சுளுக்கு - 1 ஆம் பகுதி

|


அவசரமா ஆத்தூர் கிளம்பிட்டு இருந்தேன். அப்போ ஒரு கோஷ்டியே வீட்டுக்குள்ள வந்துச்சி.

'பிரபு உடனே கிளம்பு, இன்னிக்கி வஞ்சம் தீத்தாகனும்', சகாதேவன்.

என்னடா இது, தெலுங்கு பட வசனம் மாதிரி பேசறான்னு நினைச்சிட்டு,

'ஆமா, எங்க... எதுக்கு?' நான்.

'இன்னிக்கி நம்மோட பரம எதிரி மல்லியகரை டீமோட மேட்ச் இருக்கு, வின் பண்ணியே ஆகனும், கண்டிப்பா நீ வரனும்', ராஜா.

சுமாரா கிரிக்கெட் விளையாடுவேன், ஆன இந்த அளவிற்கு என்னைக்குமே மரியாதை இருந்ததில்ல.

'நாங்களும் எவ்வளவோ பாத்துட்டோம், யாரும் கிடைக்கல, அந்த நாய் மகேஷ் நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டு திடீர்னு சேலம் போயிட்டான். உன்னை விட்டா ஆளே இல்ல' ஜனார்.

அப்போதான் உண்மை தெரிஞ்சது, வழியில்லாம கூப்படறானுங்கன்னு.

'நான் வரலப்பா, மொதல்ல, தாத்தா கரன்ட் பில் கட்ட கடைசி தேதின்னு என் கிட்ட பணம் கொடுத்திருக்காரு. ரெண்டாவது செமெஸ்டருக்கு ஒரு மாசம்தான் இருக்கு, படிக்கனும்' நான்.

'ரொம்ப பிகு பண்ணாதப்பா, காலேஜ்ல படிக்கிற ஆளு, லெக் ஸ்பின் நல்ல போடுவே, பின்ச் ஹிட்டர், சூப்பரா ஃ பீல்டிங் பண்ணுவ' முரளி.

அவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு ஏன் எல்லாத்துக்கும் தெரியும். இருந்தாலும் வாய்ப்ப விட மனசில்ல.

'கரண்ட் பில்லு...'

'என்ன மாம்ஸ், 5 மணி வரைக்கும் டைம் இருக்கு, மேட்ச் 15 ஓவர் தான், 10 மணிக்கு ஆரம்பிச்சாலும் ரெண்டு ரெண்டரைக்கெல்லாம் முடிஞ்சிடும். ஆத்தூர் நானும் உங்க கூட வர்றேன், போதுமா?' மகேந்திரன்.

எல்லோரும் என்னைவிட சின்ன பசங்கதான், ஆனா மகேந்திரனை தவிர எல்லோரும் பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்க.

ஆளுக்கொரு சைக்கிள்னு, டபுள்ச், ட்ரிப்ள்ஸ்னு போய் சேந்தோம்.

போனவுடனே ஒரு ஷாக் நியூஸ் கிடைச்சது. யாரோ ராபினாம், அவங்க டீம்ல விளையாட போறானாம். டிருச்சி காலேஜ் பிளேயராம் ஃபாஸ்ட் பவுலராம்.

சைட்ல அவன் பவுலிங் பிராக்டிஸ் பன்றத பாத்தே எங்களுக்கு டர் ஆயிடுச்சி.
பவுண்டரி லைன் பக்கத்துல இருந்து பந்து போட வோடி வந்தான்.

திடீர்னு மகேந்திரன் என்ன நினைச்சான்னே தெரியல,

'மாம்ஸ் நீதான் இன்னிக்கு கேப்டன்'னான்.

அதிசயமா எல்லோரும் பேசி வெச்சாப்ல,

'ஆமா கண்டிப்பா நீதான் இருக்கனும், வயசில, அறிவுல, அனுபவத்தில பெரிய ஆளு' முரளி.

பலிகடா மாதிரி ஒத்துட்டு, டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தோம்.

கெஞ்சி கேட்டாலும் 5 டவுன்க்கு முன்னால இறக்காதவனுங்க, அன்னிக்கி ஓப்பனிங் இறங்க சொன்னானுங்க. எல்லாம் ராபின் பயம்னு நல்லா தெரிஞ்சுச்சி.

'இல்லப்பா ஒன் டவுன் ஆடறேன்'னேன்.

'என்னப்பா நீ, பயங்கரமான பிளேயர், ராபினும் காலேஜ், நீயும் காலேஜ்,
காலெஜுக்கு காலேஜ்...' சகா.

நிஜமாவே, நல்ல ஃபாஸ்டா போட்டான். கண்ணை மூடிட்டு சுத்தினேன். நல்லா கனெக்ட் ஆக, மொத பாலே சிக்ஸர், ஸ்கூல் காம்பவுண்ட்க்கு வெளியே போய் விழுந்துச்சி. ஜஸ்ட் தொட்டேன், அவ்வளோதான், அப்போ எவ்வளோ ஸ்பீட்னு பாத்துக்கோங்க.

ரெண்டாவது பால், கனெக்ட் ஆகல பேட்லயும், கீப்பர் கிட்டேயும். பைஸ் ஃபோர். மூனாவது பால் கொஞ்சம் ஸ்லோவா போட, லெக் சைட்ல தட்டிவிட்டேன், மிஸ் ஃபில்டிங்ல ஃபோர்.

நாலாவது பால் தான் இந்த கதைக்கு முக்கியம். ஸ்கொயர் லெக்-ல தட்டிவிட வேண்டாம்னு சொல்லியும் கேட்காமல் வேகமா ஓடி ரன் எடுக்க ட்ரை பண்ணி, தடுமாறி விழுந்தேன் பாருங்க அதுதான் இந்த கதைக்கு முக்கியம்.
கால் பிசகி கணுக்கால் கிட்ட நல்லா சுளுக்கிடுச்சி.(ரன் அவுட். மொத்தமா அடிச்சது 50 ரன், அவனுங்க 45 ஆல் அவுட், அதப்பத்தி தனியா எழுதலாம், அந்த அளவிற்கு சுவராசியமா இருந்திச்சி)

கால பிடிச்சு நல்லா உறுவி விட்டானுங்க. வலி உயிரே போற மாதிரு இருந்துச்சி.

தொடர்ச்சி அடுத்த பதிவில்...







2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

//
அப்போதான் உண்மை தெரிஞ்சது, வழியில்லாம கூப்படறானுங்கன்னு
அவன் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு ஏன் எல்லாத்துக்கும் தெரியும்.
//
வேறயாரும் சிக்கல?

//
மொத்தமா அடிச்சது 50 ரன், அவனுங்க 45 ஆல் அவுட்
//
அட ஜெயிச்சாச்சா

பிரபாகர் said...

நன்றி வாழவந்தான்...

எங்க டீம்ல ஒரு சிறு பொடியன் முக்கியமான 6 விக்கெட்ட ஸ்பின் போலிங்-ல தூக்க நிஜமா ஜெயிச்சுட்ட்டோம். இல்லன்னா வீட்டில வந்து என்ன விட்டுட்டு போவானுங்களா?

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB