பந்தயம் - உட்டத புடிக்கனும்...

|

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டுல வேலை தேடும் போது என்னோட கிளாஸ் மேட் ரமேஷ் கூட தங்கியிருந்தேன்.

அது ஒரு வீடு. ரெண்டு ரூம், ஹால். நாங்க நாலு பேரு. பிரபு (அவன் பேரே பிரபு, என்ன கூப்பிடறது பிரபு) மளிகை கடையும் கோக் டீலர்ஷிப்பும் எடுத்திருந்தான். ரமேஷ், சுந்தர் மூனு பஸ்ச வெச்சிகிட்டு டிரவல்ஸ் நடத்திகிட்டிருந்தாங்க.

ரமேஷ் கம்ப்யூட்டர் படிச்சாலும் லைன மாத்திகிட்டான். ரூமுல நடந்த ரெண்டு சம்பவங்களை பத்திதான் இந்த பதிவு.

ஒருநாள் ஒரு லைட்டர வெச்சிகிட்டு சுந்தர் பத்தவைக்க முயற்சி பண்ணிடிருந்தாரு, தம்மு அடிக்கல்லாம் இல்ல, சும்மா தான்.

ஒரு முக்கியமான விஷயம், சுந்தர் எதுக்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவாப்ல. என்னவிட நாளு வயசுக்கு பெரிய ஆளு.

'சுந்தர்ஜீ, நான் ட்ரை பண்ணி பாக்கட்டுமா' ன்னு கேக்க, 'ஆமா கிழிச்ச, ரொம்ப நேரமா முயற்சி பன்றேன், சரி ஒரு பந்தயம். மூனு தடவைக்குள்ள பத்த வெச்சுட்டீன்ன பத்து ரூபா தர்றேன். இல்லன்ன நீ அஞ்சு ரூபா தரனும், ஓக்கேவா' ன்னாரு.

'ஒரே தடவையில என்னால முடியும்' னு சொல்லவும், கொஞ்சம் ஷாக்காயி, 'அப்படி ஒரு தடவையில செஞ்சிட்டா நான் இருபது தரேன் நீ அஞ்சு கொடுத்தா போதும்' னு சொன்னாரு.

வாங்கி ரோலர நல்ல கீழ அழுத்தி பட்டன அழுத்த, பட்டுனு பத்திகிச்சி.

'ஒனக்கு இன்னிக்கு இருவத அழுவுனும்னு என்னோட விதி' ன்னு சொல்லிட்டு கொடுத்துட்டு ரமேஷ் கிட்ட,

'பிரபா இன்னிக்கு டின்னருக்கு நம்மகிட்ட ஆட்டய போட்டாச்சு' ன்னு சொல்லிட்டு , எப்படிய்யா செஞ்சன்னு நம்ப முடியாம கேக்க,

'இல்லஜி, ரொம்ப நேரமா முயற்சி பண்றீங்க, கண்டிப்பா சூடாயிருக்கும், ரெண்டாவது இன்னும் கொஞ்சம் பெட்டரா நான் செய்வேன்னு நெனச்சேன்' னு சொன்னேன்.

ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பி 'பிரட்'ட வெச்சு பெரிய மேஜிக் பண்னிட்டிருந்தான்.

பந்தயம் ரொம்ப சிம்ப்பிள், பிரட்டோட ஒரு ஸ்லைச ஒரு நிமிஷத்துல சாப்பிடனும் அவ்வளோதான்.

சாப்புட்டுட்டா பத்து ரூபா வாங்கிக்கலாம், இல்லன்னா கொடுத்திடனும். நான் அண்ணங்கறதால காசில்லாம ட்ரை பண்ணினேன். ஒரு நிமிஷத்துக்குள்ள பாதி கூட முடியல.

இந்த விஷயம் ஞாயித்து கிழம சாயங்காலம் எல்லாரும் டி.வி. பாத்துகிட்டிரும்போதுதான் ஞாபகம் வந்துச்சி.

'சுந்தர் ஒரு பந்தயம்' னு சொன்னேன்.

'ஏப்பா டின்னருக்கு காசில்லையா' ன்னு கேக்க

சிரிச்சுகிட்டே, 'ரொம்ப சிம்பிள், ஒரு பிரட் ஸ்லைச ஒரு நிமிஷத்துல சாப்பிடனும்னு சொல்ல', 'இது ரொம்ப சாதாரணம், பெட்டு எவ்வளோ' ன்னு ஆர்வமாயிட்டாரு.

'பத்து' ன்னு சொல்லவும், நிறையா உங்கிட்ட விட்டிருக்கேம்பா, இருவது' ன்னு கேக்க சொந்த செலவுல மில்கா பிரட் ஒன்னு வாங்கிகிட்டு வந்தேன்.

சுந்தர் ஒரு ஸ்லைச எடுத்து சாதரணமா வாயில போட்டு சப்பிட முயற்சி பண்ண ஒரு நிமிஷம் முடிஞ்சும் வாயில பாதிக்கு மேல அப்படியே இருக்க இருவத கொடுத்துட்டு தோல்விய ஒத்துகிட்டாப்ல.

'காசு புடுங்கறதுக்கு வித விதமா யோசிக்கிறங்கப்ப'னு சொல்லிட்டிருக்கும் போது வெளியே போன பிரபு வந்தான்.

'என்ன சுந்தரண்ணா புலம்பிகிட்டிருக்க, பிரபாகர்கிட்ட காச உட்டுட்டியா?' ன்னான்.

'ஆமாப்பா' ன்னு சொல்லும்போதே பந்தயத்த பத்தி நான் விளக்க,

'எப்பா கொஞ்சம் சும்மா இரு. நாந்தான் பிரபுகிட்ட கட்டுவேன், விட்டத புடிக்கனும்' னு சுந்தர் சொல்ல,

'இல்லயில்ல நாந்தான் இந்த பந்தயத்த ஆரம்பிச்சேன், காசு போட்டு பிரட்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன், நான் தான் ஓனர்னு சொல்ல',

'எவ்வளோப்பா பிரடு, இந்த பத்த புடி, ஒரு நாளாவது என்னை ஜெயிக்க விடு'ன்னாரு.

பிரபு 'பந்தயம் எவ்வளோ' ன்னு கேக்க, 'அம்பது' ன்னு சுந்தர் சொன்னாரு.

பணத்த பொது ஆளு கையில கொடுத்துட்டு வாட்சுல நொடி முள்ளு பன்னண்டுகிட்ட வரும்போது பிரபு வாயில போட்டு மெதுவா மெல்ல ஆரம்பிச்சான். சாப்பிடற மாதிரியே தெரியல.

சுந்தர் ரொம்ப குஷியாயிட்டாரு. அம்பது செகண்ட் வரைக்கும் அவன் சும்மா வாயை அசைச்சிகிட்டிருந்தான்

சுந்தர் 'ஆஹா உட்டதையெல்லாம் புடிச்சிட்டேன்' னு சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சுட்டாரு.

ஒரு நிமிஷம் கழிச்சு பிரபு வாய திறக்க, வாயில பல்லும் நாக்கும் அப்புறமா சிரிப்பும் தான் இருந்துச்சி.




14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Raju said...

இது விளையாட்டுக்குன்றதால, சரியாப் போச்சு.இதைய நிறைய பேரு சீரியஸா பண்ணி, விட்டுட்டே இருப்பாங்களே தவிர புடிக்கவே மாட்டாங்க.
பாவம்.

பிரபாகர் said...

தம்பி,

நீங்கள் சொல்லவது மிகச்சரி....

இதெல்லாம் விளையாட்டாய் நிகழ்ந்த விஷயங்கள்...

ஜஸ்ட் ஃபார் ஜாலி...

ஈரோடு கதிர் said...

அடப்பாவிகளா..

சுந்தர டரியல் ஆக்கிப்புட்டீங்களே..

பிரபா...
பதிவு அருமை

பிரபாகர் said...

நன்றி கதிர்...

நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய் பதிவிட முயற்சிக்கிறேன்.

Raju said...

அண்ணே,
புது ஃபோட்டோ சூப்பரு..!
கலக்குறேள்
:)

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
அண்ணே,
புது ஃபோட்டோ சூப்பரு..!
கலக்குறேள்
:)
*/
மாப்பி நீ பொய் சொல்வேன்னு கேள்விபற்றுக்கேன், ஆனா அதுக்காக இப்படியா.... ஆமா உனக்கு எவ்ளோ கொடுதாப்லே....

பிரபாகர் said...

தம்பி பாசத்துல சொல்றே...

திருடன் மாதிரி இருக்குன்னு சில பேர் சொல்றங்க...ஆமா, திருடனுங்கல்லாம் கண்ணாடி போட்டுகிட்டா இருக்காங்க...?

பிரபாகர் said...

//மாப்பி நீ பொய் சொல்வேன்னு கேள்விபற்றுக்கேன், ஆனா அதுக்காக இப்படியா.... ஆமா உனக்கு எவ்ளோ கொடுதாப்லே....//

என்னடா நைனா ஏதும் இன்னும் கலாய்க்கலயேன்னு கவலைப்பட்டுட்டிருந்தேன்.... வாங்கய்யா, வந்து தலைய உருட்டுங்க...

Raju said...

\\மாப்பி நீ பொய் சொல்வேன்னு கேள்விபற்றுக்கேன், ஆனா அதுக்காக இப்படியா.... ஆமா உனக்கு எவ்ளோ கொடுதாப்லே....\\

நல்லதுக்கே காலமில்ல பிரபாண்ணே..!
உண்மைக்கு எவ்ளோ சோதனைன்னு பாத்தீங்களா..?

பிரபாகர் said...

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் பின் தர்மம் வெல்லும்... கவலைப்படாதே தம்பி, சத்தியமே ஜயதே....

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

பிரபாகர் said...

நன்றி, ஈழவன்

நாகராஜன் said...

ஆஹா... நல்ல தான் சம்பாரிச்சிருக்கீங்க போங்க. நண்பர்களுக்குள் இந்த மாதிரி பந்தயம் வைப்பது எல்லாம் சகஜம்... பகிர்ந்தமைக்கு நன்றி பிரபாகர்.

பிரபாகர் said...

ராசுக்குட்டி,

உங்களின் அன்பிற்கு நன்றி. நிறைய தோற்ற விஷயமும் இருக்கிறது. அதெல்லாம் பின்னால்... வெற்றியில் ஆரம்பிப்போம் என தொடங்கியுள்ளேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB