டி.வி.எஸ் 50

|


அப்போ நான் நாலாவது படிச்சிட்டிருந்தேன், அந்த சமயம்தான் டி.வி.எஸ். 50 மார்கெட்ல அறிமுகம் ஆச்சு.


எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் புதுசா வாங்கி, ஒரு வாரம் ஓட்டறதுக்கு பழகிட்டு ஸ்கூலுக்கு கொண்டு வந்திருந்தாரு.


எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். பிரமிப்பு. சைக்கிளே அப்போ பெரிய விஷயம்.


சாயந்திரமா எல்லா வத்தியாருங்களுக்கும் ஸ்டார்ட் பண்ணி எப்படி ஓட்டறதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.


அதுல ஒரு சாரு, நல்லா நாமம் போட்டிருப்பாரு. வேஷ்டியை வித்தியாசமா கட்டியிருப்பாரு. அவரும் அவர் பங்குக்கு கேட்க, அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.


இந்தமாதிரி பெடலை மிதிச்சி கிளட்சை அழுத்தி பிடிச்சி விடணும், ஆக்ஸிலேட்டரை விடணும்னு சொல்லிட்டிருந்தாரு.


'ஐயா நானும் முயற்சி பண்ணி பாக்கட்டுமா' ன்னாரு


'தாராளமா' ன்னு அவர்கிட்ட விட்டுட்டு அவரு என்ன பண்றாருன்னு பாத்துட்டிருந்தப்போ, தூரத்தில் ரெண்டு பசங்க ஏதோ சண்டை போடறதை பாத்துட்டு குச்செடுத்து விளாச கிளம்பிட்டாரு.


அவரு நகர்ந்தவுடன், இன்னும் குஷியாகி பெடலை அழுத்தி கிளட்சை ரிலீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணிட்டாரு.


ஆக்ஸிலேட்டர நல்லா முறுக்கிட்டு அவருக்கு விடறது எப்படின்னு தெரியல, பிரேக் பிடிக்கவும் தெரியல.


அப்போ பதட்டத்துல வண்டிய பின்பக்கம் அழுத்தவும் டயர் மோதி வண்டி ஸ்டேண்ட் ரிலீஸ் ஆகி வேகமா கிளம்பிடுச்சி.



சார் மிரண்டு போயி வண்டிகூடயே ஓட ஆரம்பிச்சிட்டாரு.


ஓடும்போது அவர் காலில் வேஷ்டி மாட்டி உறுவிட்டு வந்துவிட,கோவணம் கட்டுவாருங்கற ரகசியம் எல்லோருக்கும் அப்போதான் தெரிஞ்சது.


கோவணத்தோட வண்டிவேகத்துக்கு கூடவே ஓடினாரு.


வேஷ்டி கண்ணாடியெல்லாம் பொறுக்கி எடுத்திட்டு பின்னாலேயெ கத்திட்டு ஓடினோம்.


இருபது இருபத்தஞ்சு மீட்டர் தூரம் ஓடி அடுத்த பில்டிங் சுவர்ல மோதி கீழே விழ, அவரு மேல வண்டி கிடந்தது.


ஆக்ஸிலேட்டரை விடாம முறுக்கிட்டே இருந்தாரு.


அப்புறம் எல்லோரும் ஓடிப்போய் அவர வண்டியில இருந்து பிரிச்சோம்.


அன்னியிலிருந்து அவரை பார்க்கும் போதெல்லாம் அவரோட கோவண ரேஸ்தான் ஞாபகம் வரும்.


ஆனா ஒரு விஷயத்தை மட்டும் இன்னிக்கு வரைக்கும் ஃபாலோ பண்றாரு.


அது 'சைக்கிள் மட்டும்தான் ஓட்டறது' ங்கறதை.

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

//
ஆக்ஸிலேட்டரை விடாம முறுக்கிட்டே இருந்தாரு.
//
அது 'சைக்கிள் மட்டும்தான் ஓட்டறது'
//
பாவம் பா..

//
அப்புறம் எல்லோரும் ஓடிப்போய் அவர வண்டியில இருந்து பிரிச்சோம்.
//
பிரிச்சீங்களா? இது ரொம்ப நக்கலு

வாழவந்தான் said...

நான் மனுஷன் தாங்க. யந்திரன் அளவுக்கு பெரிய ஆளில்லை. சும்மா word verification க்கு

பிரபாகர் said...

நன்றி வாழவந்தான்... இது ஒரு துளி கற்பனையோடு, நடந்த உண்மை கதை. உங்களின் விமர்சனங்கள் எனது எழுத்துக்களை மேலும் மெருகூட்டும்....

பிரபாகர்.

butterfly Surya said...

பள்ளி பருவத்தில் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள், சந்தோஷங்கள். அத்தனையும் பசுமை. பதிவும் அருமை.

வாழ்த்துகள்.

பிரபாகர் said...

நன்றி வண்ணத்துபூச்சியார்...

உங்களின் வாழ்துக்களை படிக்கும்போது, இந்த வலைப்பதிவு முழுவதும் இளம் பிராயத்து நினைவுகளால் நிரப்ப வேண்டும் எனும் உத்வேகம் பிறக்கிறது. தூண்டுகோலாய் இருக்கும் உமக்கு எனது நன்றி...

பிரபாகர்.

தமிழ். சரவணன் said...

ஆமாம் தலைவ! நான் முதல் முதலில் இந்த வண்டியை ஆர்வக்கோலாரில் அதிவேகமாக (40கிமி வேகத்தில்) ஒட்டி தார்ரோட்டில் கிடந்த மாட்டுசாணியில் விட்டு வழுக்கி விழந்து அடிப்பட்டது ஞாபகத்திற்கு வருகின்றது. அப்புறம் பி(உ)ழைப்புக்காக சென்னை வந்தபோழுது எனது தாயார் வாங்கி தந்த இந்த டிவிஎஸ் 50 தான் என் இனிய நண்பன்...

பிரபாகர் said...

நன்றி சரவணன்,

தாமதமாய் உஙகளின் பின்னூட்டத்தை கவனிக்கிறேன்...

பிரபாகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB