குரு வணக்கம்...

|

பொறந்தது எழுபத்திரண்டு கடைசின்னாலும் சர்ட்டிபிகேட்ல ஆறாவது மாசம்னு கொடுத்ததால நாலரை வயசிலேயே ஒன்னாவது சேக்க கூட்டிட்டு போனாங்க.

காதுல கையை வெக்க சொல்லி எட்டாததால 'என்ன ராமசாமி பையனுக்கு இன்னும் வயசாகல போலிருக்கு' ன்னாரு கந்தசாமி சார்.

'சார் அ ஆ முழுசும் தெரியும், ஏ,பி,சி,டி எல்லாத்தையும் சொல்லுவேன், இ போடுவேன்' னு சொல்லிட்டு தட்டில இருந்த நெல்லுல விரலால இ போட்டேன்.

ஏன்னா எனக்கு அப்போ சுத்தி சுத்தி இ போடறது அவ்வளோ கஷ்டமா இருந்துச்சி. மூனு நாள் எடுத்துகிட்டேன்.

'அட பையன் பரவால்லயே, சுட்டியா இருக்கான்' னுட்டு சேத்துட்டு,

'குருமூர்த்தி இங்க வாங்க, ராமசாமி பையனை கூட்டிட்டு போங்க' ன்னு சொல்ல, என்ன கைய புடிச்சி மெதுவா கூட்டிட்டு போகும் போதுதான் அவர மொத தடவையா பாத்தேன், குள்ளமா சிரிச்ச முகத்தோட இருந்தாரு.

சட்டுனு கேட்டேன், 'சார் உங்க மேல எதோ வாசம் அடிக்குது'

'அதெல்லாம் ஒன்னுமில்ல வா' ன்னு கூட்டிட்டு போயி, மொத வரிசையில இருந்த ஒரு பையனை பின்னால போகசொல்லிட்டு உக்கார வெச்சாரு.

எல்லாத்தையும் வாடா போடான்னு சொன்னாலும் என்ன வாங்க போங்கன்னுதான் சொல்லுவாரு.

அப்பவோட டிரைனிங்ல முன்னாலயே அ, ஆ ஏ, பி.சி, எனக்கு தெரியும்ங்றதால என்ன சத்தம் போட்டு சொல்லி கொடுக்க சொல்லி பாத்துட்டு இருப்பாரு.

மொத நாளு அவரு மேல அடிச்ச வாசம் சுருட்டு வாசம்னு அப்புறமா தான் தெரிஞ்சது.

சுருட்டு வாசம், அதால ஆன காவி பல்லோட சிரிப்பு அதான் அவரோட அடையாளம்.

தப்பு பண்ணி, சத்தம் போட்டுட்டு இருந்தா குச்சால வெளுப்பாரு.

நான் அந்த குரூப்புல இருந்தாலும் நீ போயி அங்க உக்காரு, நல்ல பையன்னு அடிக்காம விட்டுடுவாரு.

வேலு 'சார் அவனும் தான் கத்துனான்' னு போட்டு கொடுத்தாலும், அவனுக்குத்தான் ரெண்டு அடி சேத்து விழும்.

சாதாரணமா அட்வைஸ் பண்ணுவாரு. 'பெரிய ஆளா வரனும், அப்பாவோட பேர காப்பத்தனும்' னு அடிக்கடி சொல்லுவாரு.

இன்டர்வல் சமயத்துல எல்லாரும் அவரு ஸ்கூலுக்கு வெளியே குப்பு குப்புன்னு சுருட்டு புடிக்கறத ஒளிஞ்சி, ஆசையா பாத்து கிட்டு இருப்போம். பாத்துட்டார்னா குச்செடுத்துகிட்டு துரத்துவாரு.

ஒருநாள் என்ன பாத்துட்டு 'நீயெல்லாம் அவ்னுங்களோட சேராத கெட்ட பசங்க' ன்னு சொன்னாரு.

கடைசி வரைக்கும் மூனு வகுப்புக்கு மேல் பாடம் நடத்துனதில்ல. நாங்க அவருக்கு வெச்ச பேரு ரயிலு வண்டி, பள்ளி கூடத்த தவிர புகையை விட்டுகிட்டே போறதால.

காது அவருக்கு கொஞ்சம் மந்தம், சத்தமாதான் பேசுவாரு, பேசனும்.எங்களுக்கு அப்புறம் வந்த பசங்கள்ளாம் எங்க அளவுக்கு அவருக்கு மர்யாதை தர்றதுல்ல. அவரும் பெருசா எதிர்பாக்க மாட்டாரு.

அவர எங்க பாத்தாலும் வணக்கம் சொல்லி முழங்காலை தொட்டு கும்பிடுவேன் பதறி போயி, தோள புடிச்சி தூக்கி 'என்ன இதெல்லாம்' னு சொல்லுவாரு.

அடிக்கடி ஒன்னே ஒன்னு சொல்லுவாரு. 'யாரும் உங்க செட்டு மாதிரி இல்ல, உங்கள மாதிரி பணிவா இல்ல' ன்னு.

டெல்லியில வேலை பாத்துகிட்டிருக்கும்போதுதான் கல்யாணம். லீவ் இல்லாததால கடைசி நேரத்துல தான் வந்தேன். கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஹால்ல பேசிகிட்டு இருந்தோம்.

ஆயா வந்து என்ன பாக்கறதுக்கு குருமூர்த்தி சார் வந்திருக்கறதா சொன்னுச்சி. வேளியே போனேன்.

தயங்கி தயங்கி நின்னுகிட்டிருந்தாரு. கையை புடிச்சி உள்ளே கூட்டிட்டு வந்தேன்.

'பிரபு, ஒங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன், பத்திரிகை வெக்க மறந்துட்டாங்க போலிருக்கு, அதான் நேர்ல பாத்து ஆசிர்வதிச்சுட்டு போலாம்னு வந்தேன்'னு சொன்னாரு.

அப்படியே அவரை கட்டி புடிச்சி அழுதுட்டேன்.

'மன்னிச்சுங்க சார், வெச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்' ன்னேன். அவரோட சுருட்டு வாசம் கூட ரொம்ப மணமா இருந்துச்சி.

'அய்யய்யோ இதுக்கு ஏன் கலங்குறீங்க' ன்னு கண்ண தொடச்சு விட்டாரு.

ரெண்டு பேரும் ஆசிர்வதம் வாங்கும்போது எனக்கு ஐம்பது ரூபாவும், அபிக்கு இருபது ரூபாவும் வெச்சி வாழ்த்தினாரு.

இன்னைக்கும் அவரு கொடுத்தத பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றேன்.

எங்க தெரு வழியா எப்போ வந்தாலும் நான் இருந்தாலும் இல்லாட்டாலும் வீட்டுக்கு வந்து விசாரிச்சுட்டு போவாரு.

ஒவ்வொரு தடவ ஊருக்கு போகும் போதும் அவரை பாத்து ஆசிர்வாதம் வாங்குவேன்.

சிங்கப்பூர்ல வேலை கிடைச்சு கிளம்பறதுக்கு மொத நாள் பஸ்ஸில பாத்தேன்.

ஏற்கனவே அப்பா மூலமா தெரிஞ்சிருப்பாரு போலிருக்கு. கைய புடிச்சி குலுக்கி வாழ்த்தினாரு.

'எங்க போனாலும் உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க' ன்னு சொல்லிட்டு, 'முடிஞ்சா திரும்பி வரும்போது எனக்கு காதுக்கு ஒரு மெஷின் வாங்கிட்டு வாங்க' ன்னு சொன்ன்னாரு.

பதிவு நீண்டுகிட்டே போகுது. அடுத்ததுல கண்டிப்பா முடிச்சிடறேன்.

இதோட தொடர்ச்சியை இங்க கிளிக் பண்ணி படிச்சிடுங்க...

23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கோவி.கண்ணன் said...

அனுபவம் அருமை ! பள்ளிக்கால பசுமை !

பிரபாகர் said...

//கோவி.கண்ணன் said...
அனுபவம் அருமை ! பள்ளிக்கால பசுமை //

வணக்கம் கோவி.கண்ணன். வாழ்த்துக்கு நன்றி...

நையாண்டி நைனா said...

good post nanba.

பிரபாகர் said...

//good post nanba.//

நல்ல விமர்சனம் நண்பா....
ஊக்கமளிக்கும் உங்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்... சாரி நைனா, உங்களுக்கு எழுதும் போது மட்டும் என்னன்னவோ வருது...

Raju said...

எல்லாரோட பள்ளிப்பருவத்துலயும், யாராவது ஒரு வாத்தியார் இப்பிடி இருப்பாங்க..!
அப்போ கண்டிக்கிறமாதிரி தெரிஞ்சாலும், பின்னாளில் அவங்களப் பத்தி தெரியும் பிரபாண்ணே.
ம்ம்..! அடுத்த பாகம் எப்போ...?

பிரபாகர் said...

அன்பு தம்பி,

அடுத்த பாகம் நாளைக்கு... அன்புக்கு நன்றி...

ஈரோடு கதிர் said...

எனக்கெல்லாம் இந்த மாதிரியான நினைவுகள் மறந்து கூடப் போய்விட்டது.

அற்புதமாக, ஒரு அழகிய அருவி போன்ற எழுத்து நடை...

முதலில்...
ஆரம்பபள்ளி ஆசிரியரை இவ்வளவு அழகாக நினைவுகூர்வதை மனம் திறந்த பாராட்டுக்கள்...

//அவரோட சுருட்டு வாசம் கூட ரொம்ப மணமா இருந்துச்சி.//

நெகிழ்ச்சியின் உச்சம்

வாழ்த்துக்கள் பிரபா...

பிரபாகர் said...

//வாழ்த்துக்கள் பிரபா...//

நன்றி கதிர் உங்களின் அன்பான பாராட்டுக்கு. வாழ்வில் முதலில் நிகழும் எந்த ஒரு விஷயத்திற்கும் தனி இடம் உண்டு. அந்த வகையின் எனது இதயத்தில் இவருக்கு நீங்காத இடம் என்றும் உண்டு...

sambasivamoorthy said...

//அப்படியே அவரை கட்டி புடிச்சி அழுதுட்டேன்.//

The way you presenting made eyes
Tears filled too. You are so sensitive person Prabaghar!!

பிரபாகர் said...

//Tears filled too. You are so sensitive person Prabaghar!!//

You are correct. உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த இயலாது அழுவதிலும், சிரிப்பதிலும். அன்பிற்கு நன்றி மூர்த்தி...

கிறுக்கல்கள்/Scribbles said...

Good writing inhibiting emotions. Identifying the noble teachers is really appreciated.
Keep it up. Blessings to you.

பிரபாகர் said...

//Keep it up. Blessings to you.//

Thanks for your blessing uncle.

Thnaks a lot for giving me confidence to write more and more.

butterfly Surya said...

எல்லோருக்கும் கொசு வத்திய சுத்த வச்சிடீங்க. நடை அருமை. உங்களிடம் பேசுவது போலவே இருக்கிறது உங்கள் எழுத்துகளும்.

அருமை. தொடருங்கள் பிரபா.

காத்திருக்கிறோம்.

பிரபாகர் said...

//அருமை. தொடருங்கள் பிரபா.

காத்திருக்கிறோம்.//

நன்றி சூர்யா...

உங்களைப்போன்றோரின் அன்புதான் என்னை நிறைய எழுதத்தூண்டும் சக்தி...

தினேஷ் said...

தொடர்ந்து எழுதுண்ணேஎ

பிரபாகர் said...

//சூரியன் said...
தொடர்ந்து எழுதுண்ணே//

நன்றி சூரியன், வரவிற்கும் வாழ்த்துக்கும். உங்களின் அன்பு இருக்கும் வரை கண்டிப்பாய் எழுதுவேன்...

நாகா said...

//'பிரபு, ஒங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன், பத்திரிகை வெக்க மறந்துட்டாங்க போலிருக்கு, அதான் நேர்ல பாத்து ஆசிர்வதிச்சுட்டு போலாம்னு வந்தேன்'னு சொன்னாரு.//

சற்றே இளகிய மனம் எனக்கும், அழுது விட்டேன் ப்ரபா.. மப்பில் இருப்பதாலோ என்னவோ? என்னுடைய பஹரைன் எண், +973-36828129

பிரபாகர் said...

நன்றி நாகா....

கண்டிப்பாய் பேசுவோம்....

நாகராஜன் said...

பிரபாகர்,

உண்மையிலுமே ரொம்ப உணர்ச்சி பூர்வமான பதிவுங்க இது... ஆரம்ப பள்ளி ஆசிரியரை நினைவு கூர்ந்த விதம் மிக மிக அருமை. இது போன்ற நல்ல மனிதர்கள்/ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் இது போன்ற ஆசிரியர் ஒருவராவது இருந்திருப்பார் என நினைக்கிறேன். எனக்கு நிறைய ஆசிரியர்கள் இன்னமும் மிக நன்றாக நினைவில் உள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் நினைவில் உள்ளனர்.

உங்களை போலே எனக்கும் காதை தொட்டு காட்ட சொன்னார்கள். ஆனால் எட்டாத காரணத்தால் என்னை ரெண்டு வருடம் முதல் வகுப்பிலயே இருக்க வைத்து விட்டார்கள் (வீட்டுக்கு பக்கத்திலே ஒரு ஆசிரியை இருந்தார் அவருடனும் அக்காவுடனும் முதல் வருடம் சென்றேன்) அடுத்த வருடம் இரண்டாம் வகுப்பு தான் போவேன் என்று நான் அழுததும் என்னை நான்காம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் அப்படியே தூக்கி வந்து மறுபடியும் முதல் வகுப்பிலயே உக்காற வைத்ததும் இன்னும் பசுமையான நினைவுகள். அதிலே இன்னும் ஒருவரின் முகம் அப்படியே நினைவில் உள்ளது. ஒவ்வொரு வருட படிப்பும், அந்த வருட வகுப்பாசிரியரும் இன்னும் நினைவில் உள்ளார்கள். பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு மிக்க நன்றி பிரபாகர். என்னை விட்டா இன்னும் எழுதிட்டே இருப்பேன். நன்றி...

பிரபாகர் said...

http://maaruthal.blogspot.com/

ராசுக்குட்டி,

நீண்டதொரு பின்னூட்டத்துக்கு நன்றி. நாமிருவரும் வயதினில் மட்டுமல்ல, எண்ணம் கருத்து ஆகியவற்றிலும் மிக ஒத்திருக்கிரோம். நண்பராய் நீர் கிடைத்தது என் பாக்கியம். நண்பர் கதிர் அவர்களின் கசியும் மௌனம்(http://maaruthal.blogspot.com/) படித்து பாருங்கள். அவரிடமும் நிறைய உணர்வீர்கள். உங்களால் நிறைய பட்டை தீட்டப்படுகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

கொசுவத்தி சுத்தியாச்சா - ஆரம்பப்பள்ளி வாழ்க்கை என்பது எளிதில் மறக்க இய்லாது - எத்தனை எத்தனை நிகழ்வுகள் - மகிழ்ச்சியான தருணங்கள் - அசைபோட்டு ஆனந்தித்து இடுகை இட்டவிதம் நன்று

நல்வாழ்த்துகள் பிரபாகர்

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

நேரமிருப்பின் படிக்கவும்

http://cheenakay.blogspot.com/2007/11/5.html

நல்வாழ்த்துகள்

ஆர். அபிலாஷ் said...

பிரபாகர் நன்றாக எழுதுகிறீர்கள். மிக அரிதாகவே நேரடியாக எளிதாக எழுதி பாதிப்பேற்படுத்துபவர்களை பார்க்க முடிகிறது. சொல்லி விட்டு கருத்து நீட்டாமல் நிறுத்திக் கொள்வதும் நல்ல எழுத்துக்கு அடையாளம். உங்களிடம் உள்ள களங்கமற்ற தன்மையையும் குறிப்பிட வேண்டும்.
thiruttusavi.blogspot.com

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB