எனது பள்ளி நினைவுகள்... II (தொடர்ச்சி)

|

நிறைய காதல் விஷயங்கள் இருந்தாலும், ஜோசப் சிவகாமிமேல வெச்சிருந்த லவ்வு ரொம்ப பிரசித்தம்.

அது அவன கண்டுக்கவே கண்டுக்காது. ஆனாலும் கவர்றதுக்கு என்னன்னவோ பண்ணுவான்.

ரொம்ப டீசன்டா ஜாமின்ட்ரி பாக்ஸ் பின்னால உண்டா? இல்லையா?ன்னு எழுது வண்டி ஓட்டுற மாதிரி காமிப்பான். திரும்பி கூட பாக்காது. வாத்தியார் பையன்ங்கறதால ஒன்னும் புகார் பண்ணலன்னு நினைக்குறேன்.

பொண்ணுங்க பசங்க எல்லாம் வாங்க போங்கன்னுதான் கூப்பிட்டுக்குவோம்.

உதாரணமா கிரிஜா, 'பிரபாகரன் பாய்ஸ ஸ்ரீனிவாசன் சார் கூப்பிட்டார்'னு சொல்லும், நாங்க பதிலுக்கு கேள்ஸ் போட்டு சொல்லுவோம்.

மேல சொன்ன கிரிஜா, கண்ண சிமிட்டி சிமிட்டி சிரிக்கும். இப்பவும் லைலாவ பாத்தா அது ஞாபகம் வர்றத தடுக்க முடியாது.

சார் எதாச்சும் ஜோக் சொன்னா கிரிஜாவும் நானும் குனிஞ்சி பாத்து சிரிச்சுக்குவோம்.

என் வாழ்க்கையில அம்மாவுக்கு அப்புறம் புடிச்ச மொத பொண்ணு கிரிஜாதான்.

ஸ்ரீனிவாசன் சார் என்மேல பாசமா இருப்பாரு. ஸ்டைலா முடிய வெச்சுட்டு ஹீரோ மாதிரி இருப்பாரு.

மாலினி டீச்சருக்கும் அவருக்கும் லவ்வுன்னு சொல்லுவாங்க. ஆனா அப்படியெல்லாம் கிடையாது.

வாத்தியாரு காதல்னா, அது நம்ம ஸ்ரீனிவாசன் சார் படிச்சிட்டிருந்த ஒரு பொண்ண லவ் பண்ணினது தான்.

வெளிய கிரவுன்ட்ல பி.இ.டி. பீரியட்ல அந்த பொண்ணு விளையாண்டுகிட்டிருந்தா எப்பவும் சூப்பரா கிளாஸ் எடுக்கிற ஆளு நல்லா சொதப்புவாரு.

அவரு கிளாச ரொம்ப ஆர்வமா கவனிக்கிறதால அவரு பண்ற தப்பு தெரியும், லேசா அவர பாக்க ரெண்டு பேரும் சிரிச்சுக்குவோம். கடைசியா அதையே கல்யாணமும் பண்ணிகிட்டாரு.

இன்ஸ்பெக்சன்னா நாங்க ரொம்ப குஷியாயிடுவோம், வாத்தியாருங்க டென்ஷன் ஆயிடுவாங்க, என்ன நடந்தாலும் பாதிக்கப்பட போறது அவங்கதாங்கறதால.

தலைக்கு அஞ்சு ரூவான்னு வசூல் பண்ணி வேலையை ஜரூரா ஆரம்பிச்சிடுவோம்.

கிளாஸ் ரூமை எல்லாம் போட்டி போட்டுகிட்டு அலங்காரம் பண்ணுவோம். சணல் கயிரு வாங்கிகிட்டு வந்து, அதுல பேப்பர்லாம் ஒட்டி கலர் கலரா கிளாசுக்கு குறுக்கே கட்டிவிடுவோம்.

புது பொண்ணு மாதிரி அலங்காரம் பண்ணுவோம். கண்டிப்பா அதுக்கு உணர்ச்சி இருந்திருந்தா ரொம்ப வெக்கப்பட்டிருக்கும்.


அவசரமா அணிகள் பிரிச்சி அதுக்கு தற்காலிக தலைவர் போட்டு, எங்க அணி பெருசு, உங்க அணி பெருசுன்னு பேசிட்டு இருப்போம்.

சார்ட்ல பேரெல்லம் எழுதி செவுத்துல ஒட்டுவோம். கையெழுத்து அழகா இருக்கிற ஜோசப் மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப கிராக்கி.


கிளாசுக்கு வெளியே VIII B ன்னு பிக்காஸ்ல அழுத்தி இழுத்து கடுகை உள்ள பொட்டு மண்ண மூடிட்டு தண்ணி ஊத்திகிட்டிருப்போம். ஒரு வாரத்துல நல்லா வளர்ந்து பச்சையா அழகா இருக்கும்.

அப்போதான் பொண்ணுங்ககிட்ட பேசவும் வாய்ப்பு கிடைச்சுது. சாக்பீஸ தண்ணியில நெனச்சி கோலம் போட புள்ளி வெச்சிட்டிருக்கும் போது நான் டக்குனு,


'தப்பா புள்ளி வெச்சிருக்கீங்க, சந்து புள்ளில்ல இந்த கோலத்துக்கு வெக்கனும்'னு சொல்ல,

'ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்னு' கிரிஜா, சிவகாமி வெக்கப்பட்டு கேக்க

ரொம்ப குஷியா, 'சித்திங்க கோலம் போடும்போது பாத்திருக்கேன், எனக்கும் தெரியும்' னுட்டு,

'நல்லா சூப்பரா கலர் அடிப்பேன்' ங்கற கூடுதல் தகவலையும் சொல்லி கோலம் போடறதுல ஐக்கியமாயிட்டேன். இருந்தாலும் அடுத்த நாள்ல இருந்து வழக்கமாதான் பேசினோம்.

ஆனா பசங்க மத்தியில நான் கொஞ்ச நாளைக்கு ஹீரோவா இருக்க கோலம் ரொம்ப உதவியா இருந்துச்சி.

தரையில தான் ஒம்பதாவது வரைக்கும் உட்காந்திருந்தோம். ஒவ்வொரு கட்டத்துக்குள்ள ஒவ்வொருத்தர்னு உட்காந்திருப்போம். சண்டை வந்து 'பரம' ஆயிட்டா கோட்ட தாண்டி எதுவும் போகாம வராம பாத்துக்குவோம்.

பதிவு ரொம்ப பெருசா போயிட்டிருக்கு. எழுத எழுத நிறையா நினைவுக்கு வருது. பிடிச்சிருந்தா வர்ற பதிவுகள்ல எழுதலாம்னு இருக்கேன்.

கடவுள் எங்கிட்ட வந்து (இருந்தா) என்ன வேணும்னு கேட்டா, 'எனக்கு அந்த பள்ளி வாழ்க்கையை மீண்டும் கொடு' ன்னு கேட்டுடலாம்னு தோனும்.

ஒவ்வொருமுறை என் பள்ளியை எந்த ஒரு வாகனத்துல கடந்தாலும், இதோ இதுதான் நான் படிச்ச பள்ளி' னு பக்கத்துல யாரு இருந்தாலும் ஆர்வம் பொங்க சொல்லுவேன்.

மனச ஏதோ அழுத்த கண்ணு கலங்க, துடைச்சிட்டு திரும்ப எப்போ இந்த வழியா வருவேன்னு ஏங்குவேன்...

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

பிரபாகர்... ஒவ்வொரு வரிகளும் நினைவுகளை கிளறி விடுகின்றது... கேர்ள்ஸ்.. பாய்ஸ்னு அழைத்தது இன்னும் நினைவிருக்கிறது

பிரபாகர் said...

ஆமாம் கதிர்,

எழுதி முடிக்கும்போது, எனக்குள் ஏதோ செய்ய, பாதிப்பிலிருந்து மீள நெடு நேரமாயிற்று.

அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது கண்டிப்பாய் சென்று பார்த்து வரவேண்டும்.

பிரபாகர்.

butterfly Surya said...

பிரபா, நல்ல ப்ளோ.. அப்படியே பிக்கப் பண்ணுங்க..

சூப்பர்.

பிரபாகர் said...

சூர்யா,

எழுத ஆரம்பித்த பின் நிறைய நினைவிற்கு வருகிறது. கொஞ்சம் பழைய நினைவுகளால் தூக்கமும் தொலைகிறது... வழக்கம் போல் நன்றி உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும்.

பிரபாகர்.

கலையரசன் said...

நல்லா சுத்துறீங்க கொசுவத்தியை..

பிரபாகர் said...

நன்றி கலையரசன். நினைவுகளை அசைபோட்டு ஆழ்ந்து யோசித்தால் நிறைய கொசுவர்த்தியை சுற்றலாம்...

பிரபாகர்...

நாகராஜன் said...

அப்படியே பள்ளி சென்ற காலத்துக்கு எடுத்துட்டு போயிட்டீங்க பிரபாகர்.

"கடவுள் எங்கிட்ட வந்து என்ன வேணும்னு கேட்டா, 'எனக்கு அந்த பள்ளி வாழ்க்கையை மீண்டும் கொடு' ன்னு கேட்டுடலாம்னு தோணும்." எனக்கும் அப்படியே.

எத்தனையோ பசுமையான நினைவுகள் அப்படியே மனதில் இருக்கிறது. பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றி.

சங்கர் தியாகராஜன் said...

தம்பி ஜமாய்கிறடா... Keep it up!!!

பிரபாகர் said...

நன்றி ராசுக்குட்டி...

நன்றி அண்ணா..

பிரபாகர்...

sambasivamoorthy said...

எப்படி இயற்கை இருந்த வாழ்கை இப்ப மிஷன் மாதிரி செயற்கை இருக்குதுன்னு படம் போட்டு காட்டுரிங்கே - Good emotional one.

Note:- Please ignore my typos

பிரபாகர் said...

//எப்படி இயற்கை இருந்த வாழ்கை இப்ப மிஷன் மாதிரி செயற்கை இருக்குதுன்னு படம் போட்டு காட்டுரிங்கே - Good emotional one.
//

மூர்த்தி,

நாங்கெல்லாம் இப்படித்தான் இருந்தோம்னு நம்ம புள்ளங்க கிட்ட சொன்னாக்கூட நம்ப மாட்டங்க... நிறைய மாறிடுச்சி, நினைவுகளை தவிர...

பிரபாகர்.

sambasivamoorthy said...

I agree with you.
I like add a point to Inspection preparation. repainting the black board. Grinding the Charcoal and leaves(Umatha Leaves). The board will be fresh n virgin as you said surely Class room feel shy. No chances for our kids to learn those basic logics

பிரபாகர் said...

//Grinding the Charcoal and leaves(Umatha Leaves).//

கரி, ஊமத்தந்தழை.... ஆஹா, நிஜமாகவே நான் மறந்த ஒன்று. நன்றி மூர்த்தி...

பிரபாகர்.

நாகா said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. முதல் பகுதியை விட இது இன்னமும் நன்றாக இருந்தது ப்ரபா. உங்கள் எழுத்துக்களுக்கு வாசகர்கள் கூடிக் கொண்டே உள்ளனர், தொடர்ந்து இதே போல் எழுதவும்

-அன்பன்,
நாகா

பிரபாகர் said...

நாகா...

உங்களின் நட்பினை பெற்ற பின், நிறைய எழுத வேண்டும் எனும் உந்துதல் அதிகரித்திருக்கிறது. நன்றி...

பிரபாகர்...

Joe said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பிரபாகர்!
வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பிரபாகர்!
வாழ்த்துக்கள்.//

ஜோ,

உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB