அத்தை மகனும் சினிமாவும்....

|

என் அத்தை மகன் பாலு சினிமா பாக்கிறதுல பெரிய ஆளு. எல்லா படத்தையும் பாத்துடும். எம்.ஜி.ஆர் படம்னா எத்தன நாள் ஓடுதோ அத்தன நாள் பாக்கும்.

காசுக்கு வீட்டுல இருக்கிற நெல்லு, காட்டுல இருக்கிற தேங்காய், சொந்தம், பந்தம்னு எப்படியாச்சும் தேத்திட்டு சுத்து பட்டி(வேணாம், சினிமாவோட போகட்டும்) பக்கத்து ஊர்ல, டவுன்லன்னு எங்கெல்லாம் போக முடியுதோ, போய் பாத்துடும்.

சைக்கிள்ல 30 கி.மீ தூரம் கூட போயி பாத்துடும். மொத்தத்துல ஒரு படத்தையும் தவற விடாது. லோக்கல்னா தரை டிக்கெட் அம்பது பைசா, டவுன்னா ஒரு ரூபா அவ்வளவுதான். சினிமான்னா உயிரு. ஆனா எந்த படத்தோட கதையையும் சொல்ல தெரியாது.

டவுன்ல பாத்துட்டு வந்ததுன்னா, ஹீரோ கணக்கா உட்கார வெச்சு கதை சொல்லுன்னு சொல்லி, உளர்றத பாத்துட்டு, சரி சரி வேணாம் போதும்னுடுவோம்.

எந்த பட போஸ்டர பாத்தாலும், சினிமா பத்தி பேசினாலும் நான் மொதல்லயே பாத்துட்டேன்னு சொல்லும்.

கொஞ்சம் பெரிய ஆளாயிட்டு ரிக்(போர் போடற) வண்டி, காட்டு வேலை அது இதுன்னு கதம்பமா பண்ணிட்டிருந்துச்சி.

அப்போல்லாம் தூர்தர்ஷன் மட்டும்தான். கலர் டி.வி எங்கயாச்சும் தான் இருக்கும். வாரத்துக்கு ஒரு படம், ஓளியும் ஒலியும். எப்பவாவது மாநில மொழி திரைப்படத்துல அவார்ட் வாங்கின மொக்க படம்னு (இப்போ சொல்லலாம், அப்போ அதான் தேவாமிர்தம்) தான் இருக்கும்.

ஒரு நாள், மாநில மொழி வரிசையில ஏதோ ஒரு தேஞ்சு போன ஒரியா மொழி படம் ஓடிட்டிருந்தது. படம் சரியான ஆமை வேகம், கார் போறதையே கால் மணி நேரம் காட்டிட்டு இருந்தாங்க.

அத்தை மகன் வீட்டுக்குள்ள வந்தாப்ல, வழக்கம் போல 'இந்த படத்தை மொதல்லயே பாத்துட்டேன்' ங்கவும், சரி வசமா இன்னைக்கு சிக்கிட்டான்னு, என் சித்தப்பா, 'சரி அடுத்த என்னா சீன் சொல்லு' ன்னு கேட்டாரு.

'இப்போ காரு எஞ்சின் சூடாயி நின்னுடும்' னது, நின்னுடுச்சி. 'பக்கத்துல குளம் இருக்கும்', இருந்துச்சி. 'கேனை தூக்கிட்டு போவான்', போனான். 'பொண்ணுங்க குளிச்சிட்டு இருப்பாங்க', இருந்தாங்க.

கடைசி வரைக்கும் அடுத்து வர்றத சொல்லிட்டிருக்கவும் எங்களுக் கெல்லாம் மயக்கம் வர்ற மாதிரி ஆயிடுச்சி.

'ஆமா இந்த படத்தை எங்க பாத்தே' ன்னு கேட்டதுக்கு, 'வடக்க ரிக் வண்டியில இருக்கும்போது ஒரு டென்ட் கொட்டாயில பாத்தேன்' னுச்சி. அதுல இருந்து சினிமாவ பத்தி கேக்கறத நிறுத்திட்டோம்.

ரொம்ப வருஷத்துக்கப்புறம், படிச்சி முடிச்சிட்டு வெளி நாட்டுக்கு போயிட்டு ஊருக்கு வந்தப்போ அவங்க வீட்டுக்கு போனேன்.

கல்யாணம் பண்ணி ரெண்டு பசங்க, நல்ல பெரிய வீடு, வசதின்னு நல்லா இருந்தாப்ல. எல்லா வசதியும் இருந்துச்சி. ஆனா ஏதோ ஒன்னுமட்டும் குறையா இருந்துச்சி. வாயை விட்டு கேட்டுட்டேன்.

'ஆமா எல்லாரும் அதத்தான் கேக்கிறாங்க. டி.வி. மட்டும் இருக்கக்கூடாதுன்னு வெக்கல, பசங்க படிப்பு கெட்டிடும்ல' ன்னாரு.

மனசுக்கு நிறைவா இருந்துச்சி. வெளியில வர்றப்போ, சிஸ்டர்கிட்ட கேட்டேன்.

காத்திருந்தாப்ல, 'ஆமா இன்னும் தியேட்டர் தியேட்டராத்தான் அலையிது, எங்களுக்கு தெரியாதுன்னு நெனைச்சிட்டு, நாங்க மட்டும்தான் டி.வி. பாக்கக்கூடாதாம்' னு சொல்லுச்சி.

பின்குறிப்பு

சில மாற்றங்களுடன் கூடிய மீள் பதிவு...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

36 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ரோஸ்விக் said...

//'இப்போ காரு எஞ்சின் சூடாயி நின்னுடும்' னது, நின்னுடுச்சி. 'பக்கத்துல குளம் இருக்கும்', இருந்துச்சி. 'கேனை தூக்கிட்டு போவான்', போனான். 'பொண்ணுங்க குளிச்சிட்டு இருப்பாங்க', இருந்தாங்க//

சில பேரு படம் பாக்கும்போது இப்படி நடக்கப் போறதை முன்னாடி சொல்லி சொல்லி....நம்மள கொன்னு எடுதுருவாய்ங்க....ரொம்ப கொடுமையா இருக்கும் தலைவா....

http://thisaikaati.blogspot.com

பிரபாகர் said...

//ரோஸ்விக் said...
//'இப்போ காரு எஞ்சின் சூடாயி நின்னுடும்' னது, நின்னுடுச்சி. 'பக்கத்துல குளம் இருக்கும்', இருந்துச்சி. 'கேனை தூக்கிட்டு போவான்', போனான். 'பொண்ணுங்க குளிச்சிட்டு இருப்பாங்க', இருந்தாங்க//

சில பேரு படம் பாக்கும்போது இப்படி நடக்கப் போறதை முன்னாடி சொல்லி சொல்லி....நம்மள கொன்னு எடுதுருவாய்ங்க....ரொம்ப கொடுமையா இருக்கும் தலைவா....
//

கரெக்ட் பாஸ்... இந்த மாதிரி ஆனப்போ கடுப்புல படம் பாக்காம எழுந்து கூட வந்திருக்கேன்... வருகைக்கு நன்றி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சுத்தம்..,

எங்க நண்பர் ஒருத்தர எந்தப் படத்துக்குப் போனாலும் அது முதல் காட்சியாக இருந்தாலும் அடுத்தடுத்த சீன்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதில்90% அப்படியே வரும்.

ஷங்கி said...

உங்க அத்தை மகன் போர்ட்ரெய்ட் சூப்பர்!! வித்யாசமான கேரக்டர்தான். அருமையா எழுதியிருக்கீங்க. இதைப் படிச்சவுடனே என்னோட அடுத்த போர்ட்ரெய்ட் பகுதியைப் போட்டிரலாம்னு தோணுது. யோசிச்சிப் பார்க்கிறேன்

பிரபாகர் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
சுத்தம்..,

எங்க நண்பர் ஒருத்தர எந்தப் படத்துக்குப் போனாலும் அது முதல் காட்சியாக இருந்தாலும் அடுத்தடுத்த சீன்களைச் சொல்லிக் கொண்டே இருப்பார். அதில்90% அப்படியே வரும்.

October 11, 2009 11:31 AM//

எங்க அத்த மகனுக்கு தெளிவா பேசவே தெரியாது. கையெழுத்து தவிர எழுத்து கூட்டி கூட படிக்கத் தெரியாது. தெரிஞ்சது சினிமா மட்டும்தான். நன்றி சுரேஷ்.... வருகைக்கும், கருத்துக்கும்....

பிரபாகர் said...

//ஷங்கி said...
உங்க அத்தை மகன் போர்ட்ரெய்ட் சூப்பர்!! வித்யாசமான கேரக்டர்தான். அருமையா எழுதியிருக்கீங்க. இதைப் படிச்சவுடனே என்னோட அடுத்த போர்ட்ரெய்ட் பகுதியைப் போட்டிரலாம்னு தோணுது. யோசிச்சிப் பார்க்கிறேன்//

சீக்கிரம், ஆவலா காத்திருக்கிறேன். அத்த மகன வெச்சி நிறையா எழுதியிருக்கேன், இன்னும் எழுதலாம். நன்றி ஷங்கி.....

மணிஜி said...

ராஜ் டிவியில் தீபாவளியன்று “உலகம் சுற்றும் வாலிபன்” சிறப்பு திரைப்படம்

ஜெட்லி... said...

படம் பார்ப்பதில் என்னை மாதிரியே இருக்காரே....
ஒட்டு போட்டாச்சு பிரபா....

kishore said...

நானும் இப்படி தான் புரியுதோ இல்லையோ பார்த்துகிட்டு இருப்பேன்

ஈரோடு கதிர் said...

அட சட்டுபுட்டுனு...அவருக்கு ஒரு பிளாக் ஆரம்பிச்சு... தொடர்ந்து விமர்சனம் எழுத விட்டுங்க

ஈரோடு கதிர் said...

அது எப்பிடி ராசா.... ஆத்தூருக்கு வடக்கால இருக்கிற டெண்டு கொட்டாயில ஒரியா படம் போட்டான்

ம்ம்ம்ம்.. லாஜிக் ஒதைக்கிதே..

உடனே 'வடக்க'ன வட இந்தியா, ஒரிசா மாநிலம்னு சொல்லப் படாது... ஆமா

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
ராஜ் டிவியில் தீபாவளியன்று “உலகம் சுற்றும் வாலிபன்” சிறப்பு திரைப்படம்//

காலை வணக்கம்.... நல்லா பாருங்கண்ணே.... ராஜ் டி.வி. இங்க இல்ல.... DVD இருக்கு.

பிரபாகர் said...

//ஜெட்லி said...
படம் பார்ப்பதில் என்னை மாதிரியே இருக்காரே....
ஒட்டு போட்டாச்சு பிரபா....//

நன்றி ஜெட்லி... அன்பான ஆதரவிற்கு.

பிரபாகர் said...

//
KISHORE said...
நானும் இப்படி தான் புரியுதோ இல்லையோ பார்த்துகிட்டு இருப்பேன்

October 11, 2009 12:15 PM//

ம்..... அப்போ வேற வழியில்லை..... பாத்துத்தான் ஆகணும்.... நன்றி கிஷோர்.....

பிரபாகர் said...

//
கதிர் - ஈரோடு said...
அட சட்டுபுட்டுனு...அவருக்கு ஒரு பிளாக் ஆரம்பிச்சு... தொடர்ந்து விமர்சனம் எழுத விட்டுங்க
//
அவருக்கு படிக்க எழுத தெரியாது, அவரோட பேர தவிர....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல் பதிவு பிரபாகர் :)

உங்க பாலு போல பலர் இருக்கிறார்கள்.

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
அது எப்பிடி ராசா.... ஆத்தூருக்கு வடக்கால இருக்கிற டெண்டு கொட்டாயில ஒரியா படம் போட்டான்

ம்ம்ம்ம்.. லாஜிக் ஒதைக்கிதே..

உடனே 'வடக்க'ன வட இந்தியா, ஒரிசா மாநிலம்னு சொல்லப் படாது... ஆமா//

அவரு அங்க போயிட்டு அந்த படத்த பாத்திருக்காரு, எப்படின்னா தகவல் எனக்கு சரியா நினைவில்ல... நன்றி கதிர்......

பிரபாகர் said...

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல் பதிவு பிரபாகர் :)

உங்க பாலு போல பலர் இருக்கிறார்கள்.

//
நன்றி செந்தில்.... சரிதான், நிறைய பேர் இருக்கிறார்கள்....

vasu balaji said...

படம் மொக்கையோ என்னமோ சொன்னது டக்கரு.

துபாய் ராஜா said...

வித்தியாசமான கேரக்டர். பிள்ளைங்க படிப்பு கெடக்கூடாதுங்கறதுக்காக வீட்டுல டி.வி. கூட வாங்காம.... நல்ல உஷாரான ஆளுதான் உங்க அத்தை பையன்.....

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
படம் மொக்கையோ என்னமோ சொன்னது டக்கரு.//

அய்யா, வணக்கம். நன்றி உங்களின் அன்பான பாராட்டிற்கு....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான அனுபவங்களை என்னைக்கும் மறக்க முடியாதுல்ல ...

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
வித்தியாசமான கேரக்டர். பிள்ளைங்க படிப்பு கெடக்கூடாதுங்கறதுக்காக வீட்டுல டி.வி. கூட வாங்காம.... நல்ல உஷாரான ஆளுதான் உங்க அத்தை பையன்.....//

நன்றி ராஜா. குடிக்கிறவங்க மத்தவங்கள குடிக்காதன்னு அட்வைஸ் பண்ற மாதிரி...

பிரபாகர் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான அனுபவங்களை என்னைக்கும் மறக்க முடியாதுல்ல ...
//

ஆமாங்க, நூறு சதம் சரி.... வருகைக்கு நன்றி...

நாகா said...

ஹா ஹா.. ரவுசு..

பிரபாகர் said...

//நாகா said...
ஹா ஹா.. ரவுசு..
//

நன்றி நாகா. எல்லாம் உங்களின் ஆதரவுலதான்....

முரளிகண்ணன் said...

அனுபவஸ்தர்

பிரபாகர் said...

//முரளிகண்ணன் said...
அனுபவஸ்தர்
//
நன்றி முரளி... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

butterfly Surya said...

பிரபா, நீங்க ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு மேட்டர் இருக்கு.

தண்டோரா,, உலகம் சுற்றும் வாலிபன் யாரு..??

பிரபாகர் said...

//butterfly Surya said...
பிரபா, நீங்க ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு மேட்டர் இருக்கு.

தண்டோரா,, உலகம் சுற்றும் வாலிபன் யாரு..??
//

அப்படியா? நன்றி சூர்யா... தண்டோரா அண்ணன் ராஜ் டிவியில உ.சு.வா ன்னு குஷியா இருக்காரு. அதுக்காக தனி பதிவே போடப் போறாருண்ணா பாத்துக்கோங்களேன்...

ஊடகன் said...

//
'இப்போ காரு எஞ்சின் சூடாயி நின்னுடும்' னது, நின்னுடுச்சி. 'பக்கத்துல குளம் இருக்கும்', இருந்துச்சி. 'கேனை தூக்கிட்டு போவான்', போனான். 'பொண்ணுங்க குளிச்சிட்டு இருப்பாங்க', இருந்தாங்க.
//

நல்ல பதிவு.........

தொடருங்கள் நண்பரே.........

பிரபாகர் said...

//ஊடகன் said...

October 12, 2009 4:39 PM//

நன்றி நண்பரே, கண்டிப்பாய். உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

நாகராஜன் said...

பிரபாகர்,

நீங்க முதல் தடவை இந்த இடுகையை எழுதியிருந்த போதே ரசித்து படித்த ஒன்று இது... இப்போவும் நல்லா ரசிச்சேன்... உங்க அத்தை மகன் படு உஷார் தான்...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
பிரபாகர்,

நீங்க முதல் தடவை இந்த இடுகையை எழுதியிருந்த போதே ரசித்து படித்த ஒன்று இது... இப்போவும் நல்லா ரசிச்சேன்... உங்க அத்தை மகன் படு உஷார் தான்...

October 12, 2009 9:03 PM//

நன்றி ராசுக்குட்டி...

பழைய இடுகைகள் அறிமுகமே இல்லாதபோது எழுதியது, உங்களைப் போன்ற ஒரு சிலரை தவிர.... அதனால் தான் மீண்டும்.... நன்றி....

Prathap Kumar S. said...

// சினிமான்னா உயிரு. ஆனா எந்த படத்தோட கதையையும் சொல்ல தெரியாது.//

//பந்தம்னு எப்படியாச்சும் தேத்திட்டு சுத்து பட்டி(வேணாம், சினிமாவோட போகட்டும்)//

ஆனாலும் ஆனாலும் அத்தைப்பையனை வுட்டுகொடுக்மாட்றீங்க...
இவ்ளோ சொல்லிட்டீங்க...அதையும் சொலிருங்க...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
// சினிமான்னா உயிரு. ஆனா எந்த படத்தோட கதையையும் சொல்ல தெரியாது.//

//பந்தம்னு எப்படியாச்சும் தேத்திட்டு சுத்து பட்டி(வேணாம், சினிமாவோட போகட்டும்)//

ஆனாலும் ஆனாலும் அத்தைப்பையனை வுட்டுகொடுக்மாட்றீங்க...
இவ்ளோ சொல்லிட்டீங்க...அதையும் சொலிருங்க...
//

நன்றிங்க பிரதாப்....

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB