சுதந்திரதின அனுபவம்

|

சுதந்திரம் வாங்கி, நாம இப்போ சுதந்திரமா இருக்கோமான்னு ஆராயாம சுதந்திர தினத்த பத்தி ரெண்டு விஷயமும் என்னோட ஆதங்கமும் தான் இந்த பதிவு(இதே ஆதங்கத்த நிறைய பேர் சொல்லியிருக்காங்க, இருந்தாலும் எல்.கே.ஜி டீச்சர் ஏ, பி. சி, டி ஐ ஒவ்வொரு வருஷமும் சொல்லித்தர்றதில்லையா?)

அமெரிக்கா போற கனவில் இன்டர்வியூ எல்லாம் முடிச்சி ஆஃபர் வாங்கி, விசா ஸ்டாம்பிங் முடிச்சி கனவோட(கொஞ்சம் திமிரோடன்னு சொன்னாலும் சரிதான்) சென்னையில சுத்திகிட்டிருந்தேன். (போன பதிவு பந்தயம் நடந்த சில நாளுக்கு அப்புறம்)

மார்ச் மாசமே விசா ஃபர்மாலிடி எல்லாம் முடிஞ்சாலும், டிசம்பர் வாக்குல தான் வர்ற மாதிரியிருக்கும்னு தகவல் வர டில்லி பக்கத்துல மோதிநகர்(உ.பில இருக்கு) காலேஜ்ல ஆறு மாசம் மட்டும்தான் வேலை செய்வேன்னு தெளிவா சொல்லிட்டு சேர்ந்தேன்.

நிறையா வித்தியாசம் இருந்துச்சி. நாமெல்லாம் இந்தியாவை ஒரே நாடா பாத்தாலும், எத்தனை வெறுபாடு கலாச்சாரம், மொழி, உடைன்னு.

புதுசானா வாழ்க்கை ரொம்ப புடிச்சி போச்சு. பசங்ககிட்ட ரொம்பவும் நல்ல பேரு. ஹாஸ்டல் வார்டன், மெஸ் இன்சார்ஜ்னு நிறையா பொறுப்புங்களை கொடுத்தாங்க.

சுதந்திர தினம் வந்துச்சி. பசங்க பொண்ணுங்கல்லாம் ரொம்ப ஆர்வமா, ராப்பகலா சுதந்திர தினத்த கொண்டாட தயார் படுத்தினாங்க.

அங்க, மிருத்தின் ஜெயின் வர்மான்னு ஒரு பையன். கடைசி வருஷம் படிச்சிகிட்டிருந்தாப்ல. சுருக்கமா சொன்னா ரொம்ப மக்கு. கொஞ்ச பேப்பரத்தான் பாஸ் பண்ணியிருந்தாப்ல. கையெழுத்து சுத்தமா யாருக்கும் புரியாது.

தூய்மையான ஹிந்தியில தான் பேசுவாப்ல. வாத்தியாருங்கள்ல என் மேல அவருக்கு ரொம்ப மரியாதை.

புதுசா கத்துகிட்டிருக்கிற என்னோட ஹிந்தி மாதிரியில்லாம அவரோட இங்கிலீஷ் கொஞ்சம் நல்லா இருக்கும்.

யாருக்கும் சொல்லாத ரகசியத்த உங்களுக்கு சொல்றேன்னு ஒரு நாள் ஒரு ஃபோட்டோவ காட்டி இது தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு காமிச்சாப்ல.

கல்யாணம் டிகிரி முடிச்சதுக்கு அப்புறமான்னு கேட்டேன்.
'இல்ல சார், வருஷம் முடிஞ்சதுக்கப்புறம், டிகிரி முடிஞ்சி கல்யாணம்னா கல்யாணமே பண்ணிக்க முடியாது'ன்னு ரொம்ப 'நம்பிக்கையா' சொன்னாரு.

'பொண்ணு வீட்டுல'ன்னு இழுத்தேன்.

'வருஷம் முடிச்சா போதும்'னு சொல்லிட்டாங்கன்னு பெருமையா சொன்னாரு.

ரொம்ப அற்புதமா விழாவ நடத்துனாங்க. இன்சர்ஜ் விஸ்வநானாதன் கொடியேத்தினாரு.

மி.ஜெ.வர்மா ஆக்ரோஷமா அரை மணிநேரம் பேசினாரு. பலத்த கைத்தட்டல். புரியலன்னாலும் நானும் சேந்து தட்டினேன்.

எங்கிட்ட வந்தாப்ல. 'ரொம்ப நல்லா பேசினீங்க'ன்னு சொல்ல, பேசுனது புரிஞ்சுதா சார்'னு கேட்க,

'சில விஷயங்களுக்கு மொழி புரியனும்னு அவசியம் இல்ல'ன்னு சொல்லிட்டு அவரோட நாட்டு பற்றை மெச்சினேன்.

என்ன பேச அழச்சப்போ, இங்கிலீஷ்ல பேசினேன், காந்தி, பகவத் சிங், திலகர்னு சொல்றப்போ நிறைய கைத்தட்டினாங்க. கட்டபொம்மன், பாரதி சுத்தமா தெரியல.

கடைசியா முன்னாலயே தயார் பண்ணின நாலு வரியை முழு ஹிந்தியில பேச, முடிச்சவுடனே மி.ஜெ.வர்மா ஓடி வந்து மேடையிலயே என்ன கட்டி புடிச்சி பாராட்டுனாப்ல.

'ஐ.லவ்.யூ சார், ஆப்கா ஹிந்தி பஹூத் அச்சா'ன்னு சொன்னாரு.

சரி நாம பேசினதுல கடைசி நாலு வரி நல்லா புரிஞ்சிருக்குன்னு முடிவு பண்ணிட்டேன்.

எல்லாம் முடிஞ்சது. மனசுக்கு நிறைவா இருந்துச்சி.

மூனே முக்கால் வாக்குல என் ரூம்ல இருந்த இன்டர்காம் அடிச்சது.

மி.ஜெ.வ தான் பேசினாப்ல. சூரியன் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல மறைய போகுது, கொடிய கீழ இறக்கனும்னு சொன்னாரு.

நான் வரனுமான்னு கேட்டேன், தேவையில்ல சார், விஸ்வனாதன் சார் கிட்ட சொல்லிடுங்கன்னு சொன்னரு.

ஃபோன் பண்ணி அவருகிட்ட விஷயத்த சொல்லிட்டு மெஸ் கணக்கெல்லாம் பாத்துகிட்டு பிஸியா இருந்தேன்.

ஆறு மணியிருக்கும், விஸ்வநாதன் கதறிக்கிட்டு ஃபோன் பண்ணினாப்ல, போலீஸ் வந்திருக்குன்னு.

அடிச்சி புடிச்சி ஓடினா, நாலஞ்சி போலீசோட நம்ம மி.ஜெ.வ. கொடிய நேரத்துக்கு இறக்கலன்னு கம்ப்ளைன்ட் பண்ணி கூட்டிட்டு வந்திருக்காப்ல.

மி.ஜெ.வ. கோவமா விஸ்வனாதன பாத்து, 'அந்த ஆளை ஜெயில போடுங்க, பத்து தடவ ஃபோன் பண்ணி சொன்னேன், அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்றாரு'.

அப்புறமா அவர சமாதானப்படுத்தி எல்லாம் சரி பண்ணினேன்.

அவருகிட்ட கேட்டேன், 'நீங்களே இறக்கியிருக்கலாமே'ன்னு.

'இல்ல சார், அவரு தானே கொடியை ஏத்துனாரு, பொறுப்பா நீங்கள்லாம் இருக்குபோது. அதனால அவருதான் இறக்கனும்னு பல தடவ ஃபோன் பண்ணினேன். அவமானப்படுத்தற மாதிரி பேசினாரு. அதான்'னாரு.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, நம்ம ஊர்ல கொடி தலை கீழா பறக்க விட்டிருந்தத பாத்து பதறி ஹெட் மாஸ்டர்கிட்ட சொன்னேன்.

நான் சொல்றது தப்புன்னு சொல்லி சாதிச்சி, பையன விட்டு ஒரு பாடபுத்தகத்தை எடுத்து வர சொன்னாரு.

பாத்துட்டு, பக்கத்துல இருந்த ஒரு பையனை ஒழுங்கா கட்ட வேண்டியது தானேன்னு பொளிச்சுன்னு வெச்சாரு.

கடைசியா என்னோட ஆதங்கம்... வட இந்தியாவ விட தென்னிந்தியாவில கொஞ்சம் நாட்டுப்பற்று கம்மியா இருக்கோன்னு தோனுது. போர் நடந்தா பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்.

ரெண்டாவது நாம எல்லையோரமா இல்லாததும் நேரடி விளைவுகளை பாக்காததும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.

படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க....

வெளிநாட்டுல இருந்தாலும், தாய் மண்ணே வணக்கம், வந்தே மாதரம்.

வெல்க பாரதம்.

பிறந்த மண்ணை பிரிந்து வாடும்,

பிரபாகர்.

******யூத்ஃபுல் விகடனில் 'குட் ப்ளாக்'-ல் வந்திருக்கிறது....******


27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

பிரபா..

செதுக்கியிருக்கிறீர்கள்

அருமையான பதிவு

சிந்திக்க தூண்டும் கருத்துகள்

பலருக்கு சுதந்திர தினம் ஒரு விடுமுறை தினம் என்ற உணர்வுதானே..

வர்மாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

பிரபாகர் said...

//பலருக்கு சுதந்திர தினம் ஒரு விடுமுறை தினம் என்ற உணர்வுதானே..//

நன்றி கதிர்,

யதார்த்தமான கருத்து.

இன்றும் அந்த மாணாக்கரோடு தொடர்பில்லையே என பெரிதும் வருந்துகிறேன்.

ஈரோடு கதிர் said...

பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங்கள்

butterfly Surya said...

நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிருப்பது இயல்பா இருக்கு.

கதிர் சொல்வது போல இங்கே விடுமுறை தினம் மட்டுமே.

தொடருங்கள்.

பிரபாகர் said...

//பிராபாகர் உங்க ஓட்டை தமிழ்மணத்தில் பதிவு செய்யுங்கள்//
இதுவரை செய்ததில்ல. இன்று செய்துவிட்டேன், உங்களின் வேண்டுகோளுக்கிணங்க....

Raju said...

\\"ஆப்கா ஹிந்தி பஹூத் அச்சா"\\

ஆப்கா பதிவு பி பஹூத் அச்சா ஹே பையா....!

தேசிய கொடி கலர்லயே, பதெவெழுதியிருக்கீங்க..! நல்லாத்தான்யா யோசிச்சிருக்கீங்க..!
அந்த எல்.கே.ஜி. டீச்சர் மேட்டர் சூப்பரு.

பிரபாகர் said...

//நல்லாயிருக்கு பிரபா. அழகா பேசுவது போலவே எழுதியிருப்பது இயல்பா இருக்கு.//

நன்றி சூர்யா!
உங்களிடமிருந்தும், நண்பர் கதிரிடமிருந்தும் சுதந்திரத்தைப்பற்றி ஒரு பதிவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பிரபாகர் said...

//தேசிய கொடி கலர்லயே, பதெவெழுதியிருக்கீங்க..! நல்லாத்தான்யா யோசிச்சிருக்கீங்க..!
அந்த எல்.கே.ஜி. டீச்சர் மேட்டர் சூப்பரு.//

வெள்ளை கலர்ல எழுதி, எதுவும் தெரியாம, கொழம்பிப்போயி, வேற மாத்தி... படாத பாடு பட்டுட்டேன் தம்பி. கண்டுபுடிச்சி பாராட்டுனதுக்கு நன்றி...

கிறுக்கல்கள்/Scribbles said...

Good Prabhu.My friends in Punjab and Rajasthan are so patriotic and even they decide one person from the family to the military service. My friend Pathania repented not to be in military service. His brother was a military man and he was killed in a Bus bomb blast in Punjab during 1989. When I met him last month he said he would like to join his son to military! You are correct, the north Indians particularly those living in the borders suffered a lot of troubles, agony -physical and mental. This definitely make them to fight. We are very good in reading historic novels and talking about the old days. Well the family and elders also should play a role to inform the younger generation about the freedom struggles. It is a long way to go. But it is possible. If possible read the book FREEDOM AT MIDNIGHT. ( I am not able to write in Tamil. Sorry for that - may be your one of your blog reader- kathir- may not like this English writing) Good keep it up.

பிரபாகர் said...

//Sampathkumar said...
Good Prabhu.My friends in Punjab and Rajasthan are so patriotic and even they decide one person from the family to the military service. //

நன்றி மாமா உங்களின் அருமையான பின்னூட்டத்துக்கு. கதிர் தமிழ் மொழியை கற்பதை வெறுப்பவர்களைத்தான் சாடுகிறார்.
இதன் மூலம் அவருக்கும் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் அழகாக தமிழிலும் கவிதை எழுதுவீர்கள் என்று.

ஜெட்லி... said...

//
கடைசியா என்னோட ஆதங்கம்... வட இந்தியாவ விட தென்னிந்தியாவில கொஞ்சம் நாட்டுப்பற்று கம்மியா இருக்கோன்னு தோனுது. போர் நடந்த பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்//

உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்,...

பிரபாகர் said...

//உங்கள் ஆதங்கம் நியாயமானது தான்,...//

நன்றி ஜெட்லி உங்களின் மேலான வரவிற்கும், பதிவிற்கும்.

பிரபாகர்.

நாகராஜன் said...

உங்களோட அனுபவங்களை பகிர்ந்துக்கும் விதம் அருமைங்க பிரபாகர். ஒவ்வொரு அனுபவமும் ஒரு படிப்பினை என்பது எத்தனை உண்மையாக இருக்குதுங்க. சரியான சமயத்தில் ஒரு சரியான பதிவு எழுதிருக்கீங்க. பாராட்டுகள். நம்ம நண்பர்கள் இங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல சுதந்திர தினம் என்பது ஒரு விடுமுறை நாள் என்ற உணர்வு தான் நிறைய பேரிடம் இருக்குதுங்க. இந்த பதிவின் நாயகன் மிருத்தின் ஜெயின் வர்மாவுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

பதிவை நமது தேசிய கொடியின் வர்ணத்திலேயே எழுதியிருப்பது சிறப்புங்க. கலக்குங்க நீங்க.

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா என்பது நம்ம நாட்டை விட்டு வந்து நம்ம நாட்டை பற்றிய நினைப்பை விடாதவர்களை கேட்டால் எத்தனை உண்மையான வரிகள் என்று பக்கம் பக்கமாக எழுதுவது போல கூறுவார்கள் என்பது எனது கருத்து.

பிரபாகர் said...

நன்றி ராசுக்குட்டி...

உங்களின் அன்பும் பாராட்டும் என்னை நிறைய எழுத தூண்டுகிறது.

நீங்கள் தரும் உற்சாகம் எனக்கு இன்னும் நன்றாக எழுத ஏதுவாயிருக்கிறது.

உங்களின் நட்பினால் நான் பெருமை கொள்கிறேன்....

க.பாலாசி said...

//போர் நடந்த பாதிக்கப்படறது நம்ம சைட்ல ரொம்பவும் கம்மியான பேருதான் நினைக்கிறேன்.
ரெண்டாவது நாம இல்லையோரமா இல்லாததும் நேரடி விளைவுகளை பாக்காததும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.//

உண்மைதான் அன்பரே.செத்தாதான் நமக்கு சுடுகாடு போற வழி தெரியும் விளையாட்டா சொல்லுவாங்க. அதுபோலதான் இதுவும். நாம அனுபவிக்காதவரை நமக்கு அந்த வலி தெரியாது.

ஆனாலும் நமது நாட்டுபற்றை(ஒரு சில மூடர்களை தவிர்த்து) குறைத்து அளவிட முடியாது என்று கருதுகிறேன்.

பிரபாகர் said...

//அனுபவிக்காதவரை நமக்கு அந்த வலி தெரியாது//

நன்றி பாலாஜி...

உங்களின் கருத்துக்கு உடன்படுகிறேன். வருகையால் மிக்க சந்தோஷம்.

Raju said...
This comment has been removed by the author.
Raju said...

விகடன் Good Blog வாழ்த்துக்கள்.
:)

பிரபாகர் said...

தகவலுக்கும், அன்பிற்கும் நன்றி தம்பி....

அன்புடன் அருணா said...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???

பிரபாகர் said...

//சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா ???//

நூறு சதம் உண்மை... அடிக்கடி நான் நினைக்கும் ஒர் வாசகம்....

வருகைக்கு நன்றி...

ஈரோடு கதிர் said...

பிரபா....
இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

பிரபாகர் said...

//இளமை விகடன் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்//

நன்றி கதிர்... உங்களுடையது வந்திருப்பதை பார்க்கப்போய் தான் அதன் கீழே எனதும் இருக்க, பெரிதும் மகிழ்ந்தேன். நண்பர்களிருவரும் சேர்ந்து அங்கீகரிக்கப்படுதலைவிட சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?

நாகராஜன் said...

வாழ்த்துகள் பிரபாகர்...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
வாழ்த்துகள் பிரபாகர்...//

வாழ்த்துக்கு நன்றி ராசுக்குட்டி... எல்லாம் உங்களின் அன்பும் ஆதரவினாலும்தான்...

அமுதா கிருஷ்ணா said...

டி.வி ஷோ எல்லாம் கட் செய்யணும்.இந்த சினிமாக்காரர்களுக்கு தான் விடுதலை கிடைத்த மாதிரி..எரிச்சலா இருக்கு..

பிரபாகர் said...

//அமுதா கிருஷ்ணா said...
டி.வி ஷோ எல்லாம் கட் செய்யணும்.
//

சரியாக சொல்லியிருக்கிறீர்கள், சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியென அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. கொடியேற்றும் நேரத்தில் எல்லா சேனலிலும், எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியும் இல்லாமல் இருக்க வேண்டுமென சட்டம் இயற்ற வேண்டும்.

உங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB