மொன்னக்கத்தியும் மொத்த பனியனும் - கிராமத்து (அ) நியாயங்கள் - 2..

|

கிராமத்து (அ) நியாயங்கள் இடுகைல பாலமுருகனோட ரெண்டு கல்யாணத்தப் பத்தி சொல்லியிருந்தேன். அதுல கங்காதரன் கத்தியில குத்துனதா ஒரு தகவல் இருக்கும், அதோட விளக்கம்தான் இந்த பதிவு.

தங்கவேல் மகன் ராஜா தியாகம் பண்றேன்னு சொல்லி அந்த பொண்ணோட நிச்சயம் ஆயிடுச்சி. பால முருகன், அவனோட ஃபிரண்டு சதீஷு எல்லாம் சொல்லியும் அவன் கேக்கலை.

அப்போதான் நம்ம ஹீரோ கங்காதரன் லாரியில இருந்து வீட்டுக்கு வந்தான். பாலாவோட மாமன் பையன். எப்பவாச்சும் போதையில்லமா இருப்பான், என்கிட்டே எதாச்சும் பேசனும்னா, வாங்கணும்னா. 

ஃபுல் போதை. அத்த மவனுக்கு ஏற்பட்ட துன்பத்த கேட்டு 'துடிச்சி' போயிட்டு, இன்னொரு குவாட்டர அடிஷனலா ஏத்திகிட்டு நேரா சதீஷ கூட்டிகிட்டு பேயை பார்த்த கதையில வர்ற அரச மரத்துகிட்ட பைக்க நிப்பாட்டிட்டு பகல்ல ஆத்து வழியா போனானுங்க.

நல்ல வேளை பகல் நேரம், இல்லன்னா பேயெல்லாம் பயந்திருக்கும், இருந்தா... வேகமா போறத பாத்துட்டு எங்கப்பா காட்டில இருந்து வந்துகிட்டிருந்தவரு (அதிசயமா என்னிக்காவது காட்டுக்கு போவாரு) கங்காவ பாத்து, 'எப்படா வண்டியில வந்த, வேகமா எங்க போறீங்க' ன்னு கேட்டதுக்கு,

'ஒரு பைசலுக்கு போறேன் மாமா' ன்னு சொல்லவும், 'பாத்துடா, அவசரப்படாத' ன்னு சொல்லி அனுப்பிச்சிருக்காரு.

அப்பாவ பாத்ததும் சதீஷ் 'நான் அப்பாவ வீட்டுல விட்டுட்டு வர்றேன் மச்சி' ன்னு அவரோட வீட்டுக்கு போயிட்டான்.

எங்க காட்ட தண்டித்தான் ராஜாவோட காட்டுக்கு போகணும். போயிட்டு ராஜாவா பாத்து 'என்ன மாப்ளே கல்யாணமாமே? சொல்லவே இல்ல' ன்னு கேக்க, 

'இல்ல மாமா, உனக்கு பத்து தடவ கால் பண்ணுனேன், லைன் கிடைக்கல' ராஜா.

'இந்த போய் சொல்லாத... சரி என் மாமன் மவன் பாத்துகிட்டு இருக்கிற பொண்ண நீ கல்யாணம் பண்ணக்கூடாது, மறந்துடு. அது அவன் தோட்டத்துக் கிளி' கங்கா. 'இத போயி தெகிரியம் இருந்தா, என் அப்பன்கிட்ட சொல்லு' ராஜா.


'டேய் நான் சி.எம். கிட்டயே சொல்லுவேண்டா, எனக்கென்ன பயம், பயத்துக்கே நம்மகிட்ட பயம்ல' ன்னு சொல்லியிருக்கான். இந்த காலத்து பசங்க படத்துல நிறையா பன்ச் டயலாக்க பாக்குறாங்க இல்ல, அதோட எஃபெக்ட்.

'அதெல்லாம் தெரியாது, நாளார்னைக்கு கல்யாணம், வந்து சாப்பிட்டு போ'...ன்னுட்டு மாடு மேய்க்கற வேலையில ராஜா மும்மரமா இருக்க, கங்காவுக்கு கோவம் பொத்துகிட்டு வந்துடுச்சி.

'ஒரு பெரிய மனுஷன் படிச்சி படிச்சு சொல்றேன், ஏற மாட்டேங்குது, இந்த வாங்கிக்குன்னு சொல்லி இருப்பில வெச்சிருந்த கத்திய வயத்துல சட்டுன்னு குத்திட்டான்.

அவன் நேரம் அன்னிக்கு மிலிட்டரி டிரஸ் கலர்ல ஒரு மொத்தமா பனியன், உழவு ஓட்டும்போது மண்ணெல்லாம் அப்பி இன்னும் மொத்தமா போட்டிருக்க, அந்த கத்தியும் பன்னிய குத்த எப்பவோ வாங்கின மொன்ன கத்தியா இருக்க, சட்டுன்னு கொஞ்சம் பின்னுக்கு நகர... ராஜாவோட அதிர்ஷ்டம் வயத்தில பட்ட கத்தி அப்படியே மேல் நோக்கி சிராய்ச்சிடுச்சி.

எல்லாம் நொடியில நடந்துடுச்சி. அவன் கத்தறத பாத்துட்டு எல்லாம் ஒடி வர கங்கா எஸ்கேப். வீட்டுக்கு ஒடி வந்துட்டான்.

ஒரு மணி நேரம் கழிச்சி ஒரு கான்ஸ்டபிள் பைக்குல, ஸ்டேஷன்ல இருந்து வந்தாரு. பொடனையில போளிச்சுன்னு வெச்சு இழுத்துகிட்டு போனாரு.

அவங்க அம்மா கதறிகிட்டே ஓடிவந்து 'சாமி என் புள்ளைய காப்பாத்து... அடியோட விட்டுட சொல்லு, உள்ள கிள்ள போட்டுடப் போறானுங்க'...ன்னு என் தம்பிகிட்ட சொல்லுச்சி.

கங்காவோட வைஃபு நிற மாச கர்ப்பிணியா கூட நின்னுகிட்டிருந்துது. மொகத்துல எந்த கவலையும் இல்ல... 'அதுக்கு இது வேணும் ஊரு வம்பு நமக்கெதுக்கு? ன்னு அவங்க மாமியார் போனதுக்கு அப்புறம் சொல்லுச்சி.

என்ன பாத்து 'பிரவு, போனமாசம் லாரியில இருந்து வந்தான், உரத்த தின்னுபுட்டு எட்டாயிரம் செலவு வெச்சான், அதுக்கு முன்னால கொட்டைய தின்னு ரெண்டாயிரம்... என்ன பண்ணுவேன்' னு அழ,  

தம்பி, 'சரி சரி ஒரு ரெண்டாயிரம் ரெடி பண்ணு, பாத்துக்கறேன்' னு சொன்னான். செல் போன எடுத்து, 'சித்தப்பா, நான் திவா பேசறேன்.. கத்தியால குத்துனதுன்னு ஒரு கேசு வந்திருக்குமே?.... ம்... ரெண்டுமே நம்ம பசங்கதான். கேசு எழுதவேணாம்... ம்.... பணத்தோட வர்றேன், குத்துனவன கொஞ்சம் கவனிச்சு மட்டும் வைங்க... என்னாது ஐ விட்னசா, யாரு? ஓ அப்படியா, ஒன்னும் பிரச்சினை இல்ல சமாளிச்சிடலாம், ஒரு ஒன் அவர்ல வர்றேன்' னு சொல்லிட்டு வெச்சிட்டான்.

'டேய் என்னடா இது பெரிய ஆளா ஆயிட்டு வர்றே, ஃ போன் போடற, சித்தப்பா ங்கற' ன்னு சொல்ல 'அது நம்ம ஃ பிரண்டோட சித்தப்பா, கஞ்சமலைன்னு பேரு. ஒரு பெரிய காமடியா இருக்கும் கூட வர்றியா?' ன்னு கேட்டான்.

ஸ்டேஷன்ல கங்கா வை நல்ல அடிச்சு ஜட்டியோட உக்கார வெச்சிருந்தாங்க. ஒன்னும் நடக்காத மாதிரி எங்களை பாத்ததும் சிரிச்சான்.

ராஜாவோட அப்பா கங்காவ உள்ள தள்றதுலே குறியா இருந்தாரு. 'ஏதோ, நான் வேண்டற முருகன் அருளால செராய்ப்போட போயிடுச்சி' ன்னு பாத்துடறேன், தீத்துடறேன்னு சொல்லிட்டு 'குத்தும்போது பாத்ததுக்கு ஆளு இருக்குது தப்பிக்க முடியாது' ன்னாறு.

யாருன்னு கேட்டதுக்கு, 'நான்தான் திவா' ன்னு எலியன் வந்தாப்ல. சரவணன் பேரு, எலியன்னுதான் கூப்டுவோம்.

'நீ கண்ணால பாத்தியா'ன்னு கேட்டதுக்கு 'ஆமா திவா, அவன் கத்தறத பாத்துட்டு ஓடினோம், அவன் குத்திட்டு ஓடறத பாத்தேன்' னு சொல்ல,  

'அப்படியா மூணு விரல காட்டி இது எத்தனைன்னு அங்க இருந்தே சொல்லு' ன்னு கேட்டன். 'இவ்ளோ தூரத்தில இருந்து எப்படி தெரியும் னு பக்கத்துல வந்து எண்ணி பாத்துட்டு 'மூனு' ன்னு சொல்ல, எல்லாரும் சிரிச்சுட்டோம், ராஜாவோட அப்பா உள்பட.

'மாமா, இதெல்லாம் சாட்சின்னு நெனச்சிகிட்டிருகுற. அவன் பொண்டாட்டி நெற மாச கர்ப்பிணி. அவன் பண்ணுனது தப்பு. செலவுக்கெல்லாம் காசு வாங்கி தர்றேன், கல்யாணத்துல தலையிட மாட்டான், அதுக்கு நான் பொறுப்பு' ன்னு என்னன்னவோ சொல்லி, சித்தப்பாகிட்ட பணத்த கொடுத்துட்டு ஒரு வழியா முடிச்சி வெச்சான்.

'இதுக்கு மேல அந்த பொண்ண என் மவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டன்' னுட்டு கேச வாபஸ் வாங்கிட்டு போயிட்டாரு.

ரெண்டு நாளுக்கு அப்புறம் ராஜாவும் கங்காவும் ஃ புல்லா தண்ணி போட்டுக்கிட்டு 'மாப்ள, மாமா' ன்னுகிட்டு தெருவில ஒண்ணா ஆடிகிட்டு வந்தானுங்க.

பின் குறிப்பு.

பாலமுருகனோட இன்னைய நிலவரத்த பத்தி சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல்ல...? தம்பி ஃ போன்ல சொன்ன தகவல்படி வீதத் தகறார்ல மொத வாரம் சின்ன பொண்டாட்டி மருந்து குடிச்சிச்சாம். ரெண்டாவது வாரம் பெரிய பொண்டாட்டி அரளி கொட்டைய அரச்சு சாப்பிடுச்சாம். எல்லாம் காப்பாத்தற அளவுக்குத்தான்.

பாத்த பாலமுருகன் மூணாவது வாரம் மருந்து குடிச்சி பயமுறுத்த ரெண்டு பெரும் இப்போ ஒழுங்கா இருக்காங்களாம். ஆனா ஒன்னோட இருக்கும்போது இன்னொன்னு பக்கம் திரும்பி பாத்தாக்கூட மொத்து விழுவுதாம்...  

முன்னோட்டம்:

அடுத்த பதிவு தம்பி ராஜு வின் அன்பு வேண்டுகோளுக்காக தொடர்பதிவு...

1. அன்புக்குரியவர்கள் : அம்மா, அப்பா, அறிவு தந்த ஆசான், ஆருயிர் நண்பர்கள்...

2. ஆசைக்குரியவர் : வசந்த்... ஒ, எனக்கா... மழலைகள்...

3. இலவசமாய் கிடைப்பது : டி.வி, வேஷ்டி, சேலை, நாமம், அட்வைஸ். 

விரைவில்...

சதீஷோட கல்யாண மேட்டர் இன்னும் சுவராஸ்யமா இருந்துச்சி. அதையும் எழுதலாம்னு...

'நாளக்கி காலையில கல்யாணம்னா... பொண்ணு ஒடியாரப்போவுது. யாருக்கும் தெரியாது. உங்ககிட்ட மட்டும்தான் சொல்லறேன். திவா அண்ணன்தான் காரெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்குது' ன்னு சொன்னான்.  

ஒரு தகவல்... மௌனத்தால் கசியும் எனது அருமை நண்பர் கதிருக்கு இன்று பிறந்த நாள்... வாழ்த்துக்கள் நண்பரே! எல்லா நலன்களும் உங்களுக்கு குறைவின்றி கிடைக்க பிரார்த்திக்கிறேன்..


இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும் , உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கலையரசன் said...

சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே பிரபா...
அருமை!!

ப்ரியமுடன் வசந்த் said...

எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபாகர் நக்கல் அடுத்தபதிவிலா நடத்துங்கடி...

பிரபாகர் said...

//கலையரசன் said...
சொன்ன மாதிரியே எழுதிட்டீங்களே பிரபா...
அருமை!!
//

நன்றிங்க கலை...

பிரபாகர் said...

//எங்கள் பதிவுலக சாகச கவிஞன் கதிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபாகர் நக்கல் அடுத்தபதிவிலா நடத்துங்கடி..//

நன்றி வசந்த்... எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஆதரவு....

ஈரோடு கதிர் said...

பால முருகன் கதையில... ச்சீ.. வாழ்க்கையில இன்னொரு கதையா...

என்ன பிரபா... உங்க தம்பிதான் எல்லா இடுகைக்கும் மேட்டர் சப்ளையா...

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

அனுபவம் சரியான விறுவிறுப்பு

தொடருங்கள்


சரி அந்த பால முருகன் மேட்டரல.. தற்கொலை கேஸ் யார் மேலேயுமே போடலையா...
என்னப்பா... சும்மா டீ சாப்பிடற மாதிரி விஷம் சாப்பிடறாங்க

...

வாழ்த்துகளுக்கு நன்றி பிரபா

பிரபாகர் said...

//தற்கொலை கேஸ் யார் மேலேயுமே போடலையா...//

அதெல்லாம் உங்கள மாதிரி டவுன்ல... கிராமத்துல அதெல்லாம் கிடையாது...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கதிர்..

மணிஜி said...

சொல்லி வச்சு கும்முற தம்பி..கதிருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்(எனக்கு அடுத்த மாசம்)

பிரபாகர் said...

//தண்டோரா ...... said...
சொல்லி வச்சு கும்முற தம்பி..கதிருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்(எனக்கு அடுத்த மாசம்)//

நன்றி அண்ணே...

வாழ்த்துக்கும், கருத்துக்கும்...

அடுத்த மாசம் அண்ணனுக்கு பதிவே போட்டுடலாம்...

vasu balaji said...

இப்போ புரியுது ஏன் நம்ம கட்சின்னு. :)). நல்லா போகுது கதை

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
இப்போ புரியுது ஏன் நம்ம கட்சின்னு. :)). நல்லா போகுது கதை/

நன்றி சார். எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துக்கறதுதான்...

துபாய் ராஜா said...

அருமை பிரபாகர்.

நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னாலும் எல்லோருக்கும் புரியற மாதிரி தெளிவா எழுதியிருக்கீங்க....

நம்ம கிராமங்கல்ல இன்னும் இந்த பூச்சி மருந்து குடிக்கிறது தொடர்றது கொடுமை.... :((

நான் ஒவ்வொரு தடவை ஊருக்கு போகும்போதும் இப்படித்தான்.. அவன் மருந்து குடிச்சிட்டான், இவ மருந்து குடிச்சிட்டான்னு ஏகப்பட்ட கதை காதுல விழும்... :((

பிரபாகர் said...

//நிகழ்ச்சில ஏகப்பட்ட கேரக்டர்ன்னாலும் எல்லோருக்கும் புரியற மாதிரி தெளிவா எழுதியிருக்கீங்க....
//

நன்றி ராஜா. எழுதும்போது எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சி, நிறையா பேர யூஸ் பண்றமோன்னு... உங்க கருத்த பாக்கும்போது சந்தோஷமா இருக்கு.

யாசவி said...

prabhagar,

nice. which area all these happening?

interesting

:)

பிரபாகர் said...

//prabhagar,

nice. which area all these happening?

interesting

:)//

எல்லாம் நம்ம சொந்த ஊர்ல தானுங்க... சேலம் ஆத்தூர்... தெடாவூர் கிராமம்.

உங்கள் வரவிற்கு நன்றி...

பழமைபேசி said...

நல்லா இருக்கு...

//இந்த பதிவு.//

இந்த இடுகை!

மாப்பு பொறந்த நாள் தெரியப்படுத்தினதுக்கு நன்றிங்க!

பிரபாகர் said...

//பழமைபேசி said...
நல்லா இருக்கு...

//இந்த பதிவு.//

இந்த இடுகை!

மாப்பு பொறந்த நாள் தெரியப்படுத்தினதுக்கு நன்றிங்க!//

இந்த இடுகையை படித்து பாராட்டி பின்னூட்டமிட்டதுக்கு நன்றிங்க... இப்போல்லாம் ரொம்ப 'ங்க' உபயோகிக்கிறேன், உங்க பத்திவ படிச்சதில இருந்து....

இடுகைன்னு மாத்திட்டேன்.... நன்றிங்க...

கார்க்கிபவா said...

அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இருக்கு. கோர்வையா இருக்கு..

கதிருக்கு வாழ்த்துகள்..

பிரபாகர் said...

//கார்க்கி said...
அத இதன்னு கோர்த்தாலும் நல்லா இருக்கு. கோர்வையா இருக்கு..

கதிருக்கு வாழ்த்துகள்..//

நன்றி சகா... வருகைக்கும் கருத்துக்கும்....

கண்டிப்பா சொல்லிடறேன்.....

butterfly Surya said...

தொடருங்க்ள் பிரபா.

வாழ்த்துகள்.

பிரபாகர் said...

// butterfly Surya said...
தொடருங்க்ள் பிரபா.

வாழ்த்துகள்.//

நன்றி சூர்யா...உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு...

க.பாலாசி said...

//கஞ்சமலைன்னு பேரு.//

நல்ல பேரு...

//சின்ன பொண்டாட்டி மருந்து குடிச்சிச்சாம். ரெண்டாவது வாரம் பெரிய பொண்டாட்டி அரளி கொட்டைய அரச்சு சாப்பிடுச்சாம். எல்லாம் காப்பாத்தற அளவுக்குத்தான்.பாலமுருகன் மூணாவது வாரம் மருந்து குடிச்சி பயமுறுத்த//

அப்ப வாரவாரம் ஆரவாரம்னு சொல்லுங்க...

//ஆனா ஒன்னோட இருக்கும்போது இன்னொன்னு பக்கம் திரும்பி பாத்தாக்கூட மொத்து விழுவுதாம்... //

பின்ன தேவையா இதெல்லாம்....

நல்ல எழுத்து நடையுடன் கூடிய அனுபவக்கதை....

பிரபாகர் said...

//க.பாலாஜி said...
//கஞ்சமலைன்னு பேரு.//

நல்ல பேரு...

நல்ல எழுத்து நடையுடன் கூடிய அனுபவக்கதை....//

நன்றி பாலாஜி... பின்னூட்டம் எழுத உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்...

நாகராஜன் said...

சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்...

இந்த மாதிரி இருக்கறவங்க எல்லாம், மொன்ன கத்தி தான் வைச்சிருப்பாங்களோ? நல்ல வேலை மொந்தமா/மொத்தமா பனியன் போட்டிருந்தார்...

தொடர்ந்து கலக்குங்க பிரபாகர். தினமும் ஒரு இடுகைனு பட்டாசு கிளப்பறீங்க போங்க...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
சூப்பர்ங்க. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்...
...

தொடர்ந்து கலக்குங்க பிரபாகர். தினமும் ஒரு இடுகைனு பட்டாசு கிளப்பறீங்க போங்க... //


ராசுக்குட்டி ரொம்ப நன்றிங்க...

அப்புறமா கங்காவ கேட்டதுக்கு நிஜமா குத்துனா செத்திருப்பான், சும்மா பீதிய கிளப்ப ஆக்ட் பண்ணினான்னு சொன்னான்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB