எங்க அப்பனுக்கு அறிவே இல்ல - கிராமத்து (அ) நியாயங்கள் - 3..

|


ஊருக்கு போயிருந்தப்போ அப்பாகிட்ட பேசிட்டு இருந்தேன். வீட்டு வேலை நடந்துகிட்டு இருந்துச்சி. நிறைய பசங்க வேலை செஞ்சிகிட்டு இருந்தாங்க.

அப்பா ஒரு பையனை பாத்து 'தம்பி உன் பேரு என்ன? யாரோட மவன்' னாரு.

'குமாரு, வீரமுத்து மவன்'னான்.

'யாரு, கடுக்காப்புளி வீரமுத்துவா' ன்னாரு.

தலையாட்டினான். அவன் அப்பாவோட பட்டப்பேரு போலிருக்கு.

'அதான் ஜாடை தெரியுது. உங்க அப்பங்கிட்ட என் பேர சொல்லு, நீ இங்க நிக்கறதுக்கே நான் தான் காரணம்'னு சொல்லிட்டு, 'இருபது வருஷத்துக்கு முன்னால'ன்னு ஆரம்பிச்சாரு.

'இவனோட அப்பா ஒரு பொண்ணோட பழகிட்டு இருந்தான், அந்த பொண்ணு கர்ப்பமாயிடுச்சி ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டான், கேட்டதுக்கு புடிக்கலையாம். என்கூட படுத்தமாதிரி தானே இன்னொருத்தன் கூடவும்னு சொன்னான்'.

'அந்த பொண்ணு அவனை கல்யாணம் பண்ணலைன்னா அப்பவே சாவறதுக்கு தயாரா இருந்துச்சி, அந்த பொண்ணுக்கு அவ்வளோ உசிரு. மிரட்டியும் பாத்தோம், 'சாட்சி இருக்கா, என்ன ஆதாரம் அந்த பொண்ணை நான் கெடுத்தேங்கறதுக்கு' ன்னான்.

'சரிப்பா ஆதாரமில்லாம யாரும் அவன் மேல பழி போடாதிங்க' ன்னு பஞ்சாயத்தை கலைச்சிட்டு, அந்த பொண்ண தனியா கூப்பிட்டு ஒரு விஷயத்த சொன்னோம்.

ஒரு வாரம் ஏதும் நடக்காதமாதிரி எல்லோரும் கம்முனு இருந்தோம். ஒருநாள் சாயங்காலம பெருசுங்க ரெண்டு பேர விட்டு அவனுக்கு பலான பலான கதையெல்லாம் சொல்லி ஆள ஒரு மாதிரியா ஆக்க சொன்னோம்.

நினைச்ச மாதிரியே ஆளு மந்திரிச்சிவிட்ட கோழி மாதிரி அந்த பொண்ணு வீட்டு பக்கம் சுத்த ஆரம்பிச்சுட்டான். நல்லா குளிச்சி மல்லிகைப்பூவெல்லாம் வெச்சுட்டு ஏற்கனவே சொல்லி வெச்ச மாதிரி கும்முனு இருந்துச்சி.

வழக்கமான சிக்னல், அவன் அந்த பொண்ண அவிரித்தொட்டி கிட்ட வரச் சொன்னதா பொண்ணு மூலமா தகவல் வந்துச்சி. நாங்க ஒரு பத்துபேர் மறைவா போய் உக்கந்துட்டோம்.

சரியா எட்டு மணி வாக்குல அந்த பொண்ணு அங்க வர, பின்னாடியே மோப்பம் புடிச்சிகிட்டு வந்தான். கிட்ட போயி கட்டிபுடிக்கும்போது நாங்க எல்லாம் அங்க போயி என்னப்பா சாட்சி தானே கேட்ட, எத்தனை சாட்சி பாருன்னு சொல்லி ரெண்டு பேரையும் ஒன்னா சேத்து விளக்கு கம்பத்துல கட்டி போட்டுட்டோம்.

தலைய தொங்கபோட்டுகிட்டே விடியற வரைக்கும் இருந்தான். அந்த பொண்ணு ரொம்ப சந்தோஷமா வெளிய காட்டிக்காம இருந்துச்சி. நேரா உள்ளுர் கடையிலேயே செட்டியாரை நடு ராத்திரியில எழுப்பி வேட்டி, சட்டை, புடவை எல்லம் எதுத்து விடியறதுக்குள்ள தெச்சி ரெடி பண்ணிட்டு ஒன்பது மணி வாக்குல நேரா ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு கூட்டிட்டு போனோம்.

கல்யாணத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னால இந்தா ஒன்னுக்கு வுட்டுட்டு வர்ரேன்னு உட்டான் சவாரி, ஆளு எஸ்கேப். சைக்கிள்ல அவன் வழக்கமா போற இடத்துக்கெல்லாம் ஆளுங்கள அனுப்பி தயரா இருக்க ரெண்டே மணி நேரத்துல சிக்கிட்டான்.

அப்புறம் கல்யாணம் முடிஞ்சி இதோ கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பையனே இப்ப இருக்கான்' னு முடிச்சிட்டு, 'இந்த கதை உனக்கு தெரியுமா' ன்னு குமார கேட்டாரு.

தெரியாதுன்னு தலையாட்டிட்டு, 'எங்க அப்பனுக்கு அறிவே இல்ல. நாலு மாசத்துக்கு முன்னால வெளியூர்ல கொத்து வேலைக்கு பொயிருந்தப்போ இதே மாதிரி எனக்கும் ஆயிடுச்சி'.

'அந்த பொண்ணு என்னை தனியா வர சொல்லிச்சு. ஏதோ பிளான்னு நினைச்சிட்டு அத ஒருதலையா பாத்துகிட்டிருந்த ஒரு தறுதலைய உன்னை தனியா பாக்க கூப்பிடுதுன்னு சொல்லிட்டு நான் எஸ்கேப் ஆயிட்டேன், அவன் கல்யாணம் பண்ணிட்டான் நான் தப்பிச்சுட்டேன்' னான்.

பின்குறிப்பு.

மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

36 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகு....,

பிரபாகர் said...

நன்றிங்க சுரேஷ்... வருகைக்கும், கருத்துக்கும்.

ஷங்கி said...

பையன் நெம்ப ஷார்ப்!!! எப்பவுமே பையன்கள் அப்பிடித்தானோ?!

வழக்கம்போல சூப்பர்!!!

பிரபாகர் said...

//
ஷங்கி said...
பையன் நெம்ப ஷார்ப்!!! எப்பவுமே பையன்கள் அப்பிடித்தானோ?!

வழக்கம்போல சூப்பர்!!!
//
வணக்கம் ஷங்கி... பாராட்டுக்கு நன்றி. இந்த காலத்துல பொண்ணுங்களுந்தான் ...

துளசி கோபால் said...

நடை நல்லா இருக்குங்க.


கொஞ்சம் தட்டச்சுப் பிழைகளைத் திருத்திட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும்.

எ.கா: போண்ணு = பொண்ணு

பிரபாகர் said...

//

துளசி கோபால் said...
நடை நல்லா இருக்குங்க.


கொஞ்சம் தட்டச்சுப் பிழைகளைத் திருத்திட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும்.

எ.கா: போண்ணு = பொண்ணு

October 26, 2009 10:13 AM
//

நன்றிங்க மேடம்... உடன் செய்கிறேன்...

புலவன் புலிகேசி said...

பையன் பொழைக்கத் தெரிஞ்சவன்.....

பிரபாகர் said...

//புலவன் புலிகேசி said...
பையன் பொழைக்கத் தெரிஞ்சவன்.....

October 26, 2009 10:31 AM//

நன்றி புலிகேசி... வரவுக்கும் கருத்துக்கும்.

Anonymous said...

அந்த ஊர்பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்போல இருக்கே :)

ஜெட்லி... said...

//பையன் பொழைக்கத் தெரிஞ்சவன்.....

//

repeatae

ஈரோடு கதிர் said...

அட இந்த டெக்னிக் வச்சு இன்னொரு நாட்டாமை படம் எடுத்திடலாம் போல இருக்கே...

வழக்கம் போலவே அருமையான எழுத்து நடை பிரபாகர்

மணிஜி said...

நல்லாயிருக்கு பிரபா..

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நடை வாழ்த்துகள்

velji said...

கதை நடை எளிமையாய்,காட்சிப்படுத்துதல் வலிமையாகவும் இருக்கிறது.
கடைசியில் வீரமுத்து மகன் இப்படி கட்டய குடுப்பான்னு நெனைக்கல்ல..

பிரபாகர் said...

//சின்ன அம்மிணி said...
அந்த ஊர்பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்போல இருக்கே :)

October 26, 2009 11:44 AM//

கிராமங்கள்ல கொஞ்சம் அதிகமாவே. அதான் தலைப்ப பாத்தீங்கல்ல?.... ரொம்ப நன்றிங்க, கருத்துக்கும், வருகைக்கும்.

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
//பையன் பொழைக்கத் தெரிஞ்சவன்.....
//

repeatae
//

நன்றி ஜெட்லி... உங்களின் தொடர் வருகை மற்றும் கருத்துக்கு.

பிரபாகர் said...

//
கதிர் - ஈரோடு said...
அட இந்த டெக்னிக் வச்சு இன்னொரு நாட்டாமை படம் எடுத்திடலாம் போல இருக்கே...

வழக்கம் போலவே அருமையான எழுத்து நடை பிரபாகர்
//

நன்றி கதிர்.... உங்கள் அன்பிற்கு, ஆதரவிற்கு...

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
நல்லாயிருக்கு பிரபா..

//

நன்றிங்கண்ணா...

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
நல்ல நடை வாழ்த்துகள்
//

நன்றிங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்ககிட்ட இருந்து கிடைக்கும் ஊக்கத்துல....

பிரபாகர் said...

//
velji said...
கதை நடை எளிமையாய்,காட்சிப்படுத்துதல் வலிமையாகவும் இருக்கிறது.
கடைசியில் வீரமுத்து மகன் இப்படி கட்டய குடுப்பான்னு நெனைக்கல்ல..
//
நன்றிங்க, உங்க கருத்துக்கள் இதமாயும், நிறைய உத்வேகத்தையும் கொடுக்குது.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

இப்புடிதா ஊர்ல நெறைய திரியிதுங்க .. சார்..

கலகலப்ரியா said...

//ஒன்னா சேத்து விளக்கு கம்பத்துல கட்டி போட்டுட்டோம்.//

அடப்பாவிங்களா.. நல்லா இருக்குங்க உங்க கிராமத்து நாயம்.. =))

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
இப்புடிதா ஊர்ல நெறைய திரியிதுங்க .. சார்..
//

ஆமாம் கிருஷ்ணா! இன்னும் திருந்தாம இருக்காங்க....

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
//ஒன்னா சேத்து விளக்கு கம்பத்துல கட்டி போட்டுட்டோம்.//

அடப்பாவிங்களா.. நல்லா இருக்குங்க உங்க கிராமத்து நாயம்.. =))

//

இதெல்லாம் சகஜமப்பா...

நன்றி ப்ரியா...

vasu balaji said...

கதையோட்டம் நல்லா இருக்கு. பாராட்டுகள்.

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
கதையோட்டம் நல்லா இருக்கு. பாராட்டுகள்.//

நன்றிங்கய்யா... உங்களின் அன்பான வழிகாட்டுதலுக்கும் பாராட்டுக்கும்.

ஹேமா said...

நல்ல ரசனையோட எழுதறீங்க பிரபாகர்.பாராட்டுகள்.

பிரபாகர் said...

//ஹேமா said...
நல்ல ரசனையோட எழுதறீங்க பிரபாகர்.பாராட்டுகள்.

October 26, 2009 2:03 PM//

நன்றிங்க ஹேமா, உங்களின் அன்பிற்கும், பாராட்டுக்கும்.

க.பாலாசி said...

அப்பன் எட்டடி பாய்ஞ்சா பையன் 16 அடி பாய்வாங்கறது சரியாத்தான் இருக்கு....

இவ்ளோ புத்திசாலித்தனமா புடிச்சிட்டு கடைசியா ஒரு ஒன் விஷயத்துல கோட்டை விட்டுட்டாங்களே. இதே மாதிரி ஊருக்கொரு மைனர் குஞ்சுங்க இருக்கத்தான் செய்றாங்க...

ரசிக்கும் எழுத்துநடையுடன் உங்களின் இடுகை நன்றாயிருக்கிறது அன்பரே...

பிரபாகர் said...

// க.பாலாசி said...
அப்பன் எட்டடி பாய்ஞ்சா பையன் 16 அடி பாய்வாங்கறது சரியாத்தான் இருக்கு....
//

நன்றி பாலாசி...

உங்கள் பின்னூட்டத்தின் ரசிகன் நான்...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லது அண்ணா

மீள் இடுகை எழுதுபவர்கள் கவனத்திற்க்கு...

இவ்வாறு மீள் இடுகை எழுதுவதால் நம்மின் சிந்தனை திறன் குறைவதாக பலருக்கு தோணலாம் முடிந்த மட்டிலும் மீள் இடுகை வெளியிடுவதை தவிருங்கள்...

அத்தனையும் புதுசாய் சிந்திக்க வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
நல்லது அண்ணா

மீள் இடுகை எழுதுபவர்கள் கவனத்திற்க்கு...

இவ்வாறு மீள் இடுகை எழுதுவதால் நம்மின் சிந்தனை திறன் குறைவதாக பலருக்கு தோணலாம் முடிந்த மட்டிலும் மீள் இடுகை வெளியிடுவதை தவிருங்கள்...

அத்தனையும் புதுசாய் சிந்திக்க வாழ்த்துக்கள்...
//
அன்பு வசந்த்!

இடுகை எழுத வந்த புதிதில் நமக்கெல்லாம் அறிமுகமே இல்லாத தருணத்தில் எழுதியவைகளை, கருவை மட்டும் வைத்துக்கொண்டு நடையை மெருகேற்றி வெளியிடுவதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

கருத்துக்கு நன்றி வசந்த்.

பிரபாகர்.

மணிகண்டன் said...

சூப்பர் முடிவு. கலக்கல் நடை.

பிரபாகர் said...

//
மணிகண்டன் said...
சூப்பர் முடிவு. கலக்கல் நடை.

October 28, 2009 1:44 AM
//

நன்றி மணி. உங்களின் பின்னூட்டத்தில் என்னை தொடர்ந்து செம்மைப்படுத்திவருகிறீர்கள். எனக்கு உங்களின் வார்த்தைகள் உற்சாக டானிக் மாதிரி.

துபாய் ராஜா said...

அந்த காலத்து பெருசுங்க திட்டமே திட்டம். எவ்வளவு அழகா பிளான் பண்ணி பொண்ணை கட்டி வச்சுருக்காங்க...

பையன் நிஜமாகவே எம்டன் மகன் தான்... :))

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
அந்த காலத்து பெருசுங்க திட்டமே திட்டம். எவ்வளவு அழகா பிளான் பண்ணி பொண்ணை கட்டி வச்சுருக்காங்க...

பையன் நிஜமாகவே எம்டன் மகன் தான்... :))
//

நன்றி ராஜா. சொல்றது சரிதான், கிராமத்து பெருசுங்க செய்யறதுல ஒரு அர்த்தம் இருக்கும்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB