விடாக்கொண்டான்...

|

நான் தாத்தா வீட்டுல படிச்சிகிட்டிருந்தேன்.
அம்மாவோட அம்மாவை ஆயான்னு கூப்பிடுவோம், பாட்டியை பாட்டின்னு கூப்பிடுவோம்.
பாட்டிதான் சிம்ம சொப்பனம். அதோட ரூம பூட்டியேதான் வெச்சிருக்கும். வீட்டு சாமான், கடலை, வெல்லம், தேங்கான்னு எல்லாம் அது கன்ட்ரோல்ல தான் இருக்கும்.
ஸ்கூல் விட்டு வந்தா கடலையை வறுத்து வெல்லத்தோட, அப்புறம் அவல்ல வெல்லம், தேங்காவ துருவி போட்டு, பயித்தங்காய வேகவெச்சின்னு விதவிதமா தரும், ஆனா அளவாதான்.
சமைக்கிறதுக்கு தேவையான எல்லாத்தையும் அதுதான் எடுத்து கொடுக்கும்.
ஒருநாள் வெளியூர்ல இருந்து வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தாரு. பாட்டிக்கு பேரன், பேத்தி அவங்க சம்மந்தப்பட்டவங்களை தவிர யாரையும் பிடிக்காது.
ஆயா அதுக்கு நேர்மாறு. யாரு வந்தாலும் சப்பாடு அல்லது டீயாவது கொடுக்காம அனுப்பாது.
அவரு பேசிட்டு இருந்துட்டு, 'சரி அண்ணியா நான் கெளம்பறேன்'னாரு.
ஆயா, 'அட இருங்க சாப்புட்டு போகாலாம்' னு சொன்னுச்சி.
காத்திருந்தாப்ல, ஆர்வமா சட்டுனு உட்கார,
பாட்டி டக்குனு, 'ஆத்தூர்ல இருந்து வர்றவங்க, சாப்பிடாமலா வருவாங்க' ன்னுச்சி.
'அம்மா வீட்டுக்கெல்லாம் வரும்போது சாப்பிட்டு வருவோமா' ன்னாரு பதிலுக்கு.
'சங்க கெட்டவன், என்ன சொன்னாலும் புரியுதான்னு பாரு' ன்னு காதுபட திட்டவும்,
'அது கிடக்குது கிழவி, நீ சப்பாடு போடு அண்ணியா, சாப்புட்டுட்டு தான் போவேன்' னாரு அந்த ஆளு.
அப்போ நான் சின்ன பையன் விவரம் புரியல, ஆனா இப்ப நினைக்கும்போது விடாக்கொண்டன் அப்படின்னா என்னாங்கறதுக்கு நல்ல உதாரணம்னு புரியுது.

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

அறிவிலி said...

:)

அறிவிலி said...

சனிக்கிழமை பதிவர் சந்திப்புக்கு அவசியம் வாருங்கள்.

அப்பறம், உங்க பதிவுல Word Verification எடுத்துருங்க,பின்னூட்டம் போட தொந்தரவா இருக்கு.

பிரபாகர் said...

//அப்பறம், உங்க பதிவுல Word Verification எடுத்துருங்க,பின்னூட்டம் போட தொந்தரவா இருக்கு//

எடுத்தாச்சு... கண்டிப்பாய் வருகிறேன்...

பிரபாகர்...

Baski.. said...

//அம்மாவோட அம்மாவை ஆயான்னு கூப்பிடுவோம், பாட்டியை பாட்டின்னு கூப்பிடுவோம்//

அப்பாவோட அம்மாவ பாட்டின்னு கூப்பிடுவோம்ன்னு வந்திருக்கணும் சரியா??

பிரபாகர் said...

//அப்பாவோட அம்மாவ பாட்டின்னு கூப்பிடுவோம்ன்னு வந்திருக்கணும் சரியா??//

பாஸ்கி,

சரிதான். எங்க சைட்ல ஆயான்னா அம்மாவோட அல்லது அப்பாவோட அம்மா.
பாட்டின்னா அம்மா அப்பாவோட பாட்டி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB