இளமைக்கால நினைவுகள்... - கவிதை

|

விகடன் முகப்பிலும் யூத்புல் விகடனிலும் வெளியான கவிதை...

பிறந்திட்ட நாள் முதல்
பெற்றோரின் அரவணைப்பில்
இருந்திட்ட நாள் தவிர்த்து
பறந்திட்ட நாட்கள் முதல்

மறந்திட்ட விஷயம் நீங்கி
மனதினில் பசுமையாய்
இருந்தினிக்கும் நினைவுகள்
இறுதிவரை பல உண்டு.

வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.

காலிப் பயல்களோடு
கண்டபடி சுற்றியதால்
கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு.

நுனாப்பழம் புசித்துவிட்டு
நாவெல்லாம் கருப்பாக்கி
வீணாய் பயந்ததுண்டு
வெளியாகும் மறு நாளில்.

ஓர் கிணறு விடாமல்
ஓயாமல் நண்பரொடு
இருவிழியும் சிவந்திட
இருளும்வரை நீராடி

நேரமிக வானதினால்
நெஞ்சமது பட படக்க
விரைந்து வீடுநோக்கி 
விசனமாய் செல்கையில்

தெருவிலெனை தாயவளும்
தவிப்புடனே தேடியதை
பொறுப்புடனே சொல்லிட்டு
புளிகரைப்பர் அடிவயிற்றில்.

பொறுமை தனை இழந்து
பொங்கிவரும் கோபமுடன்
வருகையை எதிர்பார்த்து
வாசலிலே இருந்தாலும்

புறவழியே திருடன்போல்
புகுந்தே தெரியாமல்
சோறெடுத்து பசியாற
சீக்கிரமாய் உள்தள்ள

கூரிய செவியதனில்
கேட்டிட்ட சிற்றொலியில்
காரியம் உணர்ந்திட்டு
கையில் தடி மறைத்திட்டு

சிரிப்போடு சளிக்காமல்
சாப்பிட காத்திருந்து
வரிந்திடுவாள் வைதிடுவாள்
விழி நீரை வெளியேற்றி.

வீட்டிலுள்ள பொருள் சிறிது
வீதமாய் சேர்த்தெடுத்து
கூட்டாஞ் சோறாக்கி
கூட்டாளி பசங்களோடு

சுட்டெடுத்த மீனோடு
சூட்டோடு ரசித்து 
கூட்டமாய் களிப்புடன்
கூடி தின்றதுண்டு.

எருமை மாட்டின் மேலேறி
எமதர்ம ராசன்போல்
விரட்டி மணலாற்றில்
விழுந்து புறண்டிட்டு

ஆற்றோர கரையினிலே
அடர்ந்திருக்கும் நாணலதில்
காற்று புக துளை செய்து
கானம் பாட முயன்றதுண்டு.

காவலது மிகுந்திருந்தும்
காய்த்திருக்கும் மாமரத்தில்
கவண்கொண்டு கல்லெறிந்து
கிடப்பவற்றை பொறுக்கி

சவாரி குதிரை போல
சட்டென பறந்து சென்று
லாவகமாய் உடைத்ததனை
பொடி தூவி சென்றதுண்டு.

பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி

தின்பதற்கு தழைபோட்டு
தினம்தோறும் கவனிக்க
கண்டெடுத்த தாயவளும்
காணாமல் செய்ததுண்டு.

பாட புத்தகத்தில்
பக்கத்துக்கு ஒன்றாய்
ஒடித்து மயிலிறகை
ஒப்புறவாய் வைத்திட்டு

குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.

அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய் 
தனல் நோகா தொலைவினில்

ஆதரவாய் அரவணைப்பில்
அமர்ந்தவண்ணம் கதையோடு
போதித்த அறிவுறைகள்
பொறுமையாய் கேட்டதுண்டு.

கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான் 
நடப்பதற்கு வழியில்லை...

ஞாபகங்களுடன்,
பிரபாகர்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

65 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

அருமையான ஞாபகங்கள்

பல வரிகள் எனக்கும் பொருந்தும்

//வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.
//

ஓணானை பிடிச்சு செய்த கூத்தை சொல்லாமல் பொசுக்குனு பால் ஊத்திட்டீங்களே பிரபா!!

வானம்பாடி கட்டுரை எழுதச் சொன்னா, கவிதையில கலக்கறீங்க

சுந்தரா said...

இளமைக்கால நினைவுகளை அழகா தொகுத்திருக்கீங்க.

கவிதை நல்லாருக்குது.

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...

நன்றி கதிர், ஏதோ நம்மால முடிஞ்சது...

பிரபாகர் said...

//
சுந்தரா said...
இளமைக்கால நினைவுகளை அழகா தொகுத்திருக்கீங்க.

கவிதை நல்லாருக்குது.
//
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க...

Anonymous said...

ஒரு வயசுக்கு மேல ஞாபகங்கள்தான் வாழ்க்கையோ.

புலவன் புலிகேசி said...

//வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.//

பழச நியாபகப் படுத்திட்டீங்களே தல. நல்ல நினைவுகள்.......

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
ஒரு வயசுக்கு மேல ஞாபகங்கள்தான் வாழ்க்கையோ.
//

ஆமாங்க... சரியாச் சொன்னீங்க..

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
//வேலியோர ஓணானை
வேகமாய்க் கல்வீசி
பாலூற்றிப் புதைத்துப் பின்
பணம் தேடிப் பார்த்ததுண்டு.//

பழச நியாபகப் படுத்திட்டீங்களே தல. நல்ல நினைவுகள்.......
//

நன்றி புலிகேசி...

க.பாலாசி said...

//காலிப் பயல்களோடு
கண்டபடி சுற்றியதால்
கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு.//

அப்ப களவானி பசங்க சகவாசம்தான் வச்சிருந்தீங்களா?

//சிரிப்போடு சளிக்காமல்
சாப்பிட காத்திருந்து
வரிந்திடுவாள் வைதிடுவாள்
விழி நீரை வேளியெற்றி.//

தாயவள் தவிப்பு மிக அழகாக உள்ளது.

//பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி//

//குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.//

ம்ம்ம்....அது ஒரு அழகிய கனாக்காலம்...

//சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான்
நடப்பதற்கு வழியில்லை...//

சரியா சொன்னீங்க. இதெல்லாம் மறுபடியும் எங்க போயி அனுபவிக்கப்போறோம்னு தெரியல.

மறுபடியும் சின்னபையனா போகணும்னு ஆசையை தூண்டுகிறது உங்கள் கவிதை.

வார்த்தைகளில் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் எதுகையும், மோனையும் கவிதையை மேலும் சிறக்கச்செய்துள்ளது.

நல்ல அனுபவ இடுகை...

ஜோதிஜி said...

பிரபாகர் கையை கொடுங்கள். மிக அற்புதம், பல வரிகள் அல்ல, கிராமத்தில் வாழ்ந்த அத்தனை இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடிய விரும்பக்கூடிய வாழ்வியல் காட்சிகளை மிக எளிதாக அற்புத படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள், இதைத் தான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.

பிரபாகர் said...

//
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
பிரபாகர் கையை கொடுங்கள். மிக அற்புதம், பல வரிகள் அல்ல, கிராமத்தில் வாழ்ந்த அத்தனை இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடிய விரும்பக்கூடிய வாழ்வியல் காட்சிகளை மிக எளிதாக அற்புத படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள், இதைத் தான் இதைத்தான் எதிர்பார்த்தேன்.
//

நன்றிங்கய்யா... உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும்...

பிரபாகர் said...

//க.பாலாசி said...
.....

சரியா சொன்னீங்க. இதெல்லாம் மறுபடியும் எங்க போயி அனுபவிக்கப்போறோம்னு தெரியல.

மறுபடியும் சின்னபையனா போகணும்னு ஆசையை தூண்டுகிறது உங்கள் கவிதை.

வார்த்தைகளில் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் எதுகையும், மோனையும் கவிதையை மேலும் சிறக்கச்செய்துள்ளது.

நல்ல அனுபவ இடுகை...
//

நன்றி பாலாசி... வழக்கமான உங்களின் அசத்தல் பின்னூட்டத்துக்கு.

கலகலப்ரியா said...

adade... autograph... kavithai-la... asaththitteenga.. !

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
adade... autograph... kavithai-la... asaththitteenga.. !//

ஆட்டோகிராப் கவிதை? நல்லா யோசிக்கிறீங்க ப்ரியா..

நன்றி...

ஜெட்லி... said...

//பாட புத்தகத்தில்
பக்கத்துக்கு ஒன்றாய்
ஒடித்து மயிலிறகை
ஒப்புறவாய் வைத்திட்டு

குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.
//

ஹை நானும் தான் ...
பல வரிகள் என்னையும்
நினைவு படுத்தியது பிரபா...

ஏதோ சொல்கிறேன்... said...
This comment has been removed by the author.
மணிஜி said...

/பிரபாகர் கையை கொடுங்கள். மிக அற்புதம், பல வரிகள் அல்ல, கிராமத்தில் வாழ்ந்த அத்தனை இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடிய விரும்பக்கூடிய வாழ்வியல் காட்சிகளை மிக எளிதாக அற்புத படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள், இதைத் தான் இதைத்தான் எதிர்பார்த்தேன்//

ரீப்பீட்டேய்......

vasu balaji said...

/பணம் தேடிப் பார்த்ததுண்டு/

கிடைச்சதா?

/கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு./

அதுக்காக நிறுத்திட்டமாக்கு>

/சிரிப்போடு சளிக்காமல்/

சலிக்காமல்*

/பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி/

இது வேற:))

/சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான்
நடப்பதற்கு வழியில்லை.../

ஆஹா. அருமை பிரபாகர்.

ஹேமா said...

ரொம்ப வாலுபோல நீங்க.என்னையும் அந்த இளமைக்காலத்திற்குக் கூட்டிச் சென்றீர்கள் பிரபாகர்.ஞாபகங்களைக் கோர்த்த விதம் அருமை.

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
....
பல வரிகள் என்னையும்
நினைவு படுத்தியது பிரபா...
//
நன்றி ஜெட்லி... நமது நினைவுகள் மற்றவரையும் தொற்றுதல் இன்பமான ஒன்று...

பிரபாகர் said...

//
October 28, 2009 2:31 PM
ஏதோ சொல்கிறேன்... said...
This post has been removed by the author.
//

ஏதோ சொல்றீங்கன்னு புரியுது

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
/பிரபாகர் கையை கொடுங்கள். மிக அற்புதம், பல வரிகள் அல்ல, கிராமத்தில் வாழ்ந்த அத்தனை இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தக்கூடிய விரும்பக்கூடிய வாழ்வியல் காட்சிகளை மிக எளிதாக அற்புத படைத்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள், இதைத் தான் இதைத்தான் எதிர்பார்த்தேன்//

ரீப்பீட்டேய்......
//

நன்றிண்ணா... உங்களின் தொடர் அன்பிற்கு.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
/பணம் தேடிப் பார்த்ததுண்டு/
கிடைச்சதா?
//
ம... நாங்க கூட போட்டு வெச்ச 3 பைசா...

/கோலெடுத்து தந்தையவர்
கோலங்கள் போட்டதுண்டு./

அதுக்காக நிறுத்திட்டமாக்கு>

--- பின்ன, அடிச்சாலும் ஆடுவோம்ள...

/சிரிப்போடு சளிக்காமல்/

சலிக்காமல்*

/பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி/

இது வேற:))

/சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான்
நடப்பதற்கு வழியில்லை.../

ஆஹா. அருமை பிரபாகர்.//

நன்றிங்கய்யா! திருத்திவிடுகிறேன், சொல்லியிருப்பதை....

பிரபாகர் said...

//
ஹேமா said...
ரொம்ப வாலுபோல நீங்க.என்னையும் அந்த இளமைக்காலத்திற்குக் கூட்டிச் சென்றீர்கள் பிரபாகர்.ஞாபகங்களைக் கோர்த்த விதம் அருமை.
//
அப்போ அறுந்த வாலுங்க... இப்பல்லாம் அடங்கியாச்சு.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஞாபக வரிகள்... அனைத்தும் என்னையும் ஞாபகப்படுத்தியது... சொல்லும் வரிகளும் அழகு.. வாழ்த்துகள் பிரபாகர்

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்ல ஞாபக வரிகள்... அனைத்தும் என்னையும் ஞாபகப்படுத்தியது... சொல்லும் வரிகளும் அழகு.. வாழ்த்துகள் பிரபாகர்

October 28, 2009 5:50 PM//

ரொம்ப நன்றிங்க...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான நினைவுகள் பிரபாகர்.

நானும் இதே போல ஓணான், மாமரம் என்றெல்லாம் சுத்தியிருக்கிறேன். என்ன.. கிணறுக்கு பதிலாக ஆறு.. :)

பழமைபேசி said...

இயல்பாப் போகுது...தொடருங்கள்!

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அழகான நினைவுகள் பிரபாகர்.

நானும் இதே போல ஓணான், மாமரம் என்றெல்லாம் சுத்தியிருக்கிறேன். என்ன.. கிணறுக்கு பதிலாக ஆறு.. :)
//

நன்றி செந்தில். உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
இயல்பாப் போகுது...தொடருங்கள்!
//
ரொம்ப நன்றிங்க பழமை பேசி...

மா.குருபரன் said...

//பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி//

//குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.//

அது ஒரு கனாக்காலம்.....

சூப்பரா இருக்கு நண்பரே..

பிரபாகர் said...

//மா.குருபரன் said...
//பொன்வண்டு பிடித்து தீப்
பெட்டியினில் போட்டு
நண்பர்கள் மத்தியினில்
வித்தைகள் காட்டி//

//குட்டி போடும் என்றெண்ணி
காலை மாலை இருமுறையும்
தொட்டெடுத்து மெதுவாய்
திறந்து பார்த்ததுண்டு.//

அது ஒரு கனாக்காலம்.....

சூப்பரா இருக்கு நண்பரே..
//
நன்றிங்க குருபரன்... அன்பிற்கும், பாராட்டிற்கும்.

தேவன் மாயம் said...

யாருக்கும் மறக்காத இளமைக்காலம். அருமை.

கோமதி அரசு said...

அழியாத கோலங்கள்.
இளமைக்கால கவிதை அருமை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும்
அனுபவ கவிதை.

வாழ்த்துக்கள்.

velji said...

you are an ardent fan of modern writings.the language you chose to write this article is not so modern.it is a good effort to be appreciated.the good thing is it has the rhythm,it is easy to read and it touch our emotions.
good work!

vasu balaji said...

பாராட்டுகள் பிரபாகர். விகடன் தலை வாசல் மற்றும் யூத்ஃபுல் விகடன் சமூகத்தில் சுட்டப்பட்டமைக்கு. :)

ப்ரியமுடன் வசந்த் said...

//அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய்
தனல் நோகா தொலைவினில்//

super

அண்ணா தாத்தாவை நினைவுபடுத்திட்டீர்கள்

துபாய் ராஜா said...

அருமையான அனுபவங்களை
அழகான வரிகளில்
அற்புதமான கவிதையாக
வடித்துள்ளீர்கள் பிரபாகர்.

நீங்க செஞ்ச சேட்டையில பாதியை நாங்களும் செஞ்சிருக்கோம்.

எல்லா வரிகளுமே என்னை மிகவும் கவர்ந்து விட்டன.

அம்புட்டு வரிகளும் அம்புட்டு அழகு.

வாழ்த்துக்கள் பிரபாகர்.

நிலாமதி said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்.

துபாய் ராஜா said...

ஆமா இந்த 'நுனாப்பழம்'ன்னா என்ன ? வேற ஏதும் பேர் இருக்கா ?

பிரபாகர் said...

//தேவன் மாயம் said...
யாருக்கும் மறக்காத இளமைக்காலம். அருமை.
//
ரொம்ப நன்றிங்க, வருகைக்கும் பாராட்டுக்கும்.

பிரபாகர் said...

// கோமதி அரசு said...
அழியாத கோலங்கள்.
இளமைக்கால கவிதை அருமை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும்
அனுபவ கவிதை.

வாழ்த்துக்கள்.
//

நன்றிங்க, உங்கள் முதல் வருகை மற்றும் பாராட்டுக்கு...

பிரபாகர் said...

//
velji said...
you are an ardent fan of modern writings.the language you chose to write this article is not so modern.it is a good effort to be appreciated.the good thing is it has the rhythm,it is easy to read and it touch our emotions.
good work!
//
தேங்க்ஸ் வேல்ஜி. அன்புக்கும் விமர்சனத்துக்கும் நன்றி.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
பாராட்டுகள் பிரபாகர். விகடன் தலை வாசல் மற்றும் யூத்ஃபுல் விகடன் சமூகத்தில் சுட்டப்பட்டமைக்கு. :)
//
நன்றிங்கய்யா, சுட்டிக்காட்டுதலுக்கு. இதற்கு முழு காரணம், உங்களின் வழிகாட்டுதல் தான்.

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
//அதிகாலை குளிரினில்
அனல் மூட்டி அமர்ந்திருக்கும்
தாத்தாவின் அருகில் போய்
தனல் நோகா தொலைவினில்//

super

அண்ணா தாத்தாவை நினைவுபடுத்திட்டீர்கள்
//
நன்றிங்க,இன்று எழுதும் பல விஷயங்களுக்கு எனது தாத்தாக்களும் காரணம்.

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
அருமையான அனுபவங்களை
அழகான வரிகளில்
அற்புதமான கவிதையாக
வடித்துள்ளீர்கள் பிரபாகர்.

நீங்க செஞ்ச சேட்டையில பாதியை நாங்களும் செஞ்சிருக்கோம்.

எல்லா வரிகளுமே என்னை மிகவும் கவர்ந்து விட்டன.

அம்புட்டு வரிகளும் அம்புட்டு அழகு.

வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
நன்றி ராஜா. எனது வயதொத்தவர்கள், அதற்குமேல் ஏறக்குறைய எல்லாமும், அதற்கு குறைந்தவர்கள் குறைவாயும் செய்திருப்பார்கள் தங்கள் இளமை பிராயத்தில்.

ஊக்கத்துக்கும் பாராட்டிற்கும் மீண்டும் ஒரு நன்றி ராஜா.

பிரபாகர் said...

//
நிலாமதி said...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன்.
//
ரொம்ப நன்றிங்க.

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
ஆமா இந்த 'நுனாப்பழம்'ன்னா என்ன ? வேற ஏதும் பேர் இருக்கா ?
//
தெரியல ராஜா, கருப்பா இருக்கம், கொஞ்சம் இனிப்பா, காரமா.. வாசம் நல்லாருக்காது. கடிப்ப காலையில கருப்ப போகும்.

பீர் | Peer said...

மறக்கமுடியா மறைந்த காலங்களை மீட்டு வந்த வார்த்தைகள்.

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
மறக்கமுடியா மறைந்த காலங்களை மீட்டு வந்த வார்த்தைகள்.
//

நன்றிங்க பீர், வருகைக்கும் வாழ்த்துக்கும்.

வெண்ணிற இரவுகள்....! said...

//கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான்
நடப்பதற்கு வழியில்லை//

வலியை ஏற்படுத்தும்
வார்த்தைகள் பிரபாகர்

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே கவிதை அருமை ஆனால் என்னால் வாக்குகள் செலுத்த முடியவில்லை .....
ஏதோ தொழில் நுட்ப கோளாறு

பிரபாகர் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
//கவலையே இல்லாமல்
கள்ளமில்லா நெஞ்சமுடன்
பவனி வந்த நாட்கள் மீண்டும்
பூவுலகில் கிடைத்திடுமா

சுவடுகளை திரும்பப் பார்த்து
சிந்தை பின்னே சென்றாலும்
நவீன காலம் தான்
நடப்பதற்கு வழியில்லை//

வலியை ஏற்படுத்தும்
வார்த்தைகள் பிரபாகர்
//
நன்றிங்க...இவை யாவும் நினைதலுக்கு மட்டுமே உள்ள விஷயங்கள்...

பிரபாகர் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
நண்பரே கவிதை அருமை ஆனால் என்னால் வாக்குகள் செலுத்த முடியவில்லை .....
ஏதோ தொழில் நுட்ப கோளாறு
//
பரவாயில்லை, உங்களின் விமர்சனமே எனக்கு பெரிய விருதுபோல்...

sambasivamoorthy said...

நம்ம ஊரு பசங்க எல்லாம் ஒரே மாதிரி என்ஜாய் பண்ணி இருகாங்க. அதை கவிதை வடிவிலே செதுகிதருகு நன்றி . தங்கர் பச்சன் உங்களை தேடவருநு நினைக்குறேன்.

Sorry for the typos... Prabha

பிரபாகர் said...

//
sambasivamoorthy said...
நம்ம ஊரு பசங்க எல்லாம் ஒரே மாதிரி என்ஜாய் பண்ணி இருகாங்க. அதை கவிதை வடிவிலே செதுகிதருகு நன்றி . தங்கர் பச்சன் உங்களை தேடவருநு நினைக்குறேன்.
//
நன்றி மூர்த்தி, வரவிற்கும் கருத்திற்கும்...

ராமலக்ஷ்மி said...

அவரவர் இளமைக்கால நினைவுகளை மீட்டெடுக்கும் கவிதை. மிக அருமை. வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

//ராமலக்ஷ்மி said...
அவரவர் இளமைக்கால நினைவுகளை மீட்டெடுக்கும் கவிதை. மிக அருமை. வாழ்த்துக்கள்!
October 31, 2009 9:26 PM //

நன்றிங்க... வருகைக்கும் வாழ்த்துக்கும்.

நாடோடி இலக்கியன் said...

சிறுபிராயத்தின் அத்தனை நினைவுகளையும் ஒருசேர கிளறிவிட்டுவிட்டீர்கள் நண்பா.

மிகவும் ரசித்தேன்.

பிரபாகர் said...

//நாடோடி இலக்கியன் said...
சிறுபிராயத்தின் அத்தனை நினைவுகளையும் ஒருசேர கிளறிவிட்டுவிட்டீர்கள் நண்பா.

மிகவும் ரசித்தேன்.
//

பாராட்டிற்கு மிக நன்றி நண்பா! சந்தோஷமாய் உணர்கிறேன்.

பா.ராஜாராம் said...

இந்த கவிதையில் நானும் இருக்கேன் ப்ரபா.யாரும் இருப்பார்கள்!அருமையான திரும்பி பார்த்தல்!

பிரபாகர் said...

//பா.ராஜாராம் said...
இந்த கவிதையில் நானும் இருக்கேன் ப்ரபா.யாரும் இருப்பார்கள்!அருமையான திரும்பி பார்த்தல்!
//
முப்பதை கடந்த யாரும் இருப்பதாய் எண்ணினாலே இந்த கவிதைக்கு வெற்றிதான். நன்றிங்க...

நாகராஜன் said...

அருமையோ அருமை... அப்படியே இளமைக்காலத்துக்கு ஒரு பயணம் போயிட்டு வந்த மாதிரி இருக்குங்க பிரபாகர்...

கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர இயலவில்லை... மன்னிக்கவும்... இதை அப்பவே படித்திருந்தும் பின்னூட்டம் இட இப்போ தான் நேரம் கிடைத்ததுங்க... ரொம்ப நல்லா எழுதிட்டு வர்றீங்க. பாராட்டுகள்... கலக்குங்க... உங்களுக்குன்னு வலையுலகத்தில ஒரு தனி இடம் நிச்சயம் கிடைக்கும்... மீண்டும் பாராட்டுகள்...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...

ரொம்ப நன்றிங்க. உங்களின் பின்னூட்டம் எனக்கு டானிக் மாதிரி.

Veer said...

அருமை

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB