. said...

ஹஹஹ மலரும் நினைவுகள் படிக்கம்போது பால்யத்தை நினைவுப்படுத்துகிறது பிரபா.
நீங்கள் கிராமத்தில் வளர்ந்தவர் என நினைக்கிறேன். டவுனில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருக்காது. அது வேறமாதிரி மொக்கையாக இருக்கும்... சரிதானே???

Cable சங்கர் said...

நல்ல நகைச்சுவை.. :)

Anonymous said...

சில பொய்கள் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது என்று நினைக்கிறேன். :)

balavasakan said...

ரொம்ப நல்லா இருக்கு ........
அண்ணே....

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
//நம்பினா நம்பு, நம்பாட்டி போ//

இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க பொய் நிறைய சொல்றவய்ங்க....
அருமையான நினைவுகள்.
//
----மிக்க நன்றி நண்பா...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ மலரும் நினைவுகள் படிக்கம்போது பால்யத்தை நினைவுப்படுத்துகிறது பிரபா.
நீங்கள் கிராமத்தில் வளர்ந்தவர் என நினைக்கிறேன். டவுனில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இருக்காது. அது வேறமாதிரி மொக்கையாக இருக்கும்... சரிதானே???
//
----ஆமாம் பிரதாப்... முழுக்க கிராம சூழலில் வளர்ந்ததால் தான் இத்தனை அனுபவங்களும்..

//
Cable Sankar said...
நல்ல நகைச்சுவை.. :)
//
----ரொம்ப நன்றிங்கண்ணா

//
சின்ன அம்மிணி said...
சில பொய்கள் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது என்று நினைக்கிறேன். :)
//

----சில பொய்கள், சில ஏமாற்றங்கள், சில சந்தோஷங்கள் என எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை!

//
Balavasakan said...
----ரொம்ப நல்லா இருக்கு ........
அண்ணே....
//
நன்றிங்க தம்பி.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB